இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு மரிக்காமல் எடுத்துகோள்ளபட்டாரா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
இயேசு மரிக்காமல் எடுத்துகோள்ளபட்டாரா?
Permalink  
 


அன்பானவர்களே! இயேசு வாழ்ந்த காலத்த்தயோ அல்லது முகமது நபி அவர்கள் வாழ்ந்த காலத்தையோ நாம் யாரும் நேரடியாக பார்த்தது கிடையாது. பிறகு அந்த சம்பவங்கள் பற்றி  எப்படி  அறிந்து கொள்கிறோம் என்றால்,  பழைய ஏடுகள் புத்தகங்கள், கல் வெட்டுக்ககள் மற்றும் தோல் சுருள்கள்   போன்றவற்றின் மூலமாகவே இது இப்படி நடந்திருக்கிறது என்று நம்பி பின்பற்றுகிறோம். அவரவர் ஒவ்வொரு கூற்றை நம்புகிறோம்.

பைபிளில் "இயேசு சிலுவையில் அறையப்பட்டார், அவரை ரோம போர் சேவகர்கள் அந்த நேரத்தில் தேசாதிபதியாக இருந்த  பிலாத்துவின் கட்டளைப்படி சிலுவையில் அறைந்து, அவர் மரித்து விட்டார் என்பதை உறுதி செய்தபின் சிலுவையில் இருந்து இறக்கி கல்லறையில் அடக்கம் பண்ணினார்கள்" என்பதை அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த அவரோடு பேசி பழகிய மத்தேயு, மார்க்கு, லுக்கா, யோவான் போன்ற நான்கு பேர் ஏறக்குறைய  ஒரே மாதிரி அவர் அவர்களுக்கு தெரிந்த பாணியில் எழுதி வைத்துள்ளனர்.
ஆனால் இந்த காரியங்கள் நடந்து சுமார் 500 வருடங்களுக்கு பிறகு வந்த முகமது நபி அவர்கள் "இறைதூதர் சொன்னார் என்று காரணம்  சொல்லி இயேசு சிலுவையில் மரிக்கவில்லை அவர் தேவனிடத்தில் உயர்த்தப்பட்டார் அவருக்கு பதில் வேறொருவர் மாற்றப்பட்ட்ர்"  என்று கூறுகிறார்.
 
நன்றாக யோசித்து பார்த்தால்  யார் சொல்வதை நாம் நம்பமுடியும் ?
  • ஒருவர் சொல்வதையா? அல்லது நன்கு பேர் சொல்வதையா?
  • அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் சொல்வதையா? அல்லது அதற்கு 500 வருடங்கள் கழித்து வாழ்ந்தவர் சொல்வதையா?

    மேலும் பைபிளில் முக்கியமான காரியங்களை இரண்டுபேர் சாட்சி இல்லாமல் தீர்மானிக்க கூடாது (உப 19;15) என்று கூறும் போது ஒருவர் சொல்வதை எப்படி நான் உண்மை என்று நம்ப முடியும்?  

    திருக்குர்ரான் சொல்வதுபோல் இயேசு ஒரு இஸ்லாமிய நபி என்றும் இயேசுவுக்கு பதில் இன்னொருவர் சிலுவையில் மாற்றப்பட்டார் என்றும் நம்புவோமானால் கீழ் கண்ட கேள்விகளுக்கு கொஞ்சம் பதில் தெரிவியுங்கள்:

    இயேசு தான் பூமியில் வாழ்ந்த காலங்களில் தான் மரிக்கப்போவதாகவும் பிறகு மூன்றாம் நாளில் எழும்பப்போவதாகவும் பல நேரங்களில் சொல்லியுள்ளார் (யோ:6:51, மத:26:12,20:12/19) அப்பொழுது ஏன் தனக்குப்பதில் வேறொருவர் மரிப்பார் என்று யாருக்கும் சொல்லவில்லை?

    அவருக்கே அது பற்றி தெரியாது என்றாலும், இப்படி இறைவன் திடுதிப் என்று யாருக்கும் சொல்லாமல் அவரை தனதளவில் உயர்த்திக்கொண்டதால்தானே கிறிஸ்த்தவம் என்ற ஒரு மிகப்பெரிய தவறான மதமே உருவாகி விட்டது? அதற்கு யார் பொறுப்பு? இறைவன் என்றல்லவா பொறுப்பு என்று ஆகிவிடும்? இறைவன் தனது தவறான செயலின் மூலம் ஒரு பெரிய கூட்ட மக்களை நரகத்துக்கு அனுப்பக்கூடியவர் இல்லவே இல்லை.

    மேலும் இயேசு ஒரு இஸ்லாமிய நபி என்றும் பவுல்தான் கிறிஸ்த்தவ போதகத்தி உண்டாக்கினார் என்றும் கருதுவோமானால்  அவர் மற்ற  சீஷர்கள் இஸ்லாத்தை அல்லவா போதிக்க வேண்டும்? ஆனால் அவரோடு இருந்து இந்தியா வந்த தாமஸ் கூட கிறிஸ்தவத்தை அல்லவா வளர்த்தார்? அவரின் உண்மை சீடன் பேதுரு கூட தனது கடிதத்தில் கிறிஸ்த்தவத்தை பற்றி தான் எழுதியுள்ளார்.

    அகவே இவர்கள் எல்லாம் வாழ்த்து முடித்து சுமார் 500 வருடங்களுக்கு பிறகு ஒருவர் வந்து (அதுவும் இறைவனல்ல) இறை தூதர் சொன்னார் என சொல்லி மாறுபாடாக ஒரு கருத்தை  சொல்லியிருப்பது நன்கு யோசிக்க வேண்டிய விஷயமல்லவா?



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 13
Date:
Permalink  
 

இயேசு மட்டும் இன்றி ஆதாம் முதல்அனைத்து தீர்க்கதரிசிகளும் போதித்ததும் இஸ்லாம் தான். அதாவது ஒரு இறைவனை மட்டுமேவணங்க வேண்டும்; இறைத்தூதர்களான எங்களையோ வேறு யாரையுமோ எதையுமோ வணங்கக் கூடாதுஎன்பது தான் அனைவரின் போதனை. ஆனால் அந்தத் தூதர்கள் போதனையை அவர்களின் சீடர்களேமுதலில் மீறினார்கள். அது போல் தான் இயேசுவுக்கும் நடந்தது. ஆனால் இயேசு போதித்தஇஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் இருந்துள்ளனர். கிறித்தவ திருச்சபைகள் இதை மறைக்கமுயன்றாலும் அவர்களால் மறைக்க முடியவில்லை. இயேசுவின் சீடரான பர்னபா எழுதிய பைபிள்ஒன்றே போதுமே

மேலும் குகைவாசிகளிடம் கண்டெடுக்கப்பட்டஒரிஜினல் பைபிள் இஸ்லாம் கூறுவதையே கூறுவதையும் முதல் நூற்றாண்டிலேயே ஒரிஜினல்கிறித்தவர்க்ள் வாழ்ந்துள்ளதையும் ஆதாரத்துடன் அறிந்திட

http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/271/

__________________


இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink  
 

//குகைவாசிகளிடம் கண்டெடுக்கப்பட்டஒரிஜினல் பைபிள் இஸ்லாம் கூறுவதையே கூறுவதையும்//

மெய்யாலுமா? ஒரிஜினல் பைபிள் என்று அதன் மேல் எழுதி இருந்ததா?

முஹம்மது தப்பு, தப்பா காப்பி அடிச்சது 5 ஆவது நூற்றாண்டில் Gosple (அப்படியா) Of Barnabas என்று ஒரு முல்லா எழுதின குப்பை 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது (அதாவது கிறிஸ்து மரித்து 600 ஆண்டுகள் கழித்து). வெளிப்படுத்தின விசேஷம் (வேதத்தில் உள்ள கடைசி புத்தகம்) எழுதப்பட்டது 1 ஆம் நூற்றாண்டின் இறுதியில். முல்லா எழுதின புத்தகம் எல்லாம் வேதம் ஆகாது தம்பி


__________________


இளையவர்

Status: Offline
Posts: 13
Date:
Permalink  
 

Dear John,

Go through the below link.then come back to me

பர்னபாவின் சுவிஷேசத்தை ஆங்கிலத்தில் முழுமையாக http://www.sacred-texts.com/isl/gbar/index.htm

. என்ற முகவரியில் காணலாம்.

பர்னபாவைப் பற்றி பைபிள் கூறும் நற்சான்றைஅறிந்து கொள்ள இந்த நூலை வாசிக்கவும். http://onlinepj.com/books/iyesu_siluvayil/

__________________


இளையவர்

Status: Offline
Posts: 13
Date:
Permalink  
 

புரோட்டஸ்டன்ட் பைபிள்- ஓர் மீள்பார்வை

4652 வசனங்களை நீக்கி விட்ட புரோட்டஸ்டண்டுகள் எப்போது தோன்றினார்கள்? இந்தப் பிரிவு தோன்றியதே 16 ஆம் நூற்றாண்டில் தான். அதாவது இயேசுவுக்கு 1600 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றிய இந்தப் பிரிவினர் இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான வசனங்களை எப்படி நீக்க முடிந்தது? அதனை எதிர்த்து கத்தோலிக்கத் திருச்சபைகளால் ஏன் எதுவுமே செய்ய முடியவில்லை? தங்கள் வேதத்தில் நீக்கம் செய்வதை அன்றைய கிறித்துவ மக்கள் எப்படிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்? இந்தப் புரோட்டஸ்டன்ட் பிரிவினரும் எப்படி வளர முடிந்தது? கிறிஸ்தவர்கள் அதிகமதிகம் சிந்திக்க வேண்டிய கேள்விகள் இவை.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே விடை தான் இருக்க முடியும். இவர்கள் இதற்கு முன்பே அடிக்கடி நீக்கியும் சேர்த்தும் வந்துள்ளனர். மக்களும் இந்த நீக்குதல் சேர்த்தலுக்கு நன்கு பழக்கப்பட்டுப் போயிருந்தார்கள். இதனால் தான் இவ்வளவு வசனங்கள் நீக்கப்பட்டதையும் கிறித்தவர்கள் ஜீரணித்துக் கொண்டார்கள். கத்தோலிக்க திருச்சபையின் எதிர்ப்பு எடுபடாமல் போனதற்கு இதைத் தவிர எந்தக் காரணமும் இருக்க முடியாது.

புரோட்டஸ்டன்டுகள் இவற்றை நீக்குவதற்கு ஏன் துணிந்தனர் என்பதையும் கிறித்தவ உலகம் அறிந்து கொள்வது அவசியமாகும். எந்த ஆகமங்களைப் புரோட்டஸ்டண்டுகள் நிராகரித்து விட்டனரோ அந்த ஆகமங்களில் பவுல் உருவாக்கிய கிறித்தவக் கோட்பாட்டுக்கு எதிரான பல வசனங்கள் இடம் பெற்றிருந்தன என்பது முதல் காரணமாகும்.

"இயேசு சிலுவவையில் அறையப்பட்டு மரணித்து மீண்டும் உயிர்பெற்று எழுந்தார்” என்பது கிறித்தவர்களின் அடிப்படைக் கொள்கை. இந்தக் கொள்கையை நம்பாத எவரும் கிறித்தவராக இருக்க முடியாது. எந்த ஆகமங்களை புரோட்டஸ்டண்டு பிரிவினர் நீக்கி விட்டனரோ அந்த ஆகமங்களில் இக்கொள்கைக்கு மரண அடி கொடுக்கப்படுகின்றது. உதாரணமாக இவர்கள் தள்ளுபடி செய்த ஆகமங்களில் ஞான ஆகமும் ஒன்று. இந்த ஆகமத்தின் 2:5 வசனம் கூறுவதைக் கேளுங்கள்! "சாவுக்குப் பின் திரும்பி வருதல் இல்லை. முடிவு முத்திரையிடப்படுகின்றது. எவனும் திரும்பி வருதல் இல்லை."

இந்த வசனத்தை ஒன்றுக்குப் பலமுறை படித்துப் பாருங்கள்! இறந்த பிறகு திரும்பி வருதல் என்பது எவனுக்குமே இல்லை என்பதை இவ்வசனம் இரண்டாவது கருத்துக்கு இடமே இல்லாத வகையில் மிகவும் தெளிவாக அறிவிக்கின்றது. இந்த வசனத்தை வேதம் என்று ஒப்புக் கொண்டால் தங்கள் விரல்களால் தங்கள் கண்களைக் குத்திக் கொண்டதாக ஆகுமல்லாவா? இதனால் தான் வேதத்திலிருந்து அதை நீக்கிவிட்டனர்.

ஆதாம் எனும் முதல் மனிதர் ஒரே ஒரு பாவம் செய்தார். அப்பாவத்தைக் கர்த்தர் கடைசி வரை மன்னிக்கவே இல்லை. அப்பாவம் மன்னிக்கப்பட வேண்டுமானால் அதற்குப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. இதனால் பிறக்கும் மாந்தர் அனைவரும் பாவிகளாகவே பிறக்கின்றனர். இயேசு வந்து தம்மையே சிலுவையில் பலி கொடுத்து அனைவரின் பாவங்களையும் சுமந்து கொண்டார் என்பது கிறித்தவத்தின் மற்றொரு நம்பிக்கை. புரோட்டஸ்டண்டுகள் நீக்கியுள்ள ஞான ஆகமமும் சீராக் ஆகமமும் இந்தக் கொள்கையையும் தவிடு பொடியாக்குவதைப் பாருங்கள்!

"முதல் மனிதன் தனியாக உண்டாக்கப்பட்டிருந்தான். ஞானமே அவனைக் காத்து வந்தது. அவனைப் பாவத்தினின்று விடுவித்தது." -(ஞான ஆகமம் 10:1)

"(கடவுள்) எழுந்து அவனவனுக்கு அவனவன் செய்ததற்குத் தக்கபடி தீர்ப்பிடுவார்." -(சீராக் ஆகமம் 17:20)

இந்த இரண்டு வசனங்களையும் சிந்தித்தால் ஆதாமின் பாவம் மன்னிக்கப்பட்டு விட்டது என்பதையும் அவனவன் செய்ததற்கு அவனே பொறுப்பாளி; மற்றவர் வந்து அதனைச் சுமக்க முடியாது என்பதையும் அறியலாம். உதாரணத்துக்காக நாம் எடுத்துக் காட்டிய மூன்று வசனங்களும் கிறித்தவக் கோட்பாட்டையே தகர்த்து தரை மட்டமாக்கி விடுவதனால் தான் புரோட்டஸ்டண்டுகள் இந்த ஆகமங்களை நீக்கியுள்ளனர்.

இப்படிப் பல ஆயிரம் வசனங்களை புரோட்டஸ்டண்டுகள் நீக்கும் போது கத்தோலிக்கர்களால் ஏன் எதுவும் செய்ய முடியவில்லை? கிறித்தவ உலகில் பெருமளவு மக்கள் புரோட்டஸ்டண்டு பிரிவின் இந்த நீக்குதல் வேலையை எப்படி ஜீரணித்துக் கொண்டார்கள்? புரோட்டஸ்டண்டுகள் என்ற பெயரில் பிரிவதற்கு முன் கத்தோலிக்கர்களுடன் இணைந்து ஒரே பிரிவாக இவர்கள் இருக்கும் போது இரு சாராரும் இணைந்து பல்லாயிரக் கணக்கான வசனங்களை முன்னரே நீக்கியுள்ளனர். பல ஆகமங்களை மறைத்துள்ளனர்.

இவர்கள் அடிக்கடி நீக்கியும் மறைத்தும் கூட்டியும் குறைத்தும் வந்துள்ளதால் வேதத்தின் இலக்கணத்தையே கிறித்தவர்கள் மறந்து விட்டனர். வேதத்தில் எதையும் நீக்கவோ மறைக்கவோ கூடாது என்று அவர்கள் நம்புவதில்லை. இப்படி நீக்குவதற்கும் குறைப்பதற்கும் அதை ஜீரணிப்பதற்கும் கிறித்தவ மக்கள் பழகிப்போன காரணத்தினால், மார்டின் லூதர் வந்து புரோட்டஸ்டண்டு பிரிவைத் தோற்றுவித்த போதும் வேதத்தின் பல்லாயிரக் கணக்கான வசனங்களை நீக்கிய போதும் கிறித்தவர்களில் ஒரு பிரிவினர் அதையும் ஜீரணித்துக் கொண்டனர். அவர் பின்னாலும் கணிசமான மக்கள் திரண்டனர். கத்தோலிக்க திருச்சபைகளால் எதுவுமே செய்ய முடியாமல் போனதற்கு இதுதான் முக்கிய காரணம். இவர்களே பல ஆகமங்களை நீக்கியிருக்கும் போது மார்டின் லூதர்சில ஆகமங்களை நீக்கியதை எப்படி விமர்சிக்க முடியும்?

கத்தோலிக்கர்களும் இதற்கு முன், வேதத்தில் ஏராளமான ஆகமங்களை நீக்கி விட்டனர் என்று நாம் கூறுவதை எந்த ஆதாரமுமற்ற சொந்தக் கருத்து என்று எண்ணி விடாதீர்கள். பைபிள் தருகின்ற வாக்கு மூலத்தினடிப்படையிலேயே நாம் இதைக் கூறுகிறோம். பைபிள் என்பது ஒரு தீர்க்கதரிசிக்கு அருளப்பட்டதன்று. மாறாகப் பல்வேறு தீர்க்கதரிசிகளுக்கும் ஞான திருஷ்டிக்காரர்களுக்கும் அருளப்பட்ட பல்வேறு வேதங்களின் தொகுப்பு. பைபிளில் இடம் பெற்றுள்ள சில ஆகமங்கள் தமக்கு முந்தைய ஆகமங்கள் பற்றி ஆங்காங்கே குறிப்பிடுவதை பைபிளில் நாம் காணலாம். உதாரணமாக:-

"உசியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தனமானங்களை ஆமோத்சின் குமரனாகிய 'ஏசாயா” எனும் தீர்க்கதரிசி எழுதினான்." - (இரண்டாம் நாளாகமம் 26:22)

இரண்டாம் நாளாகமத்தில் 'ஏசாயா” எனும் தீர்க்கதரிசி எழுதிய வேதம் பற்றிக் குறிப்பிடுகின்றது. ஏசாயா தீர்க்கதரிசி எழுதிய ஆகமம் பைபிள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளதா என்று நாம் தேடிப் பார்த்தால் கத்தோலிக்க பைபிளின் 27ஆவது ஆகமமாகவும் புரோட்டஸ்டண்டு பைபிளில் 23ஆவது ஆகமமாகவும் 'ஏசாயா” ஆகமம் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

"எசக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும் அவன் செய்த நன்மைகளும் ஆமோத்சின் குமரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும் யூதா, இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்திலும் எழுதியிருக்கிறது." - (இரண்டாம் நாளாகமம் 32:3)

இங்கே கூறப்படுவது போலவே ராஜாக்கள் எனும் புஸ்தகம் ஒன்றுக்கு இரண்டாக (முதலாம் ராஜாக்கள், இரண்டாம் ராஜாக்;கள்) பைபிள் தொகுப்பில் காணப்படுகின்றது. பைபிளின் சில ஆகமங்கள் வேறு சில ஆகமங்கள் பற்றி அனேக இடங்களில் குறிப்பிடுகின்றன. அவற்றில் ஒருசில ஆகமங்கள் தாம் பைபிளில் உள்ளனவே தவிர, பைபிள் குறிப்பிடும் ஏராளமான ஆகமங்களை பைபிளில் காணவில்லை. இரண்டு சாராருமே சேர்ந்து அவற்றை நீக்கி விட்டார்கள் என்பதை இதன் மூலம் நாம் உணரலாம். இதை விரிவாகவே நாம் காண்போம்.

"ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலின் பிரபந்தத்திலும் தீர்க்கதரிசியாகிய நாத்தானின் பிரபந்தத்திலும் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தின் பிரபந்தத்திலும் எழுதியிருக்கிறது ." - (முதாம் நாளாகமம் 29:29 )

இந்த வசனத்தில் மூன்று ஆகமங்கள் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. இவற்றில் சாமுவேல் ஆகமம் பைபிளில் இன்றளவும் உள்ளது. ஆனால் தீர்க்கதரிசியாகிய நாத்தான் எழுதிய பிரபந்தமும் ஞானதிருஷ்டிக்காரனாகிய 'காத்” தின் பிரபந்தமும் பைபிளில் காணப்படவில்லை. இந்த இரண்டு ஆகமங்களும் எங்கே? இரண்டோடு முடியவில்லை இன்னும் ஏராளமான ஆகமங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

"ஆர்எனும் ஸ்தலத்துக்குப் பாயும் நீரோடையும் மோவோபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது எனும் வசனம் கர்த்தருடைய யுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது." - (எண்ணாகமம் 21:15)

"இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா?" - (யோசுவா 10:13)

"சாலெமோனுடைய ஆதியந்தமான மற்ற நடபடிகள் தீர்க்கதரிசியாகிய நாத்தானின் புஸ்தகத்திலும் சீயோனியனாகிய அகியா எழுதின தீர்க்கதரிசனத்திலும் நேபாத்தின் குமரனாகிய யெரோபெயாமைக் குறித்து ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோ எழுதின தரிசனங்களிலும் அல்லவோ எழுதியிருக்கிறது." - (இரண்டாம் நாளாகமம் 9:29)

மேற்கண்ட வசனங்களில் சுட்டிக் காட்டப்படுகின்ற இத்தனை ஆகமங்களும் பைபிளில் காணப்படவில்லை.

நாத்தானுடைய புஸ்தகம் எங்கே?

காத்துடைய பிரபந்தம் எங்கே?

கர்த்தருடைய யுத்த புஸ்தகம் காணாமல் போன மர்மம் என்ன?

யாசேருடைய புஸ்தகமும் காணாமல் போய்விட்டதா?

அகயிர் எழுதிய புஸ்தகம் எங்கே போய்விட்டது?

இத்தோ எழுதிய பிரபந்தம் தொலைந்து விட்டதா?

இதற்கெல்லாம் கிறித்தவ உலகில் விடை இல்லை. ஆக, இப்படி 'நீக்குவது” என்ற வியாதி ஆரம்பம் முதலே கிறித்தவர்களிடத்தில் இருந்து வந்துள்ளது என்பதற்கு இவை மறுக்க முடியாத சான்றுகளாகும். பைபிளின் பழைய ஏற்பாட்டின் பரிதாப நிலை இது. புதிய ஏற்பாட்டை எடுத்துக் கொள்வோம். புதிய ஏற்பாடு என்பது என்ன? "நம்முடைய கர்த்தரும் ஆண்டவருமாகிய இயேசுவின் புதிய ஏற்பாடு" என்று கிறித்தவர்கள் சொன்னாலும் மறுபுறம் அவர்களே அதை மறுத்துக் கொள்கின்றனர்.

புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்கு இறைவன் அருளியதுமன்று. ஏசு கூறியதும் அன்று. மாறாக இயேசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதியவற்றின் தொகுப்பே புதிய ஏற்பாடு. 'மத்தேயு” என்றால் இயேசுவைப் பற்றி மத்தேயு என்பவர் எழுதியது. 'மாற்கு” என்றால் இயேசுவைப் பற்றி மாற்கு எழுதியது. 'யோவான்” முதலான மற்றும் பல பெயர்களில் இடம் பெற்றவைகளின் நிலையும் இது தான்.

இயேசுவுக்குப் பின் மற்றவர்கள் எழுதி வைத்த இயேசுவைப் பற்றிய பொய்யும் மெய்யும் கலந்த வரலாறு தான் புதிய ஏற்பாட்டில் உள்ளதேயன்றி இயேசுவுக்கு அருளப்பட்ட, இயேசு போதித்த வேதமன்று. நாம் கேட்கிறோம்! மிகப் பெரிய தீர்க்கதரிசிகளில் ஒருவரான இயேசுவுக்குக் கடவுளிடமிருந்து எந்த வேதமும் வரவில்லையா? கிறித்தவ நம்பிக்கையின்படி பாவிகளாகவே பிறந்த பல தீர்க்கதரிசிகளுக்கு வேதங்கள் அருளப்பட்டிருக்கும் போது அனைவரின் பாவங்களையும் சுமக்க வந்தவருக்கு புஸ்தகமோ, பிரபந்தமோ, வேதமோ இல்லாமலிருக்குமா? இயேசுவுக்கும் ஒரு வேதம் அருளப்பட்டிருக்கும் என்பது நமது அனுமானமன்று. புதிய ஏற்பாடே அதை வெளிப்படையாகப் பல இடங்களில் ஒப்புக் கொள்ளவும் செய்கிறது.

"பின்பு இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்." - (மத்தேயு 4:23)

"இயேசு கலிலேயாவில் வந்து தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்." - (மாற்கு 1:14)

"காலம் நிறைவேறிற்று. தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமாயிற்று. மனம் திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்." - (மாற்கு 1:15)

இயேசுவைப் பற்றி எழுதிய மத்தேயுவும் மாற்கும் ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தை (புத்தகத்தை) இயேசு பிரசங்கித்ததாகக் கூறுகிறார்கள். மாற்கு ஒரு படி மேலே போய் தேவனுடைய புத்தகம் அது என்கிறார். தேவனால் அருளப்பட்டதும், ராஜ்ஜியத்தின் சுவிசேஷம் எனப் பெயர்பெற்றதும் இயேசுவால் மக்களுக்குப் பிரசிங்கப்பட்டதுமான அந்தப் புத்தகம் எங்கே?

யார் யாருடைய புத்தகங்களை எல்லாமோ வேத முத்திரையுடன் உலா வரச் செய்த கிறித்தவ உலகம் இயேசுவுக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களுக்குப் அருளப்பட்டதையெல்லாம் பாதுகாத்துப் பழைய ஏற்பாட்டில் சேர்த்த கிறித்தவ உலகம் இயேசுவே பிரசங்கித்த புஸ்தகத்தை எப்படிக் கோட்டை விட்டது?

பவுல் அவராக ஒரு கோட்பாட்டை உருவாக்கிக் கொண்டு, அதை இயேசுவின் பெயரால் அரங்கேற்றியதால் அதற்குத் தடையாகவுள்ள 'ராஜ்ஜியத்தின் சுவிசேஷ”த்தைத் தலை முழுகி விட்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லையா? புத்தகத்தை விசுவாசியுங்கள் என்று இயேசு கூறியது அவருக்குப் பின்னால் கற்பனை செய்யப்பட்ட இந்த புதிய ஏற்பாட்டையா? அவரே பிரசங்கித்த புத்தகத்தையா? கிறித்தவ உலகம் சிந்திக்குமா? இயேசு எழுதிய பிரசங்கித்த போதித்த வேதத்தையே தலை முழுகியவர்கள் எதைத் தான் நீக்கியிருக்க மாட்டார்கள்? என்ற கேள்வி கிறிஸ்தவர்களே உங்களுக்கு எழ வேண்டாமா? இனியும் எப்படி பைபிளை இறை வேதம் என்று நம்ப முடியும்?


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

சகோ சிட்டிக்  Wrote 
///"முதல் மனிதன் தனியாக உண்டாக்கப்பட்டிருந்தான். ஞானமே அவனைக் காத்து வந்தது. அவனைப் பாவத்தினின்று விடுவித்தது." -(ஞான ஆகமம் 10:1)
"(கடவுள்) எழுந்து அவனவனுக்கு அவனவன் செய்ததற்குத் தக்கபடி தீர்ப்பிடுவார்." -(சீராக் ஆகமம் 17:20)

இந்த இரண்டு வசனங்களையும் சிந்தித்தால் ஆதாமின் பாவம் மன்னிக்கப்பட்டு விட்டது என்பதையும் அவனவன் செய்ததற்கு அவனே பொறுப்பாளி; மற்றவர் வந்து அதனைச் சுமக்க முடியாது என்பதையும் அறியலாம். உதாரணத்துக்காக நாம் எடுத்துக் காட்டிய மூன்று வசனங்களும் கிறித்தவக் கோட்பாட்டையே தகர்த்து தரை மட்டமாக்கி விடுவதனால் தான் புரோட்டஸ்டண்டுகள் இந்த ஆகமங்களை நீக்கியுள்ளனர்.///
 
சகோதரர் சிட்டிக் அவர்களே "ஞானம்" என்ற வார்த்தை பல இடங்களில் முற்றிலும் ஆண்டவராகிய இயேசுவையேகுறிக்கிறது. நீங்கள் இயேசுவை  சரியாக அறியாத காரணத்தால் ஞானத்தை தனியாகபிரித்து எதோ ஞானம் என்பது முதலில் படைத்த மனிதனை காத்தது என்பதுபோன்று போருள் கொண்டுள்ளீர்கள்.
 
நீதிமொழிகள் எட்டாம் அதிகாரத்தை படித்தால் "ஞானம்" என்றான்  அது ஆதியிலிருந்தே தேவனோடு இருந்து, இந்த உலகத்தில் அனைத்தையும் படைத்து ரட்சிக்கும் இயேசுவையே குறிக்கும் என்பதை அறியமுடியும். எனவே அந்த ஞானம் என்னும் "இயேசுவால்" முதல் மனிதன் காக்கப்பட்டதும் பாவத்தில் இருந்து விடுபட்டதும் மறுக்க கூடிய காரியம்அல்ல!     
 
யாக்கோபு 3:15 இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமே  
 
மேலும் முதல் மனிதன் பாவத்தில் இருந்து விடுபட்டான் என்பதையும் இங்கு மறுப்பதற்கில்லை. காரணம் தேவன் அவனுக்கு தோல் உடைகளை உண்டாக்கி உடுத்தினால் என்று வேதம் சொல்கிறது.  ஒரு மிருகத்தின் பலியின் மூலம்மட்டுமே தோல் உடை வரமுடியும். எனவே தேவன் முதல் மனிதனின் பாவத்துக்கு ஈடாக "ஒரு மிருகத்தை" பலியாக கொடுத்து அவனது பாவத்தை தற்காலிகமாக நிவர்த்தி செய்தார் 


சகோ சிட்டிக்  Wrote 
மேலும்:  "(கடவுள்) எழுந்து அவனவனுக்கு அவனவன் செய்ததற்குத் தக்கபடி தீர்ப்பிடுவார்." -(சீராக் ஆகமம் 17:20)
என்று தாங்கள் சுட்டியுள்ள வசனத்துக்கு இணையான வசனம் தற்போதுள்ள வேதாகமத்திலும் இருக்கிறது
 
மத்தேயு 16:27 மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்
 
வெளி 22:12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.

அவனவன் கிரியைக்கு தக்க பலன் உண்டு என்பதை வேதாகமம் பல இடங்களில் வலியுறுத்துகிறது. எனவே தாங்கள் சுட்டிய வசனம் ஒன்றும் வேதாகமத்துக்கு முரண்பாடான வசனம் இல்லை!  
 
சகோ சிட்டிக்  Wrote 
/////நாத்தானுடைய புஸ்தகம் எங்கே? காத்துடைய பிரபந்தம் எங்கே? கர்த்தருடைய யுத்த புஸ்தகம் காணாமல் போன மர்மம் என்ன? யாசேருடைய புஸ்தகமும் காணாமல் போய்விட்டதா? அகயிர் எழுதிய புஸ்தகம் எங்கே போய்விட்டது?
இத்தோ எழுதிய பிரபந்தம் தொலைந்து விட்டதா?////

தங்களின் இந்த கேள்வி நியாயமானதே. நானும் கூட பலமுறை இந்த புத்தகங்கள் ஏன் காணாமல் போய்விட்டது என்று யோசித்தது உண்டு. அதற்க்கு ஆண்டவர் எனக்கு தெரிவித்த உண்மை என்னவெனில். வழிதெரியாத  ஒருவருக்கு வழியை சொல்லும் நாம், பல இடங்களில் சுற்றிக்கொண்டு வரும் வழியை சொல்லாமல் நேர்வழியைதான் காண்பிப்போம். அதுபோல் தேவனும்  "நித்தியஜீவனை" அடைவதற்குண்டான நேர்வழியை தெரிவிக்கும் புத்தகங்களை மட்டும் சேர்த்துக் கொண்டு தேவையற்றவற்றை நீக்கிவிட்டார் என்பதே.  நீங்கள் சுற்றிசுற்றி அலைந்து நித்திய ஜீவனை அடைய விரும்பினால் எல்லா புத்தகத்தையும் தேடி கண்டுபிடித்து வாசிக்கலாம். நேர் வழியில் செல்ல விரும்பினால் இருக்கும் வேதாகமத்தை மட்டும் படித்தால் போதும்.   
 
தாங்கள் சொல்லும் காணாமல் போன புத்தகத்தில் வேதாகமத்துக்கு புறம்பான கருத்துக்கள் எதுவும் இருக்குமாயின் இங்கு பதிவிடுங்கள் அதுகுறித்து ஆராயலாம்.   
 
 
சகோ சிட்டிக்  Wrote 
////"பின்பு இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்." - (மத்தேயு 4:23)
யார் யாருடைய புத்தகங்களை எல்லாமோ வேத முத்திரையுடன் உலா வரச் செய்த கிறித்தவ உலகம் இயேசுவுக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களுக்குப் அருளப்பட்டதை யெல்லாம் பாதுகாத்துப் பழைய ஏற்பாட்டில் சேர்த்த கிறித்தவ உலகம் இயேசுவே பிரசங்கித்த புஸ்தகத்தை எப்படிக் கோட்டை விட்டது?///
வேதாகம புத்தகங்களில் எதுவுமே தேவனால் எழுதப்படவில்லை. பத்து கற்பனைகளை தவிர தேவன் எதையும் யாருக்கும் எழுதிக்கொடுக்கவும் இல்லை. தேவ ஆவியானவரால் ஏவப்பட்டு தேவ மனிதர்களால் எழுதபட்டதே வேதாகமம். 
 
ஆண்டவராகிய இயேசு சாதாரண மனிதர் அல்ல! அவர் தேவ குமாரன் எனவே அவர் எந்த புத்தகமும் எழுத வேண்டிய அவசியம்  இல்லை. அவரது  வாழ்க்கைதான் நமக்கு புத்தகமும்  ராஜ்யத்தின் சுவிஷேஷமேயன்றி வேறு ஒரு புதிய சுவிசேஷம் இல்லை.
 
மத்தேயு 3:2 மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான்.
மத்தேயு 4:17 அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.

இந்த பரலோக ராஜ்யத்துக்கு செல்லும் வழியை போதிப்பதே "ராஜ்யத்தின் சுவிசேஷம்"  பரலோக ராஜ்யத்துக்கு செல்ல  இயேசுவே  வழியும் சத்தியமும ஜீவனுமாயிருக்கிறார்.  அவர் வாழ்க்கையே நமக்கு போதனையாக இருக்கிறது
மற்றபடி வேறுஎந்த ராஜ்யத்தின் சுவிசேஷமும் இல்லைஎன்றே நான் கருதுகிறேன்.      
    


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 

Ak siddiq எழுதியது ////இயேசு மட்டும் இன்றி ஆதாம் முதல்அனைத்து தீர்க்கதரிசிகளும் போதித்ததும் இஸ்லாம் தான்./////


சித்திக் பாய் நீங்கள் சொன்ன இந்த கருத்துக்கு அந்த தீர்க்கதரிசிகளின் வாக்கிலிருந்து என்னால் மறுக்க முடியாத ஆதாரங்களை நீங்கள் காட்டினால் 1 கோடிபரிசு,,,,,,,,


சும்மா ஆதாரமின்றி புலம்ப கூடாது



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard