இறைமார்க்கம் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் உருவாவது! அதை முழுமையாக அறிவு பூர்வமாக நிரூபிக்க முயற்றால் அங்கு தோல்விதான் மிஞ்சும் என்றே நான் கருதுகிறேன்!
அவரவர் தங்கள் தங்கள் வேதங்களை உயர்ந்தது என்று கருதுவது இயல்புதான். அந்தந்த சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவர்கள் தங்கள் நம்பிக்கையை உண்மை என்றுதான் நிரூபிக்க முயல்வார்களே தவிர, அதில் உள்ள குறைகள் அவர்கள் கண்களுக்கு தெரிவதில்லை.
பரிசுத்த வேதாகமத்துக்கு பிறகு இரக்கப்படட திருக்குர்ரானில் அனேக வசனங்கள் அங்கொன்றும் இங்கொன்றும் பைபிளில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரே நோக்கம் இயேசுவின் இரத்தத்தால் கிடைக்கும் பாவமன்னிப்பிலிருந்து மனிதனை தடம்புரள செய்வதுதான் என்று நான் கருதுகிறேன்.
இஸ்லாம் சகோதரர்கள் சொல்வதுபோல் வேதாகமத்தில் இன்னும் அனேக விளங்க முடியாத முரண்பாடுகளும் புதிர்களும் அடங்கியுள்ளன என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். அவற்றை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து புரியவைக்கவே பரிசுத்த ஆவியானவர் என்றொரு ஆசான் அருளப்பட்டு இருக்கிறார். ஆவியானவரின் துணையில் வேதத்தை படித்தால் அர்த்தமே வேறாக தோன்றும். அப்படியிருக்க ஆவியானவரின் துணையின்றி, முரண்பாடு என்று சொல்வதை எல்லாம் விளங்க வைப்பது என்பது கடினம்.
இதெல்லாம் நமது அற்ப அறிவுப்படி ஆராய்ந்தால் சுடர்கள் வருவதற்கு முன் வெளிச்சம் எப்படி வரும்? என்றும், குரங்கைபோலவே மனிதன் இருப்பதால் குரங்கில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கும் வரவேண்டியிருக்கும். அனால் உண்மை அதுவல்ல! இதுபோல் அனேக வசனங்கள் நமது அறிவுக்கு எட்டாத வசனங்கள் வேதபுத்தகத்தில் உண்டு!
வேதத்தில் உள்ள எல்லா முரண்பாடுகளுக்கும் ஆண்டவரிடத்தில் பதில் உண்டு. அதயெல்லாம் இவர்கள விளங்கவேண்டுமேன்றால் ஆவியின் வரத்தை பெறவேண்டும். இல்லையென்றால், நாம் விளக்கமாக பதில் சொன்னாலும் அதன் நம்புவதைவிட அடுத்த குறை எங்கே இருக்கிறது என்று ஆராய்ந்து கேள்விகள் எழுப்புவார்கள் இதற்க்கு முடிவிருக்காது என்றே கருதுகிறேன்!
ஒருவர் வேதத்தின் உண்மைகளை அறிய விரும்பினால் தொடர்ந்து பல மணி நேரம் ஜெபித்து, பரிசுத்த ஆவியின் வரத்தை முதலில் பெற்று அதன்பின் வேதாகமத்தை படியுங்கள் அவரே சத்யத்தை தெளிவுபடுத்த்ட வந்த சத்ய ஆவியானவர்.
என்னிடம் ஒரு இஸ்லாம் நண்பர், "உண்மை வேதம் எதுஎன்பதை எப்படி அறிவது? ஆவியான தேவனை அறிவது எப்படி?" என்று கேட்டார். இரண்டு மணிநேரம் தொடந்து முழு மனதோடு எது உண்மை வேதம் என்று தெரியவேண்டும் என்று இறைவனிடம் மன்றடி விடாப்பிடியாக ஜெபம் பண்ணுங்கள் உண்மையை அறியலாம் என்று ஆலோசனை கூறினேன். அனால் பாவம் அவரால் பத்து நிமிடத்துக்கு மேல் ஒருமனமாய் இறைவனை தேட முடியவில்லை. தூக்கம் வருகிறது என்று சொல்லி முடியவில்லை என்று விலகிவிட்டார். பிறகு எப்படி உண்மையை அறிய முடியும்?
உண்மையை அறிய தேவன் நியமித்திருக்கும் குறைந்தபட்ச தகுதி ஓன்று வேண்டும் வெறும் மனித ஞானத்தால் வேதாகமத்தை சரியாக பொருள்கொள்வது கடினம்! சரி! ஏன் இறைவன் இப்படி ஒரு முரண்பாடுகள் நிறைந்த வேதத்தை கொடுத்துள்ளார். புரிந்துகொள்வதே கடினம் என்றால் எப்படி வேதாகம உண்மையை அறிந்துகொள்வது? என்ற கேள்வி எல்லோருக்கும் எல்லாம்.
"நித்ய ஜீவனை தருவேன்" என்பதே இறைவன் மனிதர்களுக்கு தந்த வாக்குத்தத்தம். இங்கு உலகத்தில் தங்கள் அபாரஅறிவால் அநேகரை குழப்பும் புத்திசாலிகள், நித்ய ராஜ்யத்துக்கும் வந்து அங்கும் குழப்பாதபடி தேவன் வேதத்தை ஒரு மனிதனுக்கு சரியாக புரியவைக்கும் பொறுப்பை தன்னிடமே வைத்துள்ளார். தேவன் உலக ஞானத்தை பயித்தியமாக்கியுள்ளார். உலக ஞானத்தால் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் இறைவனை அறிய முடியாது.
அவரை அறிவதற்கு குறைந்தபட்ச தகுதி ஓன்று உண்டு! அது இருந்தால் மட்டுமே பரிசுத்த ஆவியானவரை பெறமுடியும். அந்த ஆவியானவர் மூலமே தேவனை அறிவதும் நித்ய ஜீவனை அடைவதும் சாத்யமாகும்!
-- Edited by SUNDAR on Wednesday 13th of October 2010 08:08:04 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
vedamanavan wrotes: ////எந்த வசனத்தின் அடிப்படையில் இப்படி எழுதியிருக்கிறீர்கள்? அப்போஸ்தலர்கள் கை வைத்தவுடன் பரிசுத்த ஆவியை பெற்றவர்கள், நீங்கள் பதிந்ததை போல், தொடர்ந்து பல மணிநேரம் ஜெபித்தார்கள் (2 மணி நேரம் ஜெபிக்க வேண்டும்) போன்றவைகள்///
முதல் அனுபவமாக :
14 அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
விசுவாசித்தவர்கள் ஒருமனப்பட்டு ஜெபத்தொடும் வேண்டுதலோடும் தரித்திருந்தபோது (எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை) ஆவியானவர் இறங்கினார்.
இரண்டாவது அனுபவமாக
அப்போஸ்தலர்கள் கை வைத்ததும் ஆவியானவர் இறங்கியது உண்மை! அனால் இப்பொழுதுதான் அப்போஸ்த்தலர் யாரும்இல்லையே (உங்கள் கருத்துப்படி) அதனால்தான் முதல் அனுபவம்தான் சிறந்தது என்று அவ்வாறு பதிவிட்டிருக்கிறேன். இரண்டுமணி நேரம் என்பது எனது அனுபவம் மற்றவர்களுக்கு பரிசுத்தாவியானது ஒரு மணி நேரத்திலும் வரலாம் அல்லது மூன்று மணி நேரத்திலும் வரலாம் அல்லது வராமலும் போகலாம். நாம் எவ்வளவு நம்மை வெறுமையாக்கி ஒருமனதோடு தேடுகிறோமோ அவ்வளவு சீக்கிரம் பெறமுடியும்.
vedamanavan wrotes: ////மனிதனுக்கு தேவன் அதிகமான அறிவு தான் கொடுத்திருக்கிறார், அதை ஏன் சொற்ப அறிவு என்று சொல்லி வருகிறீர்கள் என்பது தான் புரியவில்லை.///
உலக ஞானத்தை தேவன் பயித்தியம் ஆக்கியிருக்கிறார் என்ற வசனத்தை படித்ததில்லையா? உலக ஞானம் என்பது உலகத்தில் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஞானம்தான் அது தேவனின் பார்வைக்கு பயித்தியம் போன்றது.
மேலும் "ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் அதை மறைத்திருக்கிறார்" ஆனால் "பாலகருக்கு வெளிப்படுத்துகிறார்" பாலகர்கள் எப்படியிருப்பார்கள் என்பது தெரியுமல்லவா? அவர்களுக்கெல்லாம் அனேக மொழிகளை ஆராயும் அறிவு கிடையாது ஆனால் அவர்களுக்குதான் தேவன் வெளிப்படுத்துவது அவரது திருவுள சித்தம் என்று வேதம் சொல்கிறது.
மேலும் தேவன் தேவனின் ஆவியன்றி தேவனின் ஆழங்களை யாரும் அறியமாட்டார்கள் என்று வேதம் குறிப்பிடுகிறது. அவர் ஆவி போதித்தால்தான் உண்மை என்னவென்பது தெரியவரும். மற்றபடி மனிதனின் ஞானம் மனிதனுக்கு பெரியதாக தெரியலாம் ஆனால் அது தேவன் பார்வையில் பயித்தியம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அறிஞர்களின் ஆராய்ச்சிகள் மற்றும் ஆதராங்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்தால் அதில் பல உண்மைகள் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது இல்லாமல் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் ஒரே ஒரு கருத்தை உண்மை என்பதை சொல்லும் ஆராய்ச்சிகளும் இருக்கிறது அதே கருத்தை பொய் சென்று சொல்லி சாதிக்கும் ஆராய்ச்சிகளும இருக்கிறது.
அறிவியலார் ஒரு நிகழ்ச்சியை சொல்லி இது இரண்டுகோடி ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்று சொன்னால் அது உண்மையில் நடந்ததா இல்லையா என்பதை கடவுளை தவிர வேறு யாராலும் சொல்லிவிட முடியாது ஏனெனில் மற்ற எந்த மனிதனும் அத்தனை கூடி வருடம் வாழ்ந்திருக்க முடியாது!
அதுபோல் என்றோ நடந்ததாக வேத புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள காரியங்களை அனேக ஆயிரம் வருடங்களுக்கு பிறகு ஆராய்ந்து அதில் எது உண்மை எது பொய் என்பதை அறிவது மிக மிக கடினம். எனவே எந்த ஒன்றையும் தீர்மானிக்க அல்லது முடிவெடுக்க ஆராய்ச்சிகளைதவிர்த்து நமது அனுபவத்தில் அடிப்படையில் அல்லது விசுவாசத்தின் அடிப்படையில் அதை அறிந்து கொள்வதே சிறந்ததும் ஏற்றதுமாய் இருக்கிறது.
ஒரு சம்பவத்தை இங்கு கூற விளைகிறேன்: ராமகிருஷ்ணரை பார்க்க சென்ற விவேகானந்தர் மனதில் புதைந்துள்ள அநேகம் ஆயிரம் கேள்வியுடன் சென்றார். "அதற்க்கு விளக்கம்" "இதற்க்கு விளக்கம்" என்று கடவுளை நம்ப அவருக்கு ஆயிரம் விளக்கம் தேவைப்பட்டது. பதில்லாத அனேக கேள்விகள் அவரிடம் இருந்தது .
ஆனால் ராமகிருஷ்ணரோ அவரிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை மாறாக தனது கையை அவரது தலையில்வைத்து ஒரு அழுத்து அழுத்தினார் உடனே விவேகானந்தர் மனதில் இருந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அவர் மண்டையில் ஏறிவிட்டது. கடவுளை பார்த்துவிட்ட மிகுந்த சந்தோஷத்தில் திரும்பினார். பின்னர் மிக சிறந்த ஆன்மீகவாதியாக மாறிவிட்டார். இந்த செய்தியை இந்துக்கள் நம்புகின்றனர்.
இச்சம்பவம் தேவன் நினைத்தால் ஒருவருக்குஎதையும் போதித்துவிட முடியும் என்பதையே நமக்கு உணர்த்துகிறது
அதுபோல் "மோசே" என்னும் பக்தனுக்கு ஆண்டவர் ஆதியில் இருந்து நடந்த யாருமே பார்த்திராத, உலக படைப்பு அதன் தொடர்ச்சி சம்பந்தப்பட்ட அனேக காரியங்களை அவர் மண்டையில் ஏற்றினார். மோசே அதை புத்தகமாக எழுதி வைத்தார். அதுவே பைபிளின் தொடக்கநூல்கள் ஆகும். அது உண்மையா பொய்யா என்று இங்கு கேள்விகள் என்று கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தால் அதற்க்கு யாராலும் பதில் சொல்லமுடியாது. அப்படியே சரியான பதில் சொன்னாலும் அதை ஏற்க்க யாருக்கும் மனதிருக்காது அதன் உண்மை தன்மையை நிரூபிக்கவும் யாராலும் முடியாது. .
நடந்தவைகளை ஆராய்ந்து எந்த அறிஞரும் கடவுளை கண்டு கொள்ளவும் முடியாது! அவர் ஞானங்களுக்கு அப்பாற்ப்பட்டவர். மனித ஞானம் என்பது பயித்திம் போன்றது. அதை வைத்து அனைத்தையும் படைத்த ஆண்டவரை அறிவது இயலாத ஓன்று .
நாம் பரம்பொருளான அறிந்துகொண்டோமா அல்லது கடவுளை நம்புகிறோமா என்பதுதான் முக்கியம். அவ்வாறு இறைவனை சரியாக அறிந்துகொண்டால் அது பொய் இது உண்மை என்ற விவாதமே இங்கு வராது.
என்பது அனுபவத்தில் நான் மனிதனையோ ஆராய்ச்சியயோ நம்பாமல் அடம் பிடித்து அவர் பாதத்தில் அமர்ந்து அழுது அவரை அறிந்து கொண்டேன். அவரைப் பற்றி அனேக இடங்களில் எழுதி வருகிறேன். என்னை பொறுத்தவரை எங்கும் நிறைந்த பரம்பொருள் ஒருவரே அவரை எந்த மதத்திற்குள்ளும் அடக்கமுடியாது.
அதுபோல் ஒருவருக்கு ஆண்டவரை அறியும் உண்மையான வாஞ்சை இருந்தால் "பைபிள் உண்மையில்லை" "திருக்குர்ஆன் உண்மையில்லை" என்று நிரூபிக்கவும், "அந்த ஊழியர் பொய் சொல்கிறார்" "இந்த ஊழியர் தவறான போதகம் செய்கிறான்" என்பதை ஆராய்வதற்கு நாம் பயன்படுத்தும் நேரத்தை இறைவனை முழுமையாக அறிவதற்கும் அவர் சித்தத்தை சரியாக நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தினால் அதனால் அனேக நன்மை விளையும்!.
"ஒன்றை பொய் என்று நிரூபிபதைவிட "எது உண்மை" என்பதை சரியான முறையில் எல்லோருக்கும் எடுத்துரைப்பதே மேன்மை யானதும் பலருக்கு பயனுள்ளதுமானது என்பது எனது கருத்து!
-- Edited by SUNDAR on Wednesday 13th of October 2010 08:19:36 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)