பரம்பரை இந்து குடும்பத்தை சார்ந்த என் வாழ்வில் நடந்துள்ள சில அபூர்வமான உண்மை நிகழ்வுகளை தொகுத்து தந்துள்ளேன். படியுங்கள் உண்மையை அறியுங்கள்.
அன்புடன் sundar
மும்பை பட்டணத்தில் எனது வாழ்க்கை:
1985ம் வருடம் எனது B Com பட்டபடிப்பை முடித்துவிட்டு கடந்த 22 வருடங்களாக ACCOUNTANT பணியாற்றி வரும் நான், திருமணமாகும் முன் 1991ம் வருடம் மும்பை பட்டணத்தில் ஒரு நல்ல வேலையில் இருந்தேன. கைநிறைய வருமான ம்கவலையற்ற வாழ்க்கை மற்றும் தட்டி கேட்க ஆளில்லாத காரணத்தால் நிறைய மது குடிப்பது, சூதாடுவது, மற்றும் அனேக சினிமா பாடல்கள் பதிவது போன்ற எத்தனையோ கெட்ட பழக்கம் உள்ளவனாக மனம் போல வாழ்ந்து வந்தேன். . மாந்த்ரீக வசிய மருந்தால் பயித்தியம் ஆனேன்:
அந்த சமயம் எனது பக்கத்து வீட்டில் ஒரு திருமணமான இளம்பெண் வசித்து வந்தாள். அவளுடன் எனக்கு பழக்கம் இருந்ததால் அவள் வீட்டில் இருந்து கொடுக்கும் உணவு பதார்த்தங்களை வாங்கி உண்பது வழக்கம். அவளுக்கு என்மீது பிரியம் ஏற்ப்பட்டது, எவ்விதத்திலும் நான் அவளைவிட்டு பிரிந்து போய்விடக்கூடாது என எண்ணிய அவள் ஒருநாள் எனக்கு கொடுத்த கேசரியில் பில்லிசூனிய மருந்தை வைத்து எனக்கு தெரியாமல் கொடுத்துவிட்டாள்.
. சுமார் ஒரு வருடம் அவளோடு சமாதானமாக இருந்த காலம்எல்லாம் அந்த மருந்து எந்த தீங்கும் எனக்கு செய்யவில்லை. ஆனால் 1992ம் வருடம் நான் என் பெற்றோரின் வற்புருத்துதலால் திருமணம் செய்ய முடிவுஎடுத்தவுடன் அந்த மந்த்ரீக மருந்து மிக கொடூரமாக தன் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது. என்னையும் மீறிய ஒரு பேய்சக்தி என்னுள் புகுந்து, என் புத்தியை குழப்பிவிட்டது! எதையுமே பலமுறை சிந்தித்து செய்யும் நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியாமல், அவளை ஒருநாள் பர்கமுடியவிட்டால்கூட ரோட்டில் நின்று பலபேர் முன்னால் கதறி அழும் நிலைக்கு தள்ளப்பட்டேன். சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், வேலைக்கு போக முடியாமல் கிட்டத்தட்ட பயித்தியம் போல் ஆகிவிட்டேன். . மும்பையில் என்னுடன் தங்கியிருந்த எனது நண்பர்கள் என்னுடைய மோசமான நிலை கண்டு வருத்தப்பட்டு, நான் வரமட்டேன் என்று எவ்வளவோ பிடிவாதம் பிடித்தும் என்னை டாக்டர்களிடமும், மந்திரிப்பவர்களிடமும் அழைத்துசென்று பார்த்தும் ஒரு பலனும் இல்லாத காரணத்தினால், எனது சொந்த ஊராகிய தூத்துக்குடிக்கு கடிதம் போட்டுவிட்டு என்னை அப்படியே விட்டுவிட்டனர். என்ன செய்கிறதென்றே தெரியாமல் யாரிடமும் சொல்ல முடியாமல் கிட்டதட்ட இரக்கும் தருவாயை அடைந்த எனது மனதுக்குள், திடீர் என்று எதோ ஒன்று பேச ஆரம்பித்தது, அது என் மனதுக்குள் அமர்ந்துகொண்டு "வரும் செவ்வாய் கிழமை 1 மணிக்கு நீ சாகப்போகிறாய்" என திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பித்தது. மிகவும் திகிலுடன் இருந்த எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை! யாரிடம் அதுபற்றி சொன்னாலும் "இவன் பயித்தியமாகிவிட்டான் ஏதோ உளறுகிறான்" என நினைத்து என்னை கொஞ்சமும் கண்டுகொள்ளவே இல்லை. . இந்நிலையில் அந்த செவ்வாய் கிழமையும் வந்தது! எழும்ப முடியாமல் பெலனற்று படுத்துகிடந்த நான் இரவு சுமார் 10மணிக்கு மரணபயத்தோடு விழித்துகொண்டிருந்தேன். தூக்கம் இல்லாமல் பல நாள் கிடந்ததால், சிறிது கண் அயர்ந்த நான் பயங்கர பயமும் திகிலும் என்னை ஆட்கொள்ள எனது உயிர் என்னை விட்டு கொடூரமாக பிடுங்கப்படுவதை உணர்ந்தேன். என் நெஞ்சு பக்கத்திலிருந்து பிடித்து, என்னை ஏதோ ஓன்று தூக்கி தூக்கி போட்டது! ஒரே நடுக்கம்! உடனே துள்ளி எழுந்து எனது அறையில் என்னோடு தங்கி இருந்த எனது ஒரே நண்பரை எழுப்பினேன். அவர் கடுமையான ஜுரத்தினால் பாதிக்கப்பட்டு கிடந்தார். அவர் ஒரு RC கிறிஸ்தவர் ஆகையால் அவரிடம் சிலுவை இருக்கும் என நினைத்து சிலுவை இருந்தால் கொடுங்கள் என கேட்டேன். ஏனெனில் நான் முன்பொருநாள் பார்த்த ஒரு பேய் படத்தில் சிலுவையை தொட்டவுடன் பேய் ஓடி விடுவதுபோல் இருந்ததால், என் உயிரை பறிக்க நினைக்கும் தீயசக்தி சிலுவையை பார்த்தாவது ஓடிவிடும் என நினைத்தேன். ஆனால் அவரால் சரியாக பேசகூட முடியவில்லை சிலுவை இல்லை என கூறிவிட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் சுமார் 12மணிக்கு லைட்டை போட்டுவைத்துக்கொண்டு பயங்கர திகிலோடு அங்கும் இங்கும் விழ்த்துக்கொண்டிருந்த எனக்கு மேல் பலகையில் இருந்த அந்த புத்தகம் கண்ணில் பட்டது.