இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "பரிசுத்த ஆவியானவர்" - ஓர் விளக்கம்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
"பரிசுத்த ஆவியானவர்" - ஓர் விளக்கம்!
Permalink  
 


ஆதியில் தேவஆவியானவர் ஜலத்தின் மீது அசைவாடி அனைத்தையும் படைத்தார் என்று வேதாகமம் சொல்கிறது. அந்த தேவ ஆவினானவருக்கு "எலோஹீம்" என்ற பன்மையை குறிக்கும் பதம் பயன்பட்டுள்ளது. 

அடுத்து

பழையஏற்பாட்டு காலத்தில் "கர்த்தருடைய ஆவியானவரின்" செயல்பாடுகள் பற்றி அனேக இடங்களில் பார்க்க முடியும்.  சில குறிப்பிட்ட நோக்கத்தோடு   ஒருசிலரை மட்டும் கர்த்தர் தனது ஆவியால் அபிஷேகம்  செய்து,  தனது  நோக்கைத்தை நிறைவேற்றி இருப்பதை   காணமுடியும்.
 
ஆனால் புதிய ஏற்பாட்டுக்கு வருவோமானால்  "ஆவியானவர்"  எனப்படும் "பரிசுத்த ஆவியானவரின்" செயல்பாடுகள் பற்றி அனேக இடங்களில் எழுதப்பட்டுள்ளது.
 
இயேசு  திருமுழுக்கு  பெறும்போது அவர்  இறங்கிவந்தார்.
 
மாற்கு 1:10 அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்.
 
இவ்வாறு   இறங்கிவரும் ஆவியானவர் இயேசு மரித்து   உயிர்த்தபிறகு பெந்தெகொஸ்தே நாளில் மீண்டும் அநேகர் மேல் வந்து இறங்கினார் என்பதை கீழ்க்கண்ட வசனம் சொல்கிறது.
 
அப்போஸ்தலர் 2:4 அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
 
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து பரிசுத்த ஆவியானவரை பற்றி பல்வேறு வெளிப்பாடுகளை வழங்கியிருந்தார்
 
யோவான் 14:16 நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
 
யோவான் 14:17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

யோவான் 14:26 என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
 
யோவான் 15:26 பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்.
 
யோவான் 16:13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

மேல்கண்ட வசனங்களை ஆராய்ந்தால் பரிசுத்த ஆவியானவர்  பற்றிய   சில முக்கிய  கருத்துக்களை 
அறிய முடியும்!  

1. அவர் பிதாவால்  அனுப்பப்படும்  வேறொரு தேற்றவாளர்  
    (அதாவது   இயேசுவோ  தேவனோ அல்ல இன்னொருவர்)

2.  அவர் என்றென்றைக்கும் நம்மோடு கூட இருப்பார்.

3. உலகத்தாராலும் உலக மூளையால் ஆராயபவர்களாலும்  அவரை  அறியமுடியாது!

4. நமக்குள்ளே தங்கியிருப்பதால் நம்மால் அவரை அறியமுடியும்      
(அப்படிஎன்றால் அறியமுடியாதவர்கள் மற்றும்    இல்லை என்று  சாதிப்பவர்கள் எல்லாம்    உலகத்தார்)

5. அவர் நமக்கு போதித்து இயேசுவின் வார்த்தைகளை நினைப்பூட்டுவார்.

6. அவர் இய்சுவை குறித்த சாட்சியை கொடுப்பார்    

7. அவர் நம்மை சத்தியத்துக்குள் வழி நடத்துவார்

8. அவர் சுயமாக எதையும் பேசமாட்டார். வரப்போகும் காரியத்தை முன்னறிவிப்பார்.
 
இவ்வளவு காரியங்களை செய்யும் அவர் நிச்சயமாக வெறும் வல்லமை  மட்டும்  அல்ல என்றும், நம்முடன் பேசி /போதித்து  நம்மை வழிநடத்தும் ஒரு  நபராகவே செயல்படுவார்  என்பதையும் அறியலாம்.
 
இப்படி செயல்படும் அந்த ஆவியானவர் யார்?      இன்னொரு புதுதேவனா?  அல்லது தேவனின் ஆவியா?  இயேசுவின் ஆவியா?  அல்லது வெறும் வல்லமைதானா?  என்பதை நாம் தொடர்ந்து ஆராயலாம்.




-- Edited by SUNDAR on Wednesday 10th of March 2010 12:58:45 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: "பரிசுத்த ஆவியானவர்" என்பவர் யார்?
Permalink  
 


ஆவியானவர் யார் என்றும் அவரின் தன்மைகள் என்ன வென்பதையும் பற்றி தியானித்து வருகிறோம்!
 
தொடர்ந்து ஆவியானவர் செயல்பாடுகள் பற்றி வேதாகமம் சொல்லும் வசனங்களை நமது தியானத்துக்கு எடுத்துகொண்டு ஆராயலாம்! 
  
ஆவியானவரால் ஒருவருடன் பேசமுடியும்!   
 
அப்போஸ்தலர் 8:29 ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்;
 
இங்கு  ஆவியானவர் பிலிப்புவுடனே  பேசி  அவனை எத்தியோப்பிய மந்திரி செல்லும் ரததுடனே சேர்ந்துகொள்  என்று கூறுகிறார்.  இவ்வசனம் ஆவியானவர் ஒரு மனிதனுடன் பேசி  அவனை நடத்தமுடியும் என்பதை தெளிவாக காட்டுகிறது. ஆவியானவர் பேசமுடியாது,  வெறும்  வல்லமை  மற்றும்   வேதவசனத்தின்  அடிப்படையில்  தேவனை அறிவதுதான் ஆவியின் அபிஷேகம் என்பதெல்லாம் தவறான கருத்து என்பதை இவ்வசனம் நமக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்கறது.  
 
ஆவியானவரால் ஒருவரை கொண்டு போகமுடியும்
 
அப்போஸ்தலர் 8:39 அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்
 
இருவர் சேர்ந்து தண்ணீரில் இறங்குகின்றனர் ஆனால் கரை ஏறியவுடன்  ஆவியானவர் பிலிப்புவை  மட்டும் எங்கேயோ கொண்டுபோயவிட்டர். இவ்வாறு மனிதனின் செயலையும் தாண்டி ஆவியானவரால் ஒருவரை கொண்டுபோக  முடியும் நடத்த முடியும் என்பதையும் இவ்வாசனம் நமக்கு விளக்குகிறது  
 
ஆவியானவரால் ஒருவருக்கு  கட்டளையிட முடியும்  
 
அப்போஸ்தலர் 11:12 நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடேகூடப் போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார்
 
இவ்வசனங்களில் ஆவியானவர் எனக்கு கட்டளயிட்டார் என்று பேதுரு மிக தெளிவாக கூறுகிறார். ஆவியில் அபிஷேகம் பெற்றிருந்தால் அவரது கட்டளையை நமது இருதயத்தில் கேட்க முடியும் அதற்க்கு ஒருவர் கீழ்படிகிறாரா இல்லையா என்பது அவரவர் மனநிலையை பொறுத்தது. ஒருவர் கீழ்படியாமல் நடக்கிறார் என்பதற்காக ஆவியானவர் அவருக்கு கட்டளையிடவில்லை என்று கருதமுடியாது!
 
 
ஆவியானவரால்  வரும் காரியத்தை முன்னறிவிக்க முடியும்!
 
அப்போஸ்தலர் 20:23 கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.
 
ஆவியானவரால் எதிர் வரும் காரியங்களை முன்னறிவிக்க முடியும் என்ற பல வசனங்கள் வேதத்தில் இருக்கிறது. தேவ மனிதர்கள் சொல்லும் தீர்க்கதரிசனம் எல்லாம் பொய் என்றும் ஆண்டவர் பேசியிருக்க வாய்ப்பில்லை என்று சொல்வதெல்லாம ஆவியானவரை அறியாதவர்கள்    சொல்லும் அர்த்தமற்ற வார்த்தைகள்.  
 
ஆவியானவர் எதிர்  வரும் காரியங்களை பலருக்கு முன்னறிவிக்கிறார் ஆனால் இதில் சில கள்ளதீர்க்கதரிசன  ஆவியும் சேர்ந்து செயல்படுவதால், சில காரியங்கள் நிறைவேறாமல் போகின்றன பலவேறுபாடான காரியங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. உலகில் எல்லாவற்றிக்குமே ஒரு டூப்ளிகேட் உண்டு! அதற்காக ஒரிஜினல் என்று ஒன்றும் இல்லைஎன்று ஆகிவிடாது. ஆவிகளை பகுத்தறிய  
தெரிந்தவரால் எது உண்மை எது போலி என்று சுலபமாக  கண்டுகொள்ள முடியும்!. மற்றபடி  எல்லாம் போலி என்று கருதுவது வசனத்துக்கு புறம்பானது.
 
ஆவியானவர் நமக்காக தேவனிடம் மான்றாடுகிறார்!
 
ரோமர் 8:26 அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக் கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
 
ஆவியானவர் ஒருவரே தேவனின் ஆழங்களை அறிந்தவர் எனவே தேவனின் மனநிலைக்கு ஏற்ப நாம் எப்படி வேண்டுதல்கள் செய்ய வேண்டும் எந்தெந்த தேவையற்ற காரியங்களை செய்ய கூடாது என்பதை குறித்து நமக்கு உணர்த்துவதோடு நாம் தவறும் நேரங்களிலும் நாம் தேவனிடம் மற்றாட முடியாமல் சோர்ந்து போகும் நேரங்களிலும் நமக்காக அவர் வேண்டுதல் செய்வதை  நம் இருதயத்தில் நம்மால் அறியமுடியும்.
 
தெரிவுக்கு (CHOICE) உதவி செய்பவர்!

அப்போஸ்தலர் 13:2
அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார்.
 
நாம் அனேக நேரங்களில் இதை செய்யவா அதை செய்யவா என்று குழம்புகிறோம். இப்படிப்பட்ட  நிலைகளை ஒரு தெளிவான முடிவுக்குவர  ஆவியானவர் நமக்கு உதவி செய்யமுடியும்  என்பதை மேல்கண்ட வசனம் உணர்த்துகிறது!  
  
தேவையற்ற இடங்களுக்கு போகவிடாமல் தடுப்பவர்!
 
அப்போஸ்தலர் 16:7 மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்
 
மனிதர்களாகிய நமக்கு எந்தெந்த இடங்களில்  எந்தெந்த  கட்டுகள்   இருக்கிறது என்பது தெரியாது. சிலர் சுவிசேஷம் சொன்ன உடன் ஏற்றுக்கொள்வர் சிலர் என்னதான்  போதித்தாலும் தங்கள் நிலைகளில் இருந்து வெளியே வரமாட்டார்கள்.  மனிதர்களின் இந்நிலைமை ஆவியானவருக்கு தெரிவதால், சில நேரங்களில் சில மனிதர்களிடம் பேசுவதையோ அல்லது சில இடங்களுக்கு போவதையோ ஆவியானவர் தடை செய்து நமது தேவையற்ற பிரயாசத்தை தடுக்க கூடியவர் அவர் பேசுவதை ஒருவரால் கேட்க முடியும்  என்பதை மேல்கண்ட வசனம் சொல்கிறது.   
 
ஆவியானவரை ஒரு மனிதனால்  துக்கப்படுத்த முடியும்
 
எபேசியர் 4:30 அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்
 
ஆவியானவர் மிகவும் மென்மையானவர் நாம் தவறு செய்யும் போது அவர் மிகுந்த துக்கப்படுகிறார். ஒரு மனிதனைதான் இன்னொரு மனிதனால் துக்கப்படுத்த முடியும். அனால் இங்கு ஆவியானவரை மனிதனால் துக்கப்படுத்த  முடியும் என்று வேதம் சொல்வதால், இவர் ஓர் ஆள்தத்துவம்  உள்ளவர் என்பதை எவ்விதத்திலும் அறிய முடிகிறது.      
 
தேவனின் ஆழங்களை அறிந்தவர்!  
 
I கொரிந்தியர் 2:10 நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.
 
வேதாகமத்தில் வசனங்கள் இரண்டு புறமும் பேசுவதால் தேவனின் உண்மை தன்மை அவரின் இருதய நிலை இவைகளை வேதாகமத்தை படித்து மட்டும் மட்டும் ஒரு மனிதனால் அறியமுடியாது. இந்நிலையில்  தேவனின் ஆழங்களை அறிந்த ஆவியானவர் துணையுடம் அதை ஆராய்வதன் மூலமே,  உண்மையில் இங்கு நடப்பது என்ன? தேவன் மனிதனிடம் எதிர்ப்பார்ப்பது என்னவென்பதை சரியாக அறியமுடியும்!  
 
இப்படி தேவனுக்கு இணையாக அனைத்து காரியங்களையும் நம்முள்ளேயே இருந்த நடப்பிக்கும் இவர் யார்?
 
திருத்துவ கொள்கையில் வரும் இவர் ஒரு தனிப்பட்ட தேவனா?  
 
தொடரும்.....


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடுகள் அவரின் தன்மைகள் எல்லாவற்றையும் நாம் அறிந்துகொண்டோம். அவர் ஒரு ஆள்த்தத்துவம் உள்ள தேவன் என்பதை மறுக்க முடியாத அளவுக்கு அனேக வசனங்களை சாட்சியாக  பார்த்துவிட்டோம்!
 
இப்பொழுது இந்த பரிசுத்த ஆவியானவர் ஒரு தனிப்பட்ட தேவனா இல்லையா என்பதை ஆராய நாம் கீழ்க்கண்ட  வசனங்களை ஆதாரமாக எடுத்துகொள்வோம்:
 
மாற்கு 12:
35. இயேசு தேவாலயத்தில் உபதேசம்பண்ணுகையில், அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று வேதபாரகர் எப்படிச் சொல்லுகிறார்கள்?
36. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே.
37.தாவீதுதானே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்
 

மேற்கண்ட வசனங்கள் மூலம் தாவீது கிறிஸ்த்துவை  ஆண்டவர் என்று  குறிப்பிட்டிருக்கிறார் என்பதை புரியமுடிகிறது!  இந்த ஆண்டவராகிய கிறிஸ்த்துவை பார்த்து  யகோவா தேவனாகிய கர்த்தர் சொல்கிறார் 

சங்கீதம் 110:1 கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும்."  என்று     

எனவே இயேசுவானவர் தனக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றியபிறகு தேவனின் வலதுபாரிசத்தில் அமர்ந்தார்
 
எபிரெயர் 12:2 அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்
 
தேவனின் வலதுபாரிசத்தில் அவர்  அமர்ந்த பிறகு  சத்துருவை பாதப்படியாக்கிபோடும் வேலையை இன்று  செய்துகொண்டிருப்பவர்  கத்தராகிய தேவனே.
 
ஆண்டவராகிய  இயேசு  மரித்தபிறகுஇந்த  உலகத்துக்கு  வல்லமையாக அனுப்பபட்டவர் பரிசுத்த  ஆவியானவர். இந்த யுகத்தை ஆவியானவரின் யுகம் என்று சொன்னால் மிகையாகாது. ஏனெனில் இந்த கடைசி யுகத்தில்  நடக்கும்  எல்லா கிரியைகளும் ஆவியானவர் மூலமே நடைபெறுகிறது அதை இயேசுவும்  முன்னறிவித்து  சென்றிருக்கிறார்.
 
யோவான் 14:17  அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்
 
இவ்வாறு  நமக்கு வந்து தங்கி நம்மை வழி நடத்ததி இன்று வல்லமையாக கிரியை செய்துக்கொண்டிருக்கும்  ஆவியானவரே,  இறுதியில் எல்லா சத்துருக்களையும்  இயேசுவுக்கு பாதபடியாக்கி போடகூடியவர். 
 
இவ்வாறு பார்த்தால் பழையஏற்பாட்டு காலத்தில் சில குறிப்பிட்ட செயல்களை செய்ய சில குறிப்பிட்டவர்களை அபிஷேகம் செய்த  கர்த்தரின் ஆவியானவேரே புதிய ஏற்பாட்டு காலத்தில் அநேகர் மேலிறங்கி  கிரியை செய்யும்  ஆள்தத்துவம் உள்ள ஆவியானவர் ஆனார். அதற்காக அவர் வரம்பெற்றார் என்று சங்கீதகாரன் சொல்கிறான்     
 
சங்கீதம் 68:18 தேவரீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்;
 
இது இயேசுவின் கிரியை.
 
இவ்வாறு இயேசு மரித்து உயிர்த்ததின் மூலம் தேவனாகிய கர்த்தர் மனிதனுக்குள் வாசம் பண்ணும் வரத்தை பெற்றார் என்று தெளிவாக வேதம் சொல்கிறது
 
சங்கீதம் 68:18 தேவனாகிய கர்த்தர் மனுஷருக்குள் வாசம்பண்ணும் பொருட்டு   துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர்
 
இவ்வாறு மனுசனுக்குள் வந்து வாசம்செய்து அனைத்து கிரியைகளையும் நடப்பிக்கும் ஆவியானவர் என்பவர்  கர்த்தரின் ஆவியானவரே! அவரே சகல சத்துருக்களையும் ஒரு முடிவுக்கு கொண்டுவருவார் இதைதான் கர்த்தரும் 
 
சகரியா 4:6  பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்  
 
ஆம்! சகலமும் பரிசுத்த ஆவியாக செயல்படும் அவரின் ஆவியாலேயே ஆகும்!  இன்று ஆவியானவர் என்று மனிதனுக்குள் வந்து தங்கி அதிசயங்களை செய்பவர் தேவனாகிய கர்த்தரின் ஆவியே
 
II கொரிந்தியர் 3:௧௭   கர்த்தரே ஆவியானவர்
 
ஆம்! ஆவியானவர் எனப்படுவபவர் கர்த்தரே!   யகோவா தேவனை அறிந்திருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் அனேக கிறிஸ்த்தவர்கள்,அவரே இக்காலத்தில் ஆவியானவராய்  கிரியைசெய்கிறார் என்பதை அறியாமலும்  அந்த ஆவியானவரை தன்னுள் பெற்றுக்கொள்ள வாஞ்சை யில்லாமலும் அப்படி ஒருவர்  இல்லை என்று சாதிப்பதும் மிகுந்த  ஆச்சர்யமே!
 
இன்னும்கூட ஒருவசனத்தை சாட்சியாக இங்கு கூறமுடியும்
   
அப்போஸ்தலர்5:9 பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன?
 
என்று கூறுவதன் மூலம் நம்முள் வந்து தங்கி வாசம் செய்பவர் கர்த்தருடைய ஆவியானவரே என்பதை அறியமுடியும்.
 
II கொரிந்தியர் 6:16   நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன்
 
மனிதனுக்குள்  வந்து  வாசம்பண்ணுவேன் என்று சொன்னவரும் கர்த்தரே!  
 
இவ்வாறு தேவ குமாரனும்   (இயேசு கிறிஸ்த்து)  பரிசுத்த ஆவியாகிய கர்த்தரின் ஆவியானவரும் (யகோவா தேவன்)  இரண்டு ஆள்தத்துவம் உள்ளவர்கள் என்பதை அறியமுடியும்!  
 
இவர்கள் இரண்டாக  பிரிந்து செயல்பட்டாலும் இவர்கள் ஒருவரே அதாவது இரண்டாக பிரிந்து செயல்படும் ஒருவர்.   
ஆவியானவர் பற்றிய  இன்னும் சில மறைபொருளான காரியங்கள் பற்றியும், திரித்துவத்தின் இன்னொரு நபர்  யார்? என்பது  பற்றியும் தொடர்ந்து ஆராயலாம்!  

 

-- Edited by SUNDAR on Thursday 25th of February 2010 11:07:25 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

பரிசுத்த  ஆவியானவர்பற்றி  இன்னும் சில சத்தியங்களை தெரிந்து கொள்வது  அவசியம்  என்று கருதுகிறேன்.
 
ஒரு மொபைலுக்கு சிம்காட் எப்படி டவருக்கும் போனுக்கும் இடையில்  தொடர்பை 
ஏற்ப்படுத்துகிறதோ,  அதேபோல மனிதனுக்குள் வந்து தங்கும் ஆவியான்வர் மூலம்  தேவனுக்கும்  நமக்கும் இடையே ஒரு தொடர்பு நிலை ஏற்ப்படுகிறது.
 
ஆவியானவர் நமக்கு கொடுக்கப்படும்  முதல்கட்ட தொடர்பு நிலைதான் ஆனால்  அந்த ஒரு சிம்கார்ட் மூலம் எப்படி இன்டர்  நெட்டில் இருந்து அனேக காரியங்களை மொபைலில் பார்க்க முடிகிறதோ அதுபோல் அந்த ஆவியானவர் என்ற ஒரே தொடர்பின் மூலம் திரித்துவ தேவனும் நம்முள் வரமுடியும் மற்றும் தேவனை பற்றிய ஆவிக்குரிய  அனேக ரகசியங்களை  அவர்மூலம்   அறியமுடியும்.    
  
இப்பொழுது கீழ்க்கண்ட வசனங்களை சற்று  ஆராய்வோம்:
 
ரோமர் 8:9  தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவி யில்லாதவன் அவருடையவனல்ல.

ரோமர் 8:11 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
 
மேலே ஊதா கலரில் போல்ட் செய்யபட்ட இம்மூன்றும்தான் திரித்துவ தேவனின் மூன்று நிலைகள்.  ஆண்டவரிடம் மற்றாடி ஆவியானவரை பெறுவதன் மூலமும், கடுமையான ஜெபம் மற்றும் பரிசுத்தமான வாழ்க்கை  கீழ்படிதல்  மூலமும் தேவனின் இம்மூன்று  நிலைகளையும்  நம்மால் தனித்தனியே  அனுபவித்து பார்க்க முடியும்.
 
பொதுவாக  இம்மூன்று  ஆவியானவர்களும்  ஒரு மனிதனுக்குள் ஒரே நேரத்தில் வருவது இல்லை!  ஆனால் அப்படி அவர்கள் வந்தால்  "ஆ! அந்த நிலையை என்னால் வர்ணிக்கவே முடியாது!  நமது இருதயம் வெறும் பஞ்சாகபோய்  நாம் நடக்காமல் பறப்பதுபோல் உணர்வோம், இயற்க்கைக்கு அப்பாற்பட்டதை எல்லாம் பார்ப்போம்"   அதன் உண்மை தன்மையை விளக்க வார்த்தை இல்லை அதை   அனுபவித்துதான் அறியமுடியும்!  
 
 
திரித்துவ தேவனின் மூன்று  நிலைகள்: 
 
1. தேவனுடைய ஆவி  - பிதாவாகிய தேவன்
2. கிறிஸ்துவின் ஆவி - குமாரனாகிய கிறிஸ்த்து
3. இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி   
                                               -  தேவனாகிய கர்த்தர் (யகோவா)  
 
(அப்போஸ்தலர் 5:30 நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,- (முற்ப்பிதாக்களின் தேவன் - யகோவா தேவனே )  

இம்மூவரும் ஒருவரே!
நம்புவதும் நிராகரிப்பதும் அவரவர் விருப்பம்!


-- Edited by SUNDAR on Wednesday 10th of March 2010 12:57:04 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
"பரிசுத்த ஆவியானவர்" - ஓர் விளக்கம்!
Permalink  
 


BRO. SUNDAR WROTE IN ONE PLACE

 //2.  அவர் என்றென்றைக்கும் நம்மோடு கூட இருப்பார்.//

IN ANOTHER PLACE

//பொதுவாக  இம்மூன்று  ஆவியானவர்களும்  ஒரு மனிதனுக்குள் ஒரே நேரத்தில் வருவது இல்லை!//

SEEMS CONTRADICT EACH OTHER..

OUT OF THREE SPIRITUAL PERSONS WHO IS SPIRIT OF TRUTH AND COMFORTER?

அப்போஸ்தலர் 2:4 - SPEAKS ABOUT SPIRIT NOT PERSONALISED SPIRIT 

PLEASE EXPLAIN



-- Edited by SANDOSH on Tuesday 13th of September 2011 07:55:01 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

SANDOSH wrote:

BRO. SUNDAR WROTE IN ONE PLACE

 //2.  அவர் என்றென்றைக்கும் நம்மோடு கூட இருப்பார்.//

IN ANOTHER PLACE

//பொதுவாக  இம்மூன்று  ஆவியானவர்களும்  ஒரு மனிதனுக்குள் ஒரே நேரத்தில் வருவது இல்லை!//

SEEMS CONTRADICT EACH OTHER..

-------------------------------------------------------------------------------------------

சகோதரர் சந்தோஷ் அவர்களே நான் எழுதியுள்ள இந்த கருத்தில் எதிர்மறையான கருத்து எதுவும்  இருப்பதுபோல் எனக்கு தெரிய வில்லை. (ஒருவேளை தாங்கள் கேள்வி எனக்கு புரியவில்லையோ  என்னவோ)
 
ஆவியாயிருக்கும் தேவனின் திரித்துவ நிலைகளை பற்றி விளக்கி யிருக்கும் நான் "பரிசத்த ஆவியானவர்" என்னும் தேற்றவாளர் எப்பொழுதும் நம்முள்தங்கியிருந்து நம்மை வழிநடத்துகிறார் என்றும் திரித்துவத்தின் அடுத்த இரண்டு நிலைகளாகிய, தேவ ஆவியும், கிறிஸ்த்துவின் ஆவியும் ஒரு மனுஷனுக்குள் நிலையாக
வந்து தங்குவது இல்லை. 
 
ஒருவர் ஆவியில் நிறைந்து அதிகமாக ஜெபிக்கும்போது சில நேரங்களில் தேவ ஆவியானவரோ அல்லது கிறிஸ்த்துவின்  ஆவியோ
அவருக்குள் வரலாம். அப்பொழுது அவர்கள் உலகத்தில் கால் ஊன்றி நிற்காமல்  பறப்பது போன்ற ஒரு சந்தோஷமான அனுபவத்துக்குள் கடந்து போவார்கள். அவர்களின் கண்கள் அல்லது இருதயங்கள் திறக்கப்படலாம், இயற்க்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களை காணவோ கேட்கவோ உணரவோ  முடியலாம்.  ஆனால் அவர்கள் உலக நிலைக்கு வரும்போது, தேற்றரவாளர் ஒருவரே நம்மோடு இருப்பார், மற்றவர்கள் நம்மைவிட்டு போய்விடுவார்கள். என்பதையே இங்கு விளக்கினேன்.
 
நம்முள் தங்கி இருக்கும் பரிசுத்த ஆவியானவர் என்ற தேற்றர வாளரோடு தேவனின் மற்ற இரண்டு ஆவி நிலைகளாகிய தேவஆவி மற்றும் கிறிஸ்த்துவின் ஆவி ஆகிய தேவத்துவத்தின் மொத்த ஆவிகளும் ஒரே நேரத்தில் ஒரே மனுஷனுக்குள் வருவதில்லை! என்ற கருத்தையே மேற்ப்படி தெரிவித்திருக்கின்றேன்.

SANDOSH wrote:

----------------------------------------------------------------------------

OUT OF THREE SPIRITUAL PERSONS WHO IS SPIRIT OF TRUTH AND COMFORTER?

-----------------------------------------------------------------

நான் குறிப்பிட்டிருக்கும் தேவனின் மூன்று ஆவியானவரின் நிலைகளில் "கர்த்தரே ஆவியானவர்" என்று சொல்லப்படும் பரிசுத்த ஆவியானவரே தேற்றவாளராகவும் நம்முள் வந்து  தங்கி, சத்துருவை பாதப்படியாக்கி  போடும் வேலையை செய்துகொண்டு இருக்கிறார். ஏனெனில் அவர்தான் மனுஷனுக்குள் தங்கும் வரத்தை பெற்றிருக்கிறார்.    

சங்கீதம் 68:18 தேவனாகிய கர்த்தர் மனுஷருக்குள் வாசம்பண்ணும் பொருட்டு   துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர்
 
வரத்தை பெற்ற அவர் மட்டுமே, மனுஷனுக்குள் வந்து நிரந்தரமாக தங்கமுடியும்  மற்றவர்கள்  மனுஷனுக்குள் வந்தாலும் அவர்களுக்குள் நிலையாக தங்குவது இல்லை. சில நேரங்களில் நாம் உலக காரியங்களில் கவனம் காட்டும்போது  வெளியேறிவிடுவார்கள். பின்னர் நாம் அதிகமாக தேடும்போது வருவார்கள்.  ஆனால், நமக்குள் வந்து தங்கியிருக்கும் பரிசுத்த
ஆவியாகிய தேற்றவாளர் ஒருவரைவிட்டு துக்கத்தோடு வெளியேறிவிட்டால் பின்னர் அவர்களுக்கு மீட்பு இல்லை!  

SANDOSH wrote:

-----------------------------------------------------------------

அப்போஸ்தலர் 2:4 - SPEAKS ABOUT SPIRIT NOT PERSONALISED SPIRIT 

PLEASE EXPLAIN

------------------------------------------------------------------------------------------
கர்த்தருக்கு சித்தமானால் தங்களின் இந்த கேள்விக்கு விரைவில் பதில் தருகிறேன்



-- Edited by SUNDAR on Friday 16th of September 2011 04:06:18 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

        SANDOSH wrote:

-----------------------------------------------------------------

அப்போஸ்தலர் 2:4 - SPEAKS ABOUT SPIRIT NOT PERSONALISED SPIRIT 

PLEASE EXPLAIN


"தேவன் ஆவியாய் இருக்கிறார்" என்று வேதம் சொல்கிறது!  மொத்தத்தில் "பரிசுத்த ஆவி" என்பது தேவஆவியையே குறிக்கிறது!
 
அதாவது பலவித வல்லமையுடன்கூடிய ஆள்த்துவமுள்ள ஆவிகளின் தொகுப்பே  ஆதியில் ஜலத்தின்மீது அசைவாடிக்கொண்டிருந்த தேவ ஆவியானவர் ஆவார்.
 
இந்த வல்லமை நிறைந்த  தேவ ஆவியானவர் உலகில் பல்வேறு விதமாக கிரியைகளை செய்ய முடியும்!
 
மனுஷ ஆவிகளை எழுப்பி ஒரு கிரியை செய்ய முடியும் !
 
ஆகாய் 1:14 பின்பு கர்த்தர் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுடைய ஆவியையும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய ஆவியையும், ஜனத்தில் மீதியான எல்லாருடைய ஆவியையும் எழுப்பினார்; அவர்கள் வந்து, தங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே வேலைசெய்தார்கள்.
 
II நாளாகமம் 21:16 அப்படியே கர்த்தர் பெலிஸ்தரின் ஆவியையும், எத்தியோப்பியாவுக்கடுத்த தேசத்தாரான அரபியரின் ஆவியையும் யோராமுக்கு விரோதமாக எழுப்பினார்.
தன்னுடய கரத்தில் இருக்கும் ராஜாக்களின் இருதயங்களை தம்முடய சித்தப்படி திருப்பியும் கிரியை செய்யமுடியும்
 
நீதிமொழிகள் 21:1 ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப்போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்
 
தன்னுடய வார்த்தைகளை அல்லது வசனங்களை அனுப்பியும்கூட அவரால் கிரியை செய்யமுடியும்  
 
சங்கீதம் 107:20 அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்
 
தன்னுடய தூதனை அனுப்பி அவர் கிரியை செய்ய முடியும்!
 
II நாளாகமம் 32:21 அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் அதம்பண்ணினான்;
 
தன்னுடய கட்டுபாட்டில் இயங்கும் பலவிதமான ஆவிகளை அனுப்பியும் தேவனால் கிரியை செய்ய முடியும்!  
 
ஏசாயா 37:7 இதோ, அவன் ஒரு செய்தியைக்கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார்  
 
II நாளாகமம் 18:22 கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளின் வாயிலே கட்டளையிட்டார்
 
தன்னுடய குமாரனின் ஆவியை அனுப்பியும் கிரியை செய்ய முடியும்!
 
கலாத்தியர் 4:6 மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.
 
தேவன் தன்னுடய ஆவி என்னும் வல்லமையை  மாத்திரம் பயன்படுத்தியும் அவரால் கிரியை செய்யமுடியும்! 
 
ஏசாயா 40:7 கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல்.
எசேக்கியேல் 3:14 ஆவி என்னை உயர எடுத்துக்கொண்டது; நான் என் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்துபோனேன்
அப்போஸ்தலர் 8:17 அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்.

மேலும் , தேவன் தன் பல்வேறு ஆவியின் வல்லமை, வார்த்தையின் வல்லமை மற்றும் ஆள்த்துவத்தோடு கூடவும் ஒரு மனுஷனுக்குள் வந்து தங்கி கிரியை செய்ய முடியும்!     
 
ஏசாயா 11:2 ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.
 
I பேதுரு 4:14 நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்
 
இவ்விதம் பல்வேறு பரிணாமங்களில் தேவன் இந்த உலகத்திலும் மனுஷர்களிடையேயும் தேவன் கிரியை செய்திருப்பதை நாம் வேத வசனங்களின் மூலம் அறியலாம்.
 
எனவே  "பரிசுத்த ஆவி" எனப்படும் தேவ ஆவியின் வல்லமை மாத்திரம் தனியே கிரியை செய்த இடங்களும் உண்டு,  அத்தோடு  "பரிசுத்த ஆவியானவர்" எனப்படும் ஆள்த்துவத்துடன் கூடிய தேவ ஆவியானவரும் வந்து தங்கி கிரியை செய்த நிலைகளும் உண்டு. ஓன்று தேவனின் வல்லமை மாத்திரம் கிரியை செய்யும் னில்லை இன்னொன்று தேவனின் ஆத்துமாவுடன் கூடிய ஆவியும் வந்து தங்கி கிரியை செய்யும் நிலை. இதைப்பற்றிய போதிய அனுபவம் இல்லாதவர்கள்  இந்த உண்மை தெரியாமல்  அநேகர்  பரிசுத்த ஆவி  என்பது வெறும் வல்லமை மட்டும்தான் என்று கருதுகின்றனர்.  ஆகினும்  இவ்விரண்டுக்கும் பெரிய வேறுபாடு எதுவும்இல்லை என்றே நான் கருதுகிறேன். காரணம் பரிசுத்தஆவி என்னும் தேவ ஆவியின் வல்லமையை பெற்றிருக்கும் ஒருவருக்குள் தேவன் ஆள்த்துவத்துடன் கூடிய வல்லமையோடு ஒரு நிமிடத்தில் வந்துவிட கூடும்.
 
எனவே, ஆவியானவர் வெறும் வல்லமை மட்டும்தான் என்று நிர்விசாரமாக இருக்காமல், வாஞ்சித்து, உலக மீட்புக்கு  அருளப்பட்டுள  பரிசுத்த ஆவி என்னும் தேவ ஆவியின் வல்லமையை  பெற்றுக்கொண்டால் மட்டுமே, ஆவியான தேவன் ஆள்த்துவத்துடன்  நம்முள் வந்து நினைத்த நேரத்தில் கிரியை செய்யமுடியும். கண்டித்து உணர்த்தி பரிசுத்த வழியில் நம்மை நடத்த முடியும்!       
 


-- Edited by SUNDAR on Thursday 22nd of September 2011 03:30:56 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard