வேத புத்தகத்தில் சுமார் 80முறைக்கு மேல் பாதாளம் என்ற வார்த்தை எழுதப்பட்டுள்ளதொடு மட்டுமல்லாமல் "நரகம்" "புறம்பான இருள்" "அக்கினி சூளை" "அக்கினியும் கந்தகமும் எரியும் கடல்" என்றால் வருணிக்கப்பட்டுள்ள நரகம் பாதாளம்பற்றி அநேகருக்கு போதிய வெளிப்பாடு இல்லாத காரணத்தால், அந்த பயங்கரமான இடம்பற்றி முழு நம்பிக்கை மற்றும் பயம் இல்லாமல் வெகு நிர்விசாரமாக, ஆத்துமாகளுக்காக பரிதபிக்கும் உள்ளம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். எனவே முழு வேத வசன ஆதாரங்களோடு பாதாளம் நரகம் பற்றிய இந்த கட்டுரையை எழுதலாம் என்று நினைக்கிறேன்.
நான் எழுதுவதில் எங்கும் தவறு அல்லது திருத்தம் இருக்குமாயில் அறிந்தவர் விளக்கலாம் நான் திருத்திக்கொள்வேன். ஆனால் வேதவசன ஆதாரம் தந்த பிறகு அது இது அல்ல வேறு பொருள்வரும் என்றெல்லாம் கருதுவீர்களானால் அதற்க்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பல்ல!
முதலில் ஆத்தும்மவுக்குஎன்று ஒரு தனிசரீரம் உண்டு என்பதை நம்பவேண்டும் அதன் பெயர் ஆவிக்குரிய சரீரம் என்று வேதம் சொல்கிறது! நாம் தொடர்ந்து தியானம் பன்னுபவராக இருந்தால் நமது ஆத்துமாவையும் நம் உடலையும் தனியே பிரித்து பார்க்க முடியும். ஆவிக்குரிய சரீரம் என்பது நமது சாதரண மனித கண்களுக்கு தெரிவதில்லை. மருரூப மலையில் மோசே தரிசன்னமானது அந்த சரீரத்தில்தான்
ஏனெனில் வேதபுத்தகத்தில் உள்ள வசனங்களை தனக்கு ஏற்றார் போல் மாற்றிக்கொண்டு அருத்தம் எடுக்கும் அநேகர் மத்தியில் வார்த்தைகளின் உண்மைத்தன்மையை விளங்கவைப்பது மிக கடினம். நம்புகிறவர் நம்பலாம் நம்பிக்கை இல்லை என்றால் விட்டு விடலாம். தேவை இல்லாத பொய்யை எழுதி பயம்காட்டுவதால் எனக்கு எந்த பலனும் கிடைக்கபோவதில்லை !
கர்த்தரால் ஒருவனை பாதாளத்துக்குள் இறக்கி ஏற்றமுடியும்! அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர் (சங்: 71-20)
கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.(I சாமு 2:6)
என்ற வார்த்தைகளை படி, பாதாளத்தில் இறங்கவும் ஏறவும் பண்ணக்கூடிய கர்த்தராகிய தேவன், 1992 வருடம் தாழ்ந்த பாதாளம் வரை இறங்கிவிட்ட என்னை அங்கிருந்து ஏறப்பண்ணினார். அப்பொழுது நான் பாதாளங்கள் பற்றி அறிந்துகொண்ட உண்மைகளை நீங்களும் அறிந்துகொண்டால் நிச்சயம் அழிந்து போகும் ஆத்துமாக்களுக்காக ஒரு பரிதபிப்பு வரும் என்ற நோக்கில் இந்த கட்டுரையை பதிப்பது நல்லது என்று நினைத்து பதிக்கிறேன். இதில் அனேக நான் அனுபவித்த, நேரடியாக பார்த்த காரியங்கள் அடங்கியுள்ளன!
தொடரும்....
-- Edited by SUNDAR on Thursday 28th of January 2010 04:59:27 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களோடேகூடப் பாதாளத்தில் இறங்கப்பண்ணுகையில், (எசே :31:16)
கீழே இருக்கிற பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து, (ஏசா 14:9)
ஆம் அன்பானவர்களே பாதாளம் என்பது ஒரு மிக பெரிய படுகுழி அப்படியே கீழ் நோக்கி பொய் கொண்டே இருக்க கூடியது. அது பூமியின் கீழே மிக சமீபமாக இருக்கிறது பூமியின் பல இடங்களில் இருந்து அதன் உள்ளே போகும் வழிகள் அமைந்துள்ளன!
பாதாளத்தின் தன்மைகள் என்ன:?
பாதாளம் தன்னை விரிவாக்கும் தன்மை உள்ளது என்று கீழ்க்கண்ட வசனம் சொல்கிறது!
அதினிமித்தம் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மட்டில்லாமல் திறந்தது; அவர்கள் மகிமையும், அவர்கள் திரள்கூட்டமும், அவர்கள் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அதற்குள் இறங்கிப்போவார்கள் (ஏசா 5:14)
தன் ஆத்துமாவைப் பாதாளத்தைப்போல விரிவாக்கித் திருப்தியாகாமல் (ஆப 2:5)
பாதாளம் எவ்வளவு ஆத்துமாக்கள் உள்ளே போனாலும் திருப்த்தி அடையாது, உள்ளே வாங்கிக்கொள்ளும் தன்மை உடையது என்றும கீழ்க்கண்ட வசனங்கள் சொல்கின்றன!
மேலும் பாதளம் ஆத்துமாக்களை விழுங்கும் தன்மை உடையது:
பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடே விழுங்குவோம்; (நீதி 1:12)
ஒரு திமிங்கலம் ஒரு மனிதனை விழுங்கினால் அவன் சிறுக சிறுக உரு குலைந்து அழிவதுபோல் இங்கு அழிவு உண்டு ஆனால் அது நிரந்தரம் அல்ல மீண்டும் மீண்டும் அது நடைபெற்றுக்கொண்டு இருக்கும். ஏனெனில் அங்கு அக்கினி அவியாது! புழு சாகாது! சதா காலமும் அங்கு எரிந்துகொண்டு இருக்கும்
மாற்கு 9:44அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.
பாதாளம் ரூபத்தை அளிக்கும் தன்மை உடையது என்று கீழ்கண்ட வசனம் சொல்கிறது.
அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக் கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும். (சங்: 49-14)
அங்கிருப்பவர்களுக்கு ஒரு நிலையான ரூபம் இருக்க முடியாமல் அழிவதும பின்பு புதிதாக உருவத்தாலும் நடைபெறும்.
பாதாளம் கொடியது:
நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது ( உன் 8:6)
ஆம் அன்பானவர்களே பாதாளம் மிக கொடியது மரித்து அதனும் இறங்கும் யாரும் அதனுள் இருந்து ஏறி வரவே முடியாது :
மேகம் பறந்துபோகிறதுபோல பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரான் யோபு ( 7:9)
ஆம் மரித்து பாதாளத்துக்குள் இறங்கும் யாருமே மீண்டும் ஏறி வரவே முடியாது .
ஆகினும் தேவனாகிய கர்த்தரால் ஒரு மனிதனை பாதாளத்தினுள் இறங்கவும் ஏறவும் பண்ண முடியும் என்று கீழ்க்கண்ட வசனங்கள் சொல்கின்றன
கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.(I சாமு 2:6)
கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர். (சங் 30:3)
பாதளத்தில் மரண அறைகள் என்னும் அறைகள் உண்டு:
அவள் வீடு பாதாளத்துக்குப்போம் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும். ((நீதி 7:27)
மரண அறைகள் என்று சொல்லப்படும் இந்த அறைகளில் நடக்கும் பயங்கரங்கள் எழுத முடியாதவை அவனவன் செய்த தீமைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு அறைகளிலும் வித்யாசமான கொடூரங்கள் நடக்கும்
ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவ மன்னிப்பு பெறாத யாராக இருந்தாலும் மரித்தவுடன் பாதாளத்தில் இறங்குவார்கள்
பாதாளத்தின் அதிபதி யார்?
அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர் (9:11)
பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். (11:7)
நீ, கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது(17:8)
மேற்கண்ட வசனம்படி பாதாளத்தின் அதிபதி விழுந்துபோன தூதன் எனப்படும் மிருகம் ஆகும். அங்கு போகும் ஆத்துமாக்கள் அவனுடைய கையாட்களால் வெள்ளை சிங்காசன நியாயதீர்ப்புவரை வாதிக்கப்படும்
பாதாளத்தின் வகைகள்:
பாதளம் என்பது மூன்று அடுக்குகளை கொண்டது அவைகள்
1. கீழான பாதளம் (பாதாளத்தின் மேல் தட்டு ஆனால் பூமிக்கு கீழான பாதளம்)
கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம். (15:24)
இங்கு ஆத்துமாக்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன அதாவது ஒரு கூடை நிறைய மீன் இருப்பது போல நேழு நேழு என்று ஒன்றன் மேல் ஒன்றாக போராடிக்கொண்டு இருக்கின்றன மற்றபடி கொடூர வேதனை இல்லை.
2. தாழ்ந்த பாதளம் அல்லது அகாதமான பாதாளம் நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். (86:13)
ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டு போனாய்.( 14:15)
இங்கும ஆத்துமாக்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன என்று ஒன்றன் மேல் ஒன்றாக போராடிக்கொண்டு இருக்கின்றன இங்கு புழுக்களும் பூச்சிகளும் உண்டு மற்றபடி கொடூர வேதனை இல்லை. ஆனால் மிகப்பெரிய வேதனை என்னவென்றால் கீழே நரக பாதாளத்தில் நடக்கு கொடூரங்கள் இவைகளுக்கு தெரியும். தானும் அங்கு போய்விடக்கூடாது என்ற நோக்கியில் மேலே ஏற எப்பொழுதும் முயற்சித்து தோற்றுக்கொண்டே இருக்கும், பயமும் திகிலும் உங்கு உண்டு
3. நரக பாதாளம்
ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான். (நீதி 9:8)
இங்கு வரும் ஆத்துமாக்கள் இரவு பகலாக பிசாசின் ஆவிகளால் பல்வேறு விதமாக வாதிக்கப்படுகின்றன. இதற்க்கு கொள்ளளவே கிடையாது எவ்வளவு போனாலும் ஏற்றுக்கொள்ளும் தன்மை உடையது.
அக்கினிக்கடல்:
இந்த நரக பாதாளத்தை ஒட்டி அக்கினி கடல் என்ற ஓன்று உள்ளது. ஆனால் இது வெள்ளை சிங்கசன நியாய தீர்ப்புக்கு பிறகுதான் திறக்கப்படும்.
தற்சமயம் நடைபெறுவது
பழைய ஏற்பாடு காலத்திலிருந்தே ஒரு மனிதன் மரித்த உடன் பாதாளத்தில் இறங்குகிறான். புதிய ஏற்பாட்டு காலத்தில் கிறிஸ்த்துவை ஏற்றுக்கொள்ளாது மரித்த எல்லோருமே பாதாளத்தில் இருந்குகின்றார்கள்
ஆதியாகமம் 37:35 ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் யோபு 21:13 அவர்கள் செல்வவான்களாய்த் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு க்ஷணபொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள். எசேக்கியேல் 31:17 இவர்களும் ஜாதிகளின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் புயபலமாயிருந்தவர்களும், பட்டயத்தால் வெட்டுண்டவர்களண்டையிலே பாதாளத்தில் இறங்கினார்கள்.
இவ்வாறு மரித்து பாதாளத்தில் இறங்கும் ஒருவர் மிக நல்லவனாக இருந்தால் கீழான பாதாளம் எனப்படும பாதாளத்தின் மேலுள்ள பகுதியிலேயே தங்கிவிடுவான். ஒரு வேளை அவன் அதிகம் பாவம் செய்யாத ஒரு சாதரண பாவியாக இருந்தால், தாழ்ந்த பாதளம் வரை செல்வான் அங்கு தங்கிவிடுவான். மிகவும் மோசமான பாவியாக இருந்தால் அவன் நேராக நரகபாதளம் சென்று அங்கு பிசாசுகளினால் வெள்ளை சிங்கசன நியாய தீர்ப்புவரை வாதிக்கப்படுவான்.
தற்சமயம் பாதாளத்தின் மேல்பகுதி மற்றும் தாழ்ந்த பாதளம் முழுவதும் நிரம்பி விட்டதால் மரிக்கும் ஒருவர் மோசமான பாவி என்றால் நரக பாதளம் போய்விடுவார்.அவர் சாதாரண பாவியாக இருந்து தாழ்ந்த பாதாளத்தில் தங்கிவிட்டால் அங்குள்ள இதற்க்கு முன் மரித்த யாரவது ஒருவன் நரக பாதாளத்தில் போய் விழுவார் ஒருவேளை அவர் மிகவும் நல்லவராக பாதாளத்தின் மேல் பகுதியில் தங்கி விட்டால் அவருக்கு கீழ் உள்ள எல்லா ஆத்துமாகளும் ஒரு படி கீழே இறங்கி கடைசியில் உள்ளவர் நரக பாதாளம் போய் விடுவார்.
எனவே இன்று இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் ஒருவரை மரித்தால் அவரோ அல்லது அவருக்கு முன் மரித்த ஒருவரோ நரக பாதாளம் போவது நிச்ச்சயம்.
(தொடரும்)
-- Edited by SUNDAR on Wednesday 17th of February 2010 04:17:38 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
sundar wrote: //பழைய ஏற்பாடு காலத்திலிருந்தே ஒரு மனிதன் மரித்த உடன் பாதாளத்தில் இறங்குகிறான். புதிய ஏற்பாட்டு காலத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாது மரித்த எல்லோருமே பாதாளத்தில் இருந்குகின்றார்கள் ஆதியாகமம் 37:35 ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் யோபு 21:13 அவர்கள் செல்வவான்களாய்த் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு க்ஷணபொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள். எசேக்கியேல் 31:17 இவர்களும் ஜாதிகளின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் புயபலமாயிருந்தவர்களும், பட்டயத்தால் வெட்டுண்டவர்களண்டையிலே பாதாளத்தில் இறங்கினார்கள். அவன் மிக நல்லவனாக இருந்தால் கீழான பாதாளம் எனப்படும் பாதாளத்தின் மேலுள்ள பகுதியிலேயே தங்கிவிடுவான். ஒரு வேளை அவன் அதிகம் பாவம் செய்யாத ஒரு சாதாரண பாவியாக இருந்தால், தாழ்ந்த பாதளம் வரை செல்வான், அங்கு தங்கிவிடுவான். மிகவும் மோசமான பாவியாக இருந்தால் அவன் நேராக நரகபாதளம் சென்று அங்கு பிசாசுகளினால் வெள்ளை சிங்கசன நியாய தீர்ப்புவரை வாதிக்கப்படுவான்.
தற்சமயம் பாதாளத்தின் மேல்பகுதி மற்றும் தாழ்ந்த பாதளம் முழுவதும் நிரம்பி விட்டதால் மரிக்கும் ஒருவர் மோசமான பாவி என்றால் நரக பாதளம் போய்விடுவார். அவர் சாதாரண பாவியாக இருந்து தாழ்ந்த பாதாளத்தில் தங்கிவிட்டால் அங்குள்ள இதற்குமுன் மரித்த யாரவது ஒருவன் நரக பாதாளத்தில் போய் விழுவார். ஒருவேளை அவர் மிகவும் நல்லவராக பாதாளத்தின் மேல் பகுதியில் தங்கிவிட்டால் அவருக்குக் கீழ் உள்ள எல்லா ஆத்துமாக்களும் ஒரு படி கீழே இறங்கி கடைசியில் உள்ளவர் நரக பாதாளம் போய் விடுவார்.
எனவே இன்று இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் ஒருவர் மரித்தால், அவரோ அல்லது அவருக்கு முன் மரித்த ஒருவரோ நரக பாதாளம் போவது நிச்ச்சயம்.//
சகோ.சுந்தர் அவர்களே! உங்கள் தனிப்பட்ட வெளிப்பாடு என்ற பெயரில், வசனத்திற்கு விரோதமானதும் தேவனைக் கொடூரராகச் சித்தரிக்கிறதுமான கருத்துக்களை வெளியிட்டுள்ளீர்கள். பாவத்தின் சம்பளம் மரணம், பாவஞ்செய்கிற ஆத்துமா சாகும் என்பதும்தான் தேவநியமனம். இதற்கு மாறாக, இரவுபகலாக பாதாளத்தில் வாதிக்கப்படுகின்றனர், அதுவும் ஆயிரக்கணக்கான வருடங்கள் வாதிக்கப்படுகின்றனர் என்பதற்கெல்லாம் வேதவசன ஆதாரம் கிடையாது.
1 ராஜாக்கள் 18:21-ன் அடிப்படையில் நான் ஏற்கனவே சொன்ன ஓர் ஆலோசனையை மீண்டும் சொல்கிறேன்.
வேதவசனமே சத்தியம் என நம்பினால் வசனத்தின்படி மட்டும் எழுதுங்கள்; உங்கள் வெளிப்பாடுதான் சத்தியம் என நம்பினால் வெளிப்பாட்டின்படி மட்டும் எழுதுங்கள். வெளிப்பாட்டையும் சொல்லி வசனங்களையும் சொல்லி உங்கள் வெளிப்பாட்டுக்கு வசன ஆதாரம் இருப்பதைப் போன்ற தோற்றத்தை உண்டாக்கவேண்டாம். இதற்குமேல் உங்கள் விருப்பம். நான் என்னாலியன்ற வரை உங்கள் பதிவுகளில் வேதவசனத்துக்கு விரோதமானவைகளை எடுத்துரைப்பேன். அதற்குமேல் தேவசித்தப்படி நடக்கட்டும்.
ANBU WROTE //1 ராஜாக்கள் 18:21-ன் அடிப்படையில் நான் ஏற்கனவே சொன்ன ஓர் ஆலோசனையை மீண்டும் சொல்கிறேன்.///
சகோதரரே நீங்கள்குறிப்பிடும் வசனம் சொல்வதுபோல் பாகால் என்றொரு தேவனையோ அல்லது வேறு எதுவும் ஒரு தேவனையோ அல்லது வேறு ஒரு புத்தகத்தில் இருக்கும் செய்தி பற்றியோ நான் எங்குமே எழுதவில்லை. பாதாளம் பற்றிய உண்மைகளை விபரமாக சொல்வதில் வேதாகத்துக்கு தனி பங்கு உண்டு. அதன் அடிப்படையிலேயே விளக்கியிருக்கிறேன்.
ANBU WROTE: ////வேதவசனமே சத்தியம் என நம்பினால் வசனத்தின்படி மட்டும் எழுதுங்கள்; உங்கள் வெளிப்பாடுதான் சத்தியம் என நம்பினால் வெளிப்பாட்டின்படி மட்டும் எழுதுங்கள். வெளிப்பாட்டையும் சொல்லி வசனங்களையும் சொல்லி உங்கள் வெளிப்பாட்டுக்கு வசன ஆதாரம் இருப்பதைப் போன்ற தோற்றத்தை உண்டாக்கவேண்டாம்.////
நான் எழுதிய எல்லாவற்றிக்கும் வசன ஆதாரம் தந்துள்ளேன் அதன் மூலமே அப்படி ஒரு தோன்றம் உண்டாகிறது ஆதாரம் இருப்பதுபோல் தோற்றத்தை உண்டாக்கி ஆதாயம் எதுவும் எனக்கு கிடைக்கபோகிறதா என்ன?வெளிப்பாட்டுக்கு வசன ஆதாரம் இருந்தால்தானே அது தேவனால் வந்த வெளிப்பாடு ஆகும் என்று கருதுகிறீர்கள் பிறகு நான் வசனத்தை காட்டாமல் எப்படி வெளிப்பாட்டை மட்டும் கூற முடியும்.
ANBU WROTE ///இதற்குமேல் உங்கள் விருப்பம். நான் என்னாலியன்ற வரை உங்கள் பதிவுகளில் வேதவசனத்துக்கு விரோதமானவைகளை எடுத்துரைப்பேன். அதற்குமேல் தேவசித்தப்படி நடக்கட்டும்.///
இங்கு வசனததுக்கு விரோதமாக நான் ஒன்றுயும் எழுதவில்லை சகோதரரே வசனத்தை பற்றிய /தேவனை பற்றிய பலரின் அடிப்படை புரிதலில்தான் தவறு இருக்கிறது. நீங்களும் அவர்களைபோல் பாதாளம் என்பது மனிதனை புதைக்கும் வெறும் பிரேத குழி என்று கருதுவீர்களானால் நிச்சயம் எல்லாமே தவறாகத்தான் தெரியும்.
ANBU WROTE: ///சகோ.சுந்தர் அவர்களே! உங்கள் தனிப்பட்ட வெளிப்பாடு என்ற பெயரில், வசனத்திற்கு விரோதமானதும் தேவனைக் கொடூரராகச் சித்தரிக்கிறதுமான கருத்துக்களை வெளியிட்டுள்ளீர்கள். பாவத்தின் சம்பளம் மரணம், பாவஞ்செய்கிற ஆத்துமா சாகும் என்பதும்தான் தேவநியமனம். இதற்கு மாறாக, இரவுபகலாக பாதாளத்தில் வாதிக்கப்படுகின்றனர், அதுவும் ஆயிரக்கணக்கான வருடங்கள் வாதிக்கப்படுகின்றனர் என்பதற்கெல்லாம் வேதவசன ஆதாரம் கிடையாது.///
தேவனை நன் இங்கு எதிலும் கொடூரமாக சித்திகரிக்கவில்லையே சகோதரரே. சாத்தான் பாவம் செய்யும், தன்வசம் உள்ள ஆத்துமாக்களை பாதாளத்துக்கு இழுத்துக்கொண்டு சென்று நியாயதீர்ப்பு நாள் வரை வாதிக்கிறார் என்று தானே குறிப்பிட்டுள்ளேன்.
இதை தேவனால் தடுக்க முடியாது. காரணம் அவர்களெல்லாம் சாத்தானின் பிள்ளைகள் (தேவனுடைய பிள்ளை என்ற அந்தஸ்த்துக்குள் வராதவர்கள்) இரட்சிப்பின் வழி இருந்தும் அதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும் அவன் பிள்ளைகளை அவன் கொடுமைபடுத்தினால் அதை நீதியுள்ள தேவனால் ஏனென்று கேட்கமுடியாதல்லவா?
இப்படி ஒரு கொடுரம் இருப்பதால்தான் தேவன் அவர்களுக்காக பரிதபித்து தனது உளியக்காரர்களை எல்லா இடமும் அனுப்பி மக்களை இயேசுவை ஏற்றுக்கொள்ள வலியிருத்துகிறார். எனவே தேவன் இங்கு எவ்விதத்திலும் கொடூரரோ அல்லது அநியாயகாரரோ அல்ல!
பவம் செய்த ஆத்துமா சாகும் என்பது வசனம் சொல்வதுதான் ஆனால் ஆத்துமாவை கொல்வதென்பது சும்மா சாதாரண சாவு என்று கருதவேண்டாம்
மத்தேயு 10:28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
ஆத்துமா சரீரம் இரண்டுமே நரகத்தில் தள்ளி அழிப்பதுதான் அந்த ஆத்தும சாவு!
வெளி 20:௧௫ ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்
"மேலும் ஐஸ்வர்யாவான் அக்கினியில்கிடந்தது வேதனைபடுவதாக கூறினானே" அதுவும் வாதைதானே
பொதுவாக மரணம் என்பது வாழ்க்கையின் முடிவு மரணம் அடைந்தவர்கள் இந்த உலகத்தை விட்டு கடந்துபோகிறார்கள், மீண்டும் அவர்களை பார்க்க முடியாது! அதுபோல் இந்த அக்கினி கடலிலே தள்ளபட்டவ்னுக்கு எல்லாம் முடிந்தது அவனையும் மீண்டும் பார்க்கமுடியாது அதுதான் அவன் ஆத்துமாவுக்கு மரணம் அல்லது சாவு!
சகோதரரே
வசன ஆதாரம் இல்லை என்றால் வசன ஆதாரம் கேட்கிறீர்கள், வசன ஆதாரம் கொடுத்தார் அதற்க்கு வேறுபொருள் என்ற கருத்தில் பேசுகிறீர்கள். அதாவது நீங்கள் ஆராய்து அறிந்தது மட்டும்தான் வசனப்படி உண்மை நாங்கள் அழுது மற்றாடி தேவனிடமிருந்து வசன ஆதாரத்தோடு அறிந்து கொண்டதெல்லாம் கொஞ்சமும் உண்மையல்ல அது வேறு எதோ ஆவி என்று கருதுகிறீர்கள் அப்படித்தானே நல்லது!
"உமது வசனமே சத்யம் என்கிறீர்கள்" நானும் அதைதான் சொல்கிறேன் அனால் "ஆவியாயும் ஜீவனாயும்" இருக்கிற .சத்ய வசனத்துக்கெல்லாம் மாமிசசிந்தை அடிப்படையில் பொருள்கொண்டால் எப்படி உண்மை புரியும்? அதை புரியவைக்கதானே ஆவியானவர் அருளப்பட்டிருக்கிறார்
பரிசுத்தாவியின் அபிஷேகம் பற்றிய தங்கள் புரிதலை பார்த்த உடனே தங்களின் ஆவிக்குரிய நிலை புரிந்துவிட்டது. தங்களுக்கு உண்மையை புரியவைப்பது என்பது மிக கடினம். அதாவது ஒன்றும் தெரியாதவர்களுக்கு புரிய வைத்துவிடலாம். ஆவியானவர் துணையின்றி அறிவால் ஆராய்பவர்களுக்கு
உண்மையை புரிய வைப்பது மிககடினம்.
-- Edited by SUNDAR on Wednesday 17th of February 2010 05:26:03 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
10. உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின்மூலமாய் இப்பொழுது தெரியவரும்பொருட்டாக,
11. இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக்கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
என்று பவுல் கூறி இருக்கிறார் அனால் நீங்கள் சொல்வதை பார்த்தால்
//////வேதவசனமே சத்தியம் என நம்பினால் வசனத்தின்படி மட்டும் எழுதுங்கள்; உங்கள் வெளிப்பாடுதான் சத்தியம் என நம்பினால் வெளிப்பாட்டின்படி மட்டும் எழுதுங்கள். வெளிப்பாட்டையும் சொல்லி வசனங்களையும் சொல்லி உங்கள் வெளிப்பாட்டுக்கு வசன ஆதாரம் இருப்பதைப் போன்ற தோற்றத்தை உண்டாக்கவேண்டாம். இதற்குமேல் உங்கள் விருப்பம். நான் என்னாலியன்ற வரை உங்கள் பதிவுகளில் வேதவசனத்துக்கு விரோதமானவைகளை எடுத்துரைப்பேன்////////...........
பவுல் பழைய ஏற்பாடு வசனத்துடன் பேசாமல் தம் சொந்த வெளிபாட்டை வைத்து பேசுகிறார் என்று தான் சொல்லவேண்டும் பவுலையும் நாம் இப்படிதான் கூறவேண்டும் அல்லவா
அன்பு அவர்களே ஒன்று உங்களுக்கு சொல்கிறேன்
1 . கொரிந்தியர் : 2
14. ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.
15. ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
28. அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.
29. ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்
என்னுடைய கருது என்னவெனில்
இன்னும் அனேக தரிசனக்களும் அனேக வெளிபாடுகளும் தோன்றும் வரும்
உலகில் ஒரு பழமொழி உண்டு
கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்ற பலமொளிகேற்ப
எல்லாறும் பார்த்த தரிசனக்களும் வெளிபாடுகளும் யானையின் ஒரு பக்கம் தான்
இன்னும் அநேகத்தை தேவன் கடைசி நாட்களில் வெளிபடுத்துவார்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
தேவனுடைய வெளிபாடு எது அவருடைய வார்த்தை எது என்று யாருக்கு தெரியும் என்று கேட்பீர்கள் என்றால்
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.................................
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
edwin sudhakar wrote: //பவுல் பழைய ஏற்பாடு வசனத்துடன் பேசாமல் தம் சொந்த வெளிபாட்டை வைத்து பேசுகிறார் என்று தான் சொல்லவேண்டும், பவுலையும் நாம் இப்படிதான் கூறவேண்டும் அல்லவா?//
சகோ.எட்வின் அவர்களே! பவுல், பேதுரு, யோவான் போன்றவர்களுடன் தேவன் அல்லது இயேசு நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசியதற்கு வேதாகமத்தில் ஆதாரம் உள்ளது. எனவேதான் அவர்களின் வசனங்களை தேவன் வெளிப்படுத்தினவைகளாக ஏற்றுக்கொள்கிறோம்.
வேதாகம காலத்திற்குப் பின், அவ்விதமாக தங்கள் வெளிப்பாடுகளைச் சொல்பவரையும் சொல்வதையும் எப்படி நம்புவது? ஒருவர் சொல்வதை நம்பித்தான் ஆகவேண்டும் என்பது கட்டாயம் இல்லையென்றாலும், ஆளாளுக்கு வெளிப்பாடு என்ற பெயரில் கூறுபவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருப்பதால், ஜனங்கள் மத்தியில் குழப்பம்தானே மிஞ்சும்?
பவுலின் வெளிப்பாடு பற்றி சில வரிகளைச் சொல்ல விரும்புகிறேன். பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.
எபேசியர் 3:3 அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்.
இவ்வசனத்தில் பவுலுக்கு வெளிப்படுத்தப்பட்ட காரியம் மெய்யாகவே இரகசியம் தானா? பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.
ஏசாயா 42:1 இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.
இவ்வசனத்தோடு எபேசியர் 3:3-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள். ஏசாயா தீர்க்கதரிசி மூலம் உரைக்கப்பட்டதைத்தான் பவுல் எடுத்துரைக்கிறார். இதை அவர் இரகசியம் எனக் கூறக் காரனமென்ன? அன்றைய யூதர்கள் பழையஏற்பாட்டில் சொல்லப்பட்ட பல காரியங்களை அறியவில்லை. இதற்கு 2 காரணங்கள் உண்டு. வேதத்தைக் குறித்த அறிவைப் போதிக்கவேண்டிய ஆசாரியர்கள் தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்யவில்லை. 2. இந்நாட்களைப் போல் அந்நாட்களில் எல்லாரும் எளிதில் வேதத்தைப் படித்து அறியக்கூடிய வசதி இல்லை. எனவேதான் அன்றைய யூதரைப் பொறுத்தவரை இரகசியமாக இருந்த காரியங்கள், பவுலைப் போன்றவர்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டன.
இயேசுவோடிருந்த பேதுருகூட, புறஜாதியாரும் கிறிஸ்துவின் சபையில் சேரத் தகுதியானவர்களே என்பதை அறியவில்லை. எனவேதான் அவருக்கு தனியாக ஒரு வெளிப்பாடு கொடுக்கப்பட்டது (அப்போஸ்தலர் 10:9-16). அன்றைய அப்போஸ்தலர்களுக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்பாடுகளில் பெரும்பாலானவை, வேதாகமத்தில் ஏற்கனவே சொல்லப்பட்ட இலைமறை காயான விஷயங்களாகத்தான் இருந்தன.
வேதாகமத்தில் ஏற்கனவே சொல்லப்படாததும், அப்போஸ்தலர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான விஷயங்கள் ஏதேனும் இருந்தால் அதை இங்கு வெளியிடும்படி வேண்டுகிறேன்.
sundar wrote: //நான் எழுதிய எல்லாவற்றிக்கும் வசன ஆதாரம் தந்துள்ளேன். .... இங்கு வசனத்துக்கு விரோதமாக நான் ஒன்றுயும் எழுதவில்லை//
வசனத்துக்கு விரோதமாக நீங்கள் எழுதினவை எவை என்பதை தனியாக எடுத்துப்போட்டுத்தான், வசனத்துக்கு விரோதமாக நீங்கள் எழுதியுள்ளதாக நான் குறிப்பிட்டிருந்தேன். அவற்றை மறுபடியும் காட்டுகிறேன், படியுங்கள்.
sundar wrote: //பழைய ஏற்பாடு காலத்திலிருந்தே ஒரு மனிதன் மரித்த உடன் பாதாளத்தில் இறங்குகிறான். புதிய ஏற்பாட்டு காலத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாது மரித்த எல்லோருமே பாதாளத்தில் இருந்குகின்றார்கள். .... அவன் மிக நல்லவனாக இருந்தால் கீழான பாதாளம் எனப்படும் பாதாளத்தின் மேலுள்ள பகுதியிலேயே தங்கிவிடுவான். ஒரு வேளை அவன் அதிகம் பாவம் செய்யாத ஒரு சாதாரண பாவியாக இருந்தால், தாழ்ந்த பாதளம் வரை செல்வான், அங்கு தங்கிவிடுவான். மிகவும் மோசமான பாவியாக இருந்தால் அவன் நேராக நரகபாதளம் சென்று அங்கு பிசாசுகளினால் வெள்ளை சிங்கசன நியாய தீர்ப்புவரை வாதிக்கப்படுவான்.
தற்சமயம் பாதாளத்தின் மேல்பகுதி மற்றும் தாழ்ந்த பாதளம் முழுவதும் நிரம்பி விட்டதால் மரிக்கும் ஒருவர் மோசமான பாவி என்றால் நரக பாதளம் போய்விடுவார். அவர் சாதாரண பாவியாக இருந்து தாழ்ந்த பாதாளத்தில் தங்கிவிட்டால் அங்குள்ள இதற்குமுன் மரித்த யாரவது ஒருவன் நரக பாதாளத்தில் போய் விழுவார். ஒருவேளை அவர் மிகவும் நல்லவராக பாதாளத்தின் மேல் பகுதியில் தங்கிவிட்டால் அவருக்குக் கீழ் உள்ள எல்லா ஆத்துமாக்களும் ஒரு படி கீழே இறங்கி கடைசியில் உள்ளவர் நரக பாதாளம் போய் விடுவார்.//
இவ்வாறு நீங்கள் எழுதினவைதான் வசனத்துக்கு விரோதமானவை என நான் சொல்லியிருந்தேன். இவைகளுக்கெல்லாம் வசன ஆதாரம் இருந்தால் அவற்றை முதலில் எழுதுங்கள். அதன்பின் மற்றதைப் பார்ப்போம்.
இவற்றிற்கு வசன ஆதாரம் இல்லாவிடில், அவை முழுக்க முழுக்க உங்கள் வெளிப்பாட்டின் அடிப்படையானதுதான் என்றாகும். அப்படி இருக்கும் பட்சத்தில், நான் சொன்ன பின்வரும் ஆலோசனை நிச்சயமாக உங்களுக்குப் பொருந்தும்தான்.
anbu57 wrote: //வேதவசனமே சத்தியம் என நம்பினால் வசனத்தின்படி மட்டும் எழுதுங்கள்; உங்கள் வெளிப்பாடுதான் சத்தியம் என நம்பினால் வெளிப்பாட்டின்படி மட்டும் எழுதுங்கள். வெளிப்பாட்டையும் சொல்லி வசனங்களையும் சொல்லி உங்கள் வெளிப்பாட்டுக்கு வசன ஆதாரம் இருப்பதைப் போன்ற தோற்றத்தை உண்டாக்கவேண்டாம்.//
sundar wrote: //தேவனை நன் இங்கு எதிலும் கொடூரமாக சித்திகரிக்கவில்லையே சகோதரரே. சாத்தான் பாவம் செய்யும், தன்வசம் உள்ள ஆத்துமாக்களை பாதாளத்துக்கு இழுத்துக்கொண்டு சென்று நியாயதீர்ப்பு நாள் வரை வாதிக்கிறார் என்று தானே குறிப்பிட்டுள்ளேன்.
இதை தேவனால் தடுக்க முடியாது. காரணம் அவர்களெல்லாம் சாத்தானின் பிள்ளைகள் (தேவனுடைய பிள்ளை என்ற அந்தஸ்த்துக்குள் வராதவர்கள்) இரட்சிப்பின் வழி இருந்தும் அதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும் அவன் பிள்ளைகளை அவன் கொடுமைபடுத்தினால் அதை நீதியுள்ள தேவனால் ஏனென்று கேட்கமுடியாதல்லவா?
இப்படி ஒரு கொடுரம் இருப்பதால்தான் தேவன் அவர்களுக்காகப் பரிதபித்து, தனது ஊழியக்காரர்களை எல்லா இடமும் அனுப்பி மக்களை இயேசுவை ஏற்றுக்கொள்ள வலியிருத்துகிறார். எனவே தேவன் இங்கு எவ்விதத்திலும் கொடூரரோ அல்லது அநியாயகாரரோ அல்ல!//
நல்லது சகோதரரே! பின்வரும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.
1. ஒருவன் தேவனின் பிள்ளை, சாத்தானின் பிள்ளை என எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறான்?
2. இயேசுவை ஏற்றுக்கொள்பவனே தேவனின் பிள்ளை என்பது உங்கள் பதிலாக இருந்தால், இயேசுவை ஏற்றுக்கொண்டாலும் கற்பனைகளின்படி நடவாதவனின் நிலை என்னாகும்?
3. இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவன் சாத்தானின் பிள்ளை என்பது உங்கள் பதிலாக இருந்தால், இயேசுவை அறிய வாய்ப்பையே பெறாதவன் சாத்தானின் பிள்ளையாகக் கருதப்படுவானா, தேவனின் பிள்ளையாகக் கருதப்படுவானா?
4. இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவன் அல்லது இயேசுவை அறியாதவன், சுபாவத்தின்படி இயேசுவின் எல்லா கற்பனைகளைகளையும் கைக்கொண்டிருந்தால் (அதாவது, இயேசுவை விசுவாசிப்பதைத் தவிர மற்றெல்லா கற்பனைகளையும் கைக்கொண்டிருந்தால்), அவன் நிலை என்னாகும்? அவன் சாத்தானின் பிள்ளையாகக் கருதப்படுவானா? தேவனின் பிள்ளையாகக் கருதப்படுவானா?
Anbu wrote: ///இவ்வாறு நீங்கள் எழுதினவைதான் வசனத்துக்கு விரோதமானவை என நான் சொல்லியிருந்தேன். இவைகளுக்கெல்லாம் வசன ஆதாரம் இருந்தால் அவற்றை முதலில் எழுதுங்கள். அதன்பின் மற்றதைப் பார்ப்போம்.////
பாதாளம் என்ற வார்த்தை 80 முறைக்குமேல் வேதாகமத்தில் இருந்தும் அதைபற்றிய சரியானதொரு வெளிப்பாடு ஆதி அப்போஸ்தலர்களுக்கு இல்லை. அதைபற்றியதொரு வெளிப்பாட்டை எனக்கு கொடுத்ததால்தான் நான் இவற்றை எழுதுகிறேன். நம்புவதும் நம்பாததும் உங்கள் இஸ்டம்! அதற்காக வசன ஆதாரம் இல்லை என்பது சரியல்ல.
சங்கீதம் 25:14கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது
என்ற வசனத்தின்படி சில மறைபொருள்களை எனக்கு தேவன் வெளிப்படுத்தியிருக்கிறார்.
பாதாளத்தின் அதிபதி சாத்தான் (அப்பொல்லியோன்) அவன் இடத்துக்குள் நடக்கும் அனைத்து காரியமும் தேவனுக்கு தெரியும்! ஆனால் அடுத்தவன் வீட்டில் நடக்கும் இரகசியங்களை பொதுவாக வேதத்தில் வெளியிடுவது நீதியான தேவனுக்கு சரியானதல்ல. எனவே அவர் தனது இருதயத்துக்கு ஏற்ற சிலருக்கு அவற்றைப்பற்றிய வெளிப்படுத்தி கொடுக்கிறார், நான் மட்டுமல்ல அநேகர் இதுபற்றிய வெளிப்பாடு பெற்றிருக்கிறார்கள்.
எனவே சில வசன ஆதாரங்களை கொடுத்துவிட்டு அதன் அடிப்படையில்தான் கருத்துக்களை எழுத முடியுமே தவிர எல்லாமே வசனத்தை மட்டுமே வைத்து எழுத முடியாது. நீங்களும் அப்படித்தான் எழுதுகிறீர்கள் சில வசனம் அதன் விளக்கம் என்ற முறையில்.
மரித்தவர் பாதாளத்தில் இரங்குகிறார் என்பதற்கு வசன ஆதாரம் தந்துள்ளேன், அங்கு வேதனை உண்டு வேதனை அற்ற நிலையும் உண்டு என்பதற்கும் வசன ஆதாரம் தந்துள்ளேன்.
மேல் பாதாளம் - ஒன்றும் அறியா நிலை
தாழ்ந்த பாதாளம் - பூச்சி புழுக்கள்
நரக பாதாளம் - வேதனை
இவை எல்லாவற்றிக்குமே வசன ஆதாரம் கொடுத்துவிட்டு
நீதிமொழிகள் 12:14; அவனவன்கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்
என்று வசனம் சொல்வதால் அதன் தொகுப்பை எழுதியிருக்கிறேன். இதில் வசன ஆதாரம் இல்லை என்று சொல்வதற்கு எதுவும் இல்லை!
நீங்கள் தேவனின் அடிப்படை செயல்பற்றி வேறு ஒரு கருத்தில் இருப்பதால் இதை நம்புவது சிரமமாக இருக்கிறது. அடிப்படை தவறினால் அனைத்துமே தவறாகி விடுமே. எனவே அதற்க்கு ஒரு முடிவெடுத்துவிட்டு பிறகு இதைப்பற்றி பார்க்கலாம்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
sundar wrote: //எனவே முழு வேத வசன ஆதாரங்களோடு பாதாளம் நரகம் பற்றிய இந்த கட்டுரையை எழுதலாம் என்று நினைக்கிறேன்.
நான் எழுதுவதில் எங்கும் தவறு அல்லது திருத்தம் இருக்குமாயில் அறிந்தவர் விளக்கலாம் நான் திருத்திக்கொள்வேன். ஆனால் வேதவசன ஆதாரம் தந்த பிறகு அது இது அல்ல வேறு பொருள்வரும் என்றெல்லாம் கருதுவீர்களானால் அதற்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பல்ல!//
சகோ.சுந்தர் அவர்களே! இக்கட்டுரையின் தொடக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளீர்கள். முழு வசன ஆதாரத்தோடுதான் இக்கட்டுரையை எழுதுவீர்கள் என்பது நீங்கள் தந்த வாக்குறுதி. அடுத்து, தவறு அல்லது திருத்தம் இருக்குமெனில், அதை அறிந்தவர் சொல்லலாம் என்பது இக்கட்டுரையைப் படிக்கிற அனைவருக்கும் நீங்கள் தந்துள்ள உரிமை. நீங்கள் தந்த உரிமையின்படியே, எனது கருத்துக்களை நான் பதித்துள்ளேன். குறிப்பாக, உங்கள் வாக்குறுதிக்கு மாறாக, வசன ஆதாரம் இல்லாமல் நீங்கள் கூறின கருத்துக்களை நான் விமர்சித்துள்ளேன்.
ஆனால், தற்போது நீங்கள் கீழ்க்கண்டவாறு எழுதி, என் வாயை அடக்க முயல்கிறீர்கள்.
sundar wrote: //பரிசுத்தாவியின் அபிஷேகம் பற்றிய தங்கள் புரிதலை பார்த்த உடனே தங்களின் ஆவிக்குரிய நிலை புரிந்துவிட்டது. தங்களுக்கு உண்மையை புரியவைப்பது என்பது மிக கடினம். அதாவது ஒன்றும் தெரியாதவர்களுக்கு புரிய வைத்துவிடலாம். ஆவியானவர் துணையின்றி அறிவால் ஆராய்பவர்களுக்கு உண்மையை புரிய வைப்பது மிகக்கடினம்.//
//நீங்கள் தேவனின் அடிப்படை செயல்பற்றி வேறு ஒரு கருத்தில் இருப்பதால் இதை நம்புவது சிரமமாக இருக்கிறது. அடிப்படை தவறினால் அனைத்துமே தவறாகி விடுமே. எனவே அதற்கு ஒரு முடிவெடுத்துவிட்டு பிறகு இதைப்பற்றி பார்க்கலாம்.//
உங்கள் வாக்குறுதிக்கு மாறாக, வசன ஆதாரம் இல்லாத கருத்துக்களை நீங்கள் எழுதிவிட்டு, அதை நான் விமர்சித்தால், எனக்கு அபிஷேகம் புரியவில்லை, எனது ஆவிக்குரிய நிலை சரியில்லை என்று சொல்லி, எனது நியாயமான விமர்சனத்திலிருந்து தப்பிக்கப் பார்க்கிறீர்கள்.
நீங்கள் நினைக்கிற அபிஷேகமும் ஆவிக்குரிய நிலையும் உள்ளவர்கள் பலர் இருப்பார்கள். அவர்கள் நீங்கள் என்ன சொன்னாலும் அதற்குப் பக்கத்தாளம் போடுவார்கள். என்னைப் பொறுத்தவரை நான் வேதவசனம் கூறுகிற அபிஷேகம் மற்றும் ஆவிக்குரிய நிலையைத்தான் நாடுகிறேன். அப்படிப்பட்ட எனது விமர்சனங்கள், வேதவசன ஆதாரம் இல்லாமல் எழுதுகிற உங்கள் கருத்துக்களுக்கு பக்கத்தாளம் போடாது.
உங்கள் கருத்துக்களுக்கு வேதவசன ஆதாரம் தர இயலாத நீங்கள், தேவனின் அடிப்படை செயல்பற்றி நான் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என என்னை விமர்சித்து, அதை நான் சரியாகப் புரிந்துகொண்டபின் இக்கட்டுரைக்கு வரும்படி சொல்கிறீர்கள்.
அதாவது தேவனின் அடிப்படை செயல்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதையே நானும் நினைத்தால்தான் இக்கட்டுரையில் நான் பங்கேற்கலாம் என்கிறீர்கள். நான் ஏற்கனவே தேவனின் அடிப்படை செயல்பற்றி வேதவசன அடிப்படையில் சரியாகப் புரிந்துகொண்டுள்ளதால், உங்கள் தனிப்பட்ட வெளிப்பாட்டின் அடிப்படையிலான புரிந்துகொள்தலோடு எனது புரிந்து கொள்தல் ஒருபோதும் ஒத்துவராது. எனவே, இக்கட்டுரையில் நான் இனி பங்கேற்க இயலாது. எனினும் உங்களுக்கு இறுதி வாய்ப்பாகவும், மற்ற தள அன்பர்கள் அறிந்துகொள்ள ஏதுவாகவும், நீங்கள் வசன ஆதாரம் இல்லாமல் சொன்ன கருத்துக்களை தனித்தனியே எடுத்து வைக்கிறேன்.
வசனம் சொல்வது: நீதிமொழிகள் 15:24 கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம்.
இவ்வசனத்தையடுத்து சுந்தர் சொல்வது: இங்கு ஆத்துமாக்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரு கூடை நிறைய மீன் இருப்பது போல நேழு நேழு என்று ஒன்றன் மேல் ஒன்றாக போராடிக்கொண்டு இருக்கின்றன. மற்றபடி கொடூர வேதனை இல்லை.
வசனம் சொல்வது: சங்கீதம் 86:13 நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். ஏசாயா 14:15 ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டு போனாய்.
இவ்வசனங்களையடுத்து சுந்தர் சொல்வது: இங்கும் ஆத்துமாக்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன, ஒன்றன் மேல் ஒன்றாக போராடிக்கொண்டு இருக்கின்றன. இங்கு புழுக்களும் பூச்சிகளும் உண்டு. மற்றபடி கொடூர வேதனை இல்லை. ஆனால் மிகப்பெரிய வேதனை என்னவென்றால் கீழே நரக பாதாளத்தில் நடக்கு கொடூரங்கள் இவைகளுக்கு தெரியும். தானும் அங்கு போய்விடக்கூடாது என்ற நோக்கில் மேலே ஏற எப்பொழுதும் முயற்சித்து தோற்றுக்கொண்டே இருக்கும், பயமும் திகிலும் இங்கு உண்டு.
வசனம் சொல்வது: நீதிமொழிகள் 9:8 ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.
இவ்வசனத்தையடுத்து சுந்தர் சொல்வது: இங்கு வரும் ஆத்துமாக்கள் இரவு பகலாக பிசாசின் ஆவிகளால் பல்வேறு விதமாக வாதிக்கப்படுகின்றன. இதற்க்கு கொள்ளளவே கிடையாது எவ்வளவு போனாலும் ஏற்றுக்கொள்ளும் தன்மை உடையது.
இன்னும் சுந்தர் சொல்வது: மரித்து பாதாளத்தில் இறங்கும் ஒருவர் மிக நல்லவனாக இருந்தால் கீழான பாதாளம் எனப்படும பாதாளத்தின் மேலுள்ள பகுதியிலேயே தங்கிவிடுவான். ஒரு வேளை அவன் அதிகம் பாவம் செய்யாத ஒரு சாதரண பாவியாக இருந்தால், தாழ்ந்த பாதளம் வரை செல்வான் அங்கு தங்கிவிடுவான். மிகவும் மோசமான பாவியாக இருந்தால் அவன் நேராக நரகபாதளம் சென்று அங்கு பிசாசுகளினால் வெள்ளை சிங்கசன நியாய தீர்ப்புவரை வாதிக்கப்படுவான். தற்சமயம் பாதாளத்தின் மேல்பகுதி மற்றும் தாழ்ந்த பாதளம் முழுவதும் நிரம்பி விட்டதால் மரிக்கும் ஒருவர் மோசமான பாவி என்றால் நரக பாதளம் போய்விடுவார். அவர் சாதாரண பாவியாக இருந்து தாழ்ந்த பாதாளத்தில் தங்கிவிட்டால் அங்குள்ள இதற்கு முன் மரித்த யாரவது ஒருவன் நரக பாதாளத்தில் போய் விழுவார். ஒருவேளை அவர் மிகவும் நல்லவராக பாதாளத்தின் மேல் பகுதியில் தங்கி விட்டால் அவருக்கு கீழ் உள்ள எல்லா ஆத்துமாகளும் ஒரு படி கீழே இறங்கி கடைசியில் உள்ளவர் நரக பாதாளம் போய் விடுவார்.
வேதவசனத்தின்படியான அபிஷேகத்தை நான் புரிந்துகொண்டதும், எனது ஆவிக்குரிய நிலையும் சகோ.சுந்தர் நினைக்கிற அபிஷேகம் மற்றும் ஆவிக்குரிய நிலைக்கு ஒத்துப் போகாததால், இக்கட்டுரையில் எனது கருத்தைப் பகிர்ந்துகொள்வதிலிருந்து இனி நான் விலகிக்கொள்கிறேன்.
சகோதரரே ஆவிக்குரியவைகளை அவிக்குரியவர்கள்தான் நிதானித்து அறிய முடியும். அதற்குரிய வெளிப்பாடு உள்ளவர்கள்தான் அதைபற்றி புரிந்துகொள்ளுவார்கள். நீங்கள் நினைப்பதுபோல் வரிக்கு வரி வேத வசனம் ஆதாரம் வேண்டுமென்றால் ஒரே ஒரு வேத புத்தகத்தில் உலகில் நடக்கும் அனைத்து காரியங்களுக்கும் எப்படி பதில் இல்லையோ அதுபோல் பாதாளத்தில் நடக்கும் அனைத்து காரியங்களும் வேதாகமத்தில் வெளிப்படுத்தப்படவில்லை.
எனது பதிவுகளுக்கு பக்கதாளம் போடயாரும் தேவையில்லை சகோதரே. பக்கதாளத்தை வைத்து எனக்கு எந்த பதவி உயர்வும் கிடைக்கபோவது இல்லை.
நீ கண்டவற்றையும் உனக்கு வெளிப்படுதபட்டவற்றையும் எழுது என்ற ஆண்டவரின் கட்டளையின் அடிப்படையில் இதை எழுதுகிறேன்
தவறிருந்தால் சுட்டி காட்ட சொன்னது உண்மைதான் அதற்காக வரிக்கு வரி வசன அதாரம் கொடு என்று சொன்னால் எப்படி முடியும்.
மரித்தவன் பாதாளத்தில் இறங்குகிறான் அதன் தலைவன் பிசாசு அது
மூன்று விதத்தில் இருக்கிறது என்பதையும் அங்கு வேதனை இருக்கிறது என்பதும்தான் வேதம் சொல்லும் அடிப்படை கருத்து.
சூரியன் காலையில் புறப்பட்டு மாலையில் மறையும் என்பது பொதுவான கருத்து
அது எப்படி புறப்பட்டு எப்படி போகிறது என்பதை பார்த்தவர்கள்தான் சொல்ல முடியும். பத்து மணிக்கு இந்த இடத்தில் இருக்கும் பன்னிரண்டு ஐந்து மணிக்கு இந்த இடத்தில் இருக்கும் என்று எங்காவது வசன ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால் அதற்க்கு பதில் சொல்ல முடியாது. வேத புத்தகம் என்பது ஒரு அடிப்படை புத்தகம் அதில் உள்ள வார்த்தைகளுக்கு முழுமையான விளக்கம் எல்லாம் தேவனிடமே இருக்கிறது . நீங்கள் எல்லா விளக்கத்த்யும் அதிலேயே தேடினால் கண்டடைய முடியாது
இதற்க்கு மேல் நான் எதுவும் எழுத விரும்பவில்லை.
உங்கள் நிலைக்கும் எனது நிலைக்கும் ஒத்துவராது என்று கருதுகிறேன் மன முறிவு வராமல் இருக்க இனி நாம் விவாதிக்க வேண்டாம்.
உங்கள் கருத்தை நீங்கள் எழுதுங்கள் எனது கருத்தை நான் எழுதுகிறேன் யார் மனதில் ஆண்டவர் எதை எவுகிராரோ அவரவர் உண்மையை அறிந்துவிட்டு போகட்டும் .
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
sundar wrote: //நீ கண்டவற்றையும் உனக்கு வெளிப்படுத்தபட்டவற்றையும் எழுது என்ற ஆண்டவரின் கட்டளையின் அடிப்படையில் இதை எழுதுகிறேன்.
தவறிருந்தால் சுட்டி காட்ட சொன்னது உண்மைதான்; அதற்காக வரிக்கு வரி வசன அதாரம் கொடு என்று சொன்னால் எப்படி முடியும்?//
//இதற்கு மேல் நான் எதுவும் எழுத விரும்பவில்லை.//
//உங்கள் நிலைக்கும் எனது நிலைக்கும் ஒத்துவராது என்று கருதுகிறேன்; மன முறிவு வராமல் இருக்க இனி நாம் விவாதிக்க வேண்டாம்.//
சகோதரரே! உங்களுக்கு ஆண்டவர் கட்டளையிட்டதன் அடிப்படையில் நீங்கள் கண்டிப்பாக எழுதித்தான் ஆகவேண்டும். எக்காரணத்திற்காகவும் ஆண்டவரின் கட்டளையை மீறக்கூடாது. ஆண்டவர் கட்டளையிட்டதை எழுதும்போது என்னைப் போல் பலர் உங்கள் நிலையுடன் ஒத்துப்போகாதிருக்கலாம். ஆனால் இதன் காரணமாக யாருக்கும் யாருடனும் மனமுறிவு வரவேண்டிய அவசியமில்லை.
அபிஷேகம், ஆவிக்குரிய நிலை போன்றவற்றில் என்னைக் குறித்து நீங்கள் எழுதின விமர்சனத்தைக் காட்டிலும் பலமடங்கு கடினமான விமர்சனங்களை சகோ.சில்சாம் எழுதினதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், இதன் காரணமாக அவரோடு நான் மனமுறிவு கொள்ளவில்லை; அதற்கான அவசியமுமில்லை.
ஏனெனில், இங்கு நாம் தருகிற விமர்சனங்கள், தாக்குதல்கள் எல்லாம் நம் தனிப்பட்ட பிரச்சனையின் காரணமாக அல்ல; அதாவது தனிப்பட்ட சொத்துப்பிரச்சனை, குடும்பப்பிரச்சனை போன்றவை காரணமாக அல்ல. வேதத்தின் மீதுள்ள வைராக்கியமே காரணம். இதே காரணத்தின் அடிப்படையில்தான் பேதுரு மாயம் பண்ணினதாகச் சொல்லி பவுல் பேதுருவைக் கடிந்து கொண்டார். இதனால் பவுலுக்கும் பேதுருவுக்கும் மனமுறிவு உண்டாகவில்லையே!
“மாயம் பண்ணுதல்” எனும் வார்த்தை நிச்சயமாக மிகக்கடினமான ஒரு சொல்தான், வேதத்தின்மீது பவுல் கொண்டிருந்த வைராக்கியம், அவரை அப்படி சொல்ல வைத்தது.
அதுபோலத்தான் நாமும் இங்கு சில விமர்சனங்களைப் பரிமாறிக் கொள்கிறோம். இதன் காரணமாக நமக்குள் மனமுறிவு வரவேண்டிய அவசியமில்லை. அவ்வாறே, எதிர் விமர்சனங்கள் வந்ததும், நாம் செய்யவேண்டிய கடமையிலிருந்து பின்வாங்க வேண்டியதுமில்லை. நாம் மனிதரைப் பிரியப்படுத்த இவற்றைச் செய்யவில்லை. தேவகட்டளைக்காகவும், தேவனைப் பிரியப்படுத்தவுமே இவற்றைச் செய்கிறோம். ஆகவே, உங்கள் மூலம் தேவன் என்ன சொல்லவிரும்புவதாக நீங்கள் நினைக்கிறீர்களோ, அவற்றை முழுமையாக தடங்கலின்றி சொல்லி முடித்து விடுங்கள்.
முழு வசன ஆதாரத்துடன் நீங்கள் எழுதப்போவதாக ஆரம்பத்தில் சொல்லியிருந்ததால்தான், வசன ஆதாரம் இல்லாத கருத்துக்களை நான் குறிப்பிட்டிருந்தேன்.
வரிக்கு வரி வசன ஆதாரம் கொடுக்கமுடியாது என்பது மெய்தான். ஆனால் நாம் சொல்லும் வரிகள், வசனத்திற்கு விளக்கமாக மட்டுமே இருக்கவேண்டுமேயன்றி, வசனத்திற்கு சம்பந்தமில்லா கருத்தாக இருக்கக்கூடாது.
உதாரணமாக: உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும் என்ற வசனத்தை எடுத்துக்கொள்வோம். இதற்கு விளக்கம் சொல்லும்போது, ஆடு மேய்ப்பவன் தனது கோலால் இலை தழைகளை இழுத்து ஆடுகளுக்குக் கொடுப்பது போலவும், ஆடுகள் தவறான பாதையில் செல்லும்போது, தனது தடியால் அவற்றை அடித்து சரியான பாதைக்குக் கொண்டுவருவதைப் போலவும் நம் மேய்ப்பனாகிய தேவன் நமக்குச் செய்கிறார் எனக் கூறினால் அதை வசனத்தின் விளக்கமாக எடுப்பதில் பிரச்சனை எதுவுமில்லை. ஏனெனில், ஒரு மேய்ப்பன் தனது கோலாலும் தடியாலும் என்னென்ன செய்வான் என்பதை நாம் நேராகப் பார்க்கிறோம், அல்லது பார்த்தவர்கள் மூலம் அறிகிறோம்.
ஆனால், கீழான பாதாளம், தாழ்ந்த பாதாளம், நரக பாதாளம் என வசனங்கள் கூறுவதை வைத்து: கீழான பாதாளத்தில் நல்லவர்கள் கிடக்கின்றனர்; தாழ்ந்த பாதாளத்தில் சாதாரண பாவிகள் புழு பூச்சிகள் நடுவில் கிடக்கின்றனர்; நரக பாதாளத்தில் மோசமான பாவிகள் இரவும் பகலும் ஆயிரக்கணக்கான வருடங்களாக கொடூரமாக வாதிக்கப்படுகின்றனர் எனக் கூறுவது, வசனங்களுக்கு அப்பாற்பட்ட கருத்தாகும். அம்மாதிரி கருத்துக்களை, முழு வசன ஆதாரத்துடன் எழுதுவதாக வாக்களித்து எழுதுகிற கட்டுரையில் சேர்க்கவேண்டாம் என்பதுதான் எனது ஆலோசனை.
“எனக்கு தேவன் தந்த வெளிப்பாடுகள்” என்ற அறிவிப்புடன் உங்கள் வெளிப்பாடுகள் எல்லாவற்றையும் நீங்கள் தாராளமாக எழுதலாம். இதைத்தான் எனது ஆலோசனையாகக் கூறியிருந்தேன். அவ்வித அறிவிப்புடன் நீங்கள் எழுவதை மற்றவர்கள் யாரும் விமர்சிக்கமுடியாது, நானும் விமர்சிக்க மாட்டேன்.
sundar wrote: //நரகம் பாதாளம்பற்றி அநேகருக்கு போதிய வெளிப்பாடு இல்லாத காரணத்தால், அந்த பயங்கரமான இடம்பற்றி முழு நம்பிக்கை மற்றும் பயம் இல்லாமல் வெகு நிர்விசாரமாக, ஆத்துமாகளுக்காக பரிதபிக்கும் உள்ளம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். எனவே முழு வேத வசன ஆதாரங்களோடு பாதாளம் நரகம் பற்றிய இந்த கட்டுரையை எழுதலாம் என்று நினைக்கிறேன்.//
சகோ.சுந்தர் அவர்களே! நரகஅக்கினி, நரகத்தில் இரவு பகலாக நித்திய வாதை போன்ற விஷயங்கள் புதிதானவை அல்ல. ஏற்கனவே பலர் சொல்லியுள்ளனர்; நரகத்தில் சினிமா நடிகர்களில் பலர் வேதனைப்பட்டுக்கொண்டிருப்பதை பார்த்ததாகவும், நரகத்தில் ஒவ்வொருவிதமான பாவியும் ஒவ்வொருவிதமாக வாதிக்கப்படுவதை நேரில் கண்டதாகவும் சொல்லியுள்ளனர்; பலர் அதை நம்பிக்கொண்டும் இருக்கின்றனர். உண்மையில், 90%-க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் அப்படிப்பட்ட வாதையைத்தான் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும், நரக வாதைகளைக் கண்டு சொன்னவர்களும் சரி, அதைக் கேட்டு நம்புபவர்களும் சரி, வேதவசனங்களுக்கு நடுங்கி கீழ்ப்படிவதாகத் தெரியவில்லை.
முழு வசன ஆதாரத்துடன் நீங்கள் எழுதப்போவதாக ஆரம்பத்தில் சொல்லியிருந்ததால்தான், வசன ஆதாரம் இல்லாத கருத்துக்களை நான் குறிப்பிட்டிருந்தேன்.
“எனக்கு தேவன் தந்த வெளிப்பாடுகள்” என்ற அறிவிப்புடன் உங்கள் வெளிப்பாடுகள் எல்லாவற்றையும் நீங்கள் தாராளமாக எழுதலாம். இதைத்தான் எனது ஆலோசனையாகக் கூறியிருந்தேன்.
உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி சகோதரரே!
ஆம் நான்தான் முதலில் தவறு செய்துவிட்டேன், தேவன் தந்த வெளிப்பாடுகளில் தவறிருக்க எந்த வாய்ப்பும் இல்லை என்பதை முழுமையாக விசுவாசித்து யோவான் மற்றும் தீர்க்கதரிசிகள் எழுதிவைத்தது போல எழுதிவைத்துவிட்டு போகாமல் "தவறிருந்தால் சுட்டி காட்டவும்" என்று பொதுவின் அனுமதி கொடுத்து எழுதியதும், அடிப்படை கருத்துக்களை மட்டுமே எடுத்துரைக்கும் வேதாகமத்திலிருந்து "எல்லாவற்றிக்கும் வசனஆதாரம் தருகிறேன்" என்று எழுதியதும் நிச்சயம் எனது தவறுதான்
காரணம், கிரிஸ்த்தவத்துக்குள் எவ்விதமான கோட்பாடு களிலெல்லாம் விசுவாசிகள் இருக்கிறார்கள் என்பதை சரிவர அறியாததால் அவ்வாறு எழுதிவிட்டேன். மன்னிக்கவும்!
-- Edited by SUNDAR on Friday 19th of February 2010 10:52:39 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
பாதாளம் இல்லை நரகம் இல்லை என்று சொல்லி குழப்பும் சில சகோதரர்களின் சொல்லை கேட்டு தயவுசெய்து குழம்பிவிடாதீர்கள்.
இல்லாத ஒன்றை முக்கியப்படுத்தி எண்பது முறைக்குமேல் வேதாகமம் சொல்லாது. அதேபோல் இல்லாத ஒன்றை சிரமப்பட்டு எழுதி எல்லோரையும் பயம்காட்டுவதால் எனக்கு என்ன கிடைக்கபோகிறது? ஆண்டவரின் இருதயத்தில், ஒருவரும் அவ்விடம் போககூடாது என்ற ஆதங்கம இருப்பதால் அவரின் கட்டளைக்கு ஏற்ப, இவ்வளவு சிரமபட்டு எழுதுகிறேன். மற்றபடி இதில் எனக்கு எந்த தனிப்பட்ட பயனும் இல்லை
மரித்த மனிதர்கள் எல்லோரும் உடனே இறங்குவது பாதாளம் என்னும் பெருங்குழி என்பதை வேத வசனம் நமக்கு தெளிவாக சொல்கிறது. அதன் தலைவன் சாத்தான் என்றும் அங்கு வேதனை உண்டு என்றும் வசனம் சொல்கிறது.
தேவனைப்பற்றிய அடிப்படை அறிவிலேயே தவறான கொள்கை இருப்பதாலும் ஆவியானவரின் செயல்பாடுகள் பற்றி சரியாக அறியாததாலும் பலரால் இந்த உண்மையை அறியமுடியாமல் போகிறது.
மற்றபடி, உண்மையில் அப்படி ஒரு இடம் இருக்கிறதா என்பதை நீங்கள அறிய வேண்டுமா?
வேதாகமத்தை எல்லாம் உட்காந்து ஆராயவேண்டிய அவசியம் இல்லை. மூல பாஷை என்னவென்பதை தேடவேண்டிய தேவையும் இல்லை. தொடர்ந்து ஒரு குழந்தையை போல ஆண்டவர் பாதத்தில் அமர்ந்து, "ஆண்டவரே இப்படி ஒரு கொடூர இடம் இருப்பது உண்மையா? எனக்கு தெரியப்படுத்துங்கள்" என்று வாஞ்சையோடு கேளுங்கள், அவர் நிச்சயம் உங்களுக்கு அதைப்பற்றி வெளிப்படுத்துவார்! நமது தேவன் பட்சபாதம் உள்ளவர் அல்ல! யார் கேட்டாலும் அவர் நிச்சயம் உண்மையை வெளிப்படுத்துவார். அப்படி தேடி அறிய முடியவில்லையா நான் அறிந்துகொண்டதை நம்புங்கள்!
ஆனால் நான் கேட்கவும் மாட்டேன் யார் சொன்னாலும் நம்பவும் மாட்டேன் என்று சொல்லி இந்த எச்சரிப்பு வார்த்தைகளை கேட்டும் அசட்டை பண்ணுபவர்களுக்கு அதற்க்கான பிரதிபலன் உண்டு!
இந்த வேதனை மிக்ககொடூரமான பாதாளம் போவதிலிருந்து தப்பிப்பது மிக சுலபம்.
ஆம்!
எல்லோரையும் மீட்பதற்காகவே தனது இரத்தத்தை சிந்தி நமக்காக பலியான, ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக் கொண்டு சாத்தானின் கரத்தில் இருந்து விடுதலையாகி, தேவனுடைய பிள்ளை என்ற தகுதிக்கு வாருங்கள். நீங்கள் பாதாளத்தின் வல்லடியில் இருந்து மீட்கப்படுவீர்கள்! உங்கள் ஆத்துமாவை சாத்தான் தனது இடத்துக்கு கொண்டுபோகவே முடியாது!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
மனிதர்கள் மரித்த உடன் பாதாளத்தில் இறங்குகிறார்கள் என்பதை
வேதாகமத்தின் பல வசனங்கள் குறிப்பிடுகிறது. அனால் பல சகோதரர்கள் உண்மையில் அப்படி பாதாளம் என்ற இடம் எதுவும் கிடையாது அவ்வார்த்தை வெறும் பிரேதகுழியைதான் குறிக்கிறது என்று சாதிக்கின்றனர்.
ஆதியாகமம் 44:29நீங்கள் இவனையும் என்னைவிட்டுப் பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்கு மோசம் நேரிட்டால், என் நரைமயிரை வியாகுலத்தோடே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள் என்றார்
ஆதியாகமம் 37:35ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் என்றான்.
இவ்வசனங்களில் பாதளம் என்பது மரித்தபின் வைக்கப்படும் வெறும் பிரேதகுழிதான் என்று பொருள் கொண்டால், மரித்தபின் ஒன்றும் அறியாத அவன் எப்படி துக்கத்தோடு வியாகுலத்தொடே பிரேத குழிக்குள் இறங்க முடியும் என்பதை சற்று யோசிக்க வேண்டும்!
எசேக்கியேல் 31:17அவனோடேகூட இவர்களும் ஜாதிகளின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் புயபலமாயிருந்தவர்களும், பட்டயத்தால் வெட்டுண்டவர்களண்டையிலே பாதாளத்தில் இறங்கினார்கள்
பிரேதகுழி என்றால் அதில் மரித்த ஒருவனை பிறர் தான் இரக்கமுடியமே தவிர அவனாக இறங்க முடியாது அனால் இங்கு (தானாக) இறங்கினார்கள் என்ற வார்த்தை வருகிறது.
சங்கீதம் 89:48மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்?
இங்கு "பாதாள வல்லடி" என்று சங்கீதக்காரன் குறிப்பிடுவது என்ன?
வெறும் பிரேதகுழிக்கு வல்லமை என்று எதுவும் இல்லை அதனுள் ஒருவனை இறக்கினால்தான் அதனுள் போகமுடியும், அப்படி மரித்த ஒருவனை பிரேத குழிக்குள் இரக்காமல் எரித்து சாம்பலாக்கவும் முடியும்! அவ்வாறு செய்வதன் மூலம் ஒருவன் பிரேத குழிக்குள் இறங்காமல் தப்பித்துவிடலாம். ஆனால் சங்கீதம் குறிப்பபிடும் இந்த பாதாளம் என்ற வார்த்தைக்கு வல்லடி உள்ளது. மரித்த எல்லோருமே அதனுள்தான் இரங்க வேண்டும் யாரும் அதன் வல்லமைக்கு தப்பவே முடியாது என்று கூறுகிறது எனவே அது வெறும் பிரேத குழியை குறிக்கவில்லை என்பதை அறிய முடியும்.
மேலும் இவ்வசனத்தை பாருங்கள்
நீதிமொழிகள் 23:14நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.
இங்கு பாதாளம் என்பது பிரேத குழி என்று பொருள்கொண்டால், ஒருவனை பிரம்பால் அடித்தால் அவனை பிரேதகுழிக்கு தப்புவித்துவிட முடியுமா?
பிரேதகுழிக்கு வேதம் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறதா?
அதாவது சுமார் எண்பது முறைக்குமேல் வேதம் அதைப்பற்றி திரும்ப திரும்ப குறிப்பிடுகிறதா?
வேதாகமத்தில் ஆங்கில மொழி பெயர்ப்பில் பாதாளத்துக்கு "HADES' என்றும் பிரேத குழிக்கு "GRAVES" என்றும் தனிப்பட்ட வார்த்தைகளை குறிப்பிட காரணம் என்ன?
எல்லாவற்றிக்கும் மேலாக கீழ் கண்ட வசனங்கள் ஒருவன் பாதாளத்தின் நடுவிலிருந்து பேசமுடியும் என்று சொல்கிறது
லூக்கா 16:23பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்
24. அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.
இரண்டாவது வசனத்தை வேண்டுமானால் உவமை என்று நிராகரித்தாலும் முதல் வசனம் பாதாளத்தில் இருந்து பேசினார்கள் என்று சொல்கிறதே!
தேவனின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை அல்லவா?
எனவே பாதாளத்துக்குள் ஒரு மனிதன் நிந்தையை சுமப்பதும், துன்பம் அனுபவிப்பதும், பேசுவதும் முடியும் என்பதை வசனம் தெளிவாக கூறுகிறது என்று தெரிவித்துகொள்ள விரும்புகிறேன்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
வேத புத்தகம் பாதாளம்/ நரக பாதாளம் என்று பல இடங்களில் குறிப்பிடும் படுகுழிக்கும் வெள்ளை சிங்காசன இறுதி நியாயதீர்ப்பிற்கு பிறகு தேவன் இரண்டாம் மரணத்துக்கு ஒப்புகொடுத்து அத்துமாக்களை அழிக்கும் அக்கினி கடல் என்னும் நரகத்திற்கும் வேறுபாடு தெரியாமலும் நான் எழுதியிருக்கும் காரியங்களை சரியாக படித்து புரியாமலும், சில தேவையற்ற குற்றச்சாட்டுகள் என்மேல் இருப்பதால் அதற்க்கு நான் விளக்கம்கொடுக்க கடமைபட்டுள்ளேன்.
அடிப்படையிலே ஒரு அருத்தமற்ற இஸ்லாமிய கருத்தோடுஅதாவது தேவன் வேண்டுமென்றே சாத்தானை சோதனைக்கு அனுமதித்தார் என்னும் கருத்துடன் தேவனின் தன்மையை முழுவதும் அறியாமல் தேவனை ஒரு சோதனைகாரனாக தீர்மானித்து, இந்த உலகில் நடக்கும் எல்லா கொடூரங்களுக்கும் தேவனையே பொறுப்பாளியாக தீர்த்து இதை படித்தால் இதன் உண்மைகள் புரியவாய்ப்பில்லை!
தனது ஜனங்களுக்காக பரிதபிக்கும் தேவனை தொன்னுற்றோபது ஆடுகளையும் விட்டுவிட்டு காணாமல் போன ஒரே ஒரு ஆட்டை தேடும் தேவனை அப்படிப் பட்டவராக வேதம் எனக்கு காட்டவில்லை. அனைத்தும் அறிந்த தேவன், தான் படைத்த மனிதனின் தன்மையை தானே அறியாமல் எல்லோரையும் வேறு வேலையின்றி சோதித்துபார்த்து, மிலிடரிக்கு ஆள் தேர்வு செய்வது போல நித்திய ஜீவனுக்கு ஆட்களை தெரிவு செய்துகொண்டு இருக்கவில்லை! எல்லோரும் தேவனின் பிள்ளைகளே "ஒருவரும் கெட்டுபோக கூடாது என்பதுதான் தேவனின் விருப்பம்" என்றே வேதம் சொல்கிறது.
உண்மையை என்னவென்று சரியாக அறியாமலேயே "தேவ தூஷணம்" "கள்ள தீர்க்கதரிசனம்" "பொய்யின் ஆவி" அது இது என்று குற்றம்சாட்ட துணிவது ஆச்சர்யமே!
நான் வார்த்தையின்படி நடக்கிறேன் எனவே எனக்கு நிச்சயம் நித்தியஜீவன் வேண்டும் என்றும் நான் வேதத்தை கைகொள்கிறேன் அதனால் எனக்கு நித்தயஜீவன் நிச்சயம் உண்டு என்று நம்புவதில் எந்த பிரயோஜனமும் இல்லை! எல்லாவற்றிக்கும் தேவனின் கிருபையே அடிப்படை! "கர்த்தரின் ஆவியாலேயே எல்லாம் ஆகும்" யாருடைய பெலத்தாலும் நன்னடத்தையாலும் அது முடியாது! மோசேயை போல ஒரே ஒரு சிறிய மீறுதலே ஒருவரை நித்யஜீவனுக்கு தகுதியற்றவராக ஆக்கிவிடும் சுயநீதியில் நின்றுகொண்டு பிறரை நியாயம் தீர்க்க நினைப்பது எவ்விதத்திலும் ஏற்றதல்ல!
மீண்டும் புரியும்படி எனது கருத்தை பதிக்கிறேன்
1. மரிக்கும் மனிதன் உடனடியாக பாதாளத்தில் இறங்குகிறான்
ஆதியாகமம் 37:35ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் என்றான்.
ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான். (நீதி 9:8)
2. இயேசுவின் மரணம் மற்றும் உயிர்தெழுதலுக்கு முன்புவரை யாருமே இந்த பாதாள வல்லடிக்கு தப்பமுடியாத நிலை இருந்தது.
சங்கீதம் 89:48மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கி விடுகிறவன் யார்?
3. இந்த பாதாளம் என்பது சாத்தானின் இடம் இதன் அதிபதி அப்பொல்லியோன்
அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர் (வெளி 9:11)
4. சாத்தானின் இன்னொரு நிலையாகிய "மிருகம்" இங்குதான் இருக்கிறது இறுதிநாளில் அது ஏறிவரும்
பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். (11:7)
இறுதிநாட்களில் பாதாளத்திலிருந்து ஏறிவந்து நாசமடைய போகிறவரை இந்த மிருகம் பாதாளத்தில் இருக்கும்
அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது(17:8)
இந்த பாதாளம் கொடியது இங்கு வேதனை உண்டு
நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது ( உன் 8:6) 24. அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன்விரலின் நுனியைத் தண்ணீரில்தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.
இங்கு இந்த ஐஸ்வர்யவானை வேதனைபடுத்துவது யார் என்ற விளக்கம் வேதத்தில் இல்லை. இவ்விடத்தின் ராஜன் சாத்தானாக இருப்பதாலும் தேவன் தனது பிள்ளைகள் யாரையும் வேதனைபடுத்த விருபுபவர் அல்ல என்று நான் கருதுவதாலும். இங்கு வேதனையை கொண்டு வருவது சாத்தான் என்று அனுமாநித்துள்ளேன்.
இந்த பாதாளம் என்னும் இடத்தில் உள்ள மரித்தோர்கள் எல்லோரும் வெள்ளைசிங்காசன நியாயதீர்ப்பின் போதுதான் தேவனிடம் ஒப்புவிக்கப்படுவார்.
அதன்பிறகு இந்த பாதாளம் என்னும் இடம் அப்படியே அக்கினி கடலுக்குள் தள்ளப்பட்டு போகும்
இந்த பாதாளம் என்பது ஒரு டெம்ரவரி இடம் அதாவது இறுதி நியயத்தீர்ப்புவரை ஆத்துமாக்கள் தங்க வைக்கப் பட்டிருக்கும் ஒரு இடம். முடிவில் இது அக்கினி கடலில் தள்ளப்பட்டு போகும்.
14. அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்
இறுதியாக குறிப்பிடப்படும் இடம்தான் தேவன் ஆத்துமாக்களை அழிக்கும் இரண்டாம் மரணமென்னும் அக்கினி கடலேயன்றி நரகபாதாளம்/பாதாளம் என்றும் வேதம் குறிப்பிடும் இடம் அதுவல்ல!
தேவன் ஒருவராலே அழிக்க முடிந்த ஆத்துமாக்களை சாத்தான் அழிக்கிறான் என்றோ, மிகுந்த இரக்கமுள்ள தேவன் இரக்கமில்லாமல் ஆத்துமாக்களை அக்கினியில் போட்டு நித்யமாக வேதனை படுத்துகிறார் என்றோ நான் எங்கும் பதிவிடவில்லை.
-- Edited by SUNDAR on Saturday 6th of March 2010 05:24:13 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
..........\\ வேத புத்தகம் பாதாளம்/ நரக பாதாளம் என்று பல இடங்களில் குறிப்பிடும் படுகுழிக்கும் வெள்ளை சிங்காசன இறுதி நியாயதீர்ப்பிற்கு பிறகு தேவன் இரண்டாம் மரணத்துக்கு ஒப்புகொடுத்து அத்துமாக்களை அழிக்கும் அக்கினி கடல் என்னும் நரகத்திற்கும் வேறுபாடு தெரியாமலும் நான் எழுதியிருக்கும் காரியங்களை சரியாக படித்து புரியாமலும், சில தேவையற்ற குற்றச்சாட்டுகள் என்மேல் இருப்பதால் அதற்க்கு நான் விளக்கம்கொடுக்க கடமைபட்டுள்ளேன்.//,..........................
சகோதரர் சுந்தர் அவர்களே,
தாங்கள் பதிவிட்டுள்ள அனேக காரியங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. ஒருவேளை ஒருசிலருக்கு அவைகளை புரிந்து கொள்ளமுடியவிட்டலும் அதற்காக அவைகள் உண்மையில்லை என்று ஆகிவிடாது.
எல்லாவற்றையும் தேவன் எல்லாருக்கும் வெளிபடுத்துவதில்லை ஒருசிலருக்கு மட்டுமே ஒருசில காரியங்களை வெளிபடுத்துகிறார்.
மத்தேயு 13 :11
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை.
II பேதுரு 3 :16
அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.
II கொரிந்தியர் 2 அதிகாரம்
10. நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.
13. அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்.
14. ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.
15. ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
சகலதையும் வெளிபடுத்துகிற ஆவியானவர் ஒருவரே. ஒருவருக்கு வெளிபடுத்தினதை இன்னொருவருக்கு வெளிபடுத்த அவர் வல்லவராய் இருக்கிறார்.