தாங்கள் பதிவிட்டுள்ள அனேக காரியங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. ஒருவேளை ஒருசிலருக்கு அவைகளை புரிந்து கொள்ளமுடியவிட்டலும் அதற்காக அவைகள் உண்மையில்லை என்று ஆகிவிடாது.
எல்லாவற்றையும் தேவன் எல்லாருக்கும் வெளிபடுத்துவதில்லை ஒருசிலருக்கு மட்டுமே ஒருசில காரியங்களை வெளிபடுத்துகிறார்.
சகோதரர் ஸ்டீபன் அவர்களுக்கு தேவன் இருதயத்தை திறந்து நான் எழுதும் கருத்துக்களை புரியும்படி அருள் செய்ததால் ஆண்டவரை ஸ்தோத்தரிக்கிறேன்.
இயேசுவை அறியாமல் மரிக்கும் ஒவ்வொரு மனிதனும் உடனடியாக சாத்தானின் இடமாகிய பாதாளத்தில் இறங்குகிறான்! அங்கு இறுதி நியாயதீர்ப்பு நாள்வரை வாதிக்கப்டுகிறான். எனவே சுவிசேஷம் சொல்வதுஎன்பது மிகவும் அவசியமாகிறது. பாதாளத்தில் மனிதன் வேதனைப்படும் காரியத்தை இயேசு ஐஸ்வர்யவன் சம்பவத்தின் அடிப்படையில் விளக்குகிறார் மற்றும் கிறிஸ்த்தவர்கள் அநேகர் ஆவியில் உணர்த்தப்படு நம்பும் இக்கருத்தினை ஆவியானவரின் அனுபவத்துக்குள் வராதவர்கள் மறுப்பதோடு தாங்கள் மட்டுமே உண்மையை அறிந்துகொண்டவர்கள் என்ற தவறான கருத்திலும் இருப்பதை அறியமுடிகிறது.
இந்த கருத்தை சரியாக புரிந்துகொள்ள மீண்டும் இங்கு விளக்குகிறேன்!
இந்த உலகில் இரண்டுவிதமான மனிதர்கள் இருக்க்கின்றனர். ஓன்று இயேசுவை ஏற்ற்க்கொண்டவர்கள் இன்னொன்று இயேசுவை ஏற்றுக்கொள்ளதவர்கள்.
யோவான் 3:16தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3:15தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்
யோவான் 3:36குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார்.
அதாவது கெட்டுபோகாமல் நித்யஜீவன் பெறுவது என்பது ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுகொண்டவர்களுக்கு மட்டும்தான் கிடைத்த பாக்கியம். இதன் மூலம் மற்றவர்கள் கெட்டுபோகின்ற்றனர் என்று பொருள்கொள்ள முடிகிறது .
யோவான் 1:12அவருடைய நாமத்தின்மேல் விசுவாச முள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
இவ்வசனத்தின் அடிப்படையில் இயேசுவை விசுவாசித்தவர்கள் எல்லோரும் தேவனுடைய பிள்ளைகள் ஆகும்படி அதிகாரம் பெற்றுவிடுகின்றனர். அதன்மூலம் இவர்கள் இந்த உலகத்தின் அதிபதியாகிய சாத்தானின் கரங்களிலிருந்து பிடுங்கப்பட்டு தேவனின் நேரடி ஆளுகையின்கீழ் வந்துவிடுகின்றனர். அவர்களுக்கு நடக்கும் நன்மை தீமை எல்லாவற்றிக்குமே தேவனே பொறுப்பாகிறார். இவர்கள் கிருபையின்கீழ் இருப்பதால் பாவம் இவர்களை மேற்கொண்டு சாத்தானின் பிள்ளைகள் ஆக்க முடியவே முடியாது என்பதே பவுல் ரோமர் 6:14 பாவம் கிருபையை மேற்கொள்ள முடியாது என்று சொல்கிறார்
எனவே விசுவாசியாதவர்கள் எல்லோரும் கெட்டுபோகிரார்கள் என்று பொருள் கொள்ள முடிகிறது. இவர்கள் இயேசுவை விசுவாசியாமல் தேவனின் பிள்ளை என்ற நிலைக்கு வராததால் இந்த உலகத்தின் அதிபதியாகிய சாத்தனின் பிள்ளை என்ற நிலையிலேயே நீடிக்கின்றனர்.
I யோவான் 8. பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
I யோவான் 3:10 இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்
இவ்வாறு இந்த உலகில் உள்ள மக்கள் இரண்டு பகுதியாக பிரிக்கப்படுகின்றனர். இயேசுவை ஏற்று தேவனின் பிள்ளை ஆனவன் மரித்தபின் தேவனிடத்தில் நியாயதீர்ப்புக்கு போகிறான். பிசாசின்பிள்ளைகள் மரித்தபின் பிசாசு ராஜாவாக இருக்கம் பாதாளம் என்னும் இடத்துக்கு போகின்றனர்.
இயேசுவை விசுவாசியாமல் கெட்டுப்போனவர்கள் இயேசுவை விசுவாசியாத ஒரே காரணத்துக்காக தேவனின் பிள்ளை என்ற தகுதிக்கு வராமல் ஆக்கினை தீர்ப்புக்கு உட்படுகின்றார்கள்! இந்த ஆக்கினை என்பது சாத்தான் இடத்தில் பாதாளத்தின் நடக்கும் அக்கினையை தான் குறிக்கும். மேலும் இவன் ஆக்கினை தீர்ப்புக்கு "உட்படுகிறான்" அவ்வளவுதான்! இவனிடம் ஆக்கினையை(வேதனையை) நடப்பிப்பதும் நடபிக்க முடியாததும் அவன் செய்த நன்மை தீமையின் அடிப்படையிலேயே முடியும். (ஒருவன் எங்கே சென்றாலும் அவன் செய்யும் நன்மைகளுக்கு மதிப்பும் தீமைகளுக்கு தண்டனையும் உண்டு) அதற்க்கு தகுந்தால்போல இவர்கள் மேல் பாதாளம், தாழ்ந்த பாதாளம், நரக பாதாளம் என்று வேதம் குறிப்பிடும் இடங்களில் நியாயதீர்ப்பு நாளுக்காக காத்திருக்கின்றனர். கீழ்க்கண்ட வசனங்களும் இந்த பாதாள ஆக்கினையை குறித்துதான் சொல்கின்றனர்.
ரோமர் 5:16மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது
ரோமர் 5:18ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல
தேவன் அவனவன் கிரியைக்கு தகுந்தால்போல் நியாயம் தீர்ப்பேன் என்று திரும்ப திரும்ப சொல்லும்போது ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினை தீர்ப்பு என்னது தேவனின் நியாயாதீர்ப்பை குறிப்பதல்ல!
ஐஸ்வர்யாவான் இருந்ததும் இந்த பாதாள ஆக்கினயில்தான்! ஆனால் இந்த பாதாள ஆக்கினை என்பது கீழ்க்கண்ட வசனம் சொல்லும் நித்திய ஆகினையை குறிப்பது அல்ல!
மத்தேயு 25:46அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
எல்லோருக்கும் கிடைத்த இலவச மீட்பை நிராகரித்து இயேசுவை விசுவாசிக்காத ஒரே காரணத்துக்காக பிசாசின் இடமாகிய பாதாளத்தில் ஆகினையில் இருப்பவர்கள், சாத்தான் தேவனால் மேற்கொள்ளப்பட்டு இறுதி வெள்ளை சிங்காசன நியாயதீர்ப்பு நடக்கும்போது தேவனிடம் நியாயதீர்ப்புக்கு ஒப்புவிக்கப்படுவார்கள்
வெளி 20:13சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன.
இவர்கள் எல்லோரும்
வெளி 20:13தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்
இவர்களுக்கு தேவனால் அவரவர் கிரியைக்கு தகுந்த நியாயதீர்ப்பு வழங்கப்படும். இவர்களை தேவன் தவருக்கேற்ப தண்டித்து ஏற்றுக்கொள்வாரா, அல்லது இவர்களுக்கென்று தனி வாசஸ்தலம் ஏற்ப்படுத்துவாரா என்பது குறித்து சரியான வேத ஆதாரம் இல்லை.
எனது கருத்துப்படி இவர்களை தேவன் அவரவர் கிரியைக்கு தகுந்தால்போல் தண்டித்து ஏற்றுக்கொள்வார் என்றே நான் கருதுகிறேன் அதற்க்கு அடிப்படையாக இவர்களை குறித்து இந்த வசனம் சொல்கிறது என்று கருதுகிறேன்.
ரோமர் 9:௨௬ நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது.
ஏனெனில் சாகிறவனுடைய சாவை தேவன் விரும்புவதில்லை.
இறுதியாக பாதாளத்தில் இருக்கும் ஆத்துமாக்களை தேவன் மீட்டு நியாயதீர்ப்பு செய்தபிறகு மரணமும் பாதளமும் அக்கினிகடலில் தள்ளப்பட்டு போகும். இதுதான் இறுதி!
வெளி 20:14அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
உண்மையில் "மரணம்" என்பது ஒரு நிகழ்ச்சியல்ல அது ஒரு தூதன் அதுபோல் "பாதாளம்" என்பதும் ஒரு தூதனே. இவர்கள் இரட்டை பிள்ளைகள் போன்ற இரண்டு தூதர்கள்தான் என்று வேதம் சொல்கிறது.
வெளி 9:11அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்
வெளி 6:8நான் பார்த்தபோது, இதோ, மங்கினநிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது.
"மரணம்" அதை தொடர்ந்து "பாதாளம்" இவை இரண்டும் ஒன்றுக்குப்பின் ஓன்று என்ற கணக்கில் இன்று நடந்துகொண்டு இருக்கிறது. இறுதியில் இந்த இரண்டுமே அக்கினி கடலில் தள்ளப்பட்டுபோகும். அனால் இந்த இரண்டு தூதர்களால் பிடிக்கப்பட்ட எல்லா ஜனங்களும் தேவனாலேயே நியாயம்தீர்க்கப்படுவார்கள்.
சகோதரர் ஸ்டீபன் சொல்வதுபோல் பாதாளம் பற்றிய போதிய வெளிப்பாடு இல்லை என்ற காரணத்தினால், வசன ஆதாரம் இல்லை, இது "தேவதூஷணம்" "பொய்யின் ஆவி" என்றெல்லாம் கருதுவது " நான் அறிந்ததற்கு மேல் ஒன்றுமே இல்லை" என்று எண்ணுவதுபோல் தோன்றுகிறது. தேவன் அவரவர் மனநிலை மற்றும் தகுதிக்கு தகுந்த காரியங்களை மட்டும் வெளிப்படுத்தி காட்டுவர் என்பதை கருத்தில் கொள்க!
நம்முடைய அறிவு குறையுள்ளது எல்லாம் அறிந்தவர் தேவன் ஒருவரே! மனிதர்களில் எவரும் இல்லை!
பாதாளத்தில் இருக்கும் ஆத்துமாவுக்கு நம்பிக்கை உண்டு! ஆனால் அக்கினி கடலுக்கு ஒருவர் சென்ற பிறகு அவருக்கு வேறொரு மீட்பில்லை! அது கால நிலைகளற்ற நித்யவேதனையாக இருப்பதாலும் அதை ஆவியில் நான் சில நாட்கள் உணர்ந்ததாலும் அங்கு ஒருவர்கூட போவது எனக்கு சிறிதும் தாங்க முடியாத ஒரு காரியமாக இருக்கிறது! எனவே அங்கு யாரும் போககூடாது என்பதுதான் ஆண்டவரிடம் எனது விண்ணப்பமாக இருக்கிறது. அதற்காகவே நாம் எல்லோரும் ஜெபிப்போம்.
தேவனால் எல்லாம் கூடும்!
-- Edited by SUNDAR on Monday 8th of March 2010 05:03:31 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)