இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தீமைகள் அனைத்திற்கும் தேவன்தான் காரணமா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
தீமைகள் அனைத்திற்கும் தேவன்தான் காரணமா?
Permalink  
 


உலகம் தோன்றி  இத்தனை  காலங்களில் எத்தனையோ  அழிவுகள்  நாச மோசங்கள் பேரழிவு போர்கள் இயற்கையின் கோரதாண்டவங்கள் போன்ற எத்தனையோ காரியங்கள் நடந்துள்ளன!
 
எத்தனையோ ஜாதிகள் இல்லாமல் அடியோடு அழிந்திருக்கின்றன. மனிதனை படைத்ததற்காக மனஸ்தாபபட்ட தேவன் ஒருமுறை  உலகில் ஒருமுறை சிறியவர் பெரியவர்  பிஞ்சு  பூ என்று பாராமல்  அனைவரையும் கூண்டோடு நீரினால் அழித்தார் என்றும்  சோதோம் கோமரா பட்டணங்களையும் அதுபோல் வானத்தில்  இருந்து அக்கினி கந்தகம் வரவைத்து   மொத்தமாக அழித்தார்  என்றும்     வேதாகமம் குறிப்பிடுகிறது.     
 
"தேவன் மிகுந்த இரக்கம் உள்ளவர்" என்றும் ஜனங்களுக்காக பரிதபிக்க கூடியவர் என்றும் வேதம் சொல்லும் பட்சத்தில்         
 
உலகில் நடக்கும் அத்தனை அழிவுக்கும் தேவன்தான் காரணமா? அல்லது மனிதனின் பாவம் காரணமா? 
 
மனிதன் பாவம் செய்வான் என்பது ஆண்டவருக்கு முன்கூட்டியே தெரியுமா தெரியாதா?
 
தெரிந்தும் எல்லாவற்றையும் படைத்து  திருவிளையாடல் செய்கிறாரா?
 
அல்லது "என் ஆவி மனுஷனின்   ஆவியோடு போராடுவதில்லை"  என்று  சொன்ன  தேவன், மனிதனை அவன்  இடத்துக்கு விட்டு வேடிக்கை பார்க்கிறாரா?
 
உண்மை என்ன? 
 


-- Edited by SUNDAR on Tuesday 23rd of February 2010 04:15:34 PM

-- Edited by SUNDAR on Monday 12th of April 2010 07:59:24 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
RE: நடப்பவைகளுக்கெல்லாம் தேவன்தான் காரணமா?
Permalink  
 


என்னுடைய கருத்துக்கு கீழ்கண்ட தொடுப்பிற்கு செல்லவும்

http://lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=3&topicID=34203191




__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: தீமைகள் அனைத்திற்கும் தேவன்தான் காரணமா?
Permalink  
 


இந்த  கேள்விக்கு சரியான பதிலை காண்பது மிகவும் அரிதான காரியமாக இருக்கிறது.
 
அநேகர்,  தேவன் மனிதனை சோதனை செய்வதக்காகவே சாத்தானை
வேண்டுமென்றே படைத்தார் என்றும், சாத்தான் என்பவன் தேவனின் கையாள் எனபது போலவும் உலகில்  நடக்கும் மரணம் /துன்பம்/ தீமைகள்/அழிவுகள்  எல்லாமே தேவனால் திட்டமிட்டு, ஒரு நோக்கத்தோடு அதாவது நாளைய
நித்தியவாழ்வை கருத்தில் கொண்டு  நடத்தப்படுவது போலவும்  கூறுகின்றனர்.
 
ஆனால்  வேதவசனம் சாத்தான் என்பவன் தேவனின் ஆளுகைக்கு எதிராக அநியாயமாக சிந்தித்து விழுந்துபோனவன் என்று குறிப்பிடுகிறது.
 
எசேக்கியேல் 28:15 நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்.

அவ்வாறு குறைவற்றிருந்தவன்
 
ஏசாயா 14:13 நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,

சொன்னதால்தான்  
 
ஏசாயா 14:12 அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!

வீழ்ந்துபோனான் என்று வேதம் சொல்கிறது
 
ஆகினும் உலகில் அனைத்து காரியங்களுக்கும் தானே காரணம் என்று கீழ்க்கண்ட வசனங்கள் மூலம்  கர்த்தர் சொல்வதால் 
  
ஏசாயா 44:24 உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்,    

ஏசாயா 45:7
ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.

தீமை என்பது தேவனால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதா?
 
என்ற கேள்விக்கு தளசகோதரர்கள் தங்களுக்கு தெரிந்த விளக்கங்களை முன்வைக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

இக்கேள்விக்கான தங்கள் கருத்தை பதிய யாரும் தயாராக இல்லை என்கின்ற போதிலும், இக்கருத்து பற்றி தொடர்ந்து பல நாட்களாக  தியானித்து நான் ஆண்டவரின் அறிவுருத்துதலின் அடிப்படையில் அறிந்துகொண்ட உண்மையை சில உதாரணங்களின் அடிப்படையில்  இங்கு பதிவிட விரும்புகிறேன்:
 
உதாரணம்-1

மனிதர்களாகிய நாம் நல்ல உணவுகளையே உண்கிறோம், நல்ல ஆரோக்கிய நிலையிலேயே இருக்க விரும்பிகிறோம்  ஆனால் நாம் கொஞ்சமும் விரும்பாத துர்நாற்றமுள்ள  கழிவுகளையும் நமது உடம்பு நம்முடைய  அனுமதியின்றி தானாகவே உற்பத்தி செய்கின்றது.
 
இவ்வித கழிவுகளை உற்பத்தி செய்தது யார் என்று கேட்டால்? பதில் என்ன?
நாம் தான் 
 
ஆனால் அவற்றை வேண்டும் என்றா உற்பத்தி செய்தோம்?
இல்லவே இல்லை ஒரு பொருளில் உள்ள நலமானதை எடுத்தபோது நலமாற்றது தானாகவே கழிவாக உருவாகிவிட்டது.
 
அவற்றை நாம் விரும்புகிறோமா?
இல்லை அவற்றை வெறுக்கிறோம், அவற்றைவிட்டு விலகி இருக்க விரும்புகிறோம்.
 
உதாரணம்-2     

ஒரு மிகப்பெரிய உரதொழிற்சாலையை எடுத்து கொள்வோம்.  அத்தொழில்சாலை
தாவரங்களுக்கு தேவையான உரத்தை தயாரிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு தொடங்கப்பட்டது. அனால் அது செயல்படும்போது சில அசுத்த வாயுக்கள் தானாக உருவாகிறது  அவ்வாயுக்களில் சில, மிக உயர்ந்த  புகைபோக்கி மூலம் வெளியேற்றப்படுகின்றன. சில வாயுக்கள் கொடியநச்சு கலந்தவையாக இருப்பதால் ஒரு பெரிய உலோக  கோளத்துக்குள் அடைத்து வைக்கப்படுகின்றன.  அவ்வாயுக்கள்  கடந்து செல்லும் இடங்கள் மிகுந்த
எச்சரிக்கையுடன் கையாளப்படுகின்றன.
 
இங்கு இந்த விஷ வாயுக்களை உருவாக்கியது யார்?
மனிதன்
 
அதை அவன் விரும்பியா தயாரித்தான்?
இல்லை அவைகள் தானாக உருவாகிவிட்டன
 
மனிதன் அதை விரும்புகிறானா?
அவற்றை வெறுக்கிறோம் அவற்றின் அருகில் செல்லலகூட விரும்புவதில்லை அவ்வாறு செல்பவர்களையும் எச்சரிக்கிறோம்.
 
இந்த நிலைதான் இங்கு இறைவனின் நிலையும்
 
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார் அது ஒழுங்கின்மயாகவும் வெறுமையாகவும் இருந்தது!
 
அவற்றை சீர் செய்து, மனிதன் வாழ்வதற்கு ஏற்றதாக மாற்றவேண்டும் என்ற ஒரு உன்னத நோக்கத்தோடு தேவன் செயல்பட்டார். 
 
எனவே வெளிச்சம் தேவை என்பதை அறிந்து வெளிச்சத்தை உண்டாக்கினார் அவ்வாறு வெளிச்சம் இல்லாத இடம் இருள் என்று பெயர்பெற்றது.  (இரண்டையும் உண்டாக்கியவர் தேவனே)
 
பரிசுத்தமான  அனைத்தையும் ஓன்று சேர்த்து ஒரு நன்மையான படைப்பை உருவாகிய போது பரிசுத்தம் இல்லாததும் தீமையும் தானாக பிரிந்தது.(இரண்டையும் உருவாக்கியவர் தேவனே)
 
தேவன் மனிதர்களுக்கு சமாதானத்தையும் சந்தோசத்தையும்   அருளியபோது சமாதானம் இல்லாத இடம் தீமையால் நிறைந்தது. (இரண்டுக்கும் காரணம் தேவனே.) 
 
இங்கு நன்மை தீமை இரண்டையும் உருவாக்கியவர் தேவன்தான். அவர் வேண்டுமென்று விரும்பி தீமையை உருவாக்கவில்லை. நன்மையை ஓன்று சேர்த்தபோது, தீமை தானாக  பிரிந்தது, தீமையின் விபரீதத்தை முழுமையாக அறிந்த தேவன்  தீமையை வெறுக்கவும் அதை விட்டு விலகி இருக்கவும் வேண்டும் என்று மனிதர்களாகிய நம்மை திரும்ப திரும்ப எச்சரிக்கிறார்  
 
அவரின் எச்சரிக்கையை அலட்சியம் செய்த பிரதான தூதன் பாவத்தில் (தீமையில்) விழுந்தான். அவனை தொடர்ந்து அவனால் மனித குலமும் பாவத்தில் விழுந்தது.
 
தேவன் மனுக்குலத்தை மீட்க தனது குமாரனை அனுப்பினார். அவர் தீமையை முற்றிலும் அழிக்க வரவில்லை  தீமைக்குள் விழுந்த சாத்தானின் தலையை நசுக்கி மனுக்குலத்துக்கு கைகொடுக்கதான் வந்தார்.
 
எபிரெயர் 2:16 ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார்

தீமையை நன்மையாலே வென்றார், கீழ்படியாமையால் வந்த தீமையை கீழ்படிதலால் வென்று,  நமக்கு ஒரு முன்மாதிரியை  ஏற்படுத்தி சென்று      
 
மத்தேயு 8:22 அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.
 லூக்கா 9:59 வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார்
யோவான் 12:26 ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன் 
 
தீமை என்னும் சேற்று பள்ளத்திலிருந்து நம்மை தூக்கி எடுத்த  இயேசு "என்னை பின்பற்றி வா" என்று அழைக்கிறார். நாம் எதை பற்றியும் யோசிக்காமல்,  அவரை பின்பற்றி சென்றாலே தீமையை கடக்கமுடியும்.    
 
மற்றபடி தீமை என்பது தேவனால்தான் உருவானது எனவே அதனுடன் சமாதனம் செய்து கொள்ளலாம், தேவன்தான் எல்லா தீமைக்கும் காரணம், எனவே அவர் எல்லோரையும் நிச்சயம் மீட்டுவிடுவார் என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டு அவரது எச்சரிப்பை அலட்சியம் செய்தால், மீள முடியாத துன்பத்தில் வீழ்வது நிச்சயம்.  
 
(இது சம்பந்தமாக் வேறு ஏதாவது கேள்வியிருந்தால் சகோதரர்கள் தயவு செய்து பதிவிடவும். மேலும் தியானிக்க வசதியாக இருக்கும் என்று கருதுகிறேன்.)


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

இஸ்லாம்  சகோதரர்களும்  மற்றும்பல  கிறிஸ்த்தவர்களும் கருதுவதுபோல் "தேவன் வேண்டுமென்றே  தீமையை உலகினுள் அனுமதிக்கவில்லை" இந்த  என்னுடய கருத்துக்கு சாதகமாக இன்னும் சில வசனங்களையும் நான் முன்வைக்க விரும்புகிறேன்.
 
தேவன் தன் ஜனங்களுக்காக எப்பொழுதும்  பரிதபிக்கிறவராக இருக்கிறார் என்பதை கீழ்க்கண்ட வசனம் விளக்குகின்றன.
 
எரேமியா 9:1 ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீ ரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்.

எரேமியா 14:17 என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்.

இவ்வாறு ஜனங்களுக்காக பரிதபித்து கண்ணீர்விடும் தேவன் தீமையை வேண்டுமென்றே அனுமதிக்கிறவர் அல்ல. இதற்க்கு சாட்சியாக கீழ்க்கண்ட வசனம் இருக்கிறது  
 
புலம்பல் 3:33. அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.

இவ்வசனத்தின் மூலம் தேவன் மனிதில்லாமல் ஏதோ ஒரு நிபந்தத்தின் அடிப்படையில் சிலரை தண்டிக்கிறார் என்பதை அறியமுடியும்.  இந்த   நிலையை   நான்  இங்கு  ஒரு உதாரணம் மூலம் விளக்க  விரும்புகிறேன்.
 
ஒரு முறை எனது மகன் பக்கத்து வீட்டு பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டு இருக்கும்போது ஏதோ சண்டையில் ஒரு பையனை அடித்து விட்டான். அந்த பையன் வீட்டார் கொஞ்சம் மோசமான கோஷ்டிகள். சிறிது நேரத்தில் அவனது தாய், பாட்டி, அத்தை என்று ஒரு கூட்டமே என்னிடம் புகார் கொடுக்க வந்ததோடு ஒரு கூச்சல் வேறு போட ஆரம்பித்துவிட்டார்கள்.
 
"என்ன இருந்தாலும் உங்கள் மகன் பெரியவன் எனது பிள்ளை சின்ன பையன் இவனை அடித்தது மகாதவறு. அப்படிஎதுவும் செய்திருந்தால் என்னிடம் சொல்ல வேண்டியதுதானே" என்று நியாயத்தின் உருவம்போல கத்த ஆரம்பித்தார்கள்.
 
எனது பையனை பற்றி எனக்கு தெரியும் வீணாக யாருடனும் சண்டையிட மாட்டான் அவர்களது பையன் எதாவது வேண்டாத வேலை செய்திருப்பான் என்பதும் எனக்கு தெரியும் ஆகினும் வேறு வழியின்றி எனது பையனை  இரண்டு அறை கொடுத்து, இதுபோல் பிள்ளைகளிடம் சேர்ந்து நீ ஏன்  விளையாண்டாய்" என்று திட்டி அனுப்பினேன்.  பிராது பண்ண வந்த  எல்லோரும் சமாதானமாக திரும்பி போய்விட்டனர்.
 
இதே நிலைதான் இறைவனுக்கும் இருக்கிறது.  ஆண்டவரின் பிள்ளைகள் ஒரு தவறு செய்துவிடும் போது  சாத்தான் அவரிடம் வந்து புகார் கொடுக்க ஆரம்பித்து விடுகிறான். "உமது பிள்ளையை பாரும் இந்த தவறை செய்கிறான் நீர் விலக்கிய அந்த காரியத்தை செய்கிறான் அவனை தண்டியும்" என்று சொல்லி ஓயாமல் குற்றம் சுமத்துவதுதான் அவனுக்கு வேலையே.
 
வெளி 12:10 ; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான்
 
இவ்வாறு  குற்றம் ஒரு தேவபிள்ளைமேல்  சுமத்தப்படும்போது, இங்கு தவறு செய்ய  அடிப்படை காரணம் சாத்தான்தான் என்பது தேவனுக்கு தெரிந்தும் தேவநீதி தூஷிக்கப்படாமல் இருக்க  அக்குற்றம் உண்மையாக  இருக்கும் பட்சத்தில்  சில நேரங்களில் வேறு வழியின்றி அதற்க்கான தண்டனையை அனுமதிக்கிறார்.
 
II சாமுவேல் 12:14  இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால் உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப்போய்விட்டான்.
 
தேவனுடைய பிள்ளைகளை பொறுத்தவரையில் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை நமது நீதியான தகப்பனின் கையில் இருந்தே வருகிறது. ஏனெனில் அவர் நம்மை தனது உள்ளங் கையில் வரைந்து கண்மணியை போல் பாதுகாக்கிறார். அதே நேரத்தில் தண்டனை பெறாதபடிக்கு தீமை செய்யாதே அதை விட்டுவிலகு இல்லையேல் நான் உன்னை தண்டிப்பேன்  என்று எச்சரிக்கிறார் .
 
எரேமியா 4:6   நான் வடக்கேயிருந்து பொல்லாப்பையும், மகா சங்காரத்தையும் வரப்பண்ணுகிறேன் 
எரேமியா 18:11: இதோ, நான் உங்களுக்கு விரோதமாக ஒரு தீங்கை உருவப்படுத்தி, உங்களுக்கு விரோதமாக ஒரு காரியத்தை யோசிக்கிறேன்;
யோசுவா 23:16உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை நிர்மூலமாக்குமட்டும், கர்த்தர் உங்கள்மேல் சகல தீமையான காரியங்களையும் வரப்பண்ணுவார்
 
இதெல்லாம் தீமையின் கொடுமையை  அறிந்து  தேவன் தமது ஜனங்களை எச்சரிக்கும் வார்த்தைகள்.  இப்படி எச்சரிப்பதால் அவர்தான் தீமைக்கு காரணர் என்று சொல்லிவிட முடியாது. 
 
நமது தகப்பன் நம்மை பார்த்து "டேய் நீ திருடினால் உன்னை அடிப்பேன்" என்று சொன்னால். அவர் தீயவர் அவர்தான் திருட்டுக்கே காரணகர்த்தா  என்று பொருள் கொள்ளமுடியாது!  தீமையை பார்க்ககூட விரும்பாத சுத்தகண்ணர் என்று வேதம் அவரைப் பற்றி சொல்கிறது:  
 
ஆபகூக் 1:13 தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே.
 
இப்படி பரிசுத்தமும் நீதியும் உள்ள தேவனுக்கு சில நிர்பந்தமான காரணங்களால் தனது பிள்ளைகளை தண்டிக்கவும் தனது குமாரனை சிலுவையில் பலியாக கொடுக்கவும் செய்யவேண்டிய நிலை ஏற்ப்பட்டது.
 
இதற்க்கெல்லாம்  காரணம் தேவனின் இயலாமை என்று பொருள் கொள்ள முடியாது. அவரது மிகுந்த  பரிசுத்தம் அல்லது  நீதி நேர்மையே அதற்க்கு காரணம்!
 


-- Edited by SUNDAR on Wednesday 28th of April 2010 09:41:29 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

Did God create evil?

At first it might seem that if God created all things, then evil must have been created by God. However, evil is not a “thing” like a rock or electricity. You cannot have a jar of evil.

Evil has no existence of its own; it is really the absence of good. For example, holes are real but they only exist in something else. We call the absence of dirt a hole, but it cannot be separated from the dirt. So when God created, it is true that all He created was good. One of the good things God made was creatures who had the freedom to choose good. In order to have a real choice, God had to allow there to be something besides good to choose. So, God allowed these free angels and humans to choose good or reject good (evil). When a bad relationship exists between two good things we call that evil, but it does not become a “thing” that required God to create it.


Perhaps a further illustration will help. If a person is asked, “Does cold exist?” the answer would likely be “yes.” However, this is incorrect. Cold does not exist. Cold is the absence of heat. Similarly, darkness does not exist; it is the absence of light. Evil is the absence of good, or better, evil is the absence of God. God did not have to create evil, but rather only allow for the absence of good.

God did not create evil, but He does allow evil. If God had not allowed for the possibility of evil, both mankind and angels would be serving God out of obligation, not choice. He did not want “robots” that simply did what He wanted them to do because of their “programming.” God allowed for the possibility of evil so that we could genuinely have a free will and choose whether or not we wanted to serve Him.

As finite human beings, we can never fully understand an infinite God (Romans 11:33-34). Sometimes we think we understand why God is doing something, only to find out later that it was for a different purpose than we originally thought. God looks at things from a holy, eternal perspective. We look at things from a sinful, earthly, and temporal perspective. Why did God put man on earth knowing that Adam and Eve would sin and therefore bring evil, death, and suffering on all mankind? Why didn’t He just create us all and leave us in heaven where we would be perfect and without suffering? These questions cannot be adequately answered this side of eternity. What we can know is whatever God does is holy and perfect and ultimately will glorify Him. God allowed for the possibility of evil in order to give us a true choice in regards to whether we worship Him. God did not create evil, but He allowed it. If He had not allowed evil, we would be worshipping Him out of obligation, not by a choice of our own will.

Source: http://www.gotquestions.org/did-God-create-evil.html


__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

சகோதரர் சுந்தர் அவர்களே...

உங்களது இந்த கட்டுரை தீடிரென ரூட் மாறுவதை கவனிக்கவும். முதலில் தீமை என்றால் துன்பம் என்ற அர்த்தத்தில் துவங்கிய உங்கள் கட்டுரை நாங்காவது பதிப்பில் இருந்து பாவம் என்ற அர்த்தத்தில் தொடர்கிறது.
அனேகர் பாவத்தையும், துன்பத்தையும் ஒன்றாக போட்டு குழப்புகின்றனர். ஆனால் துன்பம் என்பதும் பாவம் என்பதும் வேறு வேறு என்பதே உண்மை. பாவம் செய்பவர்கள் இவ்வுலகில் எந்த துன்பத்தையும் அடையாமல் இறப்பதையும், நல்லவர்கள் அனேக துன்பங்களை அடைவதையும் இந்த உலகில் நாம் பார்க்கிறோம். ஆகவே தீமை என்பது துன்பமா அல்லது பாவமா என்பதை முடிவு செய்து அந்த அர்த்தத்திலேயே தொடர்வது நல்லது என கருதுகிறேன்.


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

SANDOSH wrote:

சகோதரர் சுந்தர் அவர்களே...

உங்களது இந்த கட்டுரை தீடிரென ரூட் மாறுவதை கவனிக்கவும். முதலில் தீமை என்றால் துன்பம் என்ற அர்த்தத்தில் துவங்கிய உங்கள் கட்டுரை நாங்காவது பதிப்பில் இருந்து பாவம் என்ற அர்த்தத்தில் தொடர்கிறது.
அனேகர் பாவத்தையும், துன்பத்தையும் ஒன்றாக போட்டு குழப்புகின்றனர். ஆனால் துன்பம் என்பதும் பாவம் என்பதும் வேறு வேறு என்பதே உண்மை. பாவம் செய்பவர்கள் இவ்வுலகில் எந்த துன்பத்தையும் அடையாமல் இறப்பதையும், நல்லவர்கள் அனேக துன்பங்களை அடைவதையும் இந்த உலகில் நாம் பார்க்கிறோம். ஆகவே தீமை என்பது துன்பமா அல்லது பாவமா என்பதை முடிவு செய்து அந்த அர்த்தத்திலேயே தொடர்வது நல்லது என கருதுகிறேன்.



சகோதரர் சந்தோஷ் அவர்களே,  
 
தீமைகள் அனைத்திற்கும் தேவன்தான் காரணமா?  என்பது தலைப்பு.
 
தீமையால் வந்தது பாவம் பாவத்தால் வருவது துன்பம். தீமை, பாவம்,  துன்பம், என்ற வார்த்தைகள்   வேறு வேறு பொருளை தருவதாக இருந்தாலும் இவை மூன்றும் மிக  நெருங்கிய  தொடர்புடையவைகள். ஒன்றிலிருந்து வந்ததுதான் இன்னொன்று. ஓன்று இல்லாமல் இன்னொன்று  இல்லை. எனவே ஒன்றை சொல்லும்போது இன்னொன்று தானாகவே அங்கு இடம்பெறுகிறது.
 
இதை தெளிவுபடுத்த நாம் துவக்க நிலையாகிய  ஆதாம் ஏவாளின்  நிலையை பார்க்கலாம்.
 
எந்த துன்பமோ பயமோ இன்றி மிகுந்த சந்தோஷமாக  வாழ்ந்துவந்த அவர்கள்வாழ்வில்  குறுக்கிட்டது  சாத்தான். அதை தொடர்ந்து  வந்தது தேவனுடய வார்த்தையை மீறி  செய்யப்பட்ட பாவம் அதை தொடர்ந்து மனுக்குலத்தில் புகுந்தது  துன்பம். ஒன்றை செய்யவில்லை என்றால் இன்னொன்று வந்திருக்காது. இவைககளை  பிரித்து பார்ப்பது சுலபமல்ல. 
 
என்னை பொறுத்தவரை பாவம் இல்லாமல் துன்பம் இல்லை"நீதிமானுக்கு வரும்
துன்பம் அநேகம்"
என்று  வசனம் சொன்னாலும்
 
பிரசங்கி 7:௨௦  ஒரு பாவமும் செய்யாமல், நன்மையையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.
 
என்று வசனம் சொல்வதால், ஏதோ ஒரு சிறிய பாவத்தினால்தான் துன்பம் வருகிறது என்பது எனது கருத்து.  ஆகினும் தாங்கள் பாவமில்லாதவர்களுக்குகூட துன்பம் வரும்  என்ற கருதினால் அதைப்பற்றி வேறு திரியில் விவாதிக்கலாம்.
 
இத்திரியில் தீமையால் வரும்பாவம் அந்த பாவத்தினால் வரும் துன்பம் இவைகள் பற்றியே நான் எழுதுகிறேன். இவை எதற்குமே தேவன் காரணமல்லர்!    

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

///As finite human beings, we can never fully understand an infinite God (Romans 11:33-34). ////
 
இந்த  வார்த்தைகள் உண்மையானதுதான்.  ஒரு மனிதனால் தேவனின் முழுதன்மை மற்றும்   நிலையை நிச்சயம் அறியமுடியாது ஆனால்  தேவன் தான் தெரிந்து கொண்டவர்களுக்கு அறிவுக்கு எட்டாத அறிய பெரிய காரியங்களை வெளிப்படுத்துகிறார். "என்னை நோக்கி கூப்பிடு நான் உனக்கு வெளிப்படுத்துவேன்" என்று வாக்கும் கொடுத்திருக்கிறார்.  என்னை பொறுத்தவரை, தேவனை பற்றிய 
இந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை என்று சொல்லும் அளவுக்கு எந்த கேள்வியும் இல்லை.      
 
////Sometimes we think we understand why God is doing something, only to find out later that it was for a different purpose than we originally thought. God looks at things from a holy, eternal perspective. We look at things from a sinful, earthly, and temporal perspective. ////
 
நிச்சயமாக! ஆனால் வேதம் சொல்கிறது   தானியேல் 12:10  துன்மார்க்கரில் ஒருவனும் உணரான். ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள்
 
என்ன நடக்கிறது எது நடக்கிறது எதற்காக நடக்கிறது என்ற அனைத்து காரியங்களையும் தேவனிடம் தொடர்பு நிலையில் இருந்தால் நிச்சயம் அறிய முடியும். நடக்கும்  காரியத்தின் உண்மைகளை தேவஞானத்தால் உணர்ந்துகொள்ள முடியும்!  
 
///Why did God put man on earth knowing that Adam and Eve would sin and therefore bring evil, death, and suffering on all mankind? Why didn’t He just create us all and leave us in heaven where we would be perfect and without suffering? These questions cannot be adequately answered this side of eternity. What we can know is whatever God does is holy and perfect and ultimately will glorify Him. God allowed for the possibility of evil in order to give us a true choice in regards to whether we worship Him. God did not create evil, but He allowed it. If He had not allowed evil, we would be worshipping Him out of obligation, not by a choice of our own will.///
 
அவர் முதலில் படைத்த ஆதாம்/எவாளிடமோ அல்லது ஆதியில் எவரிடமும்
தேவன் "என்னை துதித்து கொண்டே இரு"  என்று எங்கும் சொல்லவில்லை! மாறாக
பாவம் உலகத்தில் பெருகியபின்னர் மனிதனின் நினைவுகள் நித்தம் பொல்லாததாக இருந்ததாலே அந்த பொல்லாதே நினைவுகளில் இருந்து விடுபட்டிருக்க அல்லது
அந்த பொல்லாத நினைவுகள் வருவதை தடுக்கவுமே   தம்மை துதிக்கும்படி கட்டளையிட்டார் என்றே நான் கருதுகிறேன்.  
 
தேவன்  மிகப்பெரியவர் அதே நேரத்தில் மிகசிரியவரும் கூட! ஒரே வார்த்தையில் சொன்னால் அவர் "குழந்தையாய் இருக்கும் மிகப்பெரியவர்" இதுதான் தேவனைப் பற்றி நான் அறிந்தது!  அவர் நம்மைநோக்கி சொல்வதும் மனம்திரும்பி குழந்தைகளை போல ஆகுங்கள் என்பதுதான்

தேவனை பற்றிய அடிப்படை கருத்துக்களில் தவறாக இருக்கும்போது அது முற்றிலும் நம்மை தவறான ஒரு கருத்துக்கு கொண்டுபோய் இறுதியில் விடைதெரியாத இத்தனை கேள்விகளில்தான்  வந்து நிற்கும். சரியான விடை தெரியாத இத்தனை கேள்விகள் இருக்கும்போது,  இதுபோன்று ஒரு விளக்கத்தை   எப்படி ஏற்க்க முடியும் ?
 
இவை எல்லாவற்றிக்குமே ஒரு சரியான பதில் இருக்கிறது  ஆனால் அதைப்பற்றி வேதம் முழுமையாக எங்கும் வெளிப்படுத்தவில்லை, அரைகுறை ஆதாரத்தோடு அதை விளக்கவும் நான் விரும்பவில்லை  ஆனால் தேவனிடம் அதுபற்றி விசாரித்தால் நமது   சந்தேகங்கள் அனைத்தையுமே  அவரால் தீர்க்கமுடியும்!  
 
எந்த தீமையையும் தேவன் வேண்டுமென்று உலகத்தில் அனுமதிக்கவில்லை! ஆனால்  அந்த  தீமையில் விழுந்த மொத்த மொத்த மனுக்குலத்தையும் மீட்கவே அவர் திட்டம்தீட்டி தன் குமாரனையே பலியாக கொடுத்து அனைத்தையும் நிறைவேற்றி வருகிறார்  என்பது மட்டும் உறுதி!
 
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

//அவர் முதலில் படைத்த ஆதாம்/எவாளிடமோ அல்லது ஆதியில் எவரிடமும்
தேவன் "என்னை துதித்து கொண்டே இரு"  என்று எங்கும் சொல்லவில்லை! மாறாக
பாவம் உலகத்தில் பெருகியபின்னர் மனிதனின் நினைவுகள் நித்தம் பொல்லாததாக இருந்ததாலே அந்த பொல்லாதே நினைவுகளில் இருந்து விடுபட்டிருக்க அல்லது அந்த பொல்லாத நினைவுகள் வருவதை தடுக்கவுமே   தம்மை துதிக்கும்படி கட்டளையிட்டார் என்றே நான் கருதுகிறேன். //

இது தலைப்புக்கு எந்த அளவு பொருந்துகிறது என தெரியவில்லை; ஆயினும் இந்த வரிகளை கண்ட போது எழுந்த எண்ணங்களை  எழுத்தாக்க விரும்புகிறேன்.

மனிதர்களை ஏன் தேவன் படைத்தார் என நீங்கள் எண்ணுகிறீர்கள் என அறிய ஆவல்.

நான் புரிந்து கொண்டது..

1. அவரைத் துதிக்கும் படியாக...
2. அவருடைய அன்பின் வெளிப்பாடாக...


ஏசாயா 43:21
இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என்
துதியை சொல்லிவருவார்கள்.

மனிதர்களை தேவன் படைத்ததே அவரை துதிக்கும்படியாகத்தான்...

மேலும், சமீபத்தில் ஒரு போதகர் சொன்னது...

லூசிபர் விழுந்து போவதற்கு முன் தேவனைத் துதிக்கும் பணியில் (அதற்காகவே சிருஷ்டிக்கப்பட்டு) இருந்தான். அவன் தன் மேட்டிமையால் விழுந்து போன பின் அவன் இருந்த ஸ்தானத்தில் மனிதர்களை நிறுத்தும் படி (அதாவது அவரை இடைவிடாது துதிக்கும் படி) விரும்பி அவர்களை சிருஷ்டித்தார்..

அதற்கு அவர்களை உடனே ஏற்படுத்தாமல் அவர்களை தகுதிப் படுத்த(அல்லது பரிசோதிக்க) விரும்பி, ஆதாம்- ஏவாளை படைத்து ஏதேனை பண்படுத்தும் பணியைத் தந்தார்..

பின் அவர்கள் வீழ்ச்சிக்குள்ளாகி தேவமகிமையை இழந்தனர். எனவே தான் இந்த மீட்பின் பாதையை கொடுத்து பின் மீண்டும் பரலோகில் மனிதர்களை(இயேசு கிறிஸ்துவின் மூலம் தகுதிப்பட்டவர்களை) எடுத்து இடைவிடாமல் துதிக்கும் பாக்கியம் தருவார்...

இதற்கிடையில் நியாயத்தீர்ப்பில் தீமை, மரணம்,...., பிசாசுக்கு முடிவுண்டாகும்.

இறுதியில் நாம் தேவனோடு இணைந்து அவரைத் துதிக்கும் படியாகத்தானே இப்போது உருவாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம்..

பொல்லாத நினைவுகளிலிருந்து விடுபட துதித்தலைத் தவிர வேறு உபாயங்களும் உள்ளன.. ஆனால் துதிக்காத ஒருவருக்கு பரலோகில் என்ன வேலை??



__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

சகோதரர் தீமொத்த்தி அவர்களே தாங்கள் எண்ணுவது போல்  இது  ஒரு புதிய முக்கியமான தனி தலைப்பாக இருப்பதால் அதைப்பற்றி இங்கு விவாதிப்பதை விட "தேவன் மனிதனை படைத்த  காரணம் என்ன?" என்பதுபோல் ஒரு புதிய தலைப்பிட்டு அங்கு தங்கள் பதிவை பதிந்தால் அக்கருத்து சம்பந்தமாக தனியாக விவாதிக்க நலமாக இருக்கும் என்று கருதுகிறேன்



__________________


இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

இறைநேசன் wrote:

 

சகோதரர் தீமொத்த்தி அவர்களே தாங்கள் எண்ணுவது போல்  இது  ஒரு புதிய முக்கியமான தனி தலைப்பாக இருப்பதால் அதைப்பற்றி இங்கு விவாதிப்பதை விட "தேவன் மனிதனை படைத்த  காரணம் என்ன?" என்பதுபோல் ஒரு புதிய தலைப்பிட்டு அங்கு தங்கள் பதிவை பதிந்தால் அக்கருத்து சம்பந்தமாக தனியாக விவாதிக்க நலமாக இருக்கும் என்று கருதுகிறேன்

 




தங்கள் விருப்பப் படியே...

http://lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=3&topicID=35716429

இது இத்திரி வேறு பாதையில் பயணிப்பதைத் தடுத்து, தீமைகள் அனைத்திற்கும் தேவன்தான் காரணமா எனும் தலைப்பிலேயே செல்ல உதவும். நன்றி..


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

SUNDAR wrote:

 

அவர் முதலில் படைத்த ஆதாம்/எவாளிடமோ அல்லது ஆதியில் எவரிடமும் தேவன் "என்னை துதித்து கொண்டே இரு"  என்று எங்கும் சொல்லவில்லை! மாறாக பாவம் உலகத்தில் பெருகியபின்னர் மனிதனின் நினைவுகள் நித்தம் பொல்லாததாக இருந்ததாலே அந்த பொல்லாதே நினைவுகளில் இருந்து விடுபட்டிருக்க அல்லது
அந்த பொல்லாத நினைவுகள் வருவதை தடுக்கவுமே   தம்மை துதிக்கும்படி கட்டளையிட்டார் என்றே நான் கருதுகிறேன்.  
 
 
"எதோ தீமைகள் அனைத்தையும் தேவன் வேண்டுமென்றே உலகினுள்அனுமதித்து வேடிக்கை பார்த்துகொண்டு இருப்பதுபோலவும், சத்துரு எனப்படும் சாத்தானை தேவன் வேண்டுமென்றே  சோதனைக்காக உருவாகியதுபோலவும் எண்ணுவதோடு,   தம்மை சுற்றி எப்பொழுதும் ஒரு கூட்ட மக்கள் துதிபாடிகொண்டு இருக்கவேண்டும் என்று எண்ணுகிற ஒரு புகழ் விரும்பிபோலவும் தேவன் பலரால் அனுமாநிக்கப்படுவதால்  இக்காரியங்களை இங்கே பதிவிட நேர்ந்தது. மற்றபடி இது தலைப்புக்கு சம்பந்தம் இல்லாத ஒரு செய்திதான். 

அதைபற்றி புதிய திரியில் விவாதிக்கலாம்
 

 



-- Edited by SUNDAR on Friday 7th of May 2010 10:15:18 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard