இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மரணமில்லா வாழ்வுக்கு வழிகாட்டும் வேதாகமம்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
மரணமில்லா வாழ்வுக்கு வழிகாட்டும் வேதாகமம்!
Permalink  
 


வெளி 2: ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது

வெளி 3:12 ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; 

வெளி 21:7 ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்

வெளி 3:21 நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்
.

மேல்கண்ட வசனங்களை நாம் சரியாக ஆராய்ந்தால் "ஜெயங்கொள்ளுகிறவனெவனோ" என்று வார்த்தை ஒருமையில் வருவதை காணமுடியும்.!  
 
ஆம் ஜெயம் கொள்ளப்போகிறவன் ஒருவனே! அது யார்?

அந்த  ஒருவனுக்குதான் ஜீவவிருட்சத்தின் கனி கிடைக்கும்!

அந்த ஒருவனின்  அடிப்படையில் எல்லோருக்கும் மீட்பு அருளுவதே  தேவனின் திட்டம்!
 

ஒரே ஆதாமால் பாவம் உலகினுள் வந்தது!

ஒரே இய்சுவால் இரட்சிப்பு மற்றும் பாவத்தை ஜெயித்து வாழ பரிசுத்தாவியின் பெலன் வந்தது 

இன்னும் 
ஜெயம்கொள்ளப்போகும் ஒருவனால்தான் எல்லோருக்கும் மீட்புவரப்போகிறது.    
 
அந்த ஒருவனைத்தான் தேவன் தேடிக்கொண்டு இருக்கிறார்?
 
ஜெயம்கொள்ளப்போவது யார்?
ஜெயம்கொள்ள என்ன வழி?
 
என்பதை ஆராய்வதே தளத்தின் நோக்கம்!
 
ஒரு ஆதாம் தேவனின் சொல்லுக்கு கீழ்படியாமல்  சாத்தனின்  சொல்லுக்குட்பட்டு  பாவம் செய்ததால் மனித குலமே சாத்தானின் அடிமையானது!
 
ஒரு இயேசு மரித்து  நமது பாவங்களுக்கு விடுதலை கொடுத்ததோடு  சாத்தானை  ஜெயித்து  பரிசுத்த வாழ்க்கைவாழ  அவசியமான  "பரிசுத்த ஆவியானவர்" என்ற வல்லமையை வாங்கிகொடுத்திருக்கிறார்.
    
இன்றும் ஒரு மனிதன் இயேசுவின் இரத்தத்தால் பாவங்கள் கழுவப்பட்டு பரிசுத்த ஆவியின் பெலனை பெற்று  சாத்தானின் அனைத்து  தந்திரங்களுக்கும் உட்படாமல் தேவனின் சொல்லுக்கு கீழ்படிந்து நடந்தால் சாத்தானை ஜெயித்துவிடலாம்.
 
அதன்பிறகுதான் அந்த பொல்லாத  சாத்தானை தேவதூதன் கட்டி பாதாளத்தில் அடைக்கமுடியும்!   
 
பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.
 
அந்த ஒருவன் சாத்தானை ஜெயம்கொள்ளும் வரை,  யாரும் பிசாசை கட்டவும் முடியாது இந்த உலகுக்கு முடிவும் வரப்போவது இல்லை!
 
தொடரும்...


-- Edited by SUNDAR on Wednesday 10th of February 2010 07:18:17 PM

-- Edited by SUNDAR on Thursday 11th of February 2010 08:26:19 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
RE: தேவன் தேடும் ஜெயம்கொள்ளப்போகிறவன் யார்?
Permalink  
 


ஒருவன் ஜெயம்கொள்ள  வேண்டும் என்றால் அவன் மரணத்தை ஜெயிக்க வேண்டும்! 
 
ஆதாமின் பாவத்தால் பூமிக்குள் நுழைந்த மரணத்தை இயேசு தனது மரணத்தால் ஜெயித்து மரணகட்டுகளை  அவிழ்த்து எழுந்து,  மரணத்தை ஜெயிப்பதற்கான வழியை ஏற்ப்படுத்தி கொடுத்து,
 
ஒருவன் என் வார்த்தையை கை கொண்டால் அவன் என்றென்றும் மரணத்தை காண்பதில்லை.(யோ:8:51)
 
என்று மிக தெளிவாக சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.
 
ஆனால் எல்லோரும் அதற்க்கு வேறுவிதமாக பொருள் கொண்டு அது இரண்டாம் மரணத்தை குறிக்கும் என்று  வாதிடுகின்றனர்.  "இரண்டாம் மரணம்" எல்லாம், "இரண்டாம் மரணம்" என்றே வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பட்சத்தில் நாம் நினைத்தபடி இவ்வசனத்துக்கு  பொருள் கொள்வது ஏற்றதல்ல என்றே நான் கருதுகிறேன்!    
 
இது மட்டுமா!  வேதாகமம்  மரணமில்லா வாழ்க்கைக்கு வழி காட்டுகிறது என்பதை மேலும் அனேக வசனங்கள்  உறுதிப்படுத்துகின்றன!
  1.  ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்துக்கு நீங்கும் வழிகள் உண்டு (சங்:68:20)
  2. நீதியின் பாதையில் ஜீவன் உண்டு அங்கே மரணம் இல்லை (நீதி: 12:28)
  3. அவர் (கர்த்தர்) மரணத்தை ஜெயமாக விழுங்குவர் (ஏசா:25:8)
  4. அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; (ஓசி 13:14)
  5. என் கட்டளைகளின் படி நடந்து, என் நியாயங்களை கைக்கொண்டு உண்மையாக இருப்பானாகில் அவனே நீதிமான் அவன் பிழைக்கவே பிழைப்பான் (எசே:18:9)
  6.  உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்(யோ:8:26)
  7. தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்பிப்பார் (ரோ: 8:11)  
இப்படி அனேக வசனங்கள் மூலம்  மரணத்தை ஜெயிக்க முடியும் என்று வேதம் கூறுகிறது. இங்கு எங்குமே இரண்டாம் மரணம் என்று குறிப்ப்டப்படாத நிலையில்,  இவை எல்லாம் இரண்டாம்  மரணத்தை தான் குறிக்கிறது என்று ஒரு பொய்யை நம்பும்படி சாத்தான் ஏமாற்றி வருகிறான்!  
 
ஏனெனில் ஒரே  ஒருவன் மரணத்தை ஜெயித்து ஜெயம்கொண்டால் அன்றோடு சாத்தான் கதை முடிந்தது, அவன் பாதாளத்தில் அடைக்கப்பட்டுவிடுவான் என்பது அவனுக்கு நல்லாவே தெரியும்!  எனவே முடிந்த அளவு எல்லோரையும் ஏமாற்றி வருகிறான் என்றே நான் கருதுகிறேன்
 
வசனங்கள் சொல்வதுபோல் :
 
                    மரணத்தை ஜெயிப்பவனே  ஜெயம்கொள்ளப்போகிறவன்!  
 
தொடரும்.....  
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

"மாமிசமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டாது: என்று 1கொரி:15:50ல் சொல்லப்பட்டிருக்கும்பட்சத்தில்.

மரணமற்ற நிலை  என்பது  எப்படி 
சாத்தியம்  என்று நீங்கள் கருதலாம்   
 
மரணத்தை ஜெயித்து ஜெயம்கொள்வது என்றவுடன் சாகாமல் இதே உடம்புடன் அப்படியே இருந்துவிடப்போவது என்று கருதவேண்டாம்
 
மரணம் என்று இந்த உலகில் எதை சொல்கிறோம்?

நமது மாமிசம் இயக்க நிலையை முடித்து அது மண்ணில் அடக்கம் பண்ணப்படுவதைதான் உலகில் எல்லோரும் மரணம் என்று குறிப்பிடுகிறார்கள். அந்த "மரணம்" இல்லாமல் வாழ முடியும் என்று வேதம் வழி சொல்கிறது தவிர, ஒருவன் நான் இருக்கிற பிரகாரமாக அப்படியே இருந்துவிடுவான் என்ற பொருளில் அல்ல! அதாவது உலகத்தார் சாவதுபோல செத்து அடக்கம் பண்ணப்படுவதில்லை.

 
பவுல் அவர்கள் 1 தெசே 4ல் இப்படி சொல்கிறார்:

17. பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்"

இதில் உயிரோடு இருக்கும் நாமும் எடுத்துக்கொள்ளபடுவோம் என்று சொல்வது மரித்தா? அல்லது மரிக்காமலா? என்று பார்த்தால் கீழ் கண்ட வசனம் இப்படி சொல்கிறது

53 For our dying bodies must be transformed into bodies that will never die
 
அதாவது நமது  உடம்பு சாகாமையை தரித்துகொள்ளும் என்று அவர் தெளிவாக குறிப்பிடுகிறார் .   இங்கு என்ன நிகழும் என்றால்  நமது மாமிசம் அப்படியே கீழே விழுந்து விடுமா, என்ன? அப்படி  இல்லை, சாவுக்கேதுவான இந்த சரீரம்  அப்படியே சாகாத உடம்பாக மாறிவிடும்! என்பது தான்  வேதம் சொல்லும் கருத்து!
 
அதாவது மனிதர்கள் சாவதுபோல அவன்  செத்துபோவதில்லை மாறாக  உயிரோடு  இருந்தே  சாகாதவனாக மாறிவிடுவான் என்பதுதான்! . அதாவது இயேசு எப்படி தன் சரீரத்தோடு எழுந்தாரோ அதற்கொப்பான  சரீரமாக நாமும் மாறிவிடுவோம்! 
 
ஓருபுரம்  மாமிசத்தில் மரித்தவர்கள் சாகாத உடம்புடன் எழுந்திருப்பார்கள். இன்னொன்று உயிரோடு இருக்கும்  ஜெயம்கொண்டவன்  சாகாமலேயே அப்படியே சாகாத உடம்பாய் மாறிவிடுவான்! 
 
இவ்வளவு விளக்கியும்  அது முடியாது, நடக்காது என்று சொல்பவர்களுக்கு வேத வார்த்தைகள் மேல் விசுவாசம் இல்லை என்றுதான் பொருள்கொள்ள முடியும் !  வசனம் சொல்வதை நம்பாமல்  எல்லோரும் சாவதுபோல் நானும் நிச்சயம் செத்துவிடுவேன்  என்று விசுவாசித்தால் அதுதான் நடக்கும்
"நீ விசுவாசித்தபடியே  ஆகக்கடவது"  என்பதும் வேத வாக்கு! மேலும் அப்படியொரு  விசுவாசத்தை தொடங்குகிறவரும் முடிக்கிறவரும்  தேவனே!
 
தொடரும்......


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
மரணமில்லா வாழ்வுக்கு வழிகாட்டும் வேதாகமம்!
Permalink  
 


ஒரு மனிதனிடத்தில் கிறிஸ்த்துவின்  இரட்சிப்பு என்பது மிகவும் சுலபமானது  என்பதை பார்த்தோம்.  கிறிஸ்த்துவின்   இரட்சிப்பை பற்றி  அப். பவுல் இவ்வாறு குறிப்பிடுகிறார் :

ரோமர் 10:9  கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று  உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் 

ஆம்  இயேசு எனது பாவங்களுக்கு மரித்தார் என்பதை இருதயத்தில்  விசுவாசித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்!  

அதுபற்றி யோவான் இவ்வாறு சொல்கிறார்

18. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; 

என்றும்

 12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார்.

இங்கு இயேசுவை ஒருவர் ஏற்றுக்கொண்ட உடனேயே அவன்  
"பிசாசின் பிள்ளை" என்ற  ஸ்தானத்திலிருந்து  "தேவனின் பிள்ளை" என்ற ஸ்தானத்துக்குள் வந்துவிடுவார். 

இந்த இரட்சிப்பு முற்றிலும் இலவசம்!  மற்றும் தேவனின் ஈவு!

ரோமர் 3:24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;

எபேசியர் 2:8
கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
   

அனால் அத்தோடு கிறிஸ்த்தவம் முடிந்துவிடவில்லை இன்னொரு பகுதி உண்டு:

யோவான் 14:15
நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.

யோவான் 14:23
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்,

இரட்சிப்பு என்பது மிக சுலபமானது ஆனால் பெற்ற இரட்சிப்பை பேணி காப்பது மிக மிக அவசியம். அந்த இரட்சிப்பில் இறுதிவரை நிலை நிற்பவனே  
இரட்சிக்கப்படுவான்.  எவ்விதத்திலும் பின்மாற்றமான ஒரு வாழ்வுக்கு போய்விடகூடாது. எல்லா தேவபிள்ளைகளுமே வேத வார்த்தைகளை தங்கள் வாழ்க்கையில்  கைகொண்டு வாழ பிரயாசப்படவேண்டும் என்பது வேதம் நமக்கு போதிக்கும்  உண்மை. நிர்விசாரமாக வசனத்துக்கு விரோதமான வாழ்க்கை நம்மை தேவனை விட்டு பிரித்துவிடும்

 தேவனின்  வார்த்தைகளை கைகொண்டு வாழ்வது என்பது  மிகவும்  உயர்ந்த ஒரு உன்னதமான செயல்.  அவர்கள் அதிக பாக்கியவான்கள்

லூக்கா 11:28 , தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.

இப்படி தேவனின் வார்த்தைகளை தங்கள் வாழ்வில் கைகொண்டு நடப்பவர்ளால்  மட்டுமே  ஜெயம்கொண்டு மரணத்தை ஜெயிக்க  முடியும்!  

எனவே  ஜெயம்கொள்வது என்பது இரட்சிப்புபோல் ஒரு  சாதாரண காரியம் அல்ல! அதைதான் வேதம்  ஜீவனுக்கு போகும் குறுகிய  வழி என்று குறிப்பிடுகிறது. 

 ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்

அப்படி ஒரு வழி இருக்கிறது என்பதை  கண்டுகொள்பவர்களே   சிலர்தான், மற்றவர்கள் அவ்வழியை ஏற்க்கவும் மாட்டார்கள் அதில் நடக்க விரும்பவும் மாட்டார்கள். அப்படி ஒரு வழி இருக்கிறது என்பதை அறியவும் மாட்டார்கள்.  

இன்று உலகத்தின் அநேகர் குறுகியவழியில் பயணம்செய்ய போதிப்பது இல்லை. அதைபற்றிய காரியங்களை சாத்தான் மறைத்து வைத்திருப்பதால் ஏதோ கிருபையின் அடிப்படையில் இரட்சிப்பை பெற்றோம்  முடிந்தவரை இயேசுவுக்காய் வாழ்ந்து பரலோகம் போக முயற்சிப்போம் என்ற கொள்கையிலேயே அனேக விசுவாசிகள் வாழ்கின்றனர்.   

ஆண்டவர் காட்டும்  அந்த குறுகிய வழியை யாரும் அறியகூட விரும்புவதில்லை. காரணம் அதில் அனேக துன்பங்கள் உண்டு.  

அதாவது இயேசு சொல்லும் வார்த்தைப்படி  வாழவேண்டும் 

ஒருவன் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை திருப்பி கொடுக்கவும், நமக்குண்டானத்தை விற்று பிச்சை போடவும், கேட்பவனுக்கு முகம் கோணாமல் கொடுக்கவும், வஸ்திரத்தை கேட்டால் அங்கியையும் சேர்த்து கொடுக்கவும், பூமியில் பொக்கிசத்தை சேர்க்காமலும் இதுபோல் மத்தேயு ஐந்தாம் அதிகாரத்தை  அதிகாரத்திலுள்ள மலைபிரசங்க  கட்டளைகள் மற்றும் இயேசுவின் அனைத்து கட்டளைகளையும் நாம்  கைகொண்டு வாழவேண்டும்.    

அவ்வாறு  இக்குறுகிய வழியை அறிந்தவர்களிலும்  அநேகர் அதில் பிரவேசிக்க முயன்றாலும் அவர்களால்  முடியாமல் போகும்! என்று இயேசு சொல்கிறார். எனவே  அவ்வழியில்  பிரவேசிக்க போவது ஒரே ஒருவன்தான்!

அவன்தான் ஜெயம்கொள்ளபோகிறவன்!

பரம அழைப்பின்   பந்தயபொருளை பெறப்போகிறவன்!
 
அதன்பிறகு இரண்டாவது மூன்றாவது வந்தவர்களுக்கு எல்லாருக்குமே  அதற்கேற்ற நீதியின்   கிரீடம் கிடைத்தாலும் அந்த ஜெயம்கொள்பவன் என்பவன் ஒருவனே!

ஒருவன் மரணத்தை ஜெயித்து ஜெயம்கொள்வதற்கு    அவன் முன் இருப்பது ஒரே ஒரு கட்டளைதான்:-

ஒருவன் என் வார்த்தையை கை கொண்டால் அவன் என்றென்றும் மரணத்தை காண்பதில்லை.(யோ:8:51)

அதற்க்கு இணையாக  ஜெயம் கொண்டு ஜீவவிருட்ச்சத்தின்மேல் அதிகாரம்   பெற்று கொள்வதற்கும் அவன் முன் இருப்பது அதே கட்டளைதான்

 வெளி 22:14. ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள்
வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
 
மேல்கண்ட வசனத்தின் அடிப்படையில் நாம் ஜெயம்கொள்ள இயேசுவின் வார்த்தைகளை கட்டளைகளை கைகொண்டு நிச்சயம் நடக்கவேண்டும் என்பதை வேதம் மிக தெளிவாக போதிக்கிறது.

எனவே அவற்றை கைகொண்டு ஜெயம்பெற,  இயேசுவின்  கட்டளைகளை பற்றிய விளக்கங்களை அடுத்து தியானிக்கலாம்     

இதன் தொடர்ச்சியை படிக்க கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கவும்:  

உன்னை நீ நேசிப்பதுபோல........


-- Edited by SUNDAR on Saturday 24th of April 2010 11:20:53 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

இந்த திரியில் நான் எழுதியிருக்கும் காரியங்கள் நிறைவேறும் நாள் மிக சமீபித்து இருப்பதால் அதன் முக்கியத்துவம் கருதி திரி மேலே கொண்டுவரப்பட்டுள்ளது.

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard