மன்னிக்கும் உள்ளம்கொண்ட மகாத்மா காந்திக்கும் எதிரியிருந்தான் உலகத்தின் மீட்புக்கு உயிரையே கொடுத்த இய்சுவுக்கும் எதிரியிருந்தான்!
எதிரி என்பவன் எவ்விதத்திலும் உருவாகலாம்! ஆனாலும் அடிப்பனை திருப்பி திட்டுவதற்கு தேவையான மன பக்குவத்தைவிட அடிப்பவனை ஆசீர்வாதம் பண்ணுவதற்கு அதிக மனிதத்தன்மை தேவை. அப்படி செய்ததால்தான் மஹாத்மாவை இயேசுவை இன்றும் நாம் போற்றுகிறோம்.
எல்லா மிருகங்களும் தன்னை அடிப்பவரை உடனே திரும்பி கடிக்கத்தான் முயலும் ஏனெனில் அவைகள் மிருகங்கள், நாம் மனிதர்கள் அல்லவா? கொஞ்சம் வித்யாசமாக செய்து பார்க்கலாமே!
அதில் நிச்சயம் மேன்மை உண்டு. உத்தமனுக்கு கடவுள் துணை நல்லவனை தீமை நெருங்க பயப்படும்!
நாம் பெரியவீரன் என்று சொன்னலும் எல்லா இடங்களிலும் நமது வீரத்தை கட்ட முடியாது! போதையில் வந்த நோஞ்சான் ஒருவன் பான்பராக்கை மேலே துப்பிவிட்டால் சற்றும் தாமதிக்காமல் நிச்சயம் அடிக்க முயலலாம். ஆனால் நான்குபேர் சேர்ந்து கூட்டமாக வந்து நம்மை அடித்தால்கூட அந்த இடத்தைவிட்டு ஓடத்தான் முயல்வோம்!
சிங்கம் புலி கரடிகளுக்குள் நாம் வாழவில்லை நாம் வாழ்வது நம்மைபோன்ற சக மனிதர்களிடம் அல்லவா? பிறர் செய்யும் ஒரு காரியத்தை பார்த்து தவறு என்று பொருமும் நாம் நமது வாழ்க்கையில் எத்தனைபேர் பொருமும் அளவுக்கு செயல்களை செய்துள்ளோம் என்று பிறரை கேட்டால்தான் தெரியும்!
ஒரு சில அகங்காரிகளின் அகங்காரமே ஆயிரமாயிரம் உயிர்களை பலிகொண்டிருக்க எல்லோருமே ஒருவர் குற்றத்தை ஒருவர் மனிக்காமல் திறமையை காட்ட நினைத்தால் மனித சமுதாயம் சமாதானமாக வாழ முடியாது என்றே நான் கருதுகிறேன்!
எனவே வீரம் எல்லா இடத்திலும் எடுபடாது! ஆனால் மன்னித்தல் மறத்தல் எல்லா இடங்களிலும் எடுபடும்! அத்தோடு பகைவர்களே இல்லாமல் ஆக்கும் தன்மையும் மன்னிதலுக்கு உண்டு என்றே நான் கருதுகிறேன்!
திறமை காட்டாமல் பொறுமை காப்போம்!
-- Edited by இறைநேசன் on Saturday 30th of January 2010 04:20:59 PM