இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கூட்டத்தோடு சேராதவன் வஞ்சிக்கப்பட்டவனா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
கூட்டத்தோடு சேராதவன் வஞ்சிக்கப்பட்டவனா?
Permalink  
 


"மற்ற யாருக்கும் கிடைக்காத அல்லது பெரும்பாலோனோர் தவறவிட்ட ஒரு வெளிப்பாடு தனக்கு கிடைத்து விட்டதென்று எண்ணுகின்றார்கள் வஞ்சிக்கப்பட்டவர்கள்" என்ற கருத்து பல வளர்ந்த உழியர்களிடம் உண்டு!

பெரும்பாலோனோர் தவற விட்ட வெளிப்பாடு ஒருவர்னுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லையா? அல்லது தேவனுக்கு வேறு எந்த வெளிப்படும் தந்து நிறைவேற்ற முடியாதா? அவர் கரங்கள் குறுகியதா? என்பதைப்பற்றி இங்கு ஆராயலாம் என்று கருதுகிறேன்!

வேத புத்தகத்தில் துவக்கத்தில் இருந்து பார்ப்போமானால் பெரும்பாலனோர் தவற விட்டதை கண்டு பிடித்து அறிந்தவர்களே தேவனால் உயர்த்தப்பட்டார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்!

1. நோவாவின் காலத்தில் பெரும்பாலனோர் நீதையை தவற விட்டு விட்டனர் ஆனால் அவன் ஒருவன்மட்டும் திரள் கூட்டத்தோடு சேராமல் நீதிமானாய் இருந்தான் தேவனால் ஜலப்பிரலயத்தில் இறுதி தப்புவிக்கப்படான்.  

நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான். (ஆதி 6:8)

2. ஆபிரகாம் வாழ்நத அவன் சொந்த தேசத்தில் அனேககூட்ட மக்கள் வாழ்ந்தனர்
 ஆனால் தேவன் ஆபிரகாமை மட்டும் அழைத்து

"கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ"
என்றார்

காரணம் அவன் திரள் கூட்டத்தோடு சேர்ந்து தேவன் பேரில் விசுவாசம் இல்லாமல்  பெரும்பாலானோர் தவறவிட்டதேவன் பேரிலுள்ள  விசுவாசத்தில் உறுதி உள்ளவனாக இருந்தான்!

3. ஆபிரகாமின் வேண்டுகதலுக்கு இணங்கி கர்த்தர் லோத்தை விடுவித்தாலும் வேதம் அவனைப்பற்றி சொல்லும்போது

"அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு; நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க"

மாமிச இச்சைகளை விடமுடியாமல் பெரும்பாலானோர் தவறவிட்ட பரிசுத்தத்தை லோத்து காத்துக்கொண்டான். அதனால் அவன் சோதோம் கொமராவின் அழிவில் இருந்து தப்புவிக்கப்பட்டான்
4. இஸ்ரவேல் ராணுவத்தின் திரள் கூட்ட ஜனங்கள் கோலியாத்தை எதுவும் செய்ய முடியாமல் பயந்து நடுங்கிக்கொண்டு இருந்தபோது

இஸ்ரவேலர் எல்லாரும் அந்த மனுஷனைக் காணும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்துக்கு விலகி ஓடிப்போவார்கள்.

திரள் கூட்டம் இப்படி நடுங்குகிறதே நானும் நடுங்குவேன் என்று நடுங்கவில்லை
மாறாக தனி மனிதனாக

"ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம்"
என்று பேசி, துணித்து கோலியாத்தை எதிர்த்து ஜெயித்து, பெரும்பாலானோர் தவற விட்ட தேவன் பேரில் தனக்கிருத வைராக்கியத்தை காத்துக்கொண்டான்!

5. இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபோடே யோசபாத் ராஜா இணைந்து கீலேயாத்தில் உள்ள ராமோத் மீது யுத்தம் பண்ண போகலாமா என்று நானூறு தீர்க்கதரிசிகளை வரவழைத்து கேட்டபோது

 

"கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப்போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்."

ஆனால் மிகாயா என்ற ஒரே ஒரு தீர்க்கதரிசி மட்டும் திரள் கூட்டத்தோடு சேராதவனாக தனித்து இருந்தான்  "மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடன் பேசி: இதோ, தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படி நன்மையாகச் சொல்லும் என்றான்." என்ற வார்த்தையை கேட்ட பிறகும் திரள் கூட்டத்தை பின்பற்றாமல் கர்த்தர் சொல்வதையே சொல்வேன் என்று சொல்லி எதிர் மாறாக தீர்க்க தரிசனம் சொன்னான் அப்படியே நடந்தது!

திரள் தீர்க்கதரிசிகள் தவறவிட்ட தீர்க்க தரிசனத்தை மிகாயா பெற்றுக் கொண்டான்

6. இன்னும் எரேமியா தீர்க்கதரிசி தான் வாழ்ந்த காலத்தில் எப்பொழுதும் எதிர்மாறாக தீர்க்கதரிசனம் சொல்லும் தனி மனிதனாகவே வாழ்ந்து அதனால் அனேக துன்பங்களுக்குள்ளனார். அவர் காலத்தில் சமாதானம் உண்டாகும் என்றும் பாபிலோன் ராஜா வரமாட்டான் என்று சொல்லும் அனேக தீர்க்க தரிசிகள் இருந்தார்கள் என்பதை கீழ்க்கண்ட வசனம் உணர்த்துகிறது

"பாபிலோன் ராஜா உங்களுக்கும் இந்தத் தேசத்துக்கும் விரோதமாக வருவதில்லையென்று உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொன்ன உங்களுடைய தீர்க்கதரிசிகள் எங்கே?" (எரே 37:18)

ஆனால் இவன் ஒருவன் மட்டும் அந்த திரள் கூடாததை பின்பற்றமால்
"பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்" எரே 37:17 என்று துணிந்து சொன்னான் அது அப்படியே நடந்தது!

பழைய ஏற்பாட்டில் மட்டுமல்ல புதிய ஏற்பாட்டில் கூட பவுல் , யோவான், மார்டின் லூத்தர் மற்றும் வேதத்தில் உள்ள பரிசுத்தவான்கள் எல்லோருமே திரள் கூட்ட மக்களை போல் இல்லமால் எதாவது ஒரு விதத்தில் விசேஷித்த வெளிப்பாடு உள்ளவராக இருந்தார்கள் அவர்கள் எல்லாம் தவறான வழியில் போய்விடவில்லை. அவர்கள் எழுதியதைதான் வேதம் என்று நமது கையில் வைத்துள்ளோம்

நான் சொல்ல விரும்புவது எல்லாம் "பெரும்பாலானோர் தவற விட்டதை அறிந்து கொண்டவர் எல்லாம் வஞ்சிக்கப்பட்டார்" என்ற கருத்து வேதத்தின்படி சரியானது அல்ல என்றே கருதுகிறேன். எல்லா விதத்திலும் தற்கால உளியர்களோடு ஒத்துப்போகும் பல போதகர்கள் "பணம் சேர்த்து சொகுசு வாழ்க்கை வாழ்வதில்" கவனமாக உள்ளனர் என்பது அநேகர் அறிந்தது.

எனவே "மரம் எப்படிப்பட்டது என்று அதன் கனிகளாலே அறியப்படும்" என்று ஆண்டவராகிய இயேசு சொன்னதுபோல் அவரவர் வாழ்க்கை நிலைகளை வைத்தே வஞ்சிக்கப்பட்டோரை அறிய முடியுமே தவிர வேறு எந்த விதத்திலும் அறிவது கடினம் என்பது எனது கருத்து!

நாம் வாழும் தற்போதைய கிறிஸ்த்தவ உலகம் பலதரப்பட்ட வித்யாசமான உபதேசங்கள் மற்றும் பிரிவுகளால் நிரம்பியுள்ளது. ஒரே வேத புத்தகத்தை வைத்துக்கொண்டு ஒவ்வொருவரும் நாங்கள் செய்வதுதான் சரி, நாங்கள் தான் வசனத்தின்படி சரியாக சொல்கிறோம் என்று சொல்வதோடு அவரவர் ஏதாவது ஒரு வசனத்தை மேற்ற்க்கோள் காட்டி அடுத்தவர் வஞ்சிக்கப்பட்டவர் என்று சொல்வதும் துணித்து அடுத்தவரை "பிசாசு" என்று தீர்ப்பதும்   சகஜமாகிவிட்டது.  ஆனால் இயேசு  பேதுருவை பார்த்து சொன்னதுபோல் நம்மையும் சொல்ல அனேக நேரம் ஆகாது என்பதை மறந்துவிடுகிறோம்.

எனவே அடுத்தவரை நியாயம் தீர்க்கும் முன் நான் மட்டுமல்ல எல்லோருமே "நான் வஞ்சிக்கப்பட்டேனா" என்று கேள்வியை தங்களுக்கு தாங்களே கேட்டுக் கொள்வது நல்லது என்று கருதுகிறேன். ஏனெனில் யார் வேண்டுமானாலும் வஞ்சிக்கப்படலாம்! மனிதர்கள் போதனையை நம்புவதைவிட ஆண்டவரின் பாதத்தில் அமர்ந்து தங்கள் வழியை சரியானதா என்று தேவனிடத்தில் விசாரித்து அறிவது நல்லது என்று கருதுகிறேன். ஏனென்னில். நாம் எந்த போதனையில் இருக்கிறோம் என்பது தேவனுக்கு ஒரு பொருட்டல்ல அவர் சித்தம் செய்கிறோமா மற்றும் தேவனின் வர்த்தைகள்படி பரிசுத்தமாக வாழ்கிறோமா என்பதுதான் மிகவும் முக்கியமானது என்பது அடியேனின் கருத்து! 



-- Edited by SUNDAR on Monday 10th of January 2011 09:37:02 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
திரள் கூட்டத்தோடு சேராதவன் வஞ்சிக்கப்பட்டவனா?
Permalink  
 


வஞ்சிக்கப்பட்டதற்கு அடையாளமாக சில காரியங்களை தமிழ் கிறிஸ்த்தவ தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் முதல் அடையாளமாக கீழண்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன!
    
/// மற்ற யாருக்கும் கிடைக்காத அல்லது பெரும்பாலோனோர் தவறவிட்ட ஒரு வெளிப்பாடு தனக்கு கிடைத்து விட்டதென அவன் எண்ணுகிறான்.///

வேத நடபடிகளின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால் நோவாவில் இருந்து பவுல்வரை எல்லோருமே திரள் கூட்டத்தார் தவறவிட்ட வெளிப்பாட்டை பெற்றவர்கள்தான் என்று இருக்கும்போது, எதன் அடிப்படையில் இப்படியொரு வரிகளை எழுதுகிறார்கள் என்பது தெரியவில்லை. அதாவது அநேகர் வைத்திருக்கும் நம்பிக்கை பாரம்பரியம் இவற்றில் இருந்து யாரும் வெளியேறி உண்மையை அறிந்துகொள்ளகூடாது என்ற எண்ணத்தினாலேயே இக்கருத்து உருவானது என்றே நான் கருதுகிறேன்!
 
தேவனுக்கு தேவை திரள் கூட்டமா? அல்லது தன்னை உறுதியாக பின்பற்றும் ஒருசிலரா? என்பதை வேத புத்தகம் முழுவதும் ஆராய்ந்து பார்த்தாலும் கிடைக்கும் பதில் தேவனை உறுதியாக பின்பற்றும் ஒருசிலரே  என்ற பதில்தான் கிடைக்கும்.
 
ஒரு உதாரணத்துக்கு கானான் தேசத்தை சுற்றிபார்க்க போன இஸ்ரவேல் கோத்திரத்தில் 12 பேரில்  திரள் கூட்டத்தாராகிய 10௦ பேர் துர்செய்தியையே பரப்பினர் சொற்ப மனிதர்களாகிய  2 பேர் மாத்திரமே விசுவாசத்தில் நல்ல செய்திகளை கூறினார்கள் அவர்களே அந்த நல்ல தேசத்தில் பிரவேசிக்கவும் முடிந்து.
 
அதுபோல் வேத புத்தகம் முழுவதும் அனேக சம்பவங்களில் திரள் கூட்டத்தை தேவன் தள்ளிவிட்டு ஒருவரையோ அல்லது சொற்ப மனிதரையோ தேர்ந்தெடுத்த சம்பவங்கள் அநேகம் உண்டு. அதை மேலேயுள்ள பதிவில் படித்து அறிந்திருப்பீர்கள் என்று கருதுகிறேன்.
 
எனவே அன்பானவர்களே!  தவறான வெளிப்பாட்டை பெற்று வஞ்சிக்கப்பட்டவர் ஒரு சிலர் இருக்கலாம். அனால் "அநேகர் தவறவிட்ட வெளிப்பாட்டை பெற்று தேவனின் சித்தத்தை  சரியாக நிறைவேற்றியவர்களே அநேகர்" என்பதை வேத புத்தகத்தின் மூலமே நாம் தெரிந்துகொள்ளலாம்!   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
RE: கூட்டத்தோடு சேராதவன் வஞ்சிக்கப்பட்டவனா?
Permalink  
 


திரளான கூட்டம்  கைகோர்த்து  ஒரு காரியத்தை சொன்னால் அதுவே சரியான ஒரு கருத்து ஆகிவிடாது. அதை  ஏற்க்க  வேண்டிய அவசியம் எதுவும் இல்லை! அதுபோல் திரளான கூட்டத்தோடு சேர்ந்து கொண்டால் தப்பித்துடுவிடலாம் என்று எண்ணவும் கூடாது
 
நீதிமொழிகள் 16:5 மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்.
 
என்று வேதம் சொல்கிறதே. எனவே கூட்டத்தோடு சேர்ந்துவிட்டால் தப்பித்து விடவும் முடியாது. பெரியகூட்டம் இருப்பதால் அவர்கள் சொல்வது  எல்லாம் சரி என்று ஏற்றுவிடவும் முடியாது.  
 
இறைவன் ஒரு கூட்டத்தை கூட்டி வெளிப்பாடுகளை கொடுத்ததை விட தனி மனிதனை அழைத்துதான் அனேக வெளிப்பாடுகளை தந்திருக்கிறார் எனவே "பெரும்பாலோனோர் தவறவிட்ட ஒரு வெளிப்பாடு தனக்கு கிடைத்து விட்டதென எண்ணுபவன் வஞ்சிக்கப்படவன்"  என்பது போன்ற  முழுக்க முழுக்க ஆதாரமற்ற மனித கூற்றை எல்லாம் யாரும் உண்மையென்று நம்பவேண்டிய அவசியம் இல்லை.
 
சீனாய் மலைக்கு மோசேயை அழைத்த கர்த்தர்  அவனை தனியாகவே அழைத்த்தார்!
 
20. கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.

21. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஜனங்கள் பார்க்கிறதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதபடிக்கும், அவர்களில் அநேகர் அழிந்து போகாதபடிக்கும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி. என்றே கட்டளையிட்டார்
 
அதுபோல் சிறைபட்டுப்போன எத்தனையோபேர் இருந்தும் அவர்கள் நடுவில் இருந்த  எசேக்கியேலுக்கு  மட்டுமே இறைவன் வெளிப்பாடுகளை கொடுத்தார்.     
 
அவரின் செயல்பாடுஎல்லாமே அப்படித்தான் இருக்கும் என்றே நான் கருதுகிறேன். "இறைவன் அன்று அப்படி செய்தார் இன்று வேறுமாதிரி செய்வார்" போன்ற கருத்துக்கள் அவரை சரியாக அறியாதவர்கள் அவருக்கே பாடம் புகட்டும்படிக்கு பிதற்றுவது .
 
எனவே இதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவே வேண்டாம்!


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard