இன்றைய உலகில் உடனே பதில் சொல்ல முடியாத கேள்விகளில் இதுவும் ஓன்று என்று சொல்லலாம்.
வீட்டில் யார் பெரியவர் தாயா? தகப்பனா? அல்லது அவர்களை பெற்ற தாத்தா பாட்டியா?
நாட்டில் யார் பெரியவர் பிரதமரா? அல்லது குடியரசு தலைவரா? அல்லது எல்லோரையும் தத்தளிக்க வைத்துகொண்டிருக்கும் நிதி அமைச்சரா?
குருவில யார் பெரியவர் LKG டீச்சரா அல்லது காலேஜ் புரபெசரா? அல்லது டியுசன் வாத்தியாரா?
சாமிகளில் யார் பெரியவர் சிவனா விஷ்ணுவா அல்லது எலோரையும் ஆட்டி படிக்கும் சாத்தானா?
கட்சி தலைவர்களில் பெரியவர் யார் கலைஞரா? அல்லது அம்மாவா
உலகத்தில் பெரியவர் யார் ஒபாமாவா அல்லது எல்லோரும் பயமுறுத்திக்கொண்டு இருக்கும் பின்லேடனா?
இப்படி யார் பெரியவர் என்று சொல்லமுடியாத கேள்விகள் இந்த உலகில் அநேகம்.
போட்டியும் பொறாமையும் நிறைந்த இந்த உலகில் ஒவ்வொருவரும் பிறரைவிட எவ்விதத்திலாவது பெரியவராக வர முழு மூச்சாய் பாடுபடுகின்றனர், அல்லது ஒன்றும் இல்லை என்றாலும் தன்னை பெரியவராக காட்டிக்கொள்ள போராடுகின்றனர்.
நீ பெரியவனா அல்லது நான் பெரியவனா என்ற சண்டை என்றும் ஓயாது! மனிதர்கள் மட்டும் என்ன சாமிகளுக்கு இடையே கூட, யார் பெரியவர் என்று மிகபெரிய போட்டி வந்தது என்று புராணங்கள் சொல்கின்றன.
நாம் சாதரணமாக வயது முதிர்ந்தவர்களை பெரியவர்கள் என்று சொன்னாலும் அது வெறும் வாயளவில்தான். அவர்களுக்குரிய மதிப்பு எங்கும் கொடுக்கப்படுவதில்லை! பணம் உள்ளவனைத்தான் எல்லோரும் பெரியவராக கருதும் குண நிலையில் மனிதர்கள் உள்ளனர். ஆனால் silaneram பலம் உள்ளவனை கண்டால் அவனுக்கு பயந்தும் மதிப்பு கொடுக்கின்றனர்
இயேசுவின் 12 சீஷர்களிடையே ஒருமுறை யார் பெரியவர் என்ற போட்டி வந்துவிட்டது. இதை அறிந்த இயேசு அவர்களை அழைத்து "உங்களில் யார் பெரியவராக இருக்க விரும்புகிறீர்களோ அவர்கள் பிறருக்கு பணிவிடைக்கரனாக இருக்ககடவன்" என்று அருமையான ஒரு வார்த்தையை சொல்லி அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்திவிட்டார்.
அதாவது நீங்கள் பிறரைவிட பெரியவராக வேண்டுமா?
யாரைவிட பெரியவராக நினைக்கிறீர்களோ, அவர்கள் சொல்லுக்கு முழுமையாக கீழ்படிந்து அவர்கள் சொல்லும் வேலைகளை எல்லாம் தட்டாமல் செய்யவேண்டும் என்று சொன்னதோடு, அதை தன் வாழ்நாளில் தானே செய்தும் காடினார். அதாவது ஒரு துணியை எடுத்து அவரது சீஷர்கள் எல்லோருடைய கால்களை கழுவி துடைத்ததொடு மட்டுமல்லாமல்,
என்னை நீங்கள் ஆண்டவர் என்று சொல்கிறீர்கள் நானே இப்படி செய்தது உண்டானால் நீங்களும் ஒருவர் கால்களை ஒருவர் கழுவி பணிவிடை செய்யுங்கள் என்று செய்து காட்டினார். ஆம்! உண்மையில் விட்டுகொடுபதர்க்கும் பிறருக்கு பணிவிடை செய்வதற்கும்தான் மிகப்பெரிய மனது மன்றும் அதிக ஞானம் தேவை. நீயா நானா என்று பார்க்க மனிதத்தன்மை தேவையில்லை ஒரு நாய்கூட அதுபோல் மோதும்.
இயேசு காட்டிய வழியை மனிதர்கள் எல்லோரும் நடந்தால் இந்த உலக வாழ்க்கை எப்படி இருக்கும் என்று சற்று கற்பனை பண்ணி பார்த்தால்!!!
நான் என் முதலாளியை விட பெரியாராக வேண்டும் என்று கருதி அவருக்கு ஓடி ஓடி பணிவிடை செய்வேன் அவர் என்னைவிட பெரியவனாக வேண்டும் என்று எனக்காக ஓடி ஓடி பணிவிடை செய்வார்!
மாணவன் குருவைவிட பெரியவனாக அவருக்கு ஓடி ஓடி பணிவிடை செய்வான் குருவோ மாணவனைவிட பெரியவராக அவனுக்கு ஓடி ஓடி பணிவிடை செய்வார். இப்படி ஒருவரை முந்திக்கொண்டு ஒருவர் பணிவிடை செய்ய முயல்வர்.
அஹா இந்த உலககில் எவ்வளவு அருமையாக வாழ்க்கை இருக்கும்! சண்டை சச்சரவு என்பதே இல்லாமல் உலகமே ஒரு சொர்க்கமாக மாறிவிடாதா?
நான் என் முதலாளியை விட பெரியாராக வேண்டும் என்று கருதி அவருக்கு ஓடி ஓடி பணிவிடை செய்வேன் அவர் என்னைவிட பெரியவனாக வேண்டும் என்று எனக்காக ஓடி ஓடி பணிவிடை செய்வார்!
மாணவன் குருவைவிட பெரியவனாக அவருக்கு ஓடி ஓடி பணிவிடை செய்வான் குருவோ மாணவனைவிட பெரியவராக அவனுக்கு ஓடி ஓடி பணிவிடை செய்வார். இப்படி ஒருவரை முந்திக்கொண்டு ஒருவர் பணிவிடை செய்ய முயல்வர்.
அஹா இந்த உலககில் எவ்வளவு அருமையாக வாழ்க்கை இருக்கும்! சண்டை சச்சரவு என்பதே இல்லாமல் உலகமே ஒரு சொர்க்கமாக மாறிவிடாதா?
வெறும் கற்பனை தான்!!!!
இதுபோன்ற கருத்துக்களை கற்பனையோடு அல்லது போதனையோடு நிருத்தி கொள்வது நல்லது. இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்கள்கூட ஒருவேளை ஒருவர் காலை ஒருவர் கழுவிவிடலாம். ஆனால் கிறிஸ்த்தவர்கள் எனப்படுகிரவர்கள் அப்படிசெய்ய வாய்ப்பே இல்லை என்றே நான் கருதுகிறேன்.
ஒரு கிறிஸ்த்தவனுக்கு "நான் இரட்சிக்கபட்டவன் தேவனுடைய ராஜ்யத்துக்கு போக தகுதிபெற்றவன்" என்ற சுயவிசுவாசம் தேவைதான். அனால் அது தேவனுடய கிருபையால் நமக்கு கிடைத்த ஒரு பெரிய ஈவு! என்பதை சிந்திக்காமல், அடுத்தவரை நியாயம் தீர்க்க கிடைத்த ஒரு பெரிய தகுதிபோல எடுத்துகொண்டு மற்றவர் எல்லோரையும் குற்றம் சொல்ல இறங்கினால் தேவன் உன்னை ஒரே வார்த்தையில் நியாயம்தீர்த்துவிடுவார் என்பதைநாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
மத்தேயு 7:2ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்
நாம் தவறாக நடக்கிறார்கள் என்று கருதும் ஒருவருக்காக மற்றாடி அழுது ஆண்டவரிடம் ஜெபிக்கலாம் அதுவே தேவனுக்கேற்ற நிலை!
"ஒருவர் பிறரிடம் இந்த உலக சம்பந்தமான மாம்சத்துக்குரிய விஷயங்களில் தாழ்ந்திருந்தால் மட்டுமே ஆவிக்குரிய நிலையில் ஜெயிக்க முடியும்" என்பதை நன்றாகவே அறிந்த ஆண்டவர் அதை விளக்கவே இவ்வாறு சீஷர்களின் கால்களை கழுவி முன்மாதிரியாக சொல்லி சென்றார்.
ஆனால் "என்னை ஒரு வார்த்தை திட்டினால் நான் ஒன்பது மடங்கு அசிங்கமாக திட்டுவேன்" என்பதுதான் இன்று கிறிஸ்தவம் அடைந்துள்ள விசேஷ வளர்ச்சி. காரணம் கள்ள உபதேசத்தை கண்டு பிடிக்கிறார்களாம். நீ அவரது உபதேசத்தில் நிலைதிருந்துகொண்டு அடுத்தவரின் கள்ளத்தனத்தை கண்டுபிடித்தால் அது சரி. ஆனால் நீயே எல்லா வார்த்தையையும் மீறி ஒரு சாத்தானாக நடந்துவிட்டு அடுத்தவரை குற்றம்சொல்லும்போது நீ எந்த உபதேசத்தின் இருந்தாய் என்பதையா தேவன் பார்ப்பார்? நீ எவ்வாறு நடந்து கொண்டாய் என்பதையே ஆண்டவர் கவனிக்கிறார்.
இன்றைய போதகர்கள் அவ்வாறு பிற உடன் ஊழியர்கள் காலகளை கழுவவில்லை என்றாலும் பரவாயில்லை முதலில் தங்களை போதகர்கள் என்று சொல்லிகொள்ளும் ஒரு சபையின் பாஸ்டர் அந்த சபையில் தனக்கு கீழான நிலையில் இருக்கும் புது ஊழியர்கள் மற்றும் சாதாரண விசுவாசியிடம் உண்மையான மனதுருக்கத்துடன் பேசினால்கூடபோதும். அதுகூட செய்வதில்லை!
கொஞ்சம் வளர்ந்த பாஸ்டர்கள் வெளியிலேயே நான்கு ஆட்களை நிறுத்தி சிறுமையும் எழிமையுயான யாராவது பாஸ்டரை பார்க்க வந்தால் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் திருப்பிவிடும் நிலைக்கு உயர்ந்திருக்கின்றனர். ஆனால் வெளிநாட்டுகாரர்கள் வந்தால் மட்டும் வரவேற்று உபசரிக்கின்றனர். இவர்களின் பிழைப்பில் அந்த எழியவரின் காசும் அடங்கியிருக்கிறது என்பதைகூட மறந்து விடுகிறார்.
இயேசுவின் வார்த்தை எல்லாம் என்றோ காற்றில் காற்றில் பறக்க விட்டு அவர் வார்த்தைகளை பிரசங்கிக்கவும் மட்டுமே பயன்படுத்தி தான் பெரியவன் என்று காட்டிக்கொள்ள பட்டங்களை சூட்டிக்கொண்டு இயேசு பின்னாலே ஒழிந்துகொண்டு சாத்தானின் காரியங்களை செய்துகொண்டிருக்கும் பல கிறிஸ்த்தவர்கள் பிறரது கால்களை கழுவும் அளவுக்கு தாழ்ந்துபோவது எப்படி சாத்தியம்?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)