இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாவம் என்றால் என்ன? எது பாவம்?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
பாவம் என்றால் என்ன? எது பாவம்?
Permalink  
 


பாவம் செய்ய கூடாது என்பது எல்லோருக்கும் பொதுவான ஒரு கட்டளை.

தேவனால் பிறந்தவன் எவனும் பாவம் செய்யான்
என்றும்
பாவம் செய்பவன் எவனும் பாவத்துக்கு அடிமையாய் இருக்கிறான் என்றும் 
அதிக கேடொன்றும் வாராதிருக்க இனி பாவம் செயாதே!
கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள்  (எபேசி 4:)
 
போன்று வேதத்தில் உள்ள  அனேக வசனங்கள் பாவம் செய்யகூடாது என்று போதிப்பதை அறியமுடியும்.  ஏனெனில் பாவம் என்பது மிகவும் கேடானது 
கொடியது!  பாவம்  நிச்சயம் தண்டனையை கொண்டுவரும் என்பதை வேதம் திட்டவட்டமாக விளக்குகிறது. பாவத்தில் தெரிந்து செய்பவன் தெரியாமல் செய்பவன் என்று வேறுபாடு இல்லை. தெரித்து செய்பவனுக்கு பல அடி தெரியாமல் செய்பவனுக்கு சில அடிகள் என்று தண்டனையின் தன்மை வேண்டுமானால் வேருபடலாமேயன்றி நிச்சயம் பாவத்துக்கு தண்டனை உண்டு!
 
இன்றைய நிலையில் பாவம் செய்யக்கூடாது என்று போதிக்கும் சபைகள் பாவம் என்றால் என்ன? எதுவெல்லாம் பாவம் என்று தெளிவாக போதிப்பது இல்லை. எது பாவம் என்றே தெரியாத விசுவாசிகள்,  எப்படி பாவம் செய்யாமல் வாழ முடியும்? இன்றைய கிறிஸ்தவர்களிடம் எது பெரிய பாவம் என்று கேட்டால்,

பீடி சிகரட் பான்பராக் உபயோகிப்பது, மது அருந்துவது, சபைக்கு போகாதது, ஜெபம் பண்ணாதது, கெட்ட வார்த்தைகள் பேசுவது, திருவிருந்தில் கலந்து கொள்ளாதது போன்ற அனேக காரியங்களை சொல்வார்கள்.

ஆனால் வேதத்தில் பல முறை சொல்லியிருக்கும் பொய் சொல்லக்கூடாது, ஒரு சிறு பொருளை கூட திருடக்கூடாது, வட்டி வாங்கக்கூடாது,  போன்ற காரியங்கள் அவர்களுக்கு பாவமாகவே தெரியவில்லை

சபைகளிலும் சரி கூட்டங்களிலும் சரி பாவம் செய்யகூடாது, செய்தால் தண்டனை உண்டு  என்று போதிக்கப்படுவதை கேட்க முடிகிறது! னால் எது பாவம் பாஸ்டர்? என்று கேட்டால் அதற்க்கு சரியான விளக்கம்  கொடுக்க அவர்களால் முடியவில்லை. அது ப்ரதர் பாவம் என்றால் என்னவென்பதை ஒரே நாளில் அறிந்துகொள்ள முடியாது  என்பதுதான் அவர்கள் பதில்.

நல்லது பாவம் எதுவென்பதை ஒரே நாளில் அறியமுடியாதுதான், குறைந்தபட்சம் எதுவெல்லாம் பாவம் என்ற ஒரு அடிப்படை அறிவாவது விசுவாசிகளுக்கு போதிக்க வேண்டியது அவசியம் அல்லவா. விசுவாசிகளிடம் கேட்டாலும் தெரியவில்லை பாஸ்டர்களிடம்   கேட்டாலும் பாவம் என்னவென்று    தெரிவதில்லை. 
 
இந்த அறியாமையின் காரணமாக இன்று அநேகர் ஆவியில் நடக்கிறோம் என்ற மாய போர்வை ஒன்றை போர்த்திக்கொண்டு துணிந்து பாவம் செய்துகொண்டு வாழ்கின்றனர்! அத்தோடு நோய்  நொடி துன்பம் என்று அனேக வேதனைகளையும் 
அனுபவித்து வருகின்றனர் . 
 
எதோ இயேசு மரித்தது தங்களுக்கு  பாவம் செய்ய கிடைத்த ஒரு லைசென்ஸ் என்பது அனேகரது எண்ணம்! நீங்கள் பொய் சொல்லாமல் வாழ்கிறீர்களா" என்று கேட்டால் இதிலெல்லாம் என்ன தவறு பிரதர் என்கின்றனர்.  நீங்கள் வட்டி வாங்குவீர்களா? என்று கேட்டால் அதெல்லாம் எல்லோரும் வாங்குகிறார்களே பிரதர் என்று மிக சாதாரணமாக சொல்கின்றனர். எல்லா பாவத்துக்கும் இயேசு மரித்துவிட்டார் பிரதர் நாம் அவரை விசுவாசித்தால் போதும் என்பது பலரது கருத்து.
 
நான் உங்களுக்காக  மரித்த பிறகு,   நீங்கள் பொய்  சொல்லலாம், திருடலாம் எல்லாம் செயலாம் என்று   இயேசு எங்காவது சொல்லியிருக்கிறாரா? 
 
மாறாக
 
நாம் நியாயபிரமாணத்துக்கு கீழ் பட்டிராமல் கிருபைக்கு கீழ்பட்டிருக்கிறபடியால் பாவம் செய்யலாமா? கூடாதே? என்று ரோமர் 6:15 இல் சொல்லப்படுகிறது
 
எனவே  பாவம் பற்றிய இந்த அறியாமை நீங்க பாவம் என்றால் என்னவென்பதை  சற்று விளக்கமாக பார்க்கலாம் என்று கருதுகிறேன்.      
 
  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

ஆதியாகமம் 4:6,7  6 அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.

யாக்கோபு 4:17 ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

anbu57 wrote:

ஆதியாகமம் 4:6,7  6 அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.

யாக்கோபு 4:17 ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.



கொலை கொள்ளை விபச்சாரம் போன்ற பெரிய பாவங்கள்தான் பாவங்கள் அல்ல. 
 
நன்மை செய்ய நமக்கு திராணியிருந்தும் அல்லது தெரிந்திருந்தும் அந்த  நன்மையை செய்யாமல் போவது பாவம் என்று வேதம் எச்சரிக்கிறது.
 
அப்படி நம்மால் உதவி செய்ய முடியவில்லை என்றாலும்  தேவையுள்ளவர்களுக்காக ஆண்டவரிடம் பிரார்த்தனயாவது பண்ணவேண்டும் 
என்பதை வேதம் வலியுறுத்துகிறது.   
 
I சாமுவேல்
23 நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக
;   
 
நாம் அறிந்து துன்பத்தில் வாடுபவர்களுக்காக வேண்டுதல் செய்யாதிருப்பது பாவம் என்றே வசனம் குறிப்பிடுகிறது.  
 
இன்னும் தொடர்ந்து பார்க்கலாம்....
  

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

பாவம்  என்பது பரிசுத்த ஆவியைபெற்று ஆவியில் நடத்தப்படுகிறவர்களுக்கும் பரிசுத்தத் ஆவியை பெறாத உலக நிலையில் வாழும் மற்ற பொதுவான மனுஷர்களுக்கும் இடையே வெவ்வேறு பொருளில் அறியப்படும். இதில் உலகத்தாரின் பாவத்தைவிட ஆவியில்  நடத்தபடுகிறவர்களின் பாவங்கள் மிகவும் நுட்பமாக அறியப்படுத்வதும் மிகுந்த தண்டனைக்குரியதுமாக இருக்கிறது. ஆனால் உலகத்தாரின் பாவங்களோ மன்னிப்புக்குரியதாக இருக்கிறது. 
 
பாவம் என்பது செய்யும் தொழிலை பொறுத்தோ அவரது சூழ்நிலையை பொறுத்தோ அல்லது அவர்களின் பொருளாதார நிலையை பொறுத்தோ எவ்விதத்திலும் மாறுபடுவது இல்லை. ஒரு பாவத்தை தெரிந்து செய்கிறோமா அல்லது அறியாமல் செய்கிறோமா என்பதன் அடிப்படையில் மட்டுமே தண்டனை தீர்மானிக்கப்படும். எனவே பாவத்தை செய்துவிட்டு "ஆண்டவரே எனது சூழ்நிலை அப்படி எனவே பாவம் செய்துட்டேன்" என்று ஜெபிப்பதில் பலனில்லை. ஆண்டவரின் வார்த்தையை மீறி செயல்பட்ட ஆதாம் ஏவாள் அதற்க்கு தூண்டிய சர்ப்பம் எல்லாமே ஒட்டு மொத்தமாக சாபம் வாங்கி கட்டிகொண்டனர் என்பது நாம் அறிந்ததே!  ஆனால் பாவம் செய்யும் சூழ்நிலை உருவாகும்போதே  "ஆண்டவரே இப்படியொரு சூழ்நிலையில் நான் இருக்கிறேன் என் பெலத்தால் இந்த சூழ்நிலையை மேற் கொள்ள முடியவில்லை தயவு செய்து என்னை இந்த பாவ சூழ்நிலையில் இருந்து தப்புவியுங்கள்" என்று முழு மனதோடு வேண்டினால் ஆண்டவர் நம்மை நிச்சயம் விடுவிப்பார்.
 
உலகில்  பாவம் செய்ய நமக்கு வரும் சோதனை என்பது நமது மன நிலையை சோதிக்கவே வருகிறது என்பதை எல்லோரும் அறியவேண்டும். நமது மனது ஒரு பாவத்துக்கு உடன்படாத நிலையில் தேவனிடம் மன்றாடும்போது அந்த பாவ சூழ்நிலையை அவர் நிச்சயம் மாற்றிபோடுவர் ஏனெனில் நமது பலகீனங்களை அவர் அறிந்திருக்கிறார். ஆனால் உங்கள் மனதில் சிறிதேனும் விருப்பத்தோடு அந்த பாவத்தை செய்ய ஆசைகொண்டு அந்த ஆசையோடு தேவனிடம் எத்தனை முறை வேண்டினாலும் அதிலிருந்து விடுபட சந்தர்ப்பம் கிடைக்காது. அதேபோல்  "இந்த உலகமே கெட்டுகிடக்கிறது ஆண்டவரின் வார்த்தைகள்படி வாழ்வதெல்லாம் இங்கு சாத்தியமில்லை  இங்கு இப்படித்தான் வாழ முடியும் என்ற கருத்தில் செயல் படுபவர்களும் ஒருநாளும் பாவத்தை மேற்கொள்ள முடியாது  
 
பொதுவாக எல்லாவிதமான பாவமும் தண்டனைக்குரியதே ஆகினும் ஆண்டவரை அறியாத ஆவியில் நடத்தப்படாத உலகத்தாராகிய ஒருவர் என்னதான் பெரிய பாவம் செய்தாலும் அவர் ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுகொண்டமாத்திரத்தில் அவரது எல்லா பாவங்களும் ஒருசேர மன்னிக்கப்பட்டு அவர் சுத்தமாக முடியும். அனால் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு ஆவியால் நடத்தப்ப்டுபவர்களை எந்த ஒரு பாவமும் மேற்கொள்ள முடியாது என்றாலும் அவர்கள்  செய்யும் பாவம் சத்துரு தூஷிப்பதர்க்கு எதுவாக இருப்பதால் அது  கடுமையான தண்டனைக்குரியது. எனவே ஒவ்வொரு மனிதனும் எவையெல்லாம் பாவம் என்பதை அறிந்து அவற்றை செய்யாது தவிர்க்க வேண்டியது மிக மிக அவசியம்   
 
1.ஆவியானவரால் நடத்தப்படாத பொதுவான மனுஷர்களுக்கு!
 
இவர்களுக்கு பாவம் என்பது இவர்கள் நடைமுறை செயலின் அடிப்படையில் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படும்.
 
a. செய்ய கூடாததை செய்தல்.
b. செய்ய வேண்டியதை செய்யாமல் விடுதல்.
 
2. ஆவியில் நடத்தப்படும் ஆவிக்குரியவர்களுக்கு!   
 
a. விசுவாசத்தால் வராத  எதுவும் பாவமே!
b.தேவனின் பரிசுத்த நிலைக்கு ஒவ்வாத எந்த காரியமும் பாவமே!     
 
ஒவ்வொரு உட்பிரிவில் எந்தெந்த பாவங்கள் அடங்கும் என்பதைபற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

மனிதனின் ஆவி தேவன் தந்த தீபமாய் இருப்பதால் அந்த ஆவியிலே பாவம் இன்னதென்று ஆராய்ந்து அறியும் மனசாட்சியின் பிரமாணம் செயல்படுகிறது. அதன் அடிப்படையில் நமது மனசாட்சியே எந்த ஒரு காரியத்தையும்  "குற்றம் உண்டு" "குற்றம் இல்லை" என்பதை தீர்மானிக்க முடியும்.
 
நாளடைவில் "மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது" என்பதால் தீமையின்மேல் அதிக நாட்டம் கொண்ட  மனிதன், மனசாச்சியை தொலைத்துவிட்டு கொடிய பாவங்களை செய்ய துவங்கியபோது,  தேவன் நியாயபிரமாண  கட்டளைகள் மூலம் பாவம் எது நீதி நியாயம் எது என்பதை மிக தெளிவாக எழுதிகொடுத்தார்  
 
ரோமர் 3:20  பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடி
ரோமர் 7:7  பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனே
 
"எது பாவம்" என்பதை தெளிவாய் அறிவிப்பது வேதாகமத்தில் உள்ள நியாய பிரமாணமே! வேறு எந்த மதத்திலும் பாவங்களை பற்றிய இவ்வளவு தெளிவாக விளக்கம்  கிடையாது என்றே நான் கருதுகிறேன்.    
 
"பாவம்  செய்யக்கூடாது" என்ற வார்த்தையை அடிக்கடி பலர் மூலம்  நாம் கேட்க நேரிடுகிறது  மேலும் பாவம் செய்யக்கூடாது என்பதையும் நாம் மனசாட்சியின் படியும்  அறிந்திருக்கிறோம். இவ்வாறு பாவம் செய்யாமல் வாழவிரும்பும் நாம் எதுவெல்லாம் பாவம் என்பதை சரிவர அறிந்தால்தான் பாவங்களை தவிர்த்து பரிசுத்தமாக வாழமுடியும். தேவனை பற்றிய அறிவு எப்படி நமக்கு அவசியமோ அதுபோல் தேவன் வெறுக்கும்  பாவத்த்தை பற்றிய அறிவும் நமக்கு மிகவும்  முக்கியமானது. 
 
எனவே தேவன் வெறுக்கும் பாவங்களை பற்றிய ஒரு விளக்கத்தை இக்கட்டுரையில் நாம் தொடர்ந்து பார்க்கலாம்.

கடந்த பதிவில் பாவங்களை இரண்டாகபிரித்து  பொதுவான ஜனங்களுக்கு மற்றும் ஆவியில் நடத்தப்படும் விசுவாசிகளுக்கு என்ற தலைப்பிட்டோம். என்னதான் ஒரு மனிதன் ஆவியில் அபிஷேகம் பெற்றிருந்தாலும் பவுல் சொல்வது போல் மாமிசத்தின் கிரியைகளை 
ஆவியில் பெலத்தால் அழித்தால் மட்டுமே அவன் ஆவியில் நடத்தப்படுதல் என்ற நிலையை அடைகிறான். இல்லையேல் அவனும் ஒரு சாதாரண பொது மனிதனே.
 
எனவே பொதுவான மனிதர்களுகான பாவம் என்னவென்பதை முதலில் ஆராயந்துவிடுவது நல்லது என்று கருதுகிறேன்.
 
பொதுவான மனிதர்களுக்கான பாவங்களை இரண்டு பிரிவாக பிரித்திருக்கிறோம்.
 
A. செய்யக்கூடாத காரியங்களை செய்வதால் வரும் பாவங்கள்  
B. செய்ய கூடியதை செய்யாமல் விடுவதால் வரும் பாவங்கள் .
 

A. செய்யக்கூடாத காரியங்களை செய்வதால் வரும் பாவங்கள்  
 
1. கொலை செய்யாதிருப்பாயாக!
 
பாவங்களில் மிக கொடிய பாவம் தேவசாயலாக படைக்கப்பட்ட மனிதனை கொலை செய்வது ஆகும். 
 
யாத்திராகமம் 20:13 கொலை செய்யாதிருப்பாயாக.

இன்று உலகில் பணம் /பெண் / வஞ்சம்/ பழி /தீவிரவாதம் என்று பல்வேறு காரியங்களின் அடிப்படையில் அனேக  கொலைகள் நடப்பதை நாம் அறிவோம். மேலும் கொலைசெய்யவேண்டும் என்ற நோக்கம் இல்லாமல்கூட  தற்ச்செயலான சண்டைகளில் மூர்க்கமான கோபத்தின் அடிப்படையில் குடும்பங்கள் கணவன் மனைவி பிள்ளைகள் கொலைசெய்யப்படுதவத்தையும் நாம் கேள்விப்படுகிறோம்.
 
இந்த கொலை பாதகத்தை தேவன் கடுமையாக நியாயம் தீர்க்கிறார்!
 
ஆதியாகமம் 9:6 மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.    
யாத்திராகமம் 21:12 ஒரு மனிதனைச் சாகும்படி அடித்தவன், நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
யாத்திராகமம் 21:14 ஒருவன் பிறனுக்கு விரோதமாகச் சதிமோசஞ்செய்து, அவனைத் துணிகரமாய்க் கொன்றுபோட்டால், அவனை என் பலிபீடத்திலிருந்தும் பிடித்துக்கொண்டு போய்க் கொலைசெய்யவேண்டும்.
லேவியராகமம் 24:17 ஒரு மனிதனைக் கொல்லுகிறவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும்.

கொலை பாவம்   செய்தவன் எவனும் கொலை செய்யப்படவேண்டும் என்பதே தேவனின் தீர்ப்பு!
 
பூர்வத்தில் இவ்வாறு கொலை குற்றத்துக்கான கொடிய  தண்டனை இருந்து வந்தது!  ஆண்டவராகிய  இயேசு அந்த கட்டளையை மேலும் கடினமாக்கி. "பாவம் என்பது ஒருவனை கொலைசெய்வது மட்டுமல்ல  நியாயம் இல்லாமல் ஒருவரை கொபித்துகொள்வது அவர்  மனதை புண்படுத்தும் அளவுக்கு கடினமாக பேசிவிட்டாலே அது பாவம்" என்றும் அப்படிபட்டவன்  நியாயதீர்ப்புக்கு ஏதுவானவன் என்று போதித்துள்ளார்.
 
மத்தேயு 5:21 கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
22. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனை சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.

I யோவான் 3:15
தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.
 
இங்கு பழைய ஏற்பாட்டுகால நியாயபிரமாண கட்டளைகளைவிட புதியஏற்பாட்டு கட்டளை மிகவும் கடினமானது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.
 
பூர்வத்தில் ஒருவர் இன்னொருவன் மீது மனது முழுவதும் கொலை வெறியை வைத்துகொண்டு அதற்க்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் கொலை செய்யவில்லை என்றால் அதுபாவம் ஆகாது.. ஆனால் இயேசுவின் புதியபிரமாணம் அப்படிபட்டது அல்ல ஒருவருடன் மனஸ்தாபம் இருந்தால் உடனே ஒப்புரவாக வேண்டும்
இல்லையேல்
அது பாவமாகிவிடும். அவன் நியாயதீர்ப்புக்கு எதுவாக வேண்டிவரும்.
 
எனவே இந்த கொலை செய்யாதிருப்பாயாக என்று கட்டளையின் கீழ் கீழ்க்கண்ட செய்யகூடாத பாவங்கள் இடம்பெறுகின்றன.
  
1. பிறரை கொலை செய்தல்
2. தன்னை தானே கொலை செய்தல்  
3. சிசுக்களை அபார்ஷன் செய்வதும் கொலையே!  
4. கொலைக்கு காரணமாக இருத்தல்
5.  பிறரை கொலை செய்ய தூண்டுதல்
6.  சரியான நியாயம் இன்றி பிறரை தீய வார்த்தைகளால் திட்டுதல்  
7.  யாருடனாவது மனஸ்தாபத்தை வைத்திருத்தல் 
8.  வஞ்சம் வைத்தல் /பகை வளர்த்தல்  ETC
   
போன்றவை இந்த கொலை பாதகத்தில் அடங்கும்  பாவங்களாகும்.     
.   
வெளி 22:15 நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், ............யாவரும் புறம்பே இருப்பார்கள்.

கொலை பாதகனுக்கு நித்தியஜீவன் நிலைக்காது என்று வேதம் சொல்வதால், எவை எல்லாம்  கொலைபாதக செயலில் அடங்கும் என்பதை கருத்தில் கொண்டு, யாருடனாவது நமக்கு பகை அல்லது மனஸ்தாபம் இருக்குமானால் உடனே  ஒப்புரவாகி விடுவது மிகவும் அவசியம்!  (அவர்கள் நம்மேல் நியாயம் இன்றி கொபித்து கொண்டால்
நாம் அதற்க்கு பொறுப்பல்ல)


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

"பாவம் மிக கொடூரமானது"  அதனால் வரும் தண்டனை மிகவும் வேதனையானது அத்தோடு முடியாமல், ஒருவர் செய்த பாவங்கள் அவரை  தேவனின் ராஜ்யத்துக்கும் நித்திய வாழ்வுக்கும் தகுதியற்றவர்களாகவும் மாற்றி விடுவதால்  எவையெல்லாம் பாவம் என்பதை சரியாக அறிந்து அவற்றை விட்டு விலகி ஒடுவது அவசியமாகிறது.

பாவங்களின் வரிசையில்  "கொலை பாதகத்தை"பற்றி முத்தை
பதிவில் பார்த்தோம். இங்கு இன்னொரு பாவத்தை பற்றி பார்க்கலாம்     

யாத் 20:14 விபசாரம் செய்யாதிருப்பாயாக

செய்யக்கூடாதவைகளில்  மிக முக்கியமான அடுத்த பாவம் இந்த "விபச்சாரம் மற்றும் வேசித்தனம்" ஆகும்.  இப்பாவத்தை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.

மாம்சத்தின் இச்சையால் இழுக்கப்பட்டு  செய்யப்படும்  இந்த பாவம்
இன்றைய உலகில் சுமார் 90௦%௦க்கு மேற்ப்பட்ட மக்ககளை தன் வசத்தில் கட்டிவைத்துள்ளதால் அவர்கள்  தேவனால் நிராகரிக்கப்பட்ட நிலையில் தேவராஜ்யத்துக்கு தகுதியிழந் துள்ளனர்.   
 
எரேமியா 23:10 தேசம் விபசாரக்காரரால் நிறைந்திருக்கிறது
 
தெருவில் ஒரு நல்ல  பெண் நடந்துபோனால் பதினைத்து  வயது பையனில் இருந்து  பல்லுபோன கிழவர் வரை "ஆ" என்று வாயை பிளந்து, அந்த பெண் உருவம்  கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துகொண்டு இருப்பதை நாம் பல இடங்களில் பார்க்க முடியும்.  
 
ஆவிக்குரிய உலகத்தையும் இந்த பாவம் விட்டுவைக்காமல்  பல பாஸ்டர்கள் மற்றும்  பாதிரிகளை பாவத்தில்   விழவைத்து ஒட்டுமொத்த கிறிஸ்த்தவத்தின் பெயரையும் கெடுத்து வருகிறது. சமீப நாட்களில் சபையில் முழுஇரவு ஜெபத்துக்கு போன ஒரு பெண்ணிடம் சபைக்குள் வைத்து  இன்னொரு பெண் "இவ்வளவு பணம் கிடைக்கும் வருகிறாயா ஒரே நாள் இரவுதான் காலை இத்தனை மணிக்கு வந்து விடலாம்" என்று கேட்ட ஒரு சம்பவத்தை கூட கேள்விப்பட நேர்ந்தது. அவ்வளவு மோசமான நிலையில் உலகம்  சீர்கெட்டு போகிறது.    
 
விபச்சாரம் மற்றும் வேசித்தனம் இரண்டும் ஒன்றுபோல தெரிந்தாலும் இரண்டும் தனித்தனி பொருளுடைய வார்த்தைகள் அதற்க்கான விளக்கம் கீழ்கண்ட வசனம் தருகிறது:
 
எசே 16 : 32. தன் புருஷனுக்குப் பதிலாக அந்நியரைச் சேர்த்துக்கொள்ளுகிற விபசார ஸ்திரீயைப்போல இருக்கிறாய்.
 
புருஷன் இருக்கும் போது அவனுக்கு பதில் அந்நியனை சேர்த்துகொள்கிறவள் விபச்சாரி எனப்படுகிறாள்   
  
ஆனால்  பணயம் கொடுத்து அதாவது பாலியல் தொழில் செய்பவர்களை வேதாகமம்
"வேசித்தனம்" என்ற பட்டியலில் சேர்க்கிறது:
 
எசே16 :33. எல்லா வேசிகளுக்கும் பணையங்கொடுக்கிறார்கள்.
 
I கொரிந்தியர் 10:8   வேசித்தனம்பண்ணாதிருப்போமாக
 
இது பெண்களுக்குரியது மட்டும் அல்ல  ஆண்களிலும் விபச்சாரன் என்பவன் உண்டு:
 
யோபு 24:15 விபசாரனுடைய கண் மாலைமயங்குகிற வேளைக்குக் காத்திருந்து: என்னை ஒரு கண்ணும் காணமாட்டாதென்று முகத்தை மூடிக்கொள்ளுகிறான்.
ஓசியா 7:4 அவர்கள் எல்லாரும் விபசாரக்கள்ளர்
 
இப்படி விபச்சாரகாரன்  "விபச்சாரகள்ளன்"   என்பவனும் உண்டு! நண்பன் என்று சொல்லி  வீட்டுக்குள் நுழைத்து நல்லவனாக நடத்து நண்பனின் மனைவியை தன்மனைவி ஆக்கிக்கொண்ட பலபேரை பார்த்திருக்கலாம்.  கணவன் மனைவிக்கு இடையே உருவாகும் சிறு சிறு  மனத்தாங்கலை பயன்படுத்தி இருவருக்கும் உள்ளே நுழைந்து தன் காரியத்தை சாதிக்க நினைப்பவன் விபச்சாரக்காரனே பொதுவாக   அடுத்தவன் மனைவியை மனதில்வைத்து எங்கு கிடைப்பாள் என்று  அலைபவன் எல்லோரும்  விபச்சாரகாரன்தான் . 
 
பணத்தை கொடுத்து ஆசைகாட்டி பெண்களை மடக்க நினைப்பவன் எல்லாம் "வேசிக்கள்ளன்" எனப்படுவான். இவர்கள் தாங்கள் வசதி வாய்ப்பை பயன்படுத்தி பெண்களை கவிழ்க்க நினைப்பவர்கள்.  அதில் அநேகர் வெற்றியும் பெறுகின்றனர்:
 
எபிரெயர் 12:16 ஒருவனும் வேசிக்கள்ளனாகவும்...இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்
 
நீதிமொழிகள் 6:26 வேசியினிமித்தம் ஒரு அப்பத்துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.

நீதிமொழிகள் 6:32 ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.
  
தேவனின் கடுமையான தீர்ப்பு
 
லேவியராகமம் 20:10  பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.

அதாவது அவர்கள் வாழ்வதற்கு லாயக்கற்றவர்கள் எனதே தேவனின் முடிவு. புதிய ஏற்பாட்டு காலத்தில் இந்த தண்டனை இல்லை என்றாலும் அவர்கள் தேவனுடய ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியாது என்று வேதம் போதிக்கிறது.  
 
I கொரிந்தியர் 6:9 வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும்,,I கொரிந்தியர் 6:10 ...., வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. .
 
வெளி 21:8 ......, அருவருப்பானவர்களும், ......., விபசாரக்காரரும், சூனியக்காரரும், ......... இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

மாம்ச இச்சயினுள் அடங்கும் இந்த பாவத்தோடு தொடர்புடைய இன்னும் சில
பாவங்களை தொடர்ந்து பார்க்கலாம்
....  


-- Edited by SUNDAR on Tuesday 16th of November 2010 09:20:00 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard