இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்த்துவின் இரட்சிப்பு சுலபமா கடினமா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
கிறிஸ்த்துவின் இரட்சிப்பு சுலபமா கடினமா?
Permalink  
 


16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
 
தேவன் இயேசுவை அனுப்பியதன் நோக்கம் எல்லோரும் நித்ய ஜீவனை அடையவேண்டும் என்பதே அடுத்து
 
18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
 
ஆக்கினை  தீர்ப்பில் இருந்து தப்பிக்க செய்யவேண்டிய ஒரே காரியம் இயேசுவை விசுவாசிப்பதுதான் என்று வேதம் குறிப்பிடுகிறது.
 
அப்படியிருக்கும் பட்சத்தில்  
 
வெளி. 22:14 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.

மத்தேயு 7:13,14  இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்
 
என்றும் வேதம் சொல்கிறது.

இங்கு ஒருவன் நித்ய ஜீவனை அடைய இயேசுவை விசுவாசித்தால் மட்டும் போதுமா?  அல்லது அவரது வார்த்தைகளின்படி எல்லாம்  நடந்து இடுக்கனான வாசல்வழி சென்றால்தான் நித்ய ஜீவனை பெற முடியுமா என்பது பற்றி அராயலாம்!
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

ஒரு மனிதனிடத்தில் கிறிஸ்த்துவின்  இரட்சிப்பு என்பது மிகவும் சுலபமானது!  எப்படியெனில்   இயேசுவின் இரட்சிப்பின் அடிப்படை என்ன?
 
14. சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும்,
15. தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்
 
வனாந்திரத்தில் கொள்ளிவாய் சர்ப்பத்தால் கடிபட்டவர்கள், எதுவுமே கடினமான  காரியங்களை  செய்யாமல்   மேலே தூக்கி வைக்கப்பட்ட்ட   வெண்கலசர்ப்பத்தை நோக்கி பார்த்து, அவ்வாறு  பார்த்த ஒரே காரணத்துக்காக  எவ்வாறு  
தப்பிததார்களோ, அதுபோலவே  சாத்தான்  என்னும் சர்ப்பத்தால் கடிக்கப்பட்டு  பாவம் என்னும் படுகுழியில் கிடக்கும் மனிதர்கள்  சிலுவையில் தூக்கப்பட்ட    இயேசுவை  நோக்கி பார்த்தாலே போதும் அவரை விசுவாசித்தாலே போதும் சாத்தானின் இடத்துக்கு போவதிலிருந்து  தப்பித்து விடலாம் அவர்களுக்கு   ஆக்கினை தீர்ப்பு இல்லை! 
 
இந்த இரட்சிப்பை பற்றி யோவான் இவ்வாறு குறிப்பிடுகிறார் :
 
18. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; 
 
என்றும்
 
12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.

இங்கு இயேசுவை ஒருவர் ஏற்றுக்கொண்ட உடனேயே அவன்   பிசாசின்பிள்ளை என்ற  ஸ்தானத்திலிருந்து  "தேவனின் பிள்ளை" என்ற ஸ்தானத்துக்குள் (அதாவது தேவனின் அன்பான கரத்துக்குள்)  வந்துவிடுவாதால்  "என்னிடத்தில் வந்த எவரையும் நான் புறம்பே தள்ளுவதில்லை" என்ற இயேசுவின் வார்த்தை அடிப்படையில் அவன் சுலபமான இரட்சிப்பை பெறுகிறான்!.  

இயேசுவும் அவன் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு,    யாரையும் வேண்டாம் என்று  ஒருபோதும் தள்ளுவதில்லை! அவன் கிருபைக்குள் இருப்பதால் பாவம் ஒருபோதும் மேற்கொள்ளவே  முடியாது என்று பவுலும் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் குறிப்பிடுகிறார்!    
 
இந்த இரட்சிப்பு முற்றிலும் இலவசம்!  மற்றும் தேவனின் ஈவு!
 
ரோமர் 3:24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;

எபேசியர் 2:8
கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
 
எனவேதான்  எல்லா  பணிகளைவிட  சவிசேஷ  பணி  மிக  முக்கியமானது  என்று நான் கருதுகிறேன். எனவேதான்   நமதாண்டவரும்
 
15.  அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.

என்று கட்டளை  கொடுத்தார்!  

ஆனால்  அது கிறிஸ்த்தவத்தின் ஒரு பகுதியே!
 
 
அத்தோடு கிறிஸ்த்தவம் முடிந்துவிடவில்லை!

இன்னொரு பகுதி உண்டு:
 
20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்;
 
யோவான் 14:15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.

யோவான் 14:23
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்,
 
என்பது போன்ற அவர்  வார்த்தையை கைகொள்ள வலியுறுத்தும் அனேக  வசனங்களை இயேசு போதித்தார். அவரது வார்த்தையை கைகொள்வது  என்பது  அவ்வளவு சாதாரண காரியம் அல்ல!  ஆகினும் நாம்  கைகொண்டு நடக்க வேண்டும் என்பது இயேசு நமக்கு  இட்டகட்டளை. 

இரட்சிப்பு  என்பது  மிக  சுலபமாக  
இருக்கும்போது  இயேசுவின் கடினமான    கட்டளைகளை  ஏன் கைகொள்ள வேண்டும்? அதற்க்கான அடிப்படை காரணம் என்ன?  
 
லூக்கா 11:28 , தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக் கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.

ஆம்! அதற்க்கு விசேஷ காரணம் இருக்கிறது தொடர்ந்து ஆராய கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கவும்!
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

கிறிஸ்துவை விசுவாசித்து இலவசமாய்/எளிதாய் இரட்சிப்பைப் பெற்றவன், தேவகட்டளைகளின்படி நடவாவிடில் ஏதேனும் துன்பம் அல்லது கஷ்டம் உண்டா?

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

anbu57 wrote:

கிறிஸ்துவை விசுவாசித்து இலவசமாய்/எளிதாய் இரட்சிப்பைப் பெற்றவன், தேவகட்டளைகளின்படி நடவாவிடில் ஏதேனும் துன்பம் அல்லது கஷ்டம் உண்டா?



"பாவம்"  மற்றும் "மீறுதல்" என்பது  இயேசுவை ஏற்றுக்கொண்டு செய்தாலும் சரி ஏற்றுக்கொள்ளாமல் செய்தாலும் சரி,  ஆவிக்குரியவர் செய்தாலும் சரி  மாமிசத்துக்குரியவர்கள் செய்தாலும் சரி, தெரிந்து செய்தாலும் சரி தெரியாமல் செய்தாலும் சரி நிச்சயம் தண்டனைகுரியது! 
 
எனவேதான் ஆண்டவர்!

லுக்:
47. தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்
48. அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ சில அடிகள் அடிக்கப்படுவான். 
 
தெரியாமல் செய்தவனுக்கு அடி இல்லை என்பது தவறான கருத்து. அவனுக்கும்  நிச்சயம் சில அடிகள் உண்டு. காரணம் அவன் பாவம் என்ன என்பதை அறிந்துகொள்ள   முயற்சிகள்  எடுக்க வேண்டும். நமக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய்  பணம் வர வேண்டியது இருந்தால் அதை பெற்றுக்கொள்ள எவ்வளவு முயற்ச்சிகள் எடுக்கிறோம் ஆனால்  பாவத்தை அறிந்துகொள்ளும் காரியத்தில் மட்டும் எனக்கு தெரியாது என்று சொல்லி தப்பிக்க முடியாது எனவே தெரியாமல் ஒரு பாவத்தை செய்தவனுக்கும்  சில அடிகள் உண்டு.  அதற்குத்தான் மனிதனுக்கு அதீத அறிவையே கடவுள் கொடுத்திருக்கிறார் என்று நான் கருதுகிறேன்.
 

தெரிந்து செய்பவனுக்கு அதாவது ஆண்டவரின் காரத்துக்குள் வந்து ஆண்டவரின் சித்தத்தை அறிந்து அதன் பிறகு பாவம் செய்பவனுக்கு பல அடி!   எந்த பாவத்துக்கும்மே  கிடப்பது  தண்டனைதான் ஆனால் அதை யார் தருகிறார்கள் என்பதுதான் வேறுபாடு
 
யோபு 5:17 இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்; .
 
என்ற வார்த்தைக்கு ஏற்ப இயேசுவின் இரட்சிப்புக்குள் வந்து தேவனின் பிள்ளைகள் ஆனவர்களுக்கு    தண்டணைகள  நமது தகப்பனாகிய தேவனிடமிருந்து வருகிறது.
 
ஆகினும்
எபிரெயர் 10:31 ஜீவனுள்ள தேவனுடைய கைகளிலே விழுகிறது பயங்கரமாயிருக்குமே.

என்ற  வார்த்தைகளுக்கு ஏற்ப ஆண்டவரை ஏற்றுக்கொண்டு பாவம் செய்தவர்கள் அனுபவிக்கும் தண்டனை மிக மோசமானது, அவர் பட்சபாதம் பார்ப்பவர் அல்ல, அது தாவீதாக இருந்தாலும் சரி மோசேயாக இருந்தாலும் சரி.  எவ்வளவு அதிகமாக   அவர் சித்தத்தை அறிந்து  பின் தவறு செய்கிறோமோ அவ்வளவு அதிகமான சிறு சிறு காரியத்துக்கு கூட பெரிய  தண்டனை கிடைக்கும்.  ஆவிக்குரிய அநேகர் தங்களுக்கு கிடைக்கும் தண்டனையை ஏதோ  சாத்தான் தருவதாக தவறாக கருதுகின்றனர்.  அதை  என்னால் ஏற்க்கவே முடியாது.  அவரை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் தேவனுடய பிள்ளைகள் ஆகும்படி  
அதிகாரம் உண்டானது,  பிறகு அவர்களுக்கு தண்டனை எப்படி சாத்தானிடம் இருந்து வரும்?  அப்படியே வந்தாலும் தேவன் நிச்சயம் அதற்க்கு அனுமதி கொடுத்திருப்பார்  அதற்க்கு காரணம் அவன் செய்த  பாவம்தான்.      
   
எனவேதான் பவுலும்:
 
ரோமர் 6:1 ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே.
ரோமர் 6:15 இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவஞ்செய்யலாமா? கூடாதே.

பாவம் செய்யகூடாது என்று பலமுறை  சொல்கிறார்.  காரணம் நிச்சயம் பாவம் தண்டனையை கொண்டுவரும். எனினும்  நாம் கிருபைக்குள் இருப்பதால்  எந்த பாவமும் நம்மை மேற்கொண்டு கிருபையை  விட்டு  வெளியே தள்ள முடியாது!  
 
ஆனால் மற்றவர்களுக்கோ  தண்டனை பிசாசிடம் இருந்து வருகிறது அவர்களுக்கு எப்பொழுது என்ன நேரும் என்பதே யாருக்குமே  தெரியாது சடிதியில் எதிர்பாராத வேளையில்  ஆபத்து நேரிடும். 
 
யார்  பாவம் செய்தாலும் தண்டனை நிச்சயம் உண்டு எனவே எப்படி நிறைய   சம்பாதித்து சாப்பிட்டு உலகில் நன்றாக வாழ  முயற்ச்சிகள் எடுக்கிறோமோ
அதுபோல்  பாவம்  என்னவென்பதை சரியாக் அறிந்து அதை செய்யாமல் தவிர்க்க ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் முயற்சிகள்  மேற்கொள்ள வேண்டும்.  இல்லையேல்  நிச்சயம்  தண்டனை அனுபவிக்க நேரிடும்.
 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

anbu57 wrote:
கிறிஸ்துவை விசுவாசித்து இலவசமாய்/எளிதாய் இரட்சிப்பைப் பெற்றவன், தேவகட்டளைகளின்படி நடவாவிடில் ஏதேனும் துன்பம் அல்லது கஷ்டம் உண்டா?

 சிறிது நேரம் கிடைத்ததால் இதை எழுதுகிறேன். அன்பு அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலாகவும்  சுந்தர் அவர்கள் கருத்துக்கு ஒத்ததாகவும் உள்ளது இந்த வசனம் :
சங்கிதம் : 89 
 இங்கே எனக்கு சுட்டி ஒத்து வராததால், இறைநேசன் அவர்களை தமிழில் மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்

 

019:Then thou spakest in vision to thy holy one, and saidst, I have laid help upon one that is mighty; I have exalted one chosen out of the people.
020:I have found David my servant; with my holy oil have I anointed him:
021:With whom my hand shall be established: mine arm also shall strengthen him.
022:The enemy shall not exact upon him; nor the son of wickedness afflict him.
023:And I will beat down his foes before his face, and plague them that hate him.
024:But my faithfulness and my mercy shall be with him: and in my name shall his horn be exalted.
025:I will set his hand also in the sea, and his right hand in the rivers.
026:He shall cry unto me, Thou art my father, my God, and the rock of my salvation.
027:Also I will make him my firstborn, higher than the kings of the earth.
028:My mercy will I keep for him for evermore, and my covenant shall stand fast with him.
029:His seed also will I make to endure for ever, and his throne as the days of heaven.
030:If his children forsake my law, and walk not in my judgments;
031:If they break my statutes, and keep not my commandments;
032:Then will I visit their transgression with the rod, and their iniquity with stripes.
033:Nevertheless my lovingkindness will I not utterly take from him, nor suffer my faithfulness to fail.
034:My covenant will I not break, nor alter the thing that is gone out of my lips.
035:Once have I sworn by my holiness that I will not lie unto David.
036:His seed shall endure for ever, and his throne as the sun before me.
037:It shall be established for ever as the moon, and as a faithful witness in heaven. Selah.


-- Edited by SANDOSH on Sunday 14th of February 2010 12:11:53 AM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சகோ.சந்தோஷ் அவர்களே! தாவீதுக்கும் அவரது சந்ததிக்கும் தேவன் அருளின வாக்குத்தத்தத்திற்கும், நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம் என்பதை சற்று விபரமாக எழுதினால் நலமாயிருக்கும்.

அத்தோடு பின்வரும் வசனங்கள் மூலம் தேவன் என்ன கூறவருகிறார் என்பதையும் விளக்கினால் நலமாயிருக்கும்.

எசேக்கியேல் 18:5-17 ஒருவன் நீதிமானாயிருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து, ... ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலுமிருந்து, ... தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து, வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன் கையை விலக்கி, மனிதருக்குள்ள வழக்கை உண்மையாய்த் தீர்த்து, என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

ஆனாலும் அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் கள்ளனும் இரத்தஞ்சிந்துகிறவனும், மேற்சொல்லிய கடமைகளின்படி நடவாமல், இவைகளில் ஒன்றுக்கொப்பானதைச் செய்கிறவனுமாயிருந்து, ... சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, ... நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுத்து, அருவருப்பானதைச் செய்து, வட்டிக்குக் கொடுத்து, பொலிசை வாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை; இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் சாகவே சாவான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்.

பின்னும், இதோ, அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் தன் தகப்பன் செய்த எல்லாப் பாவங்களையும் கண்டு, தான் அவைகளின்படி செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து, ... ஒருவனையும் ஒடுக்காமலும், ... தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரந்தரிப்பித்து, ... என் நியாயங்களின்படி செய்து, என் கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினிமித்தம் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.

19,20 இதெப்படி, குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், குமாரன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான். பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை;

இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ள சாவும், பிழைத்தலும் இம்மைக்குரிய சாவையும் இம்மைக்குரிய சாவிலிருந்து பிழைத்தலையும் குறிப்பிடவில்லை என்பதை அறிவீர்கள் என நம்புகிறேன்.

sundar wrote:
//எனவேதான் பவுலும்:

ரோமர் 6:1 ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே.
ரோமர் 6:15 இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவஞ்செய்யலாமா? கூடாதே.

பாவம் செய்யகூடாது என்று பலமுறை  சொல்கிறார்.  காரணம் நிச்சயம் பாவம் தண்டனையை கொண்டுவரும். எனினும்  நாம் கிருபைக்குள் இருப்பதால்  எந்த பாவமும் நம்மை மேற்கொண்டு கிருபையை விட்டு வெளியே தள்ள முடியாது!//

அதாவது கிறிஸ்துவின் இரட்சிப்பை இலவசமாய்/எளிதாய் பெற்றவர்கள், கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமற்போனால் தண்டிக்கப்படத்தான் செய்வார்கள் என்கிறீர்கள். ஆனாலும், அவர்களை விட்டு தேவகிருபை விலகாது என்கிறீர்கள். அதாவது, அவர்கள் பெற்ற இரட்சிப்பை இழக்கமாட்டார்கள், பாவம் செய்தாலும் அதற்குரிய தண்டனையை மட்டும் பெற்றுவிட்டு இரட்சிப்பைப் பெறுவார்கள் என்கிறீர்கள். அப்படித்தானே?

வசனங்களுக்கான முழுமையான விளக்கத்தை நீங்கள் சொல்லாததால், இக்கேள்வியை நான் கேட்கவேண்டியதாயிற்று. என் கேள்விக்குப் பதில்சொல்வதைவிட, வசனங்களுக்கான முழுவிளக்கத்தைச் சொன்னால் நலமாயிருக்கும்.

ரோமார் 6:1,15 வசனங்களில் மேற்கூறியவிதமாகக் கூறின பவுல், பின்வரும் வசனங்களில் இப்படியும் எழுதியுள்ளார்.

ரோமர் 8:1,13 ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.

கிருபையைப் பெற்றவர்கள், மாம்சத்தின்படி நடந்தால் சாவார்கள் எனப் பவுல் கூறுகிறாரே? அவ்வாறெனில், இலவசமாய்/எளிதாய் கிறிஸ்துவின் இரட்சிப்பை ஒருவன் பெற்றாலும், தேவகட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமற்போனால் அவன் சாக நேரிடும் என்றல்லவா பவுல் கூறுகிறார்?

நீங்கள் “இரட்சிப்பு எளிதானது” என்கிறீர்கள்; ஆனால் பவுலோ, கட்டளைகளின்படி நடவாவிடில் (நித்திய) சாவு என்கிறார்.

கட்டளைகளின்படி நடப்பது கஷ்டம்தான் என நீங்களே சொல்லியுள்ளீர்கள். கஷ்டப்பட்டு கட்டளைகளின்படி நடந்தால்தான் சாவிலிருந்து தப்பமுடியுமெனில், இரட்சிப்பு எப்படி எளிதானதாக இருக்கமுடியும்?

பின்வரும் வசனங்கள் கூறுவதையும் படியுங்கள்.

ரோமர் 2:9-16 முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும். தேவனிடத்தில் பட்சபாதமில்லை. எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள். நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.

அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள். என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.

அப்போஸ்தலர் 10:34 அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.


இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளவர்கள், கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து இரட்சிப்பு பெற்றவர்களெனக் கூறப்படவில்லை. ஒருவன் கிரேக்கனாயிருந்தால்கூட, அவன் நன்மை செய்தால் அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும் எனப் பவுல் கூறுகிறார்.

கொர்நேலியு என்பவர் கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைக்கும்முன்னதாகவே, தேவனுக்கு உகந்தவன் எனும் பெயரைப் பெற்றார். இதிலிருந்து நாம் என்ன புரிந்துகொள்ள முடிகிறது? சற்று விபரமாகக் கூறவும்.

பின்வரும் வசனங்கள் கூறுவதையும் படியுங்கள்.

மத்தேயு 10:22 என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.

மத்தேயு 24:12,13 அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

மாற்கு 8:35 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

1 கொரிந்தியர் 15:2 நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.

பிலிப்பியர் 2:12 எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.

யாக்கோபு 2:14-17 என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.

இப்பொழுது சொல்லுங்கள் சகோ.சுந்தர் அவர்களே! இரட்சிப்பு சுலபமானதுதானா?

இரட்சிப்பு இலவசம் என வசனம் சொல்வது மெய்தான். ஆனால் இரட்சிப்பு எளிதானது, சுலபமானது என எந்த வசனம் கூறுகிறது?


-- Edited by anbu57 on Sunday 14th of February 2010 12:56:34 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: சகாயஞ்செய்யத்தக்க சக்தியை ஒரு சவுரியவான்மேல் வைத்து, ஜனத்தில் தெரிந்து கொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்.

என் தாசனாகிய தாவீதைக்கண்டு பிடித்தேன்; என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம்பண்ணினேன்.

என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும்.

சத்துரு அவனை நெருக்குவதில்லை; நியாயக்கேட்டின்மகன் அவனை ஒடுக்குவதில்லை.

அவன் சத்துருக்களை அவனுக்கு முன்பாக மடங்கடித்து, அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன்.

என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும்; என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும்.

அவன் கையைச் சமுத்திரத்தின் மேலும், அவன் வலதுகரத்தை ஆறுகள் மேலும் ஆளும்படி வைப்பேன்.

அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான்.

நான் அவனை எனக்கு முதற்பேறானவனும், பூமியின் ராஜாக்களைப் பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன்.

என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என் உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும்.

அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ளமட்டும் நிலைநிற்கவும் செய்வேன்.

அவன் பிள்ளைகள் என் நியாயங்களின்படி நடவாமல், என் வேதத்தை விட்டு விலகி;

என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், என் நியமங்களை மீறிநடந்தால்;

அவர்கள் மீறுதலை மிலாற்றினாலும், அவர்கள் அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்.

ஆனாலும் என் கிருபையை அவனை விட்டு விலக்காமலும், என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன்.

என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதைமாற்றாமலும் இருப்பேன்.

ஒருவிசை என் பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், தாவீதுக்கு நான் பொய்சொல்லேன்.

அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.

சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று விளம்பினீர். (சேலா.)

(சங்கீதம்.89:19-37)


குறிப்பிட்ட இந்த வேதப்பகுதி எனக்குப் பிடித்தமானதும் நான் அதிகம் தியானித்ததுமான வேதப் பகுதியாகும்;

இங்கே இன்னும் வெளிப்படாத கிறிஸ்துவானவரின் உலகளாவிய திட்டங்கள் நிழலாட்டமாகக் கூறப்பட்டுள்ளது;

// தண்டிப்பேன்...ஆனாலும் என் கிருபையை அவனை விட்டு விலக்காமலும்  //

எனும் குறிப்பிட்ட வரிகளுக்காகவே நண்பர் சந்தோஷ் அவர்கள் இந்த வசனங்களை பதித்திருப்பார் என்றெண்ணுகிறேன்;

இந்த பொருளில் மற்றொரு வசன பகுதியையும் குறிப்பிடமுடியும்;

சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல்,

நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.

மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;

தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.

பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம்.

ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே.

(எபிரெயர்.10:26-31)

இதன்படி "கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்"(எபேசியர்.2:8) என்று வேதம் கூறினாலும் கீழ்ப்படியாமல் துணிகரமாகப் பாவம் செய்வோருக்கு அதைவிட பயங்கரமான தண்டனைகள் இம்மையில் மாத்திரமல்ல,மறுமையிலும் அது பயங்கரமான விளைவுகளை உண்டாக்கும் என வேதம் வெவ்வேறு பகுதிகளில் தெளிவாகப் போதிக்கிறது.

"பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்."
(யோனா.2:8)

2:8 க்கும் மற்றொரு 2:8 க்கும் எத்தனை வித்தியாசம் பார்த்தீர்களா..?

ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,

தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,

மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
(எபிரெயர்.6:4 6)

ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,

ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.

ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளவிரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.(எபிரெயர்.12:15 17)

ஆகிய வேதப்பகுதிகள் தேவன் எந்த காலத்திலும் பாவத்தைப் பொறுத்துக் கொள்ளுபவரல்ல என்பதை விளக்கும்;

எனவே இரட்சிப்பை நிறைவேற்றாமற் போனாலும் அதற்குரிய தண்டனையை மாத்திரம் இம்மையில் அடைந்து பிறகு மறுமையில் நித்தியத்துக்குள் பிரவேசித்துவிட கிருபை உதவும் என்றெண்ணுவது அறியாமையாகும்;

உதாரணத்துக்கு ஒரு பிரபலமான திரைப்படத்தில் பிழையான பாடலுக்கு பரிசைக் கேட்டு கெஞ்சும் ஏழைப் புலவன் பிழைக்கேற்ற பரிசைக் குறைத்துக் கொண்டு மீதத்தையாவது கொடுக்க மன்னனை வேண்டுவானே அதுபோன்றதல்ல இரட்சிப்பும் அதனைத் தொடரும் நித்திய ஆசீர்வாதங்களும்..!


__________________

"Praying for your Success"


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Anbu Wrote:
///எசேக்கியேல் 18:5-17 ஒருவன் நீதிமானாயிருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து, ... ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலுமிருந்து, ... தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து, ......., என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

ஆனாலும் அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் கள்ளனும் இரத்தஞ்சிந்துகிறவனும், ....... இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் சாகவே சாவான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்.

இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ள சாவும், பிழைத்தலும் இம்மைக்குரிய சாவையும் இம்மைக்குரிய சாவிலிருந்து பிழைத்தலையும் குறிப்பிடவில்லை என்பதை அறிவீர்கள் என நம்புகிறேன்.////


சகோதரர் அன்பு அவர்களே மேல்கண்ட வசனங்களில் சுமார் பதினெட்டு காரியங்களை மனிதன் கைகொண்டு நடக்கவேண்டும் என்றும் அதில் ஓன்று  தேவனின் கட்டளைகள் நீதிநியாயங்கள் (அதாவது நியாயபிரமாணம் (பலியிடுதல் இல்லாமல்)    எல்லாம் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என்று போதிக்கிறது.
 
இப்படி நடப்பவர்கள் மட்டும்தான் இரண்டாம் மரணத்துக்கு தப்பமுடியும் என்று நீங்கள் கருதினால் ஒருவர் கூட இரண்டாம் மரணத்துக்கு  தப்பமுடியாது.  
 
அப்படி ஒரு வேளை இவ்வளவு கிரியைகளும் செய்துதான் இரண்டாம் மரணத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் இங்கு கிருபைக்கு என்ன வேலை?
 
ரோமர் 11:6 அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால், கிரியையானது கிரியைல்லவே.

எபேசியர் 2:9 ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது
கிரியை
ளினால் உண்டானதல்ல;

II தீமோத்தேயு 1:9 அவர் நம்முடைய கிரியைளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்
 
எனவே இந்த கடினமான கட்டளை கொடுக்கப்பட்டது இரண்டாம் மரணத்தை ஜெயிக்கவோ அல்லது இரட்சிப்பை அடையவோ  அல்ல   இம்மைக்குரிய மரணத்தை ஜெயிக்கத்தான் இந்த கடினமான கட்டளைகள் தீர்க்கதரிசியால் கொடுக்கப்பட்டுள்ளது.
 
கர்த்தர் "சாகவே சாவாய்" என்று  ஆதாமிடம் சொன்னதால் எந்த மரணம் பூமிக்குள்  வந்தது அதே மரணத்திலிருந்து தப்பிக்கத்தான் இங்கு "பிழைக்கவே பிழைப்பாய்" என்று எதிர் வசனம் வருகிறது. ஆதாமை பார்த்து ஆண்டவர் சொன்னதால் முதல்  மரணம் மற்றும் இரண்டாம் மரணம் இரண்டும்  
வந்திருந்தால், இந்த வசனங்கள் எல்லாவற்றயும் கைகொள்வதன் மூலம் இரண்டையுமே நிச்சயம்  ஜெயிக்க முடியும். ஏன் வசனத்தின் வல்லமையை குறைக்கிறீர்கள்?
  
எந்தன் அடிப்படையில் எல்லா மரணம், மற்றும் சாவாய் என்ற வார்த்தைகள் 
 இரண்டாம் மரணத்தை குறிக்கிறது என்று சொல்கிறீர்கள்?
   
 


-- Edited by SUNDAR on Monday 15th of February 2010 05:41:45 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard