அன்பு சகோதரர்களே இயேசுவும் தேவனும் ஒருவரா அல்லது இருவேருபட்டவர்களா? என்பதை குறித்த கருத்து வேறுபாடு அனேக கிறிஸ்த்தவ சகோதரர்களுக்கிடையே இருப்பதை அறியமுடிகிறது! எனவே அந்த கருத்தை இத்திரியில் விவாதித்து ஆராயலாம் என்று கருதுகிறேன்.
யோவான் 17:3“ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்”
என்று இயேசுவே சொன்னதோடு, என்னை அனுப்பியவர் என்னிலும் பெரியவர் மற்றும் "அனுப்பபட்டவர் அனுப்பியவரைவிட மேலானவர் அல்ல"என்றும் கூறி, தனக்கு மேலே ஒரு கடவுள் இருக்கிறார் என்பதை மிக தெளிவாக பல்வேறு வசனங்களில் இயேசு குறிப்பிடுகிறார்.
இவ்வசனப்படி பிதாவே தேவன் என்றும் அவரால் அனுப்பபட்டவர் இயேசு என்று இருவேறு தனிப்பட்ட நபர்களை வேதம் குறிப்பிடுகிறது
அதே நேரத்தில் இன்னொரு புறத்தில்:
இயேசு பிதாவால் அனுப்பபட்டவர் என்பது வசனத்தின்படி ஏற்றுக்கொள்ள கூடிய கருத்துதான் ஆகினும் இயேசுவை பிதா எவ்வாறு உருவாக்கி அனுப்பினார் என்பதையும் நாம் ஆராயவேண்டும். மனிதனை மண்ணினால் உருவாக்கி தனது ஜீவசுவாசத்தை ஊதி படைத்தார் அதைபோல் இயேசுவை எவ்வாறு உருவாக்கினார் என்பதும் நாம் ஆராயவேண்டிய ஓன்று.
இயேசு இங்கு
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்என்றார். .
நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா?
நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்;
போன்ற வசனங்கள் மூலம் இயேசு பிதாவிலும் பிதா இய்சுவிலும் இருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது.
இப்பொழுது மனிதனை எடுத்துகொண்டால் எங்கப்பா எனக்குள் இருக்கிறார் என்று சொல்லமுடியும் அதாவது எனது அப்பாவின் சத்துவத்தில்தான் நான் உருவானேன் எனவே எனக்குள் என் அப்பாவை காணமுடியலாம் என் அப்பாவின் தன்மைகளை என்னில் காண முடியலாம்! ஆனால் என் அப்பாவுக்குள் நான் இருக்கிறேன் என்று நம்மால் சொல்லமுடியாது. ஏனெனில் அவர் முதலில் வந்தவர்! அவர் வாழ்ந்த காலங்களில் நாம் உருவாகவே இல்லை எனவே அப்படி சொல்வது கொஞ்சமும் முறையாகாது.
ஆனால் இயேசு "நான் பிதாவில் இருக்கிறேன்" என்று சொல்வதன் மூலம் அவர் பிதாவோடு கூடவே ஆதியில் இருந்தே இருந்தவர் என்பதும் "நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம்" என்பதன் மூலம் இருவரும் ஒருவராக இருந்தவர்/இருக்கிறவர் என்றும் பொருள் கொள்ளமுடிகிறது.
இந்நிலையில் இருவரும் ஒருவரா அல்லது தனிதனியா? தெரிந்தவர்கள் வசன ஆதாரத்தோடு கருத்தை முன்வைக்கலாம்.
(இயேசு கடவுளா இல்லையா என்பது கேள்வியல்ல! மற்றும் திரித்துவம் என்ற கருத்துபற்றியும் இங்கு விவாதம் இல்லை. இயேசுவும் பிதாவும் ஒருவரா அல்லது இருவேறு தனிப்பட்டவர்களா என்பது மட்டும்தான் விவாதம்.)
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து பிதாவினிடத்திலிருந்துதான் வந்தார் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை! ஆனால பிதா அவரை எதை அடிப்படையாக கொண்டு அல்லது எதிலிருந்து இயேசுவை உருவாக்கினார் என்பதற்கு வேதமே தெளிவான விளக்கம் கொடுக்கிறது.
1யோவான்
1 ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்
இதற்க்கு இணையாக
யோவான்
1ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது..
1யோவான்
2 அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். 3
யோவான் 14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்;
இந்த வசனனகளின் தொகுப்பு:
இயேசு என்பவர் "ஜீவ வார்த்தை"
அந்த வார்த்தை ஆதிமுதல் இருந்தது
அந்த வார்த்தை பிதாவிடத்தில் இருந்தது
அந்த வார்த்தை மாமிசமானது.
அந்த வார்த்தை தேவனாய் இருந்தது
அதை கண்களால் காண முடிந்தது,
அதை தொட முடிந்தது.
அந்த வார்த்தைதான் இயேசு.
இதை நிரூபிக்கும் இன்னொரு சான்று:
3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை
உலகில் உண்டானது எதுவுமே அவரன்றி உண்டாகவில்லை: இதற்க்கு தொடர்புடைய வசனமாகிய
தேவன் வெளிச்சம் உண்டாககடவது என்று தனது வார்த்தயால்தான் சொல்லியிருகிறார் உண்டானது மற்றும் எல்லா படைப்புகளையும் தனது வார்த்தயால்தான் படைத்திருக்கிறார்.
யோவான்
2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்
தொடக்கத்தில் எலோஹீம் என்னும் தேவனோடு ஒன்றாக இருந்து எல்லா படைப்புகளுக்கும் காரணகர்த்தாவாக இருந்த அந்த வார்த்தை பின்னர் மாமிசமானது. எனவேதான் அந்த ஒன்றாம் அதிகாரத்துக்கு பிறகு வேதத்தில் எந்த அதிகாரத்திலும் தேவன் தனது வார்த்தையை பயன்படுத்தி எதுவும் படைத்ததாக வரவே இல்லை. அந்த உருவாக்கும் வார்த்தை (CREATING POWER WORDS) மாமிசமாகிவிட்டது என்பதுதான் வேதம் சொல்லும் கருத்து.
இப்பொழுது தேவனும் இயேசுவும் ஒருவரா? என்றால் ஆம் ஒருவரே என்று சொல்லமுடியும்
அதே நேரத்தில் இயேசுவானவர் தான் பூமிக்கு வந்து பிதாவின் சித்தத்தை பூமியில் நிறைவேற்றிய பிறகு தேவனது வலது பாரிசத்தில் போய் அமர்ந்தார்ரே தவிர அவரோடு மீண்டும் ஒன்றாக கலந்துவிடவில்லை:
எனவே தேவனும் இயேசுவும் இருவரா? என்று கேட்டால் ஆம் இருவராயிருக்கும் ஒருவர் என்றேதான் பதில் சொல்லமுடியும்.
தேவன் இருவராயிக்கும் ஒருவர் என்கின்றபோது திரித்துவம் என்ற மூன்று ஆள் தத்துவம் எவ்வாறு உருவானது? என்ற கேள்வி எழலாம்! அதற்க்கு பரிசுத்த ஆவியானவரைபற்றி சற்று விரிவாக ஆராய வேண்டும். அவரைபற்றிய எனது புரிதல்களை ஏற்கெனவே உள்ள கீழ்க்கண்ட தொடுப்பில் ஆராயலாம்!
இயேசு தேவனின் மகிமையின் தர்சொரூபம் என்பதை உணர்த்தும் வேறு சில வசனங்கள்:
ஏசாயா 42:8 நான் கர்த்தர் (சரியான மொழிபெயர்ப்பின்படி நான் யெகோவா), இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.
" தன்னுடைய மகிமையை வேறொருவருக்கு கொடேன்" என்று கர்த்தர் திட்டவட்டமாக சொன்ன வசனத்தின் அடிப்படையில்தான் பார்த்தால் அவர் மகிமையை தன்னிடத்தில் பெற்றுள்ள ஆண்டவராகிய இயேசு வேறொரு தனிப்பட்டவர் அல்ல!
எபிரெயர் 1
3 இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய்
அடுத்ததாக
ஏசாயா:40
3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்
5 கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று
இந்த சத்தத்துக்கு உரியவன் யோவான் என்பதை வேதம் சொல்கிறது
3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்; 4 யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.
யோவானை தொடந்து ஆயத்தபடுத்தப்பட்ட வழியில் வந்தவர் இயேசு கிறிஸ்த்துதான். எனவே கர்த்தரின் மகிமைதான், தேவனின் வார்த்தையோடு மாமிசமான இயேசுவாக வெளிப்பட்டது என்று நான் கருதுகிறேன்.
அடுத்ததாக
சகரியா:
அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள். 13 கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்.
மத்தேயு:
5 அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டு, 7 ஆலோசனைபண்ணினபின்பு, அந்நியரை அடக்கம்பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள்.
இங்கு தனக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையாக முப்பது வெள்ளிகாசை கர்த்தர் கூறுகிறார் உண்மையில் அது இயேசுவுக்கு நிர்ணயிக்கப்பட்டது இது கர்த்தரும் இயேசுவும் முற்றிலும் வேறு வேறு அல்ல என்பதை உணர்த்தவில்லையா?
அடுத்ததாக
எபி 1
5 எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும் நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா
ஜெநிப்பித்தலுக்கும் படைத்தல் அல்லது உருவாக்குதளுக்கும் உள்ள வேறுபாடு உங்களுக்கு தெரியும் என்று கருதுகிறேன். ஒரு பிள்ளை ஜெனிப்பிக்கப்படுவதர்க்கு ஏதாவது ஒரு அடிப்படை வேண்டும் தானாக ஒரு பிள்ளை ஜெநிக்காது. தேவன் தனது குமாரனை ஜெநிப்பித்தேன் என்று சொல்கிறார் அதற்க்கு இணையாக "வார்த்தை மாமிசமானது" என்றும் வசனம் குறிப்பிடுகிறது
இந்த கருத்துக்கள் ஆராய்ந்து பார்த்தால் எல்லோரும் ஒருவருக்குள் ஒருவர் என்பது புரியவரும்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)