இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒரு இந்து சகோதரியின் உண்மை சாட்சி!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
ஒரு இந்து சகோதரியின் உண்மை சாட்சி!
Permalink  
 


எனக்கு மிகவும் வேண்டிய (நான் பார்த்து கேட்டு அனுபவித்த)  எங்கள்  அருகில் வசிக்கும் ஒரு சகோதரியின்   உண்மை  சாட்சி!
 
பரம்பரையாக இந்து  கோவிலுக்கு ஆடுவெட்டும் வழியில் வந்த ஒரு மிகசிறிய கிராமத்தில் வாழ்ந்த அந்த சகோதரி எதிர்பாராத விதமாக ஒரு கிரிஸ்த்தவருக்கு வாழ்க்கைப்பட நேர்ந்தது!
 
எப்பொழுதும் வேதத்தில் தியானமாக இருந்து அதைப்பற்றியே புலம்பிக்கொண்டு இருக்கும் அந்த சகோதரனை அந்த பெண்ணால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இந்து பரம்பரையில் வந்த நான்காவது வரை மட்டுமே   படித்திருந்த அந்த சகோதரிக்கு இந்த கிறிஸ்தவராகிய தனது கணவன் பேசிய எந்த வார்த்தைகளும் புரியவே இல்லை.
 
மிகவும் கீழ்படிதல் உள்ள அந்த சகோதரி தன கணவனுக்கு எவ்விதத்திலும் இடைஞ்சல் கொடுக்கவில்லை தன கணவன் ஆண்டவரைபற்றியும் அவரது இரட்சிப்பு  பற்றியும்  எவ்வளவோ எடுத்து சொல்லியும் அதை அறிவு சார்ந்த நிலையில் புரிந்து கொள்ள முடியாமல் இருந்த அந்த பெண் தனது வாழ்வை தனது பழைய நிலையிலேயே தொடர்ந்தார்.
 
தன  கணவன் அடிக்கடி சொல்லும் பரலோகம், நரகம் மற்றும் நித்யவாழ்வு, பாவத்தில் இருந்து மீட்பு போன்ற காரியங்களை அவர்களால்  சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு ஒரு சிறிய வயிற்றுவலி ஆரம்பித்து இறுதியில் அது தீராத வயிற்று வலியாக சுமார் 6  வருடங்கள் கொடுமை படுத்த ஆரம்பித்துவிட்டது. அந்த வயிற்றுவலி வரும் நேரத்தில் எழும்ப கூட முடியாமல் துடித்து விடுவார்.
 
அனேக மாத்திரைகள் மருந்துகள் உட்கொண்டும் அது தற்காலிக தீர்வாகவே இருந்ததது. இறுதியில் வயிற்றில் என்ன இருக்கிறது என்று ஸ்கேன் பண்ணி பார்த்தபோது வயிற்றில் ஒரு கட்டி இருப்பதும் அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை  கூறினார்.  ஆண்டவரை அதிகம் நம்பியிருந்த அவரது கணவர் மிகவும் நோருங்கிபோனார்.  ஆகினும் திடன்கொண்டு ஆபரேசன் செய்ய முடிவெடுக்கபட்டது.  
 
இந்நிலையில் அந்த சகோதரியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு கிறிஸ்த்தவ அம்மாள் தான் போகும் சபைக்கு ஒரு வல்லமைவாய்ந்த  தேவ ஊழியர்  வருவதாகவும், அங்கு வந்தால் ஒருவேளை சுகம் கிடைக்கலாம் என்று கூறி அழைக்கவே,  அந்த அம்மாளுடன் சேர்ந்து இந்த சகோதரியும் சபைக்கு சென்றார்கள். வீட்டுக்கு வந்த அவர்கள்,  கூட்ட முடிவில் அந்த தேவ மனிதர் ஜெபித்தபோது மின்சாரம்போன்ற ஓன்று தனமீது பாய்ந்ததாகவும் கொஞ்சநேரம் தனக்கு உணர்ச்சி இல்லாமல் போனதுபோல் இருந்ததாகவும் கூறினார்கள்.  
 
சில நாட்களுக்கு பிறகு,  ஆபரேசன் செய்யலாம் என்று அடுத்தட ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் கட்டி எதுவும் இல்லை என்று ரிபோர்ட் சொன்னது.   வயிற்றுவலி எல்லாம்  மறைந்த்விட்டது.  இரண்டு ஸ்கேன்களும் அவரிடம் இருந்தது.  ஒன்றில் கட்டியுடனும் இன்னொன்றில் இல்லாமல்  இருப்பதும் அதை பார்த்தல் அறியமுடியும்.    
 
இச்சம்பவங்களால் தன கணவனின் நம்பிக்கையில் எதோ உண்மை இருக்கிறது   என்பதை ஓரளவு புரிந்துகொண்ட  அந்த பெண், அந்த அம்மாளுடன் சேர்ந்து   சபைக்கு போக ஆரம்பித்தார்கள். இவ்வாறு  ஒன்றும் புரியாமல் எதோ சபைக்கு போய்கொண்டு இருந்தார்களே தவிர  அந்த சகோதரிக்கு வேதத்தை படித்து புரியும் அளவுக்கு  போதுமான அறிவு நிலை இல்லை.   
 
இந்நிலையில் ஒருநாள் அவைகள் போன சபையில் "பரலோக வாழ்வும் நரக அக்கினியும் என்ற ஒரு நாடகம் காட்டப்பட்டது.   அதில் பரலோகம் நரகம் பற்றிய சில காட்சிகள் நடித்து காட்டப்பட்டன. அதை பார்த்து இருதயத்தில் தொடப்பட்ட அந்த சகோதரிக்கு, உண்மையில் நரகம் பரலோகம் ஜீவபுத்தகம் என்று இருக்கிறதா?  என்பதை குறித்து அதிகம் யோசிக்கலானர்கள். 
 
ஏற்கெனவே தன கணவன்  அதுசம்பந்தமாக பலமுறை தன்னிடம் பேசியிருப்பது  
நினைவில் வந்தது!   இயேசுவை அறியாதவர்கள் செல்லும் இடம் நரகம் என்றும் அங்கு வேதனை உண்டு என்ற வார்த்தையும் சேர்ந்து அவர்களை மிகவும் குழப்பியது. வேதத்தை படித்து பார் என்று கணவன் சொன்னாலும் அவர்களால் அந்த வேதத்தை படித்து பொருள்கொள்ள முடியவில்லை.
 
இறுதியில் ஒருநாள் சமையல் கட்டில் சமையல் செய்துகொண்டு இருக்கும் போது  
 
"ஆண்டவரே எனக்கு ஒன்றுமே புரியவில்லை! இந்த நரகம் சொர்க்கம் இருக்கிறதா? என் கணவர் சொல்வது மற்றும்  சபையில் சொல்வது எல்லாம்   உண்மையா? அப்படி ஒரு இடம் இருந்தால் அங்கு நான் போகவே கூடாது! அதற்க்கு என்ன செய்யவேண்டும்?   உண்மையில் அப்படி ஒரு இடம் இருக்கிறதா? எனக்கு வேதத்தை படித்து புரியும் அளவுக்க் ஞானம் இல்லை! தயவுசெய்து   எனக்கு தெரியபடுத்தும் என்று கண்ணீரோடு கதறி அழ  "திடீர் என்று அவர்கள் கண்ணுக்கும் முன்னால் பரலோக காட்சியை ஆண்டவர் காட்டினார்"  ஜீவ புத்தகம் அங்கு இருப்பதும் உலகில் நடக்கும் அனைத்து செயல்களும் அதில் தானாக பதிவாவதும்  போன்ற நிலையில் ஆரம்பித்து, பாதாளம் நரகம் இயேசுவின் வருகை எப்படி இருக்கும் என்பது வரை தரிசனமாகவே ஆண்டவர் அந்த சகோதரிக்கு காட்டிவிட்டார்.
 
வேதத்தை சரியாக வாசிக்க கூட தெரியாத அவர்கள்  வேத வசனங்களை அப்படியே சொல்வதும்,  அது  வேதத்தில்  எந்த இடத்தில் இருக்கிறது என்று அவர்கள் கணவன் சொல்வதும்  இன்று அடிக்கடி நடக்கிற ஒரு காரியமாக ஆகிப்போனது.  இவர்களுக்கு  தேவன் வசனத்தை சொல்வதோடு அதன்  பொருள்களை மற்றும் விளக்கத்தை  ஒரு  படம்போலவே பலமுறை காட்டியிருக்கிறார்.
 
உதாரணமாக "வலுவாக தொனிக்கும் எக்காள சத்தத்தோடு" என்று வசனம் இருந்தால்,  அந்த எக்காளதொனி எப்படி இருக்கும் இயேசு எப்படி வருவார் என்பது முதகொண்டு தேவன் அந்த சகோதரிக்கு விளக்கியுள்ளார்.  மேலும் முதலாம் வானத்தில் என்ன இருக்கிறது இரண்டாம் மூன்றாம் வானத்தில்  என்ன   இருக்கிறது போன்ற பல காரியங்களை படமாகவே தேவன் அவர்களுக்கு காட்டியிருக்கிறார். அவர்கள் சொல்லும் அனேக காரியங்கள் அப்படியே வேத வசனத்தோடு ஒத்துபோவதை அறியமுடிகிறது.

உண்மையை அறிந்துகொண்ட அந்த சகோதரி,  "ஐயோ யாரும் அந்த கொடூர நரகத்துக்கு போய்விட கூடாது" என்ற வாஞ்சையில்   தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் இயேசுவை பற்றிசொல்லி ஆண்டவரண்டை ஜனங்களை வழி நடத்துகிறார்கள்!  
 
இதிலிருந்து என்ன தெரிகிறது?

வேதத்தை ஆராய அதிக அறிவோ சிறந்த ஞானமோ  மனிதனுக்கு தேவையில்லை!   

படிக்காத பாமரனாக இருந்தாலும் தாகத்தோடு கேட்பவனுக்கு இலவசமாகமே 
ஜீவதண்ணீர் கிடைக்கும் என்பது புரிகிறது.
 
21 அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.
 
 
நம் தேவன் அன்றும்  இன்றும் என்றும் ஜீவனுள்ளவர்!
 
அவருக்கே மகிமை சதா காலங்களிலும் உண்டாவதாக!    ஆமென்! 


          
 
    
      



-- Edited by SUNDAR on Wednesday 3rd of February 2010 07:00:29 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard