இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிருஷ்ணர் மாடு மேயத்தாராம்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
கிருஷ்ணர் மாடு மேயத்தாராம்!
Permalink  
 


இன்று  காலை  நான் அலுவலகம் வந்துகொண்டிருக்கும் போது கொஞ்சம் தூரத்தில் ஒரு வயதான முதியவர் கோலை உதறிக்கொண்டு மெதுவாக நடந்து வருவதை கண்டேன். மிக மெதுவாக வாகனத்தில் வந்த நான், அவர் கையை நீட்டினால் ஏதாவது காசு கொடுக்க வேண்டும் என்று நினைத்துகொண்டேன். மிக வயது முதிர்த,  நெற்றி நிறைய திருநீறு மற்றும் கழுத்தில் ருத்ராட்சம் என்று அணிந்து  ஒரு ஆன்மீகவாதிபோல் தென்பட்ட அவர்,  நான் எதிர்பார்த்ததுபோலவே  என்னை பார்த்து கையை நீட்டினார்.      
 
அவருக்கு ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்துவிட்டு நகர்ந்த என்னிடம், ஆண்டவர் இயேசுவைப்பற்றி அவரிடம் சொல் என்று அறிவுறுத்தினார். உடனே திரும்பி வந்து. "தாத்தா நீங்கள்  இயேசுவை ஏற்றுக்கொள்ளவேண்டும்" என்று கூறினேன். உடனே அவர் "எல்லாமே ஒன்றுதான், இறைவன் ஒருவர்தான்,  மனிதர்கள்தான் தங்கள் இஸ்டம்போல் அனேக பிரிவுகளாக  பிரித்துகொண்டார்கள். கிருஷ்ணர் மாடு மேய்த்தார் இயேசு ஆடுமேயத்தார் இருவரும் ஒருவர்தான் என்று அநேகர் சொல்லும் பதிலைபோல் ஒரு பதிலை கொடுத்தார். நான் அவரது கருத்துக்கு மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை காரணம் எல்லா  மனிதர்களுக்கும்   இறைவன் ஒருவர்தான் என்று கருத்து எனக்கும் உண்டு!   
 
நான் அவருக்கு கொடுத்த பதிலை ஒரு சிறு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன்,  அது இதுபோல் எல்லாம் ஒன்றுதான் என்று பேசுபவருக்கு பதிலளிக்க  பயனுள்ளதாக இருக்கும்!
 
எல்லாம் ஒன்றுதான் என்பதை நான் மறுப்பதற்கில்லை ஒன்றாகவே  இருந்துவிட்டு போகட்டும் அதைப்பற்றி எனக்கு கவலையும் இல்லை! ஆனால் நாம் யார் காலத்தில் எந்த நாட்களில்   வாழ்கிறோம் அந்நாட்களில் இருக்கும் இறைவனின் கட்டளை மற்றும் திட்டம் என்ன  என்பதை ஆராய்ந்து அதன்படி செயல்பட வேண்டும் அப்பொழுதுதான் நம்மால் இறைவனடி சேரமுடியும். . 
 
ஐ பி கோ எனப்படும்  இந்திய குற்றவியல்  சட்டம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சுமார் 1860௦களில்  இயற்றப்பட்டது அதன்பிறகு  தேவைப்படும்போதெல்லாம் அனேக புது குற்றங்கள் அதோடு சேர்க்கப்பட்டு தேவையில்லாத ஷரத்துக்கள் நீக்கப்பட்டு, இன்று இன்று நடைமுறையில் இருக்கும் சட்டத்துக்கும் முதலில் இயற்றப்பட்ட சட்டத்துக்கும் அநேக வேறுபாடுகள் ஆகிவிட்டது. சட்டம் இயற்றப்பட்ட காலத்தில்  நவீன ஆயுதங்கள்  கம்ப்யூடர் போன்றவை இல்லை எனவே அது சம்பந்தப்பட்ட குற்றங்கள்  எதுவும் சேர்க்கப்படவில்லை. தற்பொழுது  நடைமுறையில் உள்ள சட்டத்தில் நவீன கல சைபர் கிரைம்ஸ்   எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளது.
 
இந்த 2010௦ ஆம் ஆண்டில் வாழும் நாம், இந்த காலத்தில் என்ன சட்டம் நடைமுறையில் இருக்கிறது என்பதை அறிந்து அதற்க்கு ஏற்றாற்போல் நடந்தால்தான் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும் மாறாக எல்லாம் ஒரே சட்டம்தான், அன்று சொன்ன அரசாங்கம்தான் இன்றும் சொல்கிறது நான் பழையனவற்றை மட்டுமே எடுத்துகொள்வேன் புதியதை கண்டுகொள்ளவே  மாட்டேன்   என்று பிடிவாதம் பிடித்தல், நவீன குற்றங்கள் அடிப்படையில் நீங்கள் தண்டனை அடையநேரிடும்.
 
எனவே இறைவன் ஒர்வர்தான்! அனால் பூர்வ காலங்களில் மனிதனின் மீட்புக்கு பல்வேறு தூதர்கள் மூலம் வழிகளை சொன்ன தேவன், எத்தனை தூதர்களை அனுப்பியும் மனிதனை சரியான பாதையில் திருப்ப முடியாத காரணத்தால்,    இந்த இறுதி காலத்தில் எல்லோரின் மீட்புக்காகவும் தானே பூமிக்கு வந்து நம்முடைய பாவங்களுக்காக மரித்து நமக்கு இரட்சிப்பை வாங்கி தந்துள்ளார்.
 
"எல்லாம் ஒன்றுதான் நான் பழையதையே பிடித்துகொண்டு நிற்ப்பேன்" 
எனறு  நீங்கள் சாதித்தல்  இன்று புதிதாக நடைமுறையில் உள்ள  இறைவன்  இலவசமாக  ஏற்ப்படுத்திகொடுத்துள்ள சுலபமான  இரட்சிப்பை இழந்து போவீர்கள்! .
 
ரயிலில் இருந்து இறங்கிவேரும்போது பொதுவாக சோதனை எதுவும் நடக்காது!ஆனால அன்றைய தினம்  உள்ள  கட்டளைப்படி எதாவது சோதனை நடந்துகொண்டிருந்தால் அதற்க்கு  நாமும் நிச்சயம் உடன்பட்டாக வேண்டும் இல்லை நான் நல்லவன் எந்த தவறும் செய்யவில்லை,  மேலும்   நேற்றெல்லாம்கூட  இதுபோல்  சோதனை இல்லை, இன்று மட்டும் புதியதாக  செய்யும் இந்த சோதனைக்கு நான் உடன்படமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால் நிச்சயம்  தண்டனைதான் கிடைக்கும்.  
 
அதற்க்கு இணையாக இறைவன் நேற்றுவரை  எதை கட்டளயிட்டார் என்பது ஒரு பொருட்டல்ல இன்று உங்களைபார்த்து சொல்கிறார் "நீ இரட்சிக்கப்படவேண்டுமா மனிதனாக வந்து உன் பாவங்களுக்காக மரித்த இயேசுவை விசுவாசி" என்ற ஒரு  சுலபமான கட்டளைதான்.  இல்லை நான் ஏற்கமாட்டேன், முந்தய   காலத்தில்  அப்படியில்லை, அது இது என்று சொல்லி அவரின் அந்த சுலபமான கட்டளையை  ஏற்றுக்கொள்ள   மருபபோமானால் தண்டனைக்கு தப்புவது மிக மிக கடினம்!     
 
இன்னும்கூட ஒரு உதாரணம் தருகிறேன்.
 
ஒருவர்  வேலைபார்த்த அலுவகத்தை  கட்டிட ஓணர் இடித்து புதிதாக கட்ட  விரும்பியதால், வேறு ஒரு இடத்துக்கு மாற்றபட்டது.  மறுநாள் புது அலுவலகத்துக்கு வர வேண்டிய அவர் நான் நேற்றுவரை  வேலை  பார்த்த அலுவலகத்தை  விட்டு வரவே மாட்டேன், அங்கு வேலை பார்த்தால் என்ன இங்கு வேலை பார்த்தால் என்ன? எல்லாமே வேலைதானே என்று பழைய இடத்திலேயே அமர்ந்து கொண்டு இருந்தால்  அதற்குரிய சம்பளமோ பலனோ கிடைக்கபோவது இல்லை.  நாளை அப்படி ஒரு அலுவலகமே அங்கு இல்லை என்று சொல்வதற்கு எதுவாக எல்லாம் உடைக்கப்பட்டு போய்விடும். அப்பொழுது ஐயோ நான் செய்த வேலைகளுக்கெல்லாம்  எந்த பலனும் இல்லாமல் போய்விட்டதே என்று வருந்த நேரிடும்!
 
ஆனால் நீங்கள் கொஞ்சம் சிரமத்தை பார்க்காமல் மிக அருகில் இருக்கும் (இயேசுவை ஏற்றுக்கொண்டு)  புது அலுவலகத்து (கிரிஸ்த்தவத்துக்குள்)  வந்து பார்த்தால், பழைய அலுவலகத்தில் இருந்த எல்லா பொருட்கள் மற்றும் உங்கள் இருப்பிடம் எல்லாமே அருமையாக வடிவமைக்கப்பட்டு இருப்பதை பார்க்க முடியும். உங்கள் வேலைக்கு தகுந்த சம்பளமும் (நித்ய வாழ்வும்) இங்கு கிடைக்கு. எனவே.  வெளியில் நிற்று சுற்றி சுற்றி பார்த்து  இது பழைய அலுவலகம்போல் இல்லை என்று முனுமுனுப்பதை விட துணிந்து இயேசு என்னும் வாசல் வழியே  உள்ளே வாருங்கள் என்று அன்புடன் அழைக்கிறோம்!      
 


-- Edited by SUNDAR on Thursday 4th of February 2010 05:09:06 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard