சபைகளிலும் கூட்டங்களிலும் தொலைகாட்சியிலும் சகோதரிகள் செய்தி கொடுப்பதை பலமுறை பார்க்க முடிகிறது. அது சரியா அல்லது தவறா என்று எனக்கு புரியவில்லை.
எனக்கு அது பெரிய தவறுபோல் தெரியவில்லை. ஏனெனில் அது அநேகருக்கு பயனுள்ளதாக அமைகிறது என்றே கருதுகிறேன். எப்படியாவது சிலபேர் இரட்சிக்கப்படுவது சரியான செயல்தானே? ஆத்துமாக்களை ஆதயப்படுத்த எல்லோருக்கும் எல்லாம் ஆனேன் என்பதுபோல் பவுலே எழுதியிருக்கிறார்
ஆகினும் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்
34 சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.
35 அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.
ஸ்திரீகள் சபையில் பேசுவது அயோக்கியம் என்று மிக தெளிவாக சொல்லியிருக்கிறார். அப்படியிருக்க இவ்வாறு ஸ்திரிகள் சபையில் பேசுவது வேதப்படி தவறில்லையா? அல்லது இதற்க்கு வேறு ஏதாவது பொருள் இருக்கிறதா?
தெரிந்த சகோதரர்கள் கொஞ்சம் விளக்குங்கள்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஸ்திரிகள் ஆலயத்திலும் கூடத்திலும் ஏன் பேசகூடாது என்றால்
(1 ) ஆண்கள் இருதயம் அவர்களுடைய அழகை அவர்களுக்கு அறியாமலே இச்சிக்க வைக்கிறது, தாவிது உரியாவின் மனைவியை பார்த்தால் ஏற்பட்ட பெரிய பாவம் தேவன் மேல் அதிகம் வைராக்கியம் வைத்திருந்த தாவிது அவளை பார்த்ததும் அவள் மேல் இச்சித்து அவளை சயனித்தான்
(2 ) சிம்சோன் மற்றும் சாலமோன் இவர்கள் பாவத்துக்கு முக்கிய காரணமே பெண்ணை இச்சிததனல்தான் பெண்ணின் உபதேசத்தை கேட்டதினல்தான்
(3 ) ஏன் தேவன் உண்டாக்கிய ஆதாம் கூட ஏவாளின் வார்த்தையை கேட்டதலத்தான் அவனும் பாவத்தில் விழுந்தான்......பவுல் தன் வசனத்தில் ஆதாம் வஞ்சிக்க படவில்லை ஏவாள் தான் வஞ்சிக்க பட்டாள் என்று கூறுகிறார்
ஒரு சிறிய உதாரணம் : குடும்பமாய் கிறிஸ்தவ டிவி பார்த்து கொண்டு இருந்தோம் அப்பொழுது ஒரு சகோதரி ஒரு கூட்டத்தில் பேசி கொண்டு இருந்தார்கள் அதை பார்த்து என் சகோதரி அவர்கள் எப்படி அழகா இருக்காக பாரு சரியான கலர் என்று என் சகோதரி வர்ணித்து கொண்டு இருந்தால்
ஒரு பெண்ணே அழகாய் இருக்கும் ஒரு சகோதரியை இப்படி சொல்கின்றார்கள் என்றால் ஆண்கள் நிச்சயமாக அவன் மிகவும் நல்லவனாக இருந்தாலும் சரி அவன் இருதயம் தடுமாறும் என்பது என் கருத்து ஏன் என்றால் இன்று சாத்தான் பயன் படுத்தும் பெரிய ஆய்தம் தான் இது ஒரு அழகான பெண்ணை வைத்து பல ஆண்களை அவன் சுலபமாக விலவைக்கிறான் (பிலேயாமும் இஸ்ரவேல் நடுவில் பெண்களை அனுப்ப சொன்னார்) வேதம் கூட பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் பாவத்தை விட்டு விலகி ஓடுங்கள் என்று கூறுகிறது ஒரு சிலர் இப்படி சொல்லலாம் '' அப்படி ஒன்றும் இல்லை எனக்கு அப்படி தோன்றவும் இல்லை நான் மிகவும் அழகான சகோதரிகள் பேசினாலும் என் எண்ணம் அப்படி இருக்காது என்று அனால் வேத வசனம் கூட கலாத்தியர் 5 -23 அதிகாரத்தில் ஆவின் கனி பற்றி பவுல் சொல்லும் போது இச்சை அடக்கம் என்று தான் சொல்லி இருக்கிறார் . முடிவுக்கு வருகிறேன் என்னுடைய கருத்து என்னவெனில் கர்த்தரின் வைராக்கிய காரனாகிய பவுல் என்ற பரிசுத்தவான் ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே என்று அப்படி ஒரு வார்த்தையை அவர் கர்த்தரின் வெளிப்பாடு இல்லாமல் சொல்லிருக மாட்டார் என்பது என் கருத்து
\\எனக்கு அது பெரிய தவறுபோல் தெரியவில்லை. ஏனெனில் அது அநேகருக்கு பயனுள்ளதாக அமைகிறது என்றே கருதுகிறேன். எப்படியாவது சிலபேர் இரட்சிக்கப்படுவது சரியான செயல்தானே? ஆத்துமாக்களை ஆதயப்படுத்த எல்லோருக்கும் எல்லாம் ஆனேன் என்பதுபோல் பவுலே எழுதியிருக்கிறார் //
சிலர் இரட்சிக்கப்படுவது ok ஆனால் பலர் விழுவார்களே பெண்கள் சபைகளிலும் கூட்டங்களிலும் பேச கூடாது அது சகோதர்களுக்கும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கும் இச்சையை அவர்களுக்கே தெரியாமல் உருவாக்கும் .........................
தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் தெரியபடுத்தவும்
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
நண்பர் எட்வின் அவர்களின் வாதம் மிக அழகாக இருக்கிறது; ஆம்,அது பெண்களைப் பற்றியதாக இருப்பதாலோ என்னவோ..?
// ஒரு பெண்ணே அழகாய் இருக்கும் ஒரு சகோதரியை இப்படி சொல்கின்றார்கள் என்றால் ஆண்கள் நிச்சயமாக அவன் மிகவும் நல்லவனாக இருந்தாலும் சரி அவன் இருதயம் தடுமாறும் என்பது என் கருத்து ஏன் என்றால் இன்று சாத்தான் பயன்படுத்தும் பெரிய ஆய்தம் தான் இது ஒரு அழகான பெண்ணை வைத்து பல ஆண்களை அவன் சுலபமாக விழ வைக்கிறான் //
சகோதரர் எட்வின் அவர்களின் கருத்தின்படி பெண்களின் போதகத்தால் ஆண்கள் திருந்துவதற்கு பதிலாகக் கெட்டுவிடுவார்கள் என்பது மெய்யானால் போதிக்கும் ஆண்களின் கவர்ச்சியினால் பெண்களும் கெட்டுப்போக வாய்ப்புள்ளது;
EDWIN WROTE: ///பெண்கள் சபைகளிலும் கூட்டங்களிலும் பேச கூடாது அது சகோதர்களுக்கும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கும் இச்சையை அவர்களுக்கே தெரியாமல் உருவாக்கும் .........................///
சகோதரர் எட்வின் அவர்களின் கருத்து வரவேற்க்கதக்கது. டிவியில் சகோதரிமார்கள் செய்தி கொண்டிருக்கும் போதும் மற்றும் பாடல்கள் பாடும்போதும் அவர்களின் ஒப்பனை மற்றும் பல காரியங்கள் ஆண்களை இடற செய்ய வாய்ப்பு இருக்கிறது. இதை அறிந்துதான் பவுல் இவாறு கட்டளை இட்டு இருக்கிறார் என்றே நானும் கருதுகிறேன்.
அதே நேரத்தில் இடரல் என்பது எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்பது சகோ. சில்சாம் கருத்து!
இப்பொழுது நமது வாதம் என்னவென்றால் பவுல் அவர்கள் பெண்களுக்காக இந்த குறிப்பிட்ட கட்டளையை கொடுத்ததால்தான் இந்த கேள்வியே எழுந்தது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.
நல்ல காரியமே என்றாலும் தேவனின் கட்டளைக்கு விரோதமாக செய்யப்படும் காரியம் தவறு என்றே கருதப்படும் என்பதை வேதம் பல இடங்களில் வலியுறுத்துகிறது.
இந்நிலையில்
வேதத்தின் அடிப்படையில் பெண்கள் சபையில் செய்தி கொடுப்பது சரியா அல்லது அயோக்கியமா?
பவுல் சொல்வதை கருத்தில் ஏற்று அது அயோக்கியம் என்று சொன்னால், ஜாய்ஸ் மேயர் போன்ற மிகப்பெரிய ஊழியர்கள் வேத கட்டளையை புறங்கணிக்கின்றனரா?
அறிந்தவர் சற்று விளக்கவும்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
பவுல் பெண்கள் ஊழியம் செய்வதைக்குறித்தோ சபையை நடத்துவதைக் குறித்தோ எந்த கட்டுப்பாடும் விதித்திருப்பதாக நான் கருதவில்லை;அது முழுவதும் சபையாரின் கட்டுப்பாடு சம்பந்தமானது;
தற்கால அமைப்பில் அன்றைய சபையானது நடைபெறவில்லை;அன்று சபை கூடிவருதல் என்றாலே கலந்துரையாடல் பாணியில்தான்; அந்த சமயத்தில் எல்லோரும் ஒரே நேரத்தில் அவரவர் கருத்தைப் பேசினதால் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது; அதனைத் தவிர்க்கவே இந்த கட்டுப்பாடுகள் என்று நான் கருதுகிறேன்.
பவுல் பெண்கள் ஊழியம் செய்வதைக்குறித்தோ சபையை நடத்துவதைக் குறித்தோ எந்த கட்டுப்பாடும் விதித்திருப்பதாக நான் கருதவில்லை;அது முழுவதும் சபையாரின் கட்டுப்பாடு சம்பந்தமானது;
தங்களது இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை சகோதரர் சில்சாம் அவர்களே
11 ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். 12 உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்
என்று பவுல் மீண்டும் ஒருமுறை தனது நிருபத்தில் குறிப்பிட்டிருக்கிறார். எனவே இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கருத்து என்றே நான் கருதுகிறேன்.
ஸ்திரி உபதேசம்பண்ணலாம் என்று கருதினால் பவுல் சொல்வதை கருத்தில் எடுக்காதீர்கள்
இல்லை பவுல் வார்த்தைகளை நீங்கள் மதித்தால் ஸ்திரிகள் உபதேசிக்ககூடாது என்ற பதில்தான் சரியானது!
-- Edited by இறைநேசன் on Tuesday 9th of February 2010 04:35:57 PM
கர்த்தருடைய சபை என்பது ஒரு வகையில் யுத்த களம். யுத்த களத்தில் ஆண்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. ஆனால் ஆண்கள் யுத்த களத்திற்கு செல்ல தயாராக இல்லாத போது கர்த்தர் பெண்களையும் அனுப்புவார் கீள்காணும் வசனங்களே அதற்கு ஆதாரம். பெண்கள் சபையில் பேசுவது என்பது கர்தருடைய வார்த்தயை சொல்ல ஆண்கள் போதுமான அளவில் இல்லை என்பதையே காட்டுகிறது.
சகோதரரே சபையில் சகோதரிகள் செய்தி கொடுப்பது சரியாய் தவறா என்ற கேள்விக்கு சரியான பதில் தெரியாதபடியால் நான் மறுபடியும் இந்த தலைப்பை பற்றி சற்று ஆராயலாம் என்று கருதுகிறேன்.
சுவிசேஷம் என்றால் நற்செய்தி என்று நான் நினைக்கிறன். தேவன் ஒருவருக்கு செய்த நன்மையை இன்னொருவருக்கு தேவைபடுவோருக்கு சொல்வது எந்த விதத்தில் தவறு என்று சகோதர்கள் நினைகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.
சுவிசேஷம் சொல்வது என்மேல் விழுந்த கடமை என்று பவுல் கூறி இருக்கிறாரே..! ........ அது பவுலுக்கு மட்டும்தானா ..!
I கொரிந்தியர் 9:16சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்தகடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.
ஒருவேளை என் தாய்க்கு இன்னொரு வயதான பாட்டி சுவிசேஷம் அறிவித்திராவிட்டால் எங்களுடைய நிலைமை எப்படி இருந்திருக்கும்.
பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட்ட ஒரு ஸ்திரி இன்னொருவருக்கு ஆண்டவருடைய அன்பை சுவிசேஷமாக சொல்வது தனிப்பட்ட இடமாக இருந்தால் என்ன ஒரு குழுவாக இருந்தால் என்ன சபையாக இருந்தால் என்ன கர்த்தரை பற்றி சொல்வதற்கு எல்லாருக்கும் உரிமை இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.
எனக்கு தெரிந்த உண்மையை நான் அறிவிபதற்கு அதுவும் ஆண்டவருடைய பெருமைகளையும் மகத்துவங்களையும் தெரிவிபதற்கு சபையோ அல்லது வேற எந்த ஒரு இடமோ தடையாய் இருக்குமோ என்று எனக்கு தெரியவில்லை.
இது எனக்கு மட்டுமல்லாமல் ஒவ்வொருவருக்கும் பொருந்தும் என்றே நான் கருதுகிறேன்.
34 சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.
35 அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.
சபையில் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள் என்றுதானே சொல்லி இருக்கிறார் எப்படி பேசாமலிருக்க வேண்டும்
வீணான வார்த்தைகளை பேசாமல் அல்லது அல்லது தங்களுடைய சொந்த கருத்துகளை தெரிவிக்காமல் இருக்கும்படியா அல்லது எதிர்த்து பேசாமலிருக்கும் படிய என்று எனக்கு தெரியவில்லை
11 ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். 12 உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்
மேல உள்ள வசனத்தை பார்க்கும்போது நான் உத்தரவு கொடுகிறதில்லை என்றுதான் குரிபிட்டுல்லாரே தவிர கர்த்தர் அனுமதிக்கவில்லை என்று சொல்லவில்லையே..!
கர்த்தருடைய மேன்மையையும் அன்பையும் மகத்துவத்தையும் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் யாருக்கும் சொல்லலாம் என்றே நான் கருதுகிறேன்.
-- Edited by Stephen on Wednesday 5th of May 2010 03:01:18 PM
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
Stephen wrote:பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட்ட ஒரு ஸ்திரி இன்னொருவருக்கு ஆண்டவருடைய அன்பை சுவிசேஷமாக சொல்வது தனிப்பட்ட இடமாக இருந்தால் என்ன ஒரு குழுவாக இருந்தால் என்ன சபையாக இருந்தால் என்ன கர்த்தரை பற்றி சொல்வதற்கு எல்லாருக்கும் உரிமை இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.
இந்த தலைப்பை பொறுத்தவரை இன்னும் ஒரு சரியான முடிவை எட்டவில்லை என்பது உண்மை. பவுல் அவர்கள் ஆண்டவரைப்பற்றி ஸ்திரிகள் எங்கும் சொல்லகூடாது என்றோ அவர்கள் சுவிசேஷம் அறிவிக்க கூடாது என்றோ எங்கும் சொல்லவில்லை.
ஆனால் அவர்கள் சபைகளில் எதைபற்றியும் பேசகூடாது, அமர்ந்திருக்க வேண்டும் என்று மிக தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.
I கொரிந்தியர் 14:34சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.
இரண்டாவது உபதேசம் செய்யயும் அவர்களுக்கு அதிகாரம் இல்லை
தீமோத்தேயு 2:12உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.
என்று சொல்வதோடு அதக்கு காரணமும் அவர் சொல்கிறார்
I தீமோத்தேயு 2:14மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.
அதாவது ஸ்திரியானவள் சுலபமாக வஞ்சிக்கபடுவதொடு புருஷர்களையும் வஞ்சனைக்குள் தள்ளிவிட்டுவிடுவார்கள். எனவே அவர்கள் அமைதலாய் இருப்பதுதான் நல்லது என்று நானும் கருதுகிறேன்.
மற்றபடி இவ்வாக்கியங்களை நமது வசதிக்கேற்ப பொருள் கொண்டு வார்த்தைகளை மதிக்காமல் ஸ்திரிகள் பிரசங்கம் பண்ணினால், ஓன்று பவுல் எழுதியது எல்லாமே தேவனின் வார்த்தையல்ல அதில் அவருடைய தனிப்பட்ட அபிப்ராயம் அடங்கியள்ளது அது வேத கட்டளையல்ல என்று ஏற்க்க வேண்டும், இல்லை அவர் எழுதியது எல்லாமே ஆவியானவரின் வார்த்தைகள் என்று கருதினால் அதற்க்கு கீழ்படிந்து ஸ்திரிகள் உபதேசிப்பதை கைவிடவேண்டும்.
ஒருவர் தானே நிரூபங்களில் உள்ள வார்த்தைகளை மீறி நடந்துகொண்டு அதில் உள்ள கருத்துக்கள்பற்றி இன்னொருவருக்கு போதனை பண்ணுவது ஏற்றதல்ல!
பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட்ட ஒரு ஸ்திரி இன்னொருவருக்கு ஆண்டவருடைய அன்பை சுவிசேஷமாக சொல்வது தனிப்பட்ட இடமாக இருந்தால் என்ன ஒரு குழுவாக இருந்தால் என்ன சபையாக இருந்தால் என்ன கர்த்தரை பற்றி சொல்வதற்கு எல்லாருக்கும் உரிமை இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.
நீங்கள் சொல்வது உண்மைதான் இரட்சிக்கப்பட்ட ஒரு ஸ்திரி அவர்களுடைய சகோதரி இடத்தில் மற்றும் அவர்கள் தோழிகளின் இடத்தில் சொல்லலாம் அது எல்லோர்மேலும் விழுந்த கடமை ஆனால் சபைகளில் கூட்டகளில் சொல்லவேண்டும் என்றால் யோசிக்க வேண்டிய ஒன்று
என் கருத்து என்னவெனில்
34 சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.
35 அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே
ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே
பவுல் அவர்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள் என்று கூறி இருந்தாலும்
சரி அது பரிசுத்தவான் கருத்து அல்லது ஆலோசனை என்று கூறி இருக்காலாம்
ஆனால் அவர்அவர்கள்சபையில்பேசுவது அயோக்கியமாயிருக்குமே என்று வெளிப்படையாய் கூறியுள்ளார்
அவர்கள் பேசுவதை அவர் அயோக்கியம் என்கின்றார்
அயோக்கியம் என்றால் என்ன
34 சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.
வேதமும் அப்படியே சொல்லுகிறது.
வேதம் சொல்லியும் இப்படி செய்கின்றார்கள் இது தவர் இல்லையா
என்று தோன்றலாம் ஆனால் இதை நான் எழுதும் பொழுது எனக்கு
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னவைகள் ஞாபகத்திற்கு வருகின்றது ( தொடரும் )...............................
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)