எனக்கு சிறிய டவுட் இருக்கு பிரதர், ஏன் பெண்கள் பேசினால்ஆண்களை இச்சிக்க வைக்கிறது, அப்போ ஆண்கள் சபையில் பேசினால் பெண்கள் இச்சையில் விழுந்திர மாட்டாங்களா??
இச்சை என்பது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது என்றாலும் சகோதரிமார்களில் அநேகர் ஆண்களை இச்சித்து பின்னால் செல்வது இல்லை. நான் அறிந்தவரை ஒரு பெண் என்பவள் ஒரு ஆணின் அவயங்கள் தோன்றத்தை வைத்து அவனை ஏற்பதை விட அவனின் குண நலன்கள் மற்றும் திறமைகள் செயல்பாடுகள் இவற்றின் அடிப்படையிலேயே கவரப்படுகிறாள்.
ஆனால் ஆண் அப்படியல்ல. ஒரு பெண்ணின் அவயங்கள் மற்றும் முகத்தோற்றத்தால் சுலபமாக கவரப்படுகிறான். பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள் இறைவனின் படைப்பும் அப்படியே அமைக்கப்பட்டுள்ளது. அநேக இடங்களில் விலைமகள்கள் தொழில் செய்வதற்கும் அதுவே காரணம். பூவை தேடித்தான் வண்டுவரும். வண்டை தேடி எந்த பூவும் போவது கிடையாது.
வேத வசனங்களின்படி பார்த்தாலும் போத்திபாரின் மனைவி போன்று ஒருசிலன்றே ஆணை பலவந்தமாக அடைய முயற்சித்தார்கள்.
ஆனால் ஆண்களிலோ யாக்கோபு லேயாளை விரும்பினான், யூதா - மருமகள் தாமார், அம்னோன்- சகோதரி தாமார், அதோனியா-அபிஷக், தாவீது- உரியாவின் மனைவி பத்சேபாள் , சிம்சோன் -தெலீலாள், மஹா ஞானி சாலமோன் -
I இராஜாக்கள் 11:1ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான்.
இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
இது படைப்பின் காரணராகிய தேவனுக்கு தெரியாதது அல்ல. எனவேதான் அவர் பெண்களை அமைதலாய் இருக்க வேண்டும் என்றும் சபையில் உபதேசம் செய்யவேண்டாம் என்றும் கூறியிருக்கிரார் என்று நான் கருதுகிறேன்.
(இன்று அதர்க்கெல்லாம் மேலே பொய் டிவியில் டான்ஸ் ஆடுவதும் குக்ளோஸ்அப்பில் முகத்தை பலமுறை காட்டும் நிலைக்கு வந்துவிட்டொம்)
அப்படியல்ல, ஆண்கள் பெண்களை இச்சிப்பது போல நானும் ஆண்களை இச்சித்துவிடுவேன் என்று சந்தேகம் இருக்குமானால் அவர்களின் முகங்களை பார்க்காமல் தவிர்த்து செவிகளில் செய்திகளை மாத்திரம் கெடுப்பது நல்லது.
இடறல் என்பது எல்லா இடங்களிலும் இருக்கிறது. அது அவசியம் என்று ஆண்டவரே சொல்கிறார்.
மத்தேயு 18:7இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம். ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
ஆனால் ஏற்ற சமயத்தில் எந்த புலன்களை மூட வேண்டுமோ அதை செய்வது நம்முடைய செயல்பாட்டில் இருக்கிறது. வேத வசனமே நமக்கு ஆதாரமாக இருக்க கடவது.
பிறரை இடறல் அடைய விடாமல் பார்த்துக்கொள்வதும் கூட நமது கடமைதான். அப்படி ஒரு நிலை வரும்போது அவர்களுக்காக ஜெபித்துவிடுவது நல்லது.
எதிர்த கருத்து இருக்குமானால் முன்வைக்கலாம்.
-- Edited by SUNDAR on Monday 13th of November 2017 07:19:21 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
34 சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.
வேதமும் அப்படியே சொல்லுகிறது.
சகோதரரே !
பவுல் ஏன் சொல்லிருக்க கூடும் ! என்பதில் என் சிறிய கருத்து ! கடவுளுக்கு சித்தமானால் இப்பதில் சரியாய் ஆகட்டும்!
பவுல் (சவுல்) ஒரு பரிசேயன் ! நியாயப்பிரமாணத்தின் படி நிலை நின்றவர்
பிலிப்பியர் 3:5(பார்க்கவும் )
இயேசு கிறிஸ்துவுக்கு ! ஆண் ,பெண் பேதமில்லை ! நாம் அனைவரும் அறிவோம் !1கொரிந்தியர்11:11-12. எனவே பவுல் மனதும் மாறியது ! அப்போஸ்தலர் 16:9 (பார்க்க)
கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன் வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள் ரோமர் 16:3-6,ரோமர் 16:15 வரை பார்க்க
என் பிராணனுக்காக தங்கள் கழுத்தை கொடுத்தவர்கள் என பெண் ஊழிய காரர்களை பவுல் பாராட்டுகிறார் ரோமர்16:4
அன்பான சகோதரரு க்கு ஸ்திரீகள் ஊழியம் செய்யக்கூடாது என்பது பவுலின் கருத்தோ என் கருத்தோ அல்ல.
அவர்கள் செய்வதற்கு அநேக ஊழியங்கள் உள்ளன.
"கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன் வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள்"
இங்கு பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் "உடன் வேலையாட்கள்" என்றே வசனம் சொல்கிறது.
அதாவது ஒரு தேவ ஊழியருக்கு உடன் இருப்பவர்கள் அவர்களை எல்லாவிதத்திலும் தாங்குபவர்கள் என்று பொருள் கொள்ளலாம்.
ஆனால் உபதேசம் செய்ய அவர்களுக்கு உத்தரவு இல்லை என்று வசனம் தெளிவாக சொல்கிறது.
தீமோத்தேயு 2:12உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை;
இந்த வசனத்தை மாற்றி "ஸ்திரீகள் உபதேசம் செய்யலாம்" என்று எங்கும் பவுல் சொல்லவில்லை.அவர் மனம் மாறினார் என்றால் அதை மாற்றி எழுதியிருக்கலாமே. நாமாக ஒரு முடிவுக்கு வர முடியாது.
///இயேசு கிறிஸ்துவுக்கு ! ஆண் ,பெண் பேதமில்லை ! நாம் அனைவரும் அறிவோம் !1கொரிந்தியர்11:11-12. ///
கிறிஸ்த்துவுக்குள் ஆண் பெண் பேதமில்லைதான். அதற்காக பெண்ணுக்கு பதில் ஆண் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியுமா?
அதேபோல் இந்த உலகத்தில் இருக்கும் வரை அவரவருக்கு நியமிக்கப்படட பணிகளை அவரவர்தான் செய்ய வேண்டும். தேவன் நியமித்தத்தை யாரும் மாற்ற கூடாது.
இன்று அநேகர் வசனம் சொல்வதை சற்றும் கவனிக்காமல் அவரவர் இஷடத்துக்கு ஊழியம் செய்கிரார்கள். ஆண்டவர் உடனே வந்து எதுவும் கேட்க்கபோவது இல்லை ஆனால் நியாயத்தீர்ப்பு நாளில் அதெற்க்கெல்லாம் பதில் ஒப்புவிக்க வேண்டும்.
எனக்கு தெரிந்த ஒரு அம்மா வீட்டில் சபை வைத்து உபதேசம் பண்ணி ஊழியம் செய்கிறார்கள்.
தலையில் இரண்டு கொம்புதான் முளைக்கவில்லை. தன புருஷனை ஒரு மனுஷனாககூட மதிப்பது இல்லை.
இதை எல்லாம் அறிந்துதான் தேவன் அவர்களுக்கு இப்படிபடட எச்சரிப்புகளை கொடுத்தார் என்பது எனது கணிப்பு.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
பவுல் சொல்லியிருக்கும் அந்த வார்த்தைகள் வேத கற்பனைகள் என்று எடுத்துக்கொண்டால் எல்லோரும் அந்த கற்பனைகளை மீறத்தான் செய்கிறார்கள் என்பதில் எந்த ஐயமுமில்லையே!
என்னை பொறுத்தவரை நான் பவுலின் எல்லா வார்த்தைகளையும் தேவ வார்த்தையாக எடுத்து கொள்வது இல்லை. காரணம் சில இடங்களில் அவர் நானே சொல்வதாவது என்றும் சொல்லியிருக்கிறார்.
I கொரிந்தியர் 7:12 மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன்
அதாவது அவரது நிரூபங்களில் அவரது சொந்த நல்ல கருத்துக்களும் எழுதப்பட்டுள்ளது.
அதேபோல் "ஸ்திரீகள் உபதேசம் செய்ய கூடாது" என்று சொல்வதும் அவர் சொந்த கருத்தாக நான் எடுத்துக்கொள்கிறேன் ஏனெனில் ஆண்டவராகிய இயேசு புதிய ஏற்ப்பாட்டிலோ தேவனாகிய கர்த்தர் பழைய ஏற்பாட்டிலோ அப்படி எங்கும் சொன்னதாக தெரியவில்லை.
ஒருவர் பவுல் எழுதிய எந்த ஒரு வார்த்தையையும் ஆவியானவர் சொன்னது என்று விசுவாசத்தால் அதை மீறாது இருக்க கடவன். மீறினால் நிச்சயம் தண்டனையுண்டு.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)