இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகோ. சில்சாம் அவர்களின் பதிவுகள் பற்றி!
சகோ. சில்சாம் தளத்தில் தொடர்ந்து எழுதுவது பற்றி! [7 vote(s)]

ஆதரிக்கிறோம்
28.6%
தேவையில்லை
42.9%
இன்னும் சில பதிவுகளை பார்க்கலாம்
28.6%


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
சகோ. சில்சாம் அவர்களின் பதிவுகள் பற்றி!
Permalink Closed


 விவாதம் என்பது உண்மையை அறியத்தான் என்பதை கருத்தில் கொள்க. தேவையன்ற வார்த்தைகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்! அதுவும் தனிப்பட்ட முறையில் சாபமிடுதல் மற்றும் எது உண்மை என்று தீர்மானிக்கும் முன் இது தவறு என்று முடிவெடுத்தல் என்பதெல்லாம் ஏற்புடையது அல்ல!
 
தவறு இருக்குமாயின் வசனத்தின் அடிப்படையில் நிச்சயம் கேள்வி கேட்கலாம்,  அதற்க்கு பதிந்தவர் நிச்சயம் பதில்கொடுக்க வேண்டும்  அல்லது  மன்னிப்பு கோரி  பதிவை நீக்கிவிடுவது நல்லது!
 
உலகில் எல்லோருக்கும் போதிய அறிவு இருக்கிறது,  பல்வேறுபட்ட உபதேசங்களால் நிறைந்துள்ள கிறிஸ்தவ சபையில்,  ஒரே ஒரு பதிவை பார்த்து யாரும் இடறலடைந்து போவதில்லை. அப்படி இடறல் அடையுவார்களேயானால் "என் பரமபிதா  நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும்" என்ற வார்த்தைக்கு இணங்க அது தேவனின் சித்தமாகவே இருக்கும் என்றே நான் கருதுகிறேன்.
 
மற்றபடி இங்கு யாருக்கும் இடறல் வருமளவு கெடுதல்கள் எதுவும் செய்யவில்லை! அறியாத காரியங்களை, அதாவது விசுவாசிகள்  அறிந்து தனக்கு சாவுமணி அடித்துவிடக்கூடாது  என்று சாத்தான் தந்திரமாக கண்ணை கட்டிவைத்திருக்கும் சில காரியங்கள் பற்றி   அறிவதற்காக விவாதிக்கிறோம்.  இதில் இரண்டு தரப்பிலும் உண்மை மற்றும் உண்மையின்மை   இருக்க வாய்ப்பிருக்கிறது!
 
விவாதத்தில் பங்குபெறவேண்டும் என்று யாருக்கும் கட்டாயம் இல்லை. அவரவர்  தளத்தில் என்ன வேண்டுமானாலும் எழுத எதைபற்றியும் விவாதிக்க   எப்படி  உரிமை இருக்கிறதோ அதுபோல் இங்கு எப்படிப்பட்ட எழுத்துக்களையும் அனுமதிக்க எனக்கு உரிமை உண்டு  என்பதை கருத்தில் கொள்க!  
 
தயவு செய்து சொல்லப்பட்டுள்ள கருத்தை   புரிந்துகொள்ளுங்கள்! தொடர்ந்து  கவனமாக பதிவிடுங்கள். டென்சன்ஆவதை முற்றிலும்  தவிருங்கள்

அன்புடன்  
இறைநேசன்  
 


-- Edited by இறைநேசன் on Tuesday 23rd of November 2010 06:39:58 PM

-- Edited by இறைநேசன் on Friday 10th of December 2010 05:08:31 PM

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink Closed

நமது தளத்தில் எழுதப்பட்டது "இயேசுவின் வார்த்தைகளை கைகொண்டு வாழுங்கள்" என்பதை வலியுறுத்தும் . 

சாத்தான் சாதகமாக்கிகொண்ட இயேசுவின் இரத்தம்! 

ஒரு பொதுவான கட்டுரைதான். 
 
அதற்க்கு பின்னூட்டமிட்டுள்ள சில்சாம்  சில மோசமான சாப வார்த்தைகளை பதிவிட்டுள்ளார்
 
 
ரோமர் 12:14 உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள், ஆசீர்வதிக்க வேண்டியதேயன்றி சபியாதிருங்கள்.

என்கிற வார்த்தையை மட்டுமல்ல, வேதத்தில் சொல்ல பட்டிருக்கும் எந்த ஒரு வார்த்தையையும் இவர் கவனிப்பதும் இல்லை  அதை  ஒரு தேவனின் எச்சரிப்பாக மதிப்பதும் இல்லை. ஆனால் "அன்பின் பிரமாணம்" என்று அலப்பிக்கொண்டு, இதுபோல்  சாத்தானின் சாபங்களை அவிழ்த்துவிட்டுகொண்டு இருக்கிறார். அடுத்தவர் இரத்தவியாதி வந்து சாவதில் தான் இவருக்கு என்ன சந்தோசம் பாருங்கள்! அனேக பாடுகள்பட்டு   இரத்தத்தை சிந்திய இயேசு கூட இவர் சாபத்தை சகிக்க மாட்டார்(இப்படி அடுத்தவர் அழிவில்  சந்தோஷப்படுவது யார் என்பது  எல்லோருக்கும்  நிச்சயம்  தெரியும்)         

இவருக்கு ஏற்கெனவே நாம் நல்ல முறையில் புத்தி சொல்லிவிட்டோம் ஆனால் வேதவார்த்தைகளையே கவனிக்காத  இவர் நமது வார்த்தைகளையா கவனிப்பார்?. 
 
நான் பல பிறமத தளங்களில் அதிகம் எழுதியிருக் கிறேன் ஆனால் எந்த ஒரு சகோதரனும் இப்படிப்பட்ட மனதை புண்படுத்தும்  வார்த்தைகளை எழுத துணிவ தில்லை அப்படி எழுதினால் அந்த தள நிர்வாகியே அந்த பதிவை நீக்கிவிடுவார்.  
 
தள நிர்வாகி என்ற முறையில் கேட்கிறேன்:  
 
நாம்  சகிப்புத்தன்மை  உள்ளவர்கள்தான்!  ஆனால் ஆண்டவரை பற்றி எழுதும் சகோதாரர்களுக்கு  மன மடிவை ஏற்ப்படுத்தி  கிறிஸ்த்தவ  அன்புக்கே தவறான இலக்கணம் காட்டி பிறமத சகோதரர்கள் மத்தியிலும் கிரிஸ்த்தவ்த்துக்கு  அவப்பெயர் உண்டாக்கும் இவர் போன்றவர்களின் கேடுகெட்ட சாபங்களை நமது தளத்தின் இன்னும் அனுமதிக்க வேண்டுமா?
 
தள சகோதரர்கள் கருத்து தெரிவிக்கவும்!     
 


-- Edited by இறைநேசன் on Tuesday 23rd of November 2010 06:41:19 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink Closed

சகோ. சில்சாமின் பல பதிவுகளை அலசி ஆராய்ந்து பார்த்ததில் அவருக்கு வசனத்துக்கு புறம்பாக காரியங்களை செய்யும்  விசுவாசிகளும் முக்கியமாக தேவ ஊழியர்களும் திருந்தவேண்டும் என்பதில் அதிக ஆர்வம் இருபதுபோல் தெரிகிறது. அந்த ஆதங்கத்தில் அடிபடையில் ஊழியர்களின் தவறான நிலைகளை சுட்டிகாட்டி பல ஊழியர்களை கடிந்து எழுதி வருகிறார்.
     
அவர்  ஊழியர்களின் தவறான நிலை   பற்றி எழுதியிருக்கும் அனேக காரியங்கள் உண்மை  என்பதும் அனேக ஊழியர்கள் கள்ளர்களாகவும், எவ்விதத்திலாவது பணத்தை பிடுங்க நினைக்கும்  பண பேய்களாகும்  சொகுசு கார்களில் பவனி வருகிறவர்களாகவும்,  இச்சையின் ஆவியால் பீடிக்கப்ப்ட்டிருப்பவர்களாகவும் சுபாவ அன்பில்லாதவர்களாகவும், தனக்கு கீழுள்ளவர்களை ஒடுக்குகிரவர்களா கவும் இருப்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
 
பிறகு நான் ஏன் அவ்வித  ஊழியர்களுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று கேட்கிறீர்களா? அதற்க்கு இரண்டு காரணங்கள் உண்டு.
 
1. எந்த மனிதனும் எல்லா நேரங்களிலும் தேவமனிதனாகவே இருப்பது இல்லை. எல்லோருக்கும்  மாமிசசுபாவம் என்பது அவ்வப்பொழுது தலை தூக்கத்தான் செய்யும் அதை வைத்து அவரை ஒரேயடியாக தவறானவர் என்று தீர்த்துவிட முடியாது. அதே நேரத்தில் ஒட்டு மொத்த பரிசுத்தன் என்றும் யாரையும் தீர்த்து விடவும்  முடியாது!      
 
2. அடுத்து   ஜனங்கள் வெகுவாக நம்பிக்கொண்டு இருக்கும் அவ்வித பெரிய ஊழியக்காரர்களை குறைகூறிக்கொண்டு திரிவதால் யாருக்கும் எந்த பயனும்
ஏற்ப்படபோவது இல்லை. மாறாக நான் மலைபோல தேவ மனிதன் என்று நம்பிகொண்டிருக்கும் இந்த ஊழியரே இப்படி என்றால் பிறகு யாரைத்தான் நம்புவதோ? என்று அக்கலாயத்து இறுதியில் "எல்லோரும் கள்ளர்கள்" என்று தீர்மானித்து சபைக்கே போகாதநிலை
கூட சிலருக்கு ஏற்பட்டுள்ளதை நான் கண்டிருக்கிறேன். இவ்விதத தில் ஒரு  ஆத்துமாவும் நம்மால்  வழிவிலகிவிட கூடாது என்ற ஆதங்கம்தான்   
 
சாம்சன் பால் அவர்களின் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் அவர் தேவையில்லாமல் தினகரனை அதிகமதிகமாக சாடுவார். அவர் எழுதுவதில் அனைத்தும் உண்மைதான் அனால் சில சகோதரிகள் சொல்வது "அவர் வேலையை அவர் பார்க்கவேண்டியதுதானே எதற்கு அடுத்தவரை கூறிக்கொண்டு திரிகிறார். தினகரன் எந்த இடத்திலாவது யாரையாவது குறை கூருகிராறாரா?" என்று கேட்பதோடு ஒரு நல்ல ஊழியராகிய சாம்சன் பாலின் மீது ஒரு தவறான அபிப்ராயமும் உண்டாகி விடுகிறது. .  
 
ஊழியர்களும் விசுவாசிகளும் திருந்தவேண்டும் என்பதற்காக தாங்கள் சொல்வது போல் ஒவ்வாருவரையும் குறை  சொல்லிக்கொண்டு இருந்தால் எல்லோருக்கும் (புறஜாதியாருக்குகூட) கிறிஸ்த்தவத்தின்மீது நிச்சயம் வெறுப்பைத்தான் கொண்டு வரும். 
 
இப்பொழுதுகூட  நான் எழுதுவதை தவறு என்று சொல்லும் நீங்கள் என்னை திட்டுவதாக திருத்த நினைப்பதாக  நினைத்து  அனேக இடங்களில் தேவனின் வார்த்தைகளை மீறுகிறீர்கள்.
 
நாளை ஆண்டவர் முன்னால் நிற்கும்போது அவர் தங்களிடம் "நீ இப்படி ஒரு
கொடூரமான  சாபத்தை ஏன் எழுதினாய்  என்று நிச்சயம் கேட்பார்? உடனே நீங்கள் "ஆண்டவரே உங்கள் இரத்தத்தின் மகிமையை காப்பாற்றத்தான்" என்று கூறுவீர்கள். உடனே அவர் "எனது இரத்தத்தின் மகியை யாரும் ஒன்றும் செய்யமுடியாது நான் உனக்கு சொன்ன  'உங்களை சபிப்பவர்களை  ஆசீர்வதியுங்கள்'  என்ற வார்த்தையை நீ  ஏன் மதிக்கவில்லை?" என்று கேட்பார். அப்பொழுது என்ன பதில் சொல்லபோகிறீர்கள் என்று தெரியவில்லை.   
 
எனக்கு தாங்கள் நிலையில் சற்றும் உடன்பாடு கிடையாது. நான் தேவனின் நியாயதீர்ப்புக்கு பயந்தவன். என்னை நீங்கள் என்ன திட்டினாலும் சாபம் விட்டாலும் நான் திருப்பி திட்டபோவது இல்லை நான் இதுவரை யாரையும் திருப்பி திட்டாததர்க்கும் சாபம் விடாததர்க்கும் காரணம் நான் வேத வார்த்தைகளை கைகொண்டு நடக்க நினைப்பதும் அதன் அடிப்படையில். எல்லோரிடமும் சமாதனாக இருக்க நினைப்பதுதான்.
 
யாரையும் ஒரு வார்த்தை கூட கடினமாக எழுத ஆண்டவர் என்னை அனுமதிப்ப தில்லை. ஆனால் உங்கள் ஆண்டவர் மட்டும் எப்படி அடுத்தவருக்கு "இரத்த வியாதி வந்து சாகட்டும்" என்று சபிக்க அனுமதிக்கிறார் என்று தெரியவில்லை. என்னை பொறுத்தவரை  நீங்களும் அந்த கனியற்ற  கோஷ்டிகளில் ஒருவர்தான் என்றே நினைக்கிறேன்.      

உங்கள் வார்த்தைகளிலேயே அனேக முரண்பாடுகள் இருக்கிறது!.
ஓன்று இயேசுவின் பிரமாணம் அன்பின் பிரமாணம் அதனால் எந்த தவறு செய்தாலும் பாவம் செய்தாலும் இயேசுவின் இரத்தத்தின் மூலம் வரும் பாதுகாப்பு நமக்கு உண்டு, என்று  போதித்து யார் செய்யும் 
தவறையும் கண்டு கொள்ளாமல் விடுங்கள்.  அல்லது நான் சொல்வதுபோல "தேவனின் வார்த்தையை கடைபிடித்து செய்வதை  சரியாக செய் இல்லையேல் உனக்கு  தண்டனை உண்டு" என்று சொல்லுங்கள். இரண்டும் இல்லாமல்  ஒருபுறம் தவறாக நடக்கும்  ஊழியர்களை குறைகூறிக்கொண்டு இன்னொருபுறம் தேவனுக்கு விரோதமான பாவன் தண்டனையை தரும் என்று சொல்வோரை சபித்து கொண்டிருந்தால்  உங்களை எந்த லிஸ்டில் சேர்ப்பது என்றே புரிய வில்லை.
 
என்னுடைய முக்கிய நோக்கமும் ஊழியர்கள் மட்டுமல்ல விசுவாசிகளும் எல்லோரும் தேவனுக்கேற்றபடி  திருந்தவேண்டும் என்பதுதான்.   ஆனால் எனது அணுகுமுறைதான் வேறு! அதுதான் "வேதம் சொல்லும் வார்த்தைகளை கைகொள்ளுங்கள் என்பது,  அவ்வாறு கைகொள்ளதவனுக்கு கடுமையான தண்டனை உண்டு என்பது" அது வேதத்துக்கு எவ்விதத்திலும் புறம்பானது அல்ல எவ்விதத்திலும் உண்மைக்கு புறம்பானதும்  அல்ல. 
 
இன்று தேவ ஊழியர்களும் சரி விசுவாசிகளும் சரி துணித்து தேவனின் வார்த்தைகளுக்கு விரோதமாக நடக்கிறார்கள் என்பதை தாங்களே குறிப்பிட்டு ள்ளீர்கள் அதற்க்கு காரணம் என்ன? "இயேசுவின் பிரமாணம் அன்பின்பிரமாணம்"
என்ற வார்த்தைதான். அதை நானும்ஏற்கிறேன்
ஆனால் அந்தஅன்பை முறையாக பயன்படுத்த தெரியாமல் காலில் போட்டு மிதிப்பவர்களுக்கு தண்டனை உண்டா இல்லையா?    
 
ருவன் இய்சுவின் வார்த்தையை கைகொண்டு நடப்பதில் அக்கறை காட்டினால் சபையில் உள்ள எல்லா பாவமும் தானாக பறந்துவிடும்.  செய்யவேண்டிய எல்லா காரியங்களையும்தான் வேதம் மிகசரியாக போதிக்கிறதே. அது தேவை யில்லை இது தேவையில்லை என்று விலக்கபோய தானே இவ்வித பாவங்கள் துணிந்து சபைக்குள்ளேயே  தலைதூக்குகிறது?  அவ்வாறு உருவாகும்   பாவத்தை வசனத்தின் அடிப்படையில் கடிந்து சுட்டிகாட்டி முளையிலேயே கிள்ளிஎரியாமல் அதை அட்ஜஸ்ட்  செய்து அனுமதித்துவிட்டு பின்னர் "அவர் அப்படி  செய்கிறார் இவர் இப்படி செய்கிறார்" என்று  குறை கூறுவதில் என்ன பயன்?
  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink Closed

சகோதரர் சில்சாம் அவர்களின் பிடிவாதம் தனக்கு தெரிந்த ஏதோ ஒன்றை தவிர மற்ற அணைத்து காரியங்களில் குற்றம் கண்டுபிடிபதாகவே தோன்றுகிறது.

அவர் ஒருவேளை தன்னுடைய தலத்தில் சொல்லுகிறபடி தேவனுக்காக வைராக்கியம் கொண்டிருந்து இப்படி செய்தாலும் கூட சகோதரர் சுந்தர் அவர்களை இப்படி மிகவும் தரக்குறைவாக எப்படி பேச முடிகிறதோ தெரியவில்லை.

இப்படி பட்ட வார்த்தைகளை உபயோகபடுதுவதுதான் அவர் மற்றவர்களை நேசிபதோ....! தேவன் எல்லாரையும் நேசிக்கிறார் அவர் ஒருவரையும் வெறுபதில்லை அப்படிருக்க தேவனுடைய பிள்ளைகள் என்று சொல்லிக்கொண்டு எப்படிதான் இப்படி சபிகிராரோ தெரியவில்லை.

தவறான கொள்கையை மக்கள் மத்தியில் பரப்பபடுகிறது என்று மிக ஆவேசபடுகிறாரே.....இவருடைய கருத்துகள் எத்தனை பேருக்கு இடறலாய் இருக்கும் என்பதை சற்று அறியாமல் இருக்கிறாரே...இதற்க்கு என்ன சொல்வது....!

போலியாய் உலகத்திற்கு ஒத்த வேஷம் தரித்து இருபவர்கள் மீது கோபப்படும்போது தாங்கள் ஆவியில் வைராக்கியம் கொண்டு இப்படி சொல்லுகிறிர்கள் என்று நினைத்தால் இப்படி சாபத்தையும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதுதான் தங்கள் கிறிஸ்துவின் அன்பை மற்றவர்களுக்கு எடுத்து சொல்லும் வழியா ...!

இப்படி சபித்துவிட்டு தாங்கள் எப்படி எல்லாரையும் நேசிக்க சொல்வீர்கள் கிறிஸ்துவின் அன்பை எப்படி வெளிபடுதுவீர்கள் அன்பை குறித்து எப்படி பேச முடியும் ..உங்கள் மனசாட்சி இடம் குடுக்குமோ;;;;

இதை எழுதும்போதுகூட சகோதரர் சில்சாம் வருத்த படுவாரே என்று தவிர்க்க முடியாமல் எழுதுகிறேன். ஆனால் இப்படி சபிக்கும் அளவிற்கு சுந்தர் என்ன காரியத்தை சொன்னார். அவருடைய வார்த்தைகள் இதுவரைக்கும் இதை படித்த ஒருவர்க்கும் இடறல் உண்டாகவில்லை என்பதே. எனக்கு தெரிந்தவரை....!

ஆனால் இப்படி சாபம் இடுவது எவ்விதத்திலும் தவறு தாங்கள் விதைகிரதைதான் அறுவடை செய்வீர்கள் என்பதை தங்களுக்கு தாழ்மையுடன் நினைவு படுத்துகிறேன். உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் இப்படி சபிக்கும் போது வருந்தவில்லையா.....?

நீங்கள் உண்மையாகவே தேவனை நேசித்தால் நம்முடைய தேவனை போல யாரையும் சபிகாதிர்கள் அதற்கு மாறாக நேசியுங்கள் இல்லையென்றால் நம்முடைய வார்த்தையின்படியே நாம் நியாம் தீர்கபடுவோம்.

என் நாமத்தின் நிமித்தம் அநேகரால் பகைக்கபடுவீர்கள் என்று சொல்ல பட்ட அநேகரில் சில்சாம் அவர்களும் ஒருவரோ என்றே நினைக்க தோன்றுகிறது.


-- Edited by Stephen on Monday 22nd of November 2010 09:37:18 PM

-- Edited by Stephen on Monday 22nd of November 2010 09:39:37 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink Closed

கடினமில்லாத அதே நேரத்தில் கண்டிப்புடன் கூடிய சகோதரர்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி!
 
சகோ. சில்சாமின் பதிவு எனக்கு மன வருத்தத்தை தந்திருந்தாலும் அவரையோ அல்லது அவரது  பதிவையோ நீக்கும் எண்ணம் எனக்கு இல்லாமல் இருந்தது. காரணம் நான் தேவன் பேரில் நான் கொண்டுள்ள நம்பிக்கையே. 
 
யோவான் 8:15 நீங்கள் மாம்சத்துச்கேற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை
 
அடுத்து
 
II சாமுவேல் 16:10 அதற்கு ராஜா: செருயாவின் குமாரரே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னைத் தூஷிக்கட்டும்; தாவீதைத் தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கத்தக்கவன் யார் என்றான்.

என்ற வார்த்தைக்கு ஏற்ப  "கர்த்தர் ஒருவரிடம் சொல்லி என்னை சபிக்க சொன்னாராகில் அதை நான் நிச்சயம் ஏற்றே ஆகவேண்டும்" என்ற நோக்கில் இந்த வார்த்தை தேவனின் சித்தத்தால் எழுதப்பட்டால் நான் அதை ஒன்றும் செய்வதற்கில்லை, ஒருவேளை  உம்முடைய சித்தத்துக்கு மாறானது என்றால் இந்த வார்த்தைகள் எழுதியவராலேயே  நீக்கப்பட வேண்டும் மேலும் இதுபோன்ற வார்த்தைகள் இந்த தளத்தில் பதிவுக்கு  வார்த்தைபடி தேவன் தாமே தற்காக்க வேண்டும் என்று என்னுடைய இருதய நிலையை  தேவனின் கரத்தில் விட்டு விட்டேன்   
 
ஆச்சர்யமாக இன்று காலை வந்து பார்த்தபோது  சகோ. சில்சாம் தானாகவே அவரது அனைத்து பதிவுகளையும் நீக்கியிருந்தார்.   கர்த்தர் கரத்தில் ஒரு வழக்கைஒப்புவிக்கும்போது அவரே முன்னின்று நமக்காக  அனைத்தை யும் செய்து முடிப்பார்! நாமாக முட்டுக்குநின்றால் தேவையற்ற சண்டைதான் வரும்!   
 
என் இருதய நிலையை அறிந்து இக்காரியத்தை செய்ய தூண்டிய தேவனுக்கு எந்நாளும் மகிமை உண்டாவதாக. நமது தளத்துக்கும்  நமக்கும் பாதுகாவல் எந்த மனிதனும்  அல்ல, தேவனே! 

 அவர் நம்மை புரிந்துகொள்ளவில்லை அவ்வளவுதான்   எனவே மாம்சமான மனுஷன் மேல் எனக்கு எந்த கோபமும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துகொள்கிறேன்!   
 
சகோ. சில்சாமின்  பதிவு காப்பி செய்யப்பட்டு இந்த திரியில் பதிவிடப்பட்டுள்ளது அதையும் நீக்கி விட்டால் நல்லது என்று கருதுகிறேன். வாக்கெடுப்பையும் நீக்கிவிடலாமே!  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink Closed

சகோ. சில்சாம் அவர்கள்  தானாகவே முன்வந்து தனது சாப பதிவை  நீக்கியமைக்கு  நன்றி. 

ஆவியானவர் நிச்சயம் அவரை கடிந்துகொண்டிருப்பார் என்று விசுவாசிப்போம்!
 
அவரது பதிவிலிருந்து  நாம் QUOTE   பண்ணிய   வார்த்தைகளிலும்  தேவையான மாறுதலை செய்திருக்கிறோம்.
 
நமது தள சகோதரர்கள் யாரும் அவரைபற்றி எதுவும் 
எழுதவேண்டாம் என்று அன்புடன்
கேட்டுகொள்கிறேன்.
 
அடுத்தவரை  குறைகூறிக்கொண்டு இருப்பது நமது நோக்கமல்ல. அதனால் யாருக்கும்  எந்த பிரயோஜனமும் இல்லை!  
 
இங்கு எந்த கருத்துக்கள் எழுதப்பட்டாலும் அவரவர் சுயாதீனத்தின் அடிப்படையில் ஆராய்ந்து சரியான முடிவை எடுத்து நலமானதை மட்டும் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

நன்றி
இறைநேசன்


__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
பயனர் பெயர் தடை செய்யப்படுகிறது!
Permalink Closed


நாம் இதன்மூலம் தெரிவித்துகொள்வது என்னவெனில் நமது சகோதரர் சில்சாம் அவர்கள்
 
மூல வியாதியிலேயே முக்கட்டும்... /  குத்தம் சொல்றவனுக்கு குஷ்டம் தான் பிடிக்கும்/  இரத்தம் சம்பந்தமான வியாதியினாலேயே அசிங்கமாக செத்துப்போவாய்..!/
 
போன்ற தரம்கெட்ட  சாப வார்த்தைகளுடன்  இன்னும் அங்கே ஆரோக்கிய குறைவான வார்த்தைகளை அவர் தளத்திலும் நமது தளத்திலும்  பயன்படுத்தி தள சகோதரர்களின் மனதை மிகவும் புண்படுத்துவதால். அன்னாரின்  பயனர் பெயர் தடை செய்யப்பட்டு விட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.  நாம் அவருடன்  எவ்வளவோ சமாதானமாக சென்றுவிட முயன்றும் அவர் தாம் எழுதியதற்கு கொஞ்சமும் மனஸ்தாபமோ அல்லது வருத்தமோ தெரிவிக்காததோடு கிறிஸ்த்தவர்களின் பொது தளமாகிய தமிழ் கிறிஸ்த்தவ தளத்திலும் எந்த முகாந்திரமும் இன்றி  நம்மை தரம் தாழ்த்தி விமர்சித்து வருகிறார். இனி அவருடன் தொடர்பு வைத்திருப்பதில் எந்த பயனும் இல்லை என்று கருதியே இம்முடிவு எடுக்கபட்டது.     
 
அவருடைய பதிவுகள்  அனைத்தையும் அவரே  டிலீட் செய்துவிட்டு சென்றுவிட்டார். ஆகினும் அதில் பயனுள்ள கருத்துக்கள் மீண்டும் பார்வைக்கு கொண்டு வரப்படும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன்.   
 
கர்த்தர் தாமே அவருக்கும் நமக்கும் இடையே நிற்று நியாயம் தீர்ப்பாராக!
 
இனி அவரைபற்றியோ அல்லது அவருடைய எழுத்துக்கள் பற்றியோ இங்கு எதுவும் விவாதிக்க வேண்டாம் என்பதி அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard