"மனிதன் ஒருதரம் மரிப்பதும் பின்னர் நியாயம் தீர்க்கப்படுவதும்
அவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது"
என்ற பவுலின் வார்த்தைக்கு இணங்க இந்த பூமியில் புதியஏற்பாட்டு காலத்தில் மனிதனின் மரணத்துக்கு பின் நியாயதீர்ப்பேயன்றி மறுபிறப்பு என்பது இல்லை என்பதை நான் ஏற்கிறேன்!
அதே நேரத்தில் பழையஏற்பாட்டு காலத்தில் இந்த மறுபிறப்பு பற்றி வேதம் மௌனிப்பதாலும், கிறிஸ்த்துவுக்கு முன்னுள்ள இந்து/ பௌத்த மதங்கள் மறுபிறப்பை ஏற்ப்பதலும் நமது வேதத்தில் உள்ள சில கருத்துக்களின் அடிப்படையில் மறுபிறப்பு இருக்கலாம் என்று நம்ப தோன்றுகிறது. (இஸ்லாம் கிறிஸ்த்துவுக்கு பிறகு என்பதால் அது மறுபிறப்பை மறுக்கிறது)
உதாரணமாக தாவீது எப்பொழுதோ மரித்துபோயவிட்ட நிலையில் எசேக்கியேல் புத்தகத்தில் 34 அதிகாரத்தில்
23 அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்; என் தாசனாகிய தாவீது அவர்கள் நடுவில் அதிபதியாயிருப்பார்; என்று கர்த்தர் கூறுகிறார்!
மரித்த தாவீது எப்படி மீண்டும் ஜனத்தின் நடுவில் அதிபதியாக இருப்பான்?
அதுபோல் நோவா தானியேல் யோபு இவர்கள் மூவரும் ஏற்கெனவே பிறந்து மரித்துவிட்ட நிலையில்
13 மனுபுத்திரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணிக்கொண்டேயிருந்து, பாவஞ்செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி, அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து, அதில் பஞ்சத்தை அனுப்பி, மனுஷரையும் மிருகங்களையும் அதில் இராதபடிக்கு நாசம்பண்ணுவேன். 14 அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
மரித்த அவர்கள் மூவரும் எப்படி மீண்டும் கர்த்தர் அழிக்கபோகும் தேசத்தின் நடுவில் இருக்கமுடியும்?
இதைவிட முக்கியமாக ஒரு விஷயம் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவை வேதம் முதினவரும் பிந்தினவரும் என்கிறது!
இயேசுவானவர் சர்வசிஷ்டிக்கும் முதல்பெரானவர் என்பதாலும் அவர் மூலமாகவே அவருக்காகவே எல்லாம் படைக்கப்பட்டது என்று வேதம் சொல்வதாலும் அவர் முந்தினவர் என்பது நமக்கு சுலபமாக புரியவருகிறது.
ஆனால் அவர் பிந்தினவர் என்பதன் பொருள் என்ன?
இயேசு பிறந்து மரித்த பிறகும் அனேக புது புது மக்கள் தோன்றி மரித்துகொண்டு இருந்தால் எப்படி அவர் பிந்தினவர் ஆகமுடியும்?
எனவே எனது கருத்துப்படி, இயேசுவே இந்த உலகுக்கு வந்த கடைசி மனிதர். அவருக்கு பின்னால் வரும் ஒவ்வொருவரும் மறு சுழற்ச்சியே என்று கருதுகிறேன்.
அதாவது இந்த உலகில் மனிதர்கள் கணக்கில்லாமல் ஏனோ தானோ என்று படைக்கப்பட்டுகொண்டே இருக்கவில்லை. எதற்குமே ஒரு அடிப்படை வரையறை உண்டு. அந்த குறிப்பிட்ட வரையறை முடிந்தபோது இறுதியாக (காலம் நிறைவேறியபோது) ஆண்டவராகிய இயேசுவே மாமிசமாக வந்தார். பூமியின் கொள்ளளவுக்கு மேல் இங்கு இருக்க யாருக்கும் இந்த உலகத்தின் அதிபதியாகிய சாத்தான் இடம் கொடுக்க மாட்டான் என்பதான் "இயேசு மனுஷ குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை" என்றார் இறுதியில் அவருக்கு உலகில் இருக்க இடம் கொடுக்காமல் அவரை சிலுவையில் அடித்து மேலே
தொங்கவைத்து தோற்றுபோனான்!
அவருக்கு பிறகு பிறந்த ஒவ்வொருவரும் மறுசுழற்ச்சியில் வந்தவர்களே என்று நான் கருதுகிறேன். இது பிற மதவேதங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில் எழுதப்பட்ட எனது சொந்த கருத்து!
கீழே சகோதரர் அன்பு அவர்களின் பதிவிற்கு விளக்கம் இத்தொடுப்பில் இருக்கிறது
சகோ.இறைநேசனுக்கு நான் ஏற்கனவே நினைவூட்டிய வசனமான 1 ராஜாக்கள் 18:21-ஐ மீண்டும் நினைவூட்டுகிறேன்.
இந்துப்புராணம் மெய்யா, பொய்யா? மறுபிறவி உண்டா? என்பது போன்ற கேள்விகளில் வேத வசனங்களை எவ்விதத்திலும் இழுக்காமல் வேண்டுமானால் விவாதித்துக் கொள்ளுங்கள். மாறாக, எசேக்கியேல் 34:23; 14:14; வெளி. 1:17 போன்ற வசனங்களை மேற்கோள் காட்டி, மறுபிறவி உண்டு என்பதற்கு ஆதாரமாக வேதாகமத்திலும் வசனம் இருப்பதாகச் சொல்லவேண்டாம்.
வேண்டுமானால், எசேக்கியேல் 34:23; 14:14; வெளி. 1:17 போன்ற வசனங்களின் கருத்து என்ன என்பதை நாம் தனியாக ஆராய்ந்து கொள்வோம். வேதவசனங்களின் கருத்தை யூகத்தின் அடிப்படையில் எடுப்பதென்பது, நாளாவட்டத்தில் அதுவே மெய்யான கருத்தாக நம்ப வழிவகுத்துவிடும்.