இந்நாட்களில் அனேக இடங்களில் பல்வேறு விதமான ஜெபங்கள் ஏறெடுக்கபடுவதை காணமுடிகிறது.
இந்தியா இயேசுவை அறிந்துகொள்ள, உலகில் சமாதானம் நிலவ, மது கடைகள் மூட, அரசியல்வாதிகளுக்கு நல்ல ஞானம் கிடைக்க, விபத்துக்கள் நடக்காமல் தடுக்கப்பட, நாட்டின் செழிப்பிற்கு என்று எத்தனையோ விதமான ஜெபங்கள் எறெடுக்கப்படுகின்றன.
இவையெல்லாம் நல்ல நோக்கம்தான்! ஆனால் " ஆண்டவரே உம்முடைய ராஜ்ஜியம் சீக்கிரம் வரட்டும்" என்று ஆவலோடு ஜெபிப்பவர்களை பார்ப்பது மிகவும் அரிதாக இருக்கிறது!
இந்நிலை ஏன்? ஆண்டவர் இப்பொழுதுக்கு வரமாட்டார் என்று முடிவுசெய்துவிட்டார்களா அல்லது அவர் வரும் நேரத்தில் வந்துவிட்டுபோகட்டும் என்று விட்டுவிட்டார்களா?
ஆண்டவராகிய இயேசு எவ்வாறு ஜெபம் செய்யவேண்டும் என்ற கேள்விக்கு அளித்த பதிலில் இரண்டாவதாக இடம்பெறும் மிக முக்கிய காரியம் உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக என்பதே.
தேவனுடைய நாள் சீக்கிரம் வரும்படி ஆவலோடு கார்த்திருங்கள்
என்றும் எழுதியிருக்கிறார்!
ஆனால் இங்கு யாரும் ஆண்டவரை சீக்கிரம் வர எதிர்பார்த்து காத்திருந்து ஜெபிப்துபோல தெரியவில்லையே ஏன்?
கடைசி காலம் என்று போதிக்கும் சபைகள் ஆண்டவரின் வருகைக்காக ஜெபிக்க தீவிரிக்காமல் தங்கள் திட்டங்களில் 2020 ம ஆண்டுவரை எத்தனை சபை கட்டவேண்டும் எத்தனை ஊழியர்களை எழுப்ப வேண்டும், எவ்வளவு பணம் சேகரிக்க வேண்டும், எதற்க்கெல்லாம் ஜெபம் பண்ணவேண்டும் என்பது போன்று பல்வேறு திட்ட குறிப்புகளை காணமுடிகிறது! அக்குறிப்புகளில் ஒருவேளை ஆண்டவர் வருகை தாமதமானால் என்று கூட குறிப்பிடாமல், மனிதர்களின் திட்டங்களை எழுதியிருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.
இது சரியா? இதுபற்றி தள சகோதர்களின் கருத்து என்ன?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//தங்கள் திட்டங்களில் 2020 ம ஆண்டுவரை எத்தனை சபை கட்டவேண்டும் எத்தனை ஊழியர்களை எழுப்ப வேண்டும், எவ்வளவு பணம் சேகரிக்க வேண்டும்//.........
ஆம் இன்று தேவனுடைய வருகைக்காக ஜெபிப்பதை விட 2012 குள் 10 சபை கட்ட வேண்டும் என்று சபை கட்டுவதிலே நோக்கமாய் இருகிறார்கள் தவிர தேவனுடைய ராஜ்யத்தில் மனிதர்களை சேர்க்கவும் அவர்களை தேவனுடைய வழியில் நடத்தவும் மறந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் ஏன் ஆலயத்தில் உபதேசம் செய்யும் நேரத்தை விட தரை போடுவதற்கு ஜன்னல் போடுவதற்கு கண்ணாடி மாட்டுவதற்கு இதற்கு யார் காசு குடுக்க போகிர்களே அவர்கள் மனபுர்வமாய் கர்த்தருகேன்று குடுக்கலாம் ஏற்கனவே சுமையை துக்கி கொண்டு ஆலயத்திற்கு வருகின்றனர் இதில் வேறு போதகர்கள் சுமையை குறைபதிற்கு பதிலாக இன்னும் அதிகமாய் ஏற்றி வைக்கிறார்கள் இதை சொல்வதற்கே நேரம் சரியாய் போய்விடுகிறது அதன் பின் எங்கே தேவனுடைய வருகையை பற்றியும் நீதி நியாங்கள் பற்றியும் பேச நேரம் இருக்க போகிறது குற்றபடுதவில்லை இன்று சபைகளில் நடக்கிறதை சொல்கிறேன் .........................................
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
ஏனெனில் ஆண்டவரே சொல்லுகிறார்,"தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது."(லூக்கா.17:20)
தேவனுடைய ராஜ்யத்தின் செயலபாடுகளுக்குத் தங்களை உட்படுத்திக்கொண்ட தேவமக்கள் அதனை விரிவுபடுத்தும் கட்டளையினையும் பெற்றுள்ளோம்; அதன்படி திட்டமிட்டு செயலாற்றுகிறோம்; இது எதுவரைக்கும் இருக்கும்? அதையும் ஆண்டவரே சொல்லியிருக்கிறார்,
"பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது."(யோவான்.9:4)
கோபுரம் கட்டுவதைக் குறித்த உவமையிலும் கூட திட்டமிட்ட செயல்பாட்டை வலியுறுத்துகிறார்;
இன்னும் எளிமையாகப் புரியவேண்டுமானால்,"டவுன் பஸ் ஸ்டாண்டுக்குச்" சென்று கவனியுங்கள்;அங்கே போதுமான பயணிகளுடன் பேருந்து நிரம்பிய பிறகும் அந்த பேருந்து செல்லும் வழிகளிலெல்லாம் பயணிகள் இருப்பர் என்பதையறிந்தும் அந்த ஓட்டுநரும் நடத்துனரும் இன்னும் காத்திருக்கிறார்கள்; யாருக்காகவோ..? கூவி அழைக்கிறார்கள்; யாரையோ..?
நம்மை கூர்தீட்டிக்கொள்ளவும் சுயபரிசோதனைக்கும் கூட எல்லை வைத்து (2020) செயல்படுவது நல்லதே;இது குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் தேசத்துக்கும் நன்மையே பயக்கும்..!
chillsam wrote: "பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது."(யோவான்.9:4)
கோபுரம் கட்டுவதைக் குறித்த உவமையிலும் கூட திட்டமிட்ட செயல்பாட்டை வலியுறுத்துகிறார்;
இன்னும் எளிமையாகப் புரியவேண்டுமானால்,"டவுன் பஸ் ஸ்டாண்டுக்குச்" சென்று கவனியுங்கள்;அங்கே போதுமான பயணிகளுடன் பேருந்து நிரம்பிய பிறகும் அந்த பேருந்து செல்லும் வழிகளிலெல்லாம் பயணிகள் இருப்பர் என்பதையறிந்தும் அந்த ஓட்டுநரும் நடத்துனரும் இன்னும் காத்திருக்கிறார்கள்; யாருக்காகவோ..? கூவி அழைக்கிறார்கள்; யாரையோ..?
சகோ: சில்சாமின் கருத்து அருமையாக ஏற்புடையதாகவே இருக்கிறது . இன்னும் யாருக்கோ/ யாருக்காகவோ எதிர்ப்பார்ப்புடன் நாட்கள் நகன்றுகொண்டிருக்கின்றன என்பதை அறிய முடிகிறது.
ஆகினும் ஆண்டவரின் வருகைக்காகவும் ஜெபம் ஏறெடுக்கப்பட வேண்டும் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் அவர் வந்தால், இங்கு நாம் ஜெபிக்கும் எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வந்துவிடுமே!
வெளி:
20. இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
அவர் "இதோ சீக்கிரமாய் வருகிறேன்" என்று சொல்லியிருக்கிறார் எனவே அவரை "சீக்கிரம் வாரும் ஆண்டவரே" என்று அழைப்பதும் நமது வேண்டுதலின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்பது எனது கருத்து!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஸ்டீபன் என்ற பெயருள்ளவரெல்லாம் ஸ்டீபனாகி விடமுடியுமா,என்ன?
தள நிர்வாகிகளே வெவ்வேறு பெயர்களில் எழுதி மோசடி செய்யும் காலம் இது; இதனால் என்னைப் போன்ற ஒரு சிலருடைய உழைப்பும் வீணாகிறது;
நண்பர் ஸ்டீபன் அவர்கள் மனம்போன போக்கில் எதையாவது எழுதிக் கொண்டிராமல் முதலில் உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் வகையில் ஒரு நல்ல வேதாகமக் கல்லூரியில் இணைந்து முறைப்படி வேதத்தைப் பயின்று வாருங்கள் அல்லது அனுபவமுள்ள மூப்பர்களின் கீழிருந்து கற்றுக் கொள்ளுங்கள்;
முதலில் நீங்கள் சார்ந்த சபையையும் விசுவாசத்தையும் நீங்கள் அமர்ந்து கற்றுக்கொண்ட ஊழியரையும் குறித்து உங்களது சாட்சியைச் சொல்லுங்கள்;அதிலிருந்தே உங்கள் நிலைமை தெரிந்துவிடும்;
பேதுருவைப் பார்த்தவுடனே அவன் இயேசுவுடனிருந்தவன் என்பது விளங்கியதல்லவா..?