இவர்கள் எல்லாம் ஆதியில் இருந்தே பொய்க்கு பிதாவாக இருக்கும் சாத்தனின் கையாள்கள் என்பது புரிகிறது
அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால்அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
ஆகினும் இன்றைய நாட்களில் யார் கள்ளதீர்க்கதரிசிகள் யார் கள்ளபோதகர்கள் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒரு காரியம்!
ஓநாய் ஆட்டுத்தோலை போர்த்து வருவதுபோல் எல்லோருமே உண்மையான ஊழியர்கள்போலவும் ஜனங்களுக்காக பாரம் உள்ளவர்கள் போலவும் பரிதபிப்பைவர்கள் போலவும் தங்களை காட்டிகொள்வதால் அனேக ஜனங்கள் அவர்களின் மாய்மாலத்தால் ஏமாந்து தங்கள் வருமானத்தை அவர்களுக்கு தாரை வார்ப்பதை அறிய முடிகிறது.
தெரிந்துகோள்ளப்பட்டவர்கள் கூட வஞ்சிக்கப்படுவார்கள் என்று வேதம் சொல்வதால் இந்த தலைப்பில் கொஞ்சம் ஆழமாக ஆராய்வது பலருக்கு பயனளிக்கும் என்று கருதுகிறேன்
உண்மை தீர்க்கதரிசி - கள்ள தீர்க்கதரிசி
உண்மை போதகன் - கள்ள போதகன்
எப்படி அடையாளம் காண்பது?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//ஆகினும் இன்றைய நாட்களில் யார் கள்ளதீர்க்கதரிசிகள் யார் கள்ளபோதகர்கள் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒரு காரியம்! //.......
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக இப்படி பட்டவர்களை எப்படி கண்டுபிடிப்பது என்று அழகாய் சொல்லி இருக்கிறார் நல்லமரம் நல்லகனிகளை கொடுக்கும் கட்ட மரம் கட்ட கனிகளை கொடுக்கும் அதின் அதின் கனிகளை வைத்து அவைகளை அறியலாம்
உண்மை தீர்க்கதரிசி கள்ள தீர்க்கதரிசி
கர்த்தரை புகலுவான் தன்னை தானே புகலுவான்
அன்பு, கோவம்
சமாதானம், மேட்டிமை
நிதானம் பெருமை
தாழ்மை ஒழுங்க்கிமை
பொறுமை கூட்டத்தோடு இசைந்து இருப்பான்
உலகத்தில் நற்சாட்சி பிரபலமாக விரும்புவன்
கர்த்தரிடத்தில் மனிதர்களை திருப்புவான் தன் பக்கத்தில் சேர்ப்பான்
இப்படி நல்ல கனிகளை வைத்தும் மற்றும் கட்ட கனிகளை வைத்தும் கள்ளதீர்க்கதரிசிகள் யார் கள்ளபோதகர்கள் யார் என்பதை அறியலாம்
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
பிதாவாகிய தேவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில வேறு பட்ட மனிதர்களை
தெரிந்து கொண்டு தம்முடைய நோக்கத்தையும் செயல்பாடுகளையும் அவர்களுக்கு
தெரியபடுத்தி அதை மக்களுக்கு அறிவிக்கும் படி கட்டளை கொடுத்திருந்தார்.
இவைகளை பழைய ஏற்பாட்டு காலத்தில் தேவனால் சாட்சி பெற்று அவருடைய
வார்த்தைகளை கூறின தேவ மனிதர்களை வைத்து அறிந்து கொள்ளலாம். தேவன்
சொல்கிறதை அப்படியே சொல்வதும் செய்வதுமே தேவனால் எற்படுத்தபட்டவர்களின் முதன்மையான கடமையாகும். அப்படிப்பட்ட தேவ மனிதர்கள் ஒரு சிலரை நாம் வேதத்தில் காண முடியும்.
உதாரணமாக மோசே, நோவா , தாவிது, சாமுவேல், தானியேல், இன்னும் சொல்ல வேண்டுமானால் அநேகரை சொல்லலாம்..............
தேவனுடைய வார்த்தையை தம்முடைய மக்களுக்கு சொல்வதற்கு தேவன் ஒரு சிலரை ஜனங்களிலிருந்தே தெரிந்து கொண்டு அவர்களை ஏற்படுத்தினர். பவுலை குறித்து ஆண்டவர் சொல்லும்போது கூட இவன் நான் தெரிந்து கொண்ட பாத்திரம் என்று கூறுகிறார்
தம்முடைய ஜனங்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கும்படி மோசேயை தேவன் அழைத்த விதம்.
நோவாவை கர்த்தர் தெரிந்து கொண்ட விதம் இவைகளை பார்க்கும் போது தேவனால் தெரிந்து கொண்ட தீர்க்கதரிசிகளும் , போதகர்களும் தேவனுடைய சித்தத்தையும் நோக்கத்தையும் எல்லா நேரத்திலும் நிறைவேற்றுவதையே குறிகோளாக கொண்டிருந்தார்கள் என்பது தெரிய வருகிறது.
ஆனால் இன்றைய போதகர்களும் தீர்க்கதரிசிகளும் தங்களை குறித்தும் தங்களுடைய
திறமையை குறித்தும் தாங்கள் செய்த ஊழியத்தையும் குறித்துதான் அனேகர் கூறுவதை காண முடியும்.
தாங்கள் நினைத்திருக்கிற காரியங்களை செய்து முடிப்பதற்காக அல்லது தாங்கள் அடைய வேண்டிய இலக்கை அடைவதற்காகவும் இன்றைய ஒரு சில போதகர்களும் தீர்க்கதரிசிகளும் முயன்று கொண்டிருகிறார்கள்.
என்னுடைய் கருத்து என்னவெனில் எந்த ஒரு தீர்க்கதரிசனமும் தேவனுடைய சித்தத்தை மக்களிடத்தில் நிறைவேற்றுவதற்காக சொல்லப்படும் என்பதே. அதற்குமாறாக தங்களின் நினைவுகளில் தோன்றுகிறதையும் மக்களுடைய சூழ்நிலைக்கு ஏற்ப சொல்லுகிற காரியங்கள் எல்லாம் காலபோக்கில் வெளியரங்கமாகிவிடும்.
எந்த ஒரு போதகர்களின் பிரசங்கம் மக்களை தேவனுடைய உண்மையான அன்பினிடர்த்திற்க்கும் தேவன் மேல் வைக்கும் விசுவாசத்தை விருத்தி அடையும்படி செய்யும் என்று நான் நம்புகிறேன். தான் போதிக்கிற வார்த்தை தன்னிடத்தில் அல்ல அந்த வார்த்தையை போதிக்கும் படி கட்டளையிட்ட தேவனிடத்தில் மக்களை கொண்டு வந்து சேர்க்கும்
ஏசாயா 55 :11 ல் என் வார்த்தை ஒன்றும் வெறுமையை என்னிடத்தில் திரும்பி வராது என்று கர்த்தர் குறிபிட்டுள்ளார்.
ஆசாரியருடைய உதடுகள் அறிவை காக்க வேண்டும் என்றும் அவர்கள் வாயில் தேவனுடைய வசனத்தை தேடுவார்கள் என்றும் வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறபடியால் உண்மையான போதகர்கள் தேவனுடைய வசனத்தை கொண்டு மற்றவர்களை தேவனிடத்தில் கொண்டு வருவார்கள். தரிசனங்களோ,போதனைகளோ சொப்பனங்களோ,வெளிபாடுகளோ,எந்த ஒரு காரியமாய் இருந்தாலும் மனிதர்களிடத்தில் அல்ல தேவனிடத்திற்கு வழி நடத்தத் வேண்டும்.இதற்கு மாறாக இருக்கும் எந்த போதனையும் தரிசனங்களும்,அவைகளுக்கு சொந்த்காரர்களனாலும் பொய்யின் பிதவினுடையவர்கள் என்று நான் கருதுகிறேன்.
-- Edited by Stephen on Thursday 11th of March 2010 03:08:40 PM
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
சகோதரர் எட்வின் கொடுத்திருக்கும் ஒப்பீடு மிக அருமை!
சகோ: ஸ்டீபன் அவர்கள் கொஞ்சம் ஆழமாகவே ஆராய்ந்திருப்பது தெரிகிறது. தேவனின் சித்தம் அறிந்து செயல்பட கருதுவது உங்கள் எழுத்துக்களில் புரியவருகிறது. ஆம்! அதுவே மேன்மையான ஒன்றும் கூட!
நாம் ஜெபிக்கும் ஜெப்த்துக்கும் தேவன் எதிர்பார்க்கும் ஜெபத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு என்றே கருதுகிறேன். தேவனுடன் நெருங்கிய தொடர்பு இல்லாமல் அவரின் விருப்பம்போல் வாழ்வது ஜெபிப்பது எதுவுமே முடியாத காரியம்.
இந்த பூமியை பொறுத்தவரை நாம் ஒரு பரதேசியை போலவும் தேவனுடைய சித்தம் நிறைவேறுவது ஒன்றே நம்முடைய நோக்கமாகவும் கொண்டு செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படும்போது தேவன் எந்நாளும் நம்முடன் கூட இருந்து வழி நடத்துவதை நம்மால் உணரமுடியும்.
ஏசாயா 55
8. என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
நம் வழிகள் எல்லாம் தேவனுடைய வழிகள் அல்ல. தேவனுடய இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்காமல் சுயமாக செய்யும் எந்த செயலும் சொல்லப்படும் எந்த தீர்க்கதரிசனமும் வீண் மற்றும் தவறான செயல்களே!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
உண்மை தீர்க்கதரிசியை எவ்வாறு அடையாளம் காணுவது என்று வேதம் சொல்லும் கருத்தை மாத்திரம் இங்கு சொல்ல விரும்புகிறேன்.
எரேமியா 28:9சமாதானம்வரும் என்று தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் சொல்லியிருக்க, அந்தத் தீர்க்கதரிசி சொன்ன வார்த்தையின்படியே வந்தால், அப்பொழுது அவன் கர்த்தர் மெய்யாய் அனுப்பின தீர்க்கதரிசியாக விளங்குவானென்று எரேமியா தீர்க்கதரிசி சொன்னான்.
.
இதற்க்கு ஒப்பாக வேதம் சொல்லும் இன்னொரு வசனம்:
.
உபாகமம் 18:22ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.
இன்று ஆவிக்குரிய உலகத்தில் அனேக தீர்க்கதரிசனங்கள் கூறப்படுகின்றன தேவ மனிதர்கள் என்று தங்களை அடையாளம் காட்டும் பெரிய மனுஷர்கள் சொன்ன அனேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறாமல் போயிருக்கின்றன.
.
இலங்கையில் சமாதானம் வரும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கபட்டது ஆனால் அங்கே மிகப்பெரிய போர் மூண்டு ஏராளமான மனுஷர்கள் மரித்துபோனார்கள்.
.
அதேபோல் தமிழ் நாட்டை குறித்தும், ஒரு குறிப்பிட்ட ஆண்டில் இங்கு மது கடைகளே இல்லாமல் போகும் என்பது உட்பட பலவிதமான தீர்க்கதரிசனம் உரைக்கபட்டது ஆகினும் எதுவும் இன்றுவரை அவ்வாறு எதுவும் நடந்த பாடில்லை.மேலேயுள்ள வசனத்தின்படி இப்படிபட்ட தரிசனத்தை சொன்னவர்கள் எல்லோருமே கள்ள தீர்க்கத்ரிசிகளாகிபோனார்கள்.
பணத்தை சார்ந்தே ஊழியம் நடக்கும் தற்போதுள்ள சூழலில் உண்மை தீர்க்கதரிசிகளை அடையாளம் காண்பது மிகவும் அரிதான காரியம்.
மேலும் இந்த கடைசி காலத்தில் ஆவியில் அபிஷேகம் பெற்ற ஒவ்வொருவரையும் ஆவியானவர் போதித்து நடத்த வல்லவராக இருப்பதால் நமது ஆவிக்குரிய நிலையை அறிய பிற தீர்க்கதரிசிகளை தேடி ஓடாமல், நமக்குள் இருக்கும் அபிஷேகத்தை அனல்மூட்டி இடைவிடாமல் ஜெபித்து ஆவியானவரின் நடத்துதலை பெற்று அதன்படி நடப்பதே சிறந்தது என்பது எனது கருத்து.
.
யோவான் 16:13சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்;
-- Edited by SUNDAR on Monday 20th of August 2012 04:07:00 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)