ஸ்டீபன் என்ற பெயருள்ளவரெல்லாம் ஸ்டீபனாகி விடமுடியுமா,என்ன?
தள நிர்வாகிகளே வெவ்வேறு பெயர்களில் எழுதி மோசடி செய்யும் காலம் இது; இதனால் என்னைப் போன்ற ஒரு சிலருடைய உழைப்பும் வீணாகிறது;
நண்பர் ஸ்டீபன் அவர்கள் மனம்போன போக்கில் எதையாவது எழுதிக் கொண்டிராமல் முதலில் உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் வகையில் ஒரு நல்ல வேதாகமக் கல்லூரியில் இணைந்து முறைப்படி வேதத்தைப் பயின்று வாருங்கள் அல்லது அனுபவமுள்ள மூப்பர்களின் கீழிருந்து கற்றுக் கொள்ளுங்கள்;
முதலில் நீங்கள் சார்ந்த சபையையும் விசுவாசத்தையும் நீங்கள் அமர்ந்து கற்றுக்கொண்ட ஊழியரையும் குறித்து உங்களது சாட்சியைச் சொல்லுங்கள்;அதிலிருந்தே உங்கள் நிலைமை தெரிந்துவிடும்;
பேதுருவைப் பார்த்தவுடனே அவன் இயேசுவுடனிருந்தவன் என்பது விளங்கியதல்லவா..?
பரிசுத்தத்தை குறித்து சில காரியங்களை நாம் ஆராய்வது நல்லது! ஒவ்வொரு மனிதனும் தன்னை போல பரிசுத்தமாக மாறவேண்டும் என்பது தேவனின் எதிர்பார்ப்பு. ஆகினும் அப்பரிசுத்தம் எவ்விதமாக இருக்கவேண்டும் என்பது நாம் நினைப்பதுபோல் அல்ல!
ஒரு மனிதனும் தன் சுய முயற்ச்சியால் தேவனுக்கேற்ற பரிசுத்தத்தை அடையவே முடியாது. அதை அடைவது மனித திறமைக்கு அப்பாற்பட்ட காரியமாக இருக்கிறது.
நம்முடைய நீதிகள் எல்லாம் அழுக்கான கந்தைகள் போன்றது என்று ஏசாய சொல்கிறார்
அவ்வாறு நோக்குவோமாயின் தேவன் முன் தன் சுய நீதியால் ஒருவரும் நிற்க முடியாது
எனவேதான் தேவன் பரிசுத்த ஆவியானவரை பூமிக்கு அனுப்பினார். அவர் நம்முள் வாசம் பண்ணி நமக்கு போதித்து நடத்துவதால் நாம் தேவனுக்கேற்ற பரிசுத்த நிலையை எட்ட வாய்ப்பிருக்கிறது.
"மீட்கப்படும் நாளுகென்று முத்திரையாக பெற்றிருக்கும் பரிசுத்த ஆவியானவர்" என்று அவரை வேதம் குறிப்பிடுகிறது. அவரை பெற்று அவரில் நிலைத்திருக்காவிட்டால் நம்மால் தேவனுக்கு முன்னால் நிற்கவே முடியாது மற்றும் நமது மீட்புக்கும் வழியில்லை.
மொத்தத்தில் நம்மை தேவனுக்கு ஏற்ற பரிசுத்தத்தில் நடத்துபவர் பரிசுத்த ஆவியானவரே! அவர் நம்முள் இல்லாமல் நாம் என்ன நற்கிரியைகள் செய்தாலும் அது பரிசுத்தமகாது. தேவன் நம்மை பார்க்கும் போது அந்த பரிசுத்த ஆவியானவரின் ஊடே நம்மை பார்த்தால் மட்டுமே நாம் தப்பிக்க முடியும்.
இன்று அநேகர் பரிசுத்த ஆவியை பெற்றுருக்கிறேன் என்று சொல்லியும் ஆவிக்குரிய அடையாளங்கள் எதுவும் இல்லாமல் வாழ்வதை காண முடிகிறது. ஒவ்வொருவரும் தங்களுக்குள் இருப்பது உண்மை பரிசுத்த ஆவிதானா அல்லது வஞ்சிக்கும் ஆவியா? என்பதை சுயபரிசோதனை செய்துகொள்வது நல்லது. அவரை அல்லாமல் பரிசுத்தம் இல்லை.
நான் அறிந்தவரை ஆவியானவர் நடத்தும் விதத்தை கீழ்க்கண்ட தொடுப்பில் பார்க்கவும்: ஆவியானவர் உங்களில் வாசம் செய்கிறாரா
ஆவியானவர் நடத்துதலுக்கு ஒரு சிறு உதாரணம் தருகிறேன்.
ஒருநாள் ஒரு கடையில் சென்று பப்ளிக் தொலைபேசியில் போன் பண்ணினேன். நான் பண்ணியது ஒரே ஒரு கால் ஆனால் அங்கு இரண்டு தனி தனி காலாக பதிவாகியிருந்ததது. நான் ஒரு கால் என்று சொல்ல அவர்கள் இரண்டு கால் என்று சொல்ல, இறுதியில் அவர்கள் எனக்கு பழக்கம் உள்ளவர்களாக இருந்ததால் ஒரு காலுக்கு மட்டும் பணம் வாங்கிகொண்டு விட்டுவிட்டார்கள். அனால் வீடு வந்த என்னால் நிம்மதியாக இருக்கவே முடியவில்லை. அவர்கள் அந்த ஒரு காலுக்கான பணத்தை விட்டுவிட்டாலும் அவர்கள் மனதில் ஏற்ப்பட்ட கஷ்டம் அப்படியே ஆவியானவர் மூலம் என்னை கடுமையாக தாக்கியது. சிறிது நேரம் என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. உண்டே திரும்பி போய் அந்த ஒரு காலுக்கான பணத்தை கொடுத்தபோது சந்தோசமாக வாங்கிகொண்டார்கள். அத்தோடு எனக்கு சமாதானமும் கிடைத்தது.
இங்கு நான் சரியா? அல்லது அவர்கள் சரியா? என்பது கேள்வியல்ல!
நம்முடைய செயலினிமித்தம் எவ்விதத்திலும் யாரும் வருத்தம் அடையாதபடி பார்க்கவேண்டியதுதான் நமது பொறுப்பு. அதற்காக சில தியாகங்களை கூட செய்யவேண்டும். நம்முள் ஆவியானவர் கிரியை செய்தால் யாரையும் கடினமாக பேசவே முடியாது என்றே நான் கருதுகிறேன். அப்படி ஓரிரு முறை பேசிவிட்டு நான் பட்ட அவஸ்தையை சொல்லி முடியாது. சம்பந்தப்பட்டவர்களிடம் சென்று மன்னிப்பு கேட்கும் வரை சமாதானமே இருக்காது. அவர் நடத்துதலே அதிசயம்தான். நாம் விரும்பிகிரோமோ இல்லையோ, நம்மை கீழ்படுத்தி அவர் பரிசுத்த நிலைக்கு நம்மை கொண்டு வந்து விடுவார்.
சமீபத்தில் கூட ஒரு சகோதரரின் பதிவில் அடிப்படை கருத்து தவறு இருக்கிறது என்று சொல்லி தனி மடலிட்டபோது அந்த சகோதரர் தனது பதிவை நீக்கிவிட்டார்! அதினிமித்தம் அன்று இரவு முழுவதும் ஆவியானவரால் கடிந்துகோள்ளப்பட்டேன். பின்பு வேறோரோ பதிவிட்டு அவரோடு ஒப்புரவானபின்னரே சமாதானம் கிடைத்தது.
யோவான் 16:13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்;
யோவான் 14:17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்
இவ்வாறு நம்முள் இருக்கும் ஆவியானவர் நம்மை அவர் வழியில் சுத்திகரிக்கும்போது கீழ்படிய வேண்டும் ஆனால் அவர் செயல்பாட்டை அசட்டை பண்ணும்போது அவர் எதிர்பார்க்கும் பரிசுத்த நிலையை நாம் அடைய முடியாது.
இது மட்டுமல்ல, இதுபோல் ஒவ்வொரு சிறு சிறு காரியங்களிலும் நாம் பரிசுத்தம் அடையவேண்டும் என்பதே தேவனின் எதிர்பார்ப்பு அதுவே தேவனுக்கேற்ற பரிசுத்தம்.
-- Edited by SUNDAR on Wednesday 10th of February 2010 03:41:26 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)