ஸ்டீபன் என்ற பெயருள்ளவரெல்லாம் ஸ்டீபனாகி விடமுடியுமா,என்ன?
தள நிர்வாகிகளே வெவ்வேறு பெயர்களில் எழுதி மோசடி செய்யும் காலம் இது; இதனால் என்னைப் போன்ற ஒரு சிலருடைய உழைப்பும் வீணாகிறது;
நண்பர் ஸ்டீபன் அவர்கள் மனம்போன போக்கில் எதையாவது எழுதிக் கொண்டிராமல் முதலில் உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் வகையில் ஒரு நல்ல வேதாகமக் கல்லூரியில் இணைந்து முறைப்படி வேதத்தைப் பயின்று வாருங்கள் அல்லது அனுபவமுள்ள மூப்பர்களின் கீழிருந்து கற்றுக் கொள்ளுங்கள்;
முதலில் நீங்கள் சார்ந்த சபையையும் விசுவாசத்தையும் நீங்கள் அமர்ந்து கற்றுக்கொண்ட ஊழியரையும் குறித்து உங்களது சாட்சியைச் சொல்லுங்கள்;அதிலிருந்தே உங்கள் நிலைமை தெரிந்துவிடும்;
பேதுருவைப் பார்த்தவுடனே அவன் இயேசுவுடனிருந்தவன் என்பது விளங்கியதல்லவா..?
டீவி மட்டுமல்ல சகோதரரே எந்த ஒன்றையுமே பார்ப்பது தவறல்ல என்றே நான் கருதுகிறேன்.
எல்லாவற்றிலுமே நல்லது கெட்டது இரண்டும் கலந்தே இருக்கிறது, திருடாதே படம் பார்த்து திருடவே கூடாது என்று திருந்தியவர் இருக்கிறார் அதேபோல் திருடி படம்பார்த்து திருட கற்றவர்களும் இருப்பார்கள். எல்லாமே நமது மனதை பொறுத்தது நலமானவற்றை பார்க்கலாம் நமது பரிசுத்தத்திற்கு களங்கம் ஏற்ப்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது.
சமீபத்தில் சில நண்பர்களின் அழைப்பின் பேரில் ஹரி போட்டர் படம் பார்க்க நேர்ந்தது. எல்லோரும் அதை எதோ பொழுதுபோக்கு படமாக ரசித்து பார்க்க, எனக்கு அந்த படத்திலிருந்து ஒரு அனேக ஆவிக்குரிய உண்மைகளை அறிய முடிந்தது முக்கியமாக "மரணம் என்பது எங்கோ மனிதன் மறைக்கப்படுவது தானேயன்றி அது ஒரு முடிவு அல்ல". என்ற கருத்து உணர முடிந்தது. தேவனை பற்றிய சிந்தையில் எதை பார்த்தாலும் அங்கு ஒரு புதிய கருத்து சொல்லப்படுவதை அறியமுடியும்.
ஆகினும் டி வி பார்த்தல் என்பது நமக்கு கொடுக்கப்பட்ட பொன்னான நேரத்தை வீணடிப்பது போன்றதே. இரண்டாவதாக ஆவிக்குரிய தெளிந்த நிலையில் இல்லாமல் டிவி யை பார்ப்பது விசுவாசிகளையும் இடரசெய்யும் என்பது மறுக்கமுடியாது.
இருதயத்தில் தேவனுக்கேற்ற சுத்தம் வேண்டும்! அதை விடாது காத்துக்கொள்ள முடியும் என்றால் எதை வேண்டுமானாலும் பார்க்கலாம். சுத்தம் கெட வாய்ப்பிருக்கும் எல்லாவற்றயும் தவிர்ப்பது நல்லது.
-- Edited by SUNDAR on Thursday 11th of February 2010 11:05:13 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இன்று பிசாசு பயன்படுத்து மிக பெரிய ஆயுதம் தான் இந்த டிவி
இல்லை அதில் கட்டவை இருந்தாலும் அதில் சில விஷயங்கள் நல்லது இருக்கின்றது என்று சொல்வோம் ஆகில்
நாம் விழுவது நிச்சயம் .........நம் சிந்தை மாறுவது உண்மை ............என்பது என்னுடைய கருத்து
சகோ. எட்வின் அவர்களே உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன். டிவி சினிமா போன்ற காரியங்களில் நேரத்தை செலவழிப்பதும் தேவையற்ற காரியங்களை பார்ப்பதும் பரிசுத்தத்தை கெடுக்கும் என்பது உண்மையான கருத்துதான். "கருப்பு பிசாசு" என்று கருதப்படும் டிவி இன்று அநேகரை சீரியல் பயித்தியமாக்கி வைத்திருப்பதை அறிய முடிகிறது! அது ஆவிக்குரிய வாழ்வுக்கு ஒரு மிகபெரிய தடைகல்தான்! எனவே அதை பார்க்காமல் தவிர்ப்பது சாலசிறந்தது! .
ஆனால்
என்னுடைய கருத்துப்படி எதற்க்குமே வசனம்தான் நமக்கு அளவுகோல். வேதத்தில் ஒரு காரியத்தை குறித்து தவறு என்று குறிப்பிடபடாத பட்சத்தில் "எல்லாவற்றையும் செய்ய எனக்கு அதிகாரம் உண்டு ஆனால் எல்லாம் எனக்கு தகுதியை இராது" என்று பவுல் சொவதுபோல் அவரவருக்கு சில தகுதிகள் இருக்கிறது அதன் அடிப்படையில் நாம் பார்க்கலாம் என்றோ பார்க்ககூடாது என்றோ முடிவெடுத்து கொள்ளலாம் என்றே நான் கருதுகிறேன்.
"இடறல் உண்டாவது சகஜம்" என்று இயேசுவே குறிப்பிட்டிருக்கும் போது இடரலடைந்துவிடுவோமோ என்று பயந்தால் நாம் ரோட்டில்கூட நடக்க முடியாது. காரணம் அழகான பெண்கள் மற்றும் சுவரொட்டிகளை பார்த்து நமது பரிசுத்தம் குலையலாம். அதற்க்கெல்லாம் பயந்தால் முடியுமா?
உண்ணப்பட்ட எல்லாவற்றயும் ஆராய்ந்து பார்த்து நலமாதை எடுத்துகொண்டு தேவையில்லாததை ஒதுக்கும் உடம்பு போல நமக்கும் தேவையில்லாத எத்தனையோ காரியங்கள் கண்வழியாக மனதுக்கு செல்கின்றனர் அவற்றுள் நலமானதை எடுத்துகொண்டு தேவையற்றதை ஒதுக்குவதுதான் சிறந்தது.
இயற்க்கை காரணிகளாகிய மழை காற்று சூரியன் போன்ற எல்லாவற்றாலும் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. அதுபோல் மனிதனால் செய்யப்பட்ட எல்லா பொருட்களிலும் நன்மையும் உண்டு தீமையும் உண்டு அணுவால் மின்சாரம் தயாரிக்கலாம் நாட்டையும் அழிக்கலாம் அதை ஆராய்ந்து செயல்படத்தான் அவனுக்கு அறிவை ஆண்டவர் கொடுத்துள்ளார். ஏன் வேத புத்தகத்தில் கூட சில சம்பவங்கள் மோசமானதுதான் அதற்காக அதை ஒதுக்க முடியுமா?
எனக்கு இடரலாயிருக்கும் என்று ஒருவர் கருதினால் பார்க்காமல் இருப்பது நல்லது! அதற்காக பார்ப்பவர்கள் எல்லோரும் தவறிவிடுவார்கள் என்று கருதுவது நமக்கு அப்பாற்பட்டது! அதே நேரத்தில் உங்களுள் இருக்கும் ஆவியானவர் இது குறித்து எச்சரித்தால் அதை விட்டு உடனே விலகுவது உத்தமம்.
மொத்தத்தில், டிவியை தவிர்ப்பது ஆவிக்குரிய வாழ்வுக்கு நன்மை பயக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)