இன்றைய உலகில் மனிதன் ஏதோ ஏதோ தேடி அலைகிறான் எந்த எந்த காரியதிற்கோ தன் நேரங்களையும் காலத்தையும் செலவு செய்து கொண்டு இருக்கிறார்கள்.
நான் உனக்கு போதித்து நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு காட்டுவேன்
என்றும் உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்
என்றும் கர்த்தர் சொல்லி இருகிறாரே.
சகோதரர் ஸ்டீபன் அவர்களே உங்கள் வார்த்தைகளில் உண்மை இருப்பதை அறியமுடிகிறது. ஆண்டவரை அறிந்த தொடக்க காலங்களில் இதே கொள்கைதான் நான் உறுதியாக கொண்டிருந்தேன். இன்றும் அதைதான் தொடர்கிறேன்.
எல்லாமே தேவன்தான்! அவர் கொடுத்த வேதமே நமக்கு வழிகாட்டி! அதை தவிர, வேறு எந்த திட்டம் நம் வாழ்வில் வைத்து இருந்தாலும் அது வீண் என்றே நான் கருதுகிறேன்.
இதை அறியானத ஜனங்கள் ஓடுகிறார்கள் பாடுபடுகிறார்கள் திருப்திதராத எதையோ தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு சொன்னாலும் புரியப்போவதும் இல்லை. ஒருமுறை ஆவியானவரின் துணையோடு நாம் சொல்லும்போது எல்லாமே புரிந்துவிட்டதுபோல கேட்கும் அவர்கள் சில நாட்களில் மீண்டும் பழைய நிலையிலேயே தங்கள் வாழ்வை தொடர்கின்றனர். அவர்களை பார்க்கும்போது பரிதாபம்தான் வருகிறது. ஆனால் அவர்களோ "கடவுளை தேடுவது சரிதான் ஆனால் ஒரேயடியாக இப்படி இருக்ககூடாது" என்று அறிவுரை வழங்குகின்றனர். இவர்களை பார்த்து சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.
அதை செய்யலாமா? இதை செய்யலாமா?எங்கு யாரிடம் போய் நாலு காசு சம்பாதிக்கலாம் என்று நாம் சுய திட்டம் போடுவதைவிட, ஆண்டவரின் பாதத்தில் உண்மையான வாஞ்சையோடு அமர்ந்தால் போதும் அனைத்தையும் அவரே நம்மை பொறுப்பேற்று நடத்துவதை பார்க்கமுடியும். ஒரு வழி மூடும் போது இன்னொரு வழி தானாக திறப்பதை அறியமுடியும்! எது வழி என்று தேடி ஆலயவேன்டியாய தேவையே இல்லை என்றே நான் கருதுகிறேன்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)