இன்றைய பெரும்பான்மையான மக்களிடம் நியாய தீர்ப்பு வருகிறது என்பதை மறந்து விட்டார்கள் என்று நினைக்க தோன்றுகிறது.
நடக்கிற சம்பவங்களை பார்க்கும் போது என்றோ ஒரு நாள் நடக்க போகிறது யாருக்கோ என்றுஎண்ணி அனேக மக்கள் வாழ்ந்து கொண்டிருகிறார்கள்.
பிரசங்கி - 5 :2
தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.
மல்கியா - 3 :16
அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக்கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது
ரோமர் 2 :1 ,2
ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.
நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.
ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
மத்தேயு - 12 :36
மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.
இப்படி அனேக இடங்களில் வாயின் வார்த்தைகளை குறித்து சொல்லப்பட்டு இருப்பதை மறந்து எந்த ஒரு கவலையும் இல்லாமல் மிக சாதரணமாக அநேகர் மற்றவர்கள் குறித்து பேசுகிறதை பார்க்கும் போது மிகவும் கவலையாக இருக்கிறது.!
பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் கூட கர்த்தாவே என் வாய்க்கு காவல் வையும் என்றும் என் உதடுகளின் வாசலை காதுகொள்ளும் என்றும் ஜெபித்து இருகிறார்கள்.
யாக்கோபு 3 ம் அதிகாரத்தில் கூட மிக அருமையாக சொல்லப்பட்டு இருக்கிறது நாவை பற்றி.
இவை எல்லாம் மறந்து எப்படித்தான் எந்த ஒரு முகாந்தரமும் இல்லமால் மற்றவர்கள் மீது பழியை போடமுடிகிறதோ தெரியவில்லை...! .
என்னுடைய கருத்து என்னவெனில் மற்றவர்கள் செய்த குற்றம் எதுவாய் இருந்தாலும் நாம் அவர்களை குற்றபடுத்துவதை பார்க்கிலும் அவர்களுக்காக ஜெபிக்கலாம் என்றே நினைக்கிறேன்
நம்முடைய தேவன் மிகவும் இரக்கம் உள்ளவரும் மிகுந்த தயவு உள்ளவருமாய் இருக்கிறபடியால் அவர்களுக்கு அவர் எப்போது வேண்டுமானாலும் இறங்கி அவர்களை மன்னிக்கலாம் நாம் ஏன் அவர்களை குற்றபடுத்தி நியயதீர்ப்புக்கு ஏதுவாக வேண்டும் .... !
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
ஆனால் குற்றபடுதுவதற்கு மற்றும் நியாயதிர்பல்ல தன் சகோதரனை மூடனே என்று சொல்கிறவன் நீயாயத்ர்புக்கு எதுவாய் இருக்கிறான்
இப்படி பல தவறுக்கு நீயாதிர்பு இருகின்றது
//நம்முடைய தேவன் மிகவும் இரக்கம் உள்ளவரும் மிகுந்த தயவு உள்ளவருமாய் இருக்கிறபடியால் அவர்களுக்கு அவர் எப்போது வேண்டுமானாலும் இறங்கி அவர்களை மன்னிக்கலாம் //..............
உண்மையாகவே. ...... சிம்சோன் தவறு செய்து தேவனுடைய பரிசுத்த ஆவியை இழந்த போதிலும் கடைசிநேரத்தில் தேவனே இந்த ஒருவிசை மாத்திரம் பெலத்தை தாரும் என்று கேட்ட பொழுது உடனே இறங்கி அவனுக்கு பலத்தை தந்தார்.................. ஆம் நம் தேவன் மகா இரக்கம் உள்ளவர்............... அவர் இரக்கத்துக்கு முடிவே இல்லை................
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)