நீங்கள் இங்கு வருவது தேவனின் மேலான சித்தமே! உண்மை என்பது வெகு தூரத்தில் இல்லை!
தாங்கள் எந்த மார்க்கத்தை சார்த்தவராக இருந்தாலும் பரவாயில்லை! இங்கு ஒரு உறுப்பினராகி தங்களின் மேலான கருத்துக்களை பதியும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
இறைவனை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது பற்றிய எவ்விதமான கருத்துக்களையும் நீங்கள் பதியலாம். அது இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எந்த கட்டாயம் எதுவும் இல்லை.
பதில் இல்லாத கேள்வி என்று எதுவுமே இல்லை என்றே நான் கருதுகிறேன்! இறைவனை பற்றி எவ்வித கேள்வி வேண்டுமானாலும் முன்வையுங்கள், ஆராய்ந்து முடிவெடுக்கலாம்.
தங்களின் கருத்துக்களை அறியும் ஆவலில்!
இறைநேசன்.
-- Edited by இறைநேசன் on Friday 12th of February 2010 03:01:17 PM
கடன்காரனாயிருக்கும் ஒரு ஆவிக்குரிய கிறிஸ்தவன், கிறிஸ்துவின் ரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட முடியுமா?
தளத்திற்கு புதிதாக வருகை தந்து கேள்வி ஒன்றை முன் வைத்திருக்கும் சகோதரர் "சேகர்" அவர்களை தள சகோதரர்கள் சார்பாக கர்த்தரின் இனிய நாமத்தில் வாழ்த்தில் வரவேற்கிறோம்.
கடன்வாங்குவது சம்பந்தமான சில முக்கிய விளக்கங்கள் கீழ்கண்ட சுட்டியில் இருக்கிறது படித்து பயன் பெறவும்.
இந்த கடைசி காலத்தில் கடைசி நிமிடங்களில் அதிகமான ஆவிக்குரிய உண்மைகளை அறிந்து கொள்ளவே இறைவன் இந்த தளத்தை உருவாக்க கிருபை செய்திருக்கிறார் என்று இயேசுவுக்குள் நான் நம்புகிறேன்.
என்ற இயேசுவின் வார்த்தைகள்படி, எல்லா உண்மைகளும் வெளிப்படுத்தபட்டுவிட்டன!
விவிலியத்தில் உள்ள வசனம் குறித்துகொஞ்சம் ஆழமாக இரண்டு கேள்வியை கேட்டுவிட்டால் "பதில் தெரியாது" என்று சொல்லாமல் கிறிஸ்தவர்களுக்கு எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் தளமாக இந்த தளம் அமைய இறைவனிடம் விண்ணப்பிப்போம். இறைவன் தாமே இங்கு எழுதும் சகோதர சகோதரிகளுக்கு அதிக ஞானத்தை தருவாராக.
நமது தளத்தில் சமீபத்தில் கருத்துக்களை எழுதி, தற்போது பங்களிப்பை தராமல் இருக்கும் எல்லா சகோதர சகோதரிகளையும் அன்புடன் அழைக்கிறோம். கருத்து வேறுபாடுகளும் குழப்பங்களும் இல்லாத இடம் எதுவும் இல்லை! ஓரளவுக்கு ஒத்த கருத்துக்களை கொண்டவர்கள் தங்கள் பங்களிப்பையும் சாட்சிகளையும் பகிர்ந்துகொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
நாம் இறைவனை பற்றி பேசும் /எழுதும்/ சிந்திக்கும் ஒவ்வொரு காரியமும் தேவனின் நியாபக புஸ்தகத்தில் குறித்து வைக்கப்படும் என்றே நான் எண்ணுகிறேன். அத்தோடு நமது சிந்தையானது உலக காரியத்தில் அதிகம் வீழ்ந்துவிடாமல் கடவுள் பற்றிய தியானத்தில் நிலைத்திருக்க இந்த தளம் தங்களுக்கு உதவும் என்று இயேசுவுக்குள் விசுவாசிக்கிறேன்!
Nesan wrote: அத்தோடு நமது சிந்தையானது உலக காரியத்தில் அதிகம் வீழ்ந்துவிடாமல் கடவுள் பற்றிய தியானத்தில் நிலைத்திருக்க இந்த தளம் தங்களுக்கு உதவும் என்று இயேசுவுக்குள் விசுவாசிக்கிறேன்!
எவ்வளவோ உண்மை . இந்த தளத்திற்கு வந்தபின்பு அதிகமாக வேதத்தை தியானிக்க தொடங்கியுள்ளேன் .கர்த்தர் இந்த தளத்தை இன்னும் ஆசீர்வதிப்பார் .