இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பெண்கள் பேன்ட் அணியலாமா


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
பெண்கள் பேன்ட் அணியலாமா
Permalink  
 


 இன்று பெண்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ குடும்பக்களில் பெரிய உழியர்கள் அவர்கள் குடும்பக்களிலும்
பேன்ட் அணிவது மிகவும் சுலப மாகி விட்டது 
 
ஆனால்  கிலே கொடுக்க பட்ட வசனங்களில் தேவனுக்கு அருவருப்பானது
என்று எழுதி இர்ருக்கிறது
 
 
1  திமோத்தியு 2 : 8  9   ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், தகுதியான வஸ்திரத்தினாலும் நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்,

உபாகமம் : 22 . 5   புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.
 
 இல்லை என்றால் அது அந்த காலம் இப்பொழுது எல்லாம் மாறி விட்டது அப்படியா..............              இல்லை அப்படி இறுக்க கூடாது பெண்கள்  பேன்ட் அணிய   கூடாது  என்பதா  

 

தளத்தின் நண்பர்கள் தங்கள் கருத்தை பதிக்கவும்....................................



__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

edwin sudhakar wrote:
//இன்று பெண்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ குடும்பங்களில் பெரிய ஊழியர்கள் அவர்கள் குடும்பங்களிலும்
பேன்ட் அணிவது மிகவும் சுலபமாகி விட்டது//


இன்றைய ஊழியர்கள் நமக்கு முன்மாதிரியுமல்ல, அவர்கள் சொல்வது நமக்கு போதனையுமல்ல.

கிறிஸ்துவும் வேதாகம ஊழியர்களுமே நமக்கு முன்மாதிரி, அவர்கள் சொன்னதே நமக்குப் போதனை.

வேதவசனம் என்ன சொல்கிறதோ அதற்கு அப்படியே கீழ்ப்படிவோம்.

ஆம், பவுல் சொன்னபடி புறம்பான அலங்கரிப்புகளை புறக்கணிப்போம். பவுல் சொல்வது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பொருந்தும்.

இந்நாட்களில் விசுவாசிகள் என சொல்லிக்கொள்ளும் ஆண்களுங்கூட, பொன்னகைகளால் தங்களை அலங்கரிக்கின்றனர். இம்மாதிரி விஷயங்களில் பவுல் சொல்வதுபோல் யாராவது சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. மத்தேயு 5:3-ல் இயேசு சொன்னபடி, ஒருவன் ஆவியில் எளிமையுள்ளவனாயிருந்தால், அவன் சரீரத்திலும் தானாக எளிமை வந்துவிடும்.

பெண்ணின் உடையை ஆண் அணியக்கூடாதென்றும் ஆணின் உடையை பெண் அணியக்கூடாதென்றும் வேதாகமம் திட்டவட்டமாக கூறியுள்ளபடி பார்த்தால், இச்சமுதாயத்தால் ஆணின் உடை என அங்கீகரிக்கப்பட்டுள்ள pant-ஐ பெண்கள் அணியக்கூடாது என்றுதான் கூறமுடியும்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

ஆண்கள் பேன்ட் அணியலாமென்று வேதம் சொல்லுகிறதா?

ஆண்மை குறைவுக்கு முதல் காரணமே இறுக்கமான ஆடைகள் தான் என்று சொல்லப்படுகிறது;எனவே வேதம் சொல்லாத உள்ளாடைகளை அணியும் ஆண்களும் பாவிகளே;

கருத்தடை சாதனங்களும் வேதத்தில் அங்கீகரிக்கப்படவில்லை;
எனவே அதுவும் பாவமே;

அன்றைக்கு மின்சாரம் இல்லாத காலத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் மாலை மயங்கும் வேளையில் தடுமாற்றம் உண்டாகாத‌படியிருக்கவே இந்த கட்டளைகள் யூதருக்குக் கொடுக்கப்பட்டது;

இன்னும் சொல்லப்போனால் இதுபோன்ற மாற்று உடைகளையணிந்துக் கொண்டு சென்று ஒருவரையொருவர் வஞ்சித்துவிடாதிருக்கவும் இந்த கட்டளை கொடுக்கப்பட்டது;

கடைசியாக பெண்கள் சுடிதார் அணியலாமா என்றும் சொல்லிவிடுங்கள்; ஏனெனில் அதே போன்ற உடையை பஞ்சாபியர் இருபாலரும் அணிகின்றனர்;

யூதத்தின்படியும் இஸ்லாத்தின்படியும் ஆண்கள் முடியை மழிக்கக்கூடாது; அப்படியானால் மீசையை மழிக்கும்
ஆண்களும் குற்றவாளிகளா?

கிறிஸ்தவர்களின் கண்கண்ட தெய்வமான இயேசுகிறிஸ்துவை இஸ்லாமின் அல்லா போல அடிப்படைவாதியாகவும் பழமைவாதியாகவும் மாற்றிவிடாதீர்கள்;

வேறு ஏதாவது ஆகிற வேலையப் பாருங்கைய்யா..!



-- Edited by chillsam on Saturday 13th of February 2010 09:23:10 AM

__________________

"Praying for your Success"


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

chillsam wrote:
//வேறு ஏதாவது ஆகிற வேலையப் பாருங்கைய்யா..!//

அப்போஸ்தலர் 5:29 மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.

எசேக்கியேல் 2:6,7 அவர்கள் கலகவீட்டார். கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு.


தேவனின் வார்த்தைகளைச் சொல்வதுதான் என் வேலை.

ஒருசிலரைப் போல, மாணவர்களின் தேர்வுக்காகவும் வியாபாரிகளின் வியாபாரப் பெருக்கத்திற்காகவும் உபவாசமிருந்து ஜெபித்து, தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மற்றும் வியாபாரத்தில் இலாபம் பெறுபவர்களின் காணிக்கையை எதிர்பார்த்து, எனக்கு ஆதாயம் “ஆ(க்கு)கிற வேலை” அல்ல என் வேலை.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

சகோதரர் எட்வின் அவர்களே!
 
பெண்கள் ஆண்களுக்கு இச்சயம் தூண்டும் அளவுக்கு உடை அணியாமல்  தகுதியான எளிமையான  உடைகளை அணியவேண்டும் என்பதுதான் பொதுவாக வேதம் சொல்லும்  கருத்து.
 
மேலும் 

உபாகமம் : 22 . 5   புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.
 
 
என்ற வார்த்தைகள்படி பார்த்தாலும்  புருஷரின் உடைகளை ஸ்திரிகள் அணியக்கூடாது என்பது பேன்ட் ஷர்ட் என்று பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் ஒவ்வொரு நாட்டு கலாச்சாரத்திற்கு ஏற்ப உடைகள் மாறுபடுகின்றன.  எனவே  என்னை பொறுத்தவரை அதற்க்கு சரியான பொருள் என்னவென்றால்   "ஒரு  ஸ்திரி அணிந்த உடைகளை  ஒரு புருஷன் அணியக்கூடாது அல்லது புருஷன் அணிந்த உடைகளை ஸ்திரி அணியக்கூடாது"  
 
ஒரு ஆண் போட்ட  பேன்ட் சர்டை எடுத்து  பெண்  போட்டுக்கொள்ள கூடாது, ஆனால் கடையில் பெண்களுக்கென்று விற்கப்படும் பேண்டை வாங்கி போடுவதில் தவறில்லை என்றே பொருள்படும்  நான் கருதுகிறேன். 

பழைய ஏற்பாட்டு கட்டளைகளை கைகொள்வதும் கைகொள்ளாததும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது, தேவனின் கட்டளைகள் எதிலுமே நிச்சயம் நன்மைகள்  உண்டு அது ஒன்றும் சும்மா காரணமின்றி  சொல்லப்படவில்லை.  அனால்    அதனால் புதிய உடன்படிக்கயாகிய  ஆவிக்குரிய வாழ்வுக்கு  எந்த பாதிப்பும்  இருக்காது என்றே நான் கருதுகிறேன்


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

// பெண்கள் ஆண்களுக்கு இச்சயம் தூண்டும் அளவுக்கு உடை அணியாமல்  தகுதியான எளிமையான உடைகளை அணியவேண்டும் என்பதுதான் பொதுவாக வேதம் சொல்லும் கருத்து //

அற்புதமான- நடுநிலையான கருத்தை முன்வைத்திருக்கிறார், நண்பர் சுந்தர் அவர்கள்..!


-- Edited by chillsam on Saturday 13th of February 2010 12:19:28 PM

__________________

"Praying for your Success"
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard