எனது மகன் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தயாக இருந்த போது ஒரு சமயம் மிகுந்த சளி தொல்லை ஏற்ப்பட்டது. வர வர அதிகமாகி இருதியில் சளியானது சுவாசிக்க முடியாத அளவு நெஞசை அடைக்க ஆரம்பித்து விடடது.
நாஙகளும் எஙகளுக்கு தெரிந்த மருந்தை எல்லாம் கொடுத்து பார்த்துவிட்டோம். பல டாக்டரிடமுன் அழைத்து சென்று காட்டி பார்த்துவிட்டோம் பலன் எதுவும் இல்லை. வர வ்ர அதிகமாகி கொண்டே போனதேய்ன்றி குறையவில்லை.
அவன் சளி தொல்லயால் படும் அவஸ்த்தயை பார்ப்பதர்கே மிகவும் பரிதாபமாக இருக்கும். பல முறை தூங்காமல் இரவில் விழித்து அவனை தூக்கி விக்ஸ் போட்டு தடவி விட்டுகொண்டு இருபேன்.
பல நாட்கள் ஆகியும் போகாமல் பாடு படுத்திய அன்த சளியால் மிகவும் மனமுடைந்த நான் ஒரு நாள் ஆண்டவரே ஏன் எனக்கு இந்த சோதனை? எனக்கு தெரிந்து ஒரு நாளும் உம்முடய கட்டளை எதயும் மீறி நடந்ததுபோல் எனக்கு தெரியவில்லயே, இந்த் சளிக்கு என்ன காரண்ம்? எதர்க்காக இந்த சோதனை.
இது சாதாரண் சளிபபோல் எனக்கு தெரியவில்லை. என்ன மருந்து கொடுத்தாலும் போகமாட்டேன் என்கிறதே, எதனால் இந்த துன்பம் எனக்கு வந்திருக்கிறது என்பதை எனக்கு தயவு செய்து தெரியப்படுத்துஙகள் என்று சொல்லி இரவு 12 மணீ வரை ஜெபித்து, நீர் தவறு இல்லாது தண்டிக்கிற தேவன் இல்லை எனவே என்கோ நான் தவறிவிட்டேன் என்றே நான் கருதுகிறேன். எனது தவறை எனக்கு தெரியப்படுத்தும் என்று மன்றாடி வேதனை தாஙகமுடியாமல் அழுது ஜெபிதேன்.
இரவு பன்னிரட்டு மணிக்கு மேல் ஆண்டவர் என்னொடு பேசினார்.நீ தவறு செய்துவிட்டாய், முதல் முதலில் இந்த சளி எப்பொழுது ஆறம்பித்தது என்று யோசித்து பார் என்றார். அன்றில் இருந்து உனது முக்கிய நடைமுறைகளை யோசித்து பார்த்து தவறை திருத்து என்று கூறிவிட்டார்.
நானும் யோசித்து இந்த சளி தொல்லை ஆரம்பித்தது சுமார் ஒரு மாதத்துக்கு முன் என்று அறிந்தேன். அன்றில் இருந்து என்ன நடந்தது என்று பலமுறை யோசித்தும் தவறு எதுவும் எனக்கு தென்படவில்லை. ஆகினும் நான் விடவில்லை எங்கோ தவறு பண்ணியிருக்கிறேன், ஆண்டவரே தெரியப்படுத்தும் என்று சொல்லி ஜெப்பித்துகொண்டே யோசித்துகொண்டும் இருந்தேன்.
இறுதியில் அந்த குறிப்பிட்ட நாட்களில் எனது கம்பனி கணக்குகள் ஆடிட்டிங் செய்யப்பட்டது எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த காரியம் நினைவுக்கு வந்தவுடன் நான் செய்த தவறும் எனக்கு நினைவுக்கு வந்துவிட்டது.
அதாவது ஒரு நியாயமான காரியத்துக்காக தவறான அட்ஜச்ட்மென்ட் ஒன்று கணக்கில் செய்திருந்தேன். அது குறித்து ஆடிட்டர் விசாரித்தபோது உண்மயை மறைத்துவிட்டேன். அப்பொளுதே ஆவியானவர் எனக்கு அது தவறு என்று தெரியப்படுத்தினார் ஆனால் நான், காரியம் நியாயமானதுதானே என்று கருதி ஆவியானவர் குரலை அசட்டை பண்ணியதோடு அது எனக்கு ஒரு பெரிய தவறாக தெரியவில்லை ஆதலால் அதை முற்றிலும் மறந்துவிட்டேன்.
அதுதான் நான் செய்த தவறு அதுதான் என்பதை புறிந்து கொண்டேன். உடனே ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டதோடு நாளை இந்த அட்ஜச்ட்மென்ட் குறித்த உண்மையை நான் ஆடிட்டரிடம் சொல்லி மன்னிப்பு கேட்டுவிடுகிறேன் ஆண்டவரே என்று ஜெபித்த போது எனக்குள் சமாதானம் வந்தது.
மறுநாள் ஆடிட்டரிடம் அது பற்றிய உண்மயை சொன்னபோது அவர் "என்ன மனசாட்சி குத்திவிட்டதா?" என்ற கேள்வியை கேட்டு சரி என்று சொல்லிவிட்டார்.
நான் அலுவலகம் வந்து எனது மேலதிகாரியிடம் பேசிக்கொண்டு இருந்தபோது இந்த சளி தொல்லை பற்றி சொல்ல நேர்ந்தது. உடனெ அந்த மேடம் "கற்ப்பூரத்தை தேங்காய் எண்ணெயில் காய்த்து மார்பு நெஞ்சு, விலா, முதுகு இவறில் சூட்ட்டோடு தேய்த்தால் சளி போய்விடும் என்று ஒரு சிரிய கை மருந்து சொன்னார்கள். அன்றே அதுபோல் செய்ய ஒரே நாளில் சளி பாதிபோய் அடுத்த இரண்டு நாளில் முறிலும் நீங்கியது.
இன்கு நான் அறிந்தது என்னவென்றால் எத்தனை நாளோ அந்த மேடம் என்னிடம் பேசுவார்கள் ஆனால் அன்றுவரை எந்த காரியமும் நடக்கவில்லை நான் தவறை சரி செய்தபோதோ, அவர்கள் சொல்லவும் நான் கேட்டு அதை உடனே செய்து செய்து விடுபடவும் உடனடியாக காரியத்தை கர்த்தர் வாய்க்கப்பண்ணினார்.
இதில் இரண்டு காரியத்தை அறியமுடியும்.
1. விபரமறியா சிறு குழந்தைகளுக்கு வரும் துன்பத்திற்கு காரணம் அவர்களது பெற்றோரே!
2. தேவனிடத்தில் கிட்டி சேர சேர சிறு சிறு தவறுகள் கூட மிகப்பெரிய தண்டனையை கொண்டு வரும்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)