நன்மை செய்து நல்ல குணத்தோடு வாழ்பவர்கள் சொர்க்கம் போவார்கள் என்பது அநேகர் நம்பும் உண்மை!
ஆனால் அந்த நல்ல குணத்தையும், நன்மை தீமையையும் பிரிக்கும் அல்லது தீர்மானிக்கும் அளவுகோல் அல்லது எல்லை எது? என்பது தான் இங்கு புரியாத புதிராக உள்ளது!
பாவம் அல்லது தீமை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக தெரிகிறது!. ஆயிரம் தீமை செய்யும் அயோக்கியனுக்கு கூட தான் நல்லவனாக இருப்பது போலதான் தெரிகிறது.
எனது முதலாளி ஒருவர் இருக்கிறான் ரொம்ப நல்லவர். யாருக்கும் எந்த தீங்கும் செய்யமாட்டார் பிறர் மனம் நோக பேசமாட்டார். ஆனால் அரசாங்கத்துக்கு கட்ட வேண்டிய வரியை கட்டுவதில் அவர் நேர்மையானவர் அல்ல. கேட்டால் பல காரணம் சொல்லுவார். அனால் அது தவறு என்று பைபிள் சொல்கிறது
வரியை ஏய்க்க என்னிடம் கணக்கு எழுத சொன்னபோது, நான் அதுபோல கணக்கு எழுதுவது கிடையாது என்று மறுத்துவிட்டேன் அதன் பிறகுதான் அது ஒரு தவறு என்றே அவர் உணர்கிறார்!
இன்னொரு முதலாளி ஒருவர் உண்டு. அவர் எந்த ஒரு அவசரம் என்றாலும் ஒரு சின்ன உதவி கூட யாருக்கும் செய்ய மாட்டார், அதுபோல் பிறரை திட்டுவதிலும் பேர்போனவர் சும்மா கெட்ட வார்த்தை எல்லாம் போட்டு எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கொஞ்சமும் கூச்சமில்லாமல் திட்டுவார்.
ஒருநாள் அவரிடம் என்ன சார் எல்லோரையும் இப்படி திட்டுகிறீர்கள் என்று கேட்டபோது "சுந்தர் உங்களைப்போல நானும் ரொம்ப நல்லவன் அனால் என்னை கடவுள் பிறரை திட்டுவதர்க்ககவே படைத்து வைத்திருக்கிறார். அவர் செய்ததுதான் இது" என்று சாதாரணமாக பேசுகிறார். ஆனால் பைபிள் ஒருவரையும் ஒடுக்க கூடாது என்று சொல்கிறது
எசே:18 7. ஒருவனையும் ஒடுக்காமலும்,
யோவான் 13:34நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்
இதெல்லாம் குற்றம் என்பது அவர்களுக்கு புரிவதில்லை முதலில் தீமை எது நன்மை எது என்று தெரிந்தால்தானே தீமையைதவிர்த்து நன்மையை செய்யமுடியும்! அனால் இங்கு எல்லோரும் தான்செய்வது சரி என்ற நோக்கிலேயே தவறை செய்கின்றனர். மேலும் தாங்கள் செய்யும் தவறுக்கெல்லாம் நியாயம் கற்ப்பிக்க ஒரு காரணமும் சொல்லிவிடுகின்றனர்.
பொதுவானக நாம் குளிர்ந்த தண்ணீரில் குளிக்க செல்லும்போது முதல் முதலில் ஒரு ஜக தண்ணீர் உற்றும்போதுதான் மிகுந்த குளிராக இருக்கும் அதன்பிறகும் அதே தண்ணீரைதான் அனேகநேரம் ஊற்றுவோம், ஆனாலும் முதலில் தெரிந்த அளவுக்கு குளிர் தெரிவதில்லை. பிறகு தண்ணீர் உள்ளே இறங்கி குளித்தாலும் நமக்கு பெரிதாக குளிர் தெரியாது. காரணம் நமது உடம்பு அந்த நீரின் தன்மையோடு ஒத்துபோயவிட்டது.
அதுபோல் மனிதர்கள் எந்த ஒரு பாவத்தையும்/ தவறையும் முதலில் செய்யும்போது கொஞ்சம் கூச்சம் பயம் எல்லாம் இருக்கும் அதே பாவத்த்தை பலநேரம் செய்தபிறகு அதை பார்ப்பதற்கு பாவம் போல தெரியாது. இருதயம் அதோடு ஒன்றி போய்விடுவதால் யாராவது அது பாவம் என்று சொல்லி உணர்த்தினால்தான் பாவம் என்பதே புரியவரும், இந்நிலையில் இருக்கும் மனிதன் எப்படி நன்மையாய் செய்து சொர்க்கம் போகமுடியும்.
இன்று மனிதர்கள் பாவத்தால் ஆட்கொள்ளப்பட்ட உலகில் எது பாவம் என்பதே தெரியாமல் உழன்று கொண்டு இருக்கின்றனர் எனவே தாங்கள் இருக்கும் நிலை என்னவென்பது அவர்களுக்கு சற்றும் புரியவில்லை இந்நிலையில் "தீய குணங்களை களைந்தால் மனதில் இறைவனை காணலாம்" என்பது சொல்வதற்கு ரொம்ப சுலபம். களைந்து பார்த்தால் தான் தெரியும் அதன் விஸ்வரூபம். சரி அப்படியே களைந்தாலும் எவ்வளவு நேரம் அந்த நிலையில் நம்மால் நிலைக்க முடியும்>
இறைவன் துணை இன்றி நம் முயற்சியால் தீய எண்ணங்களை களையவே முடியாது! அதில் நிலைநிற்கவும் முடியாது . ஏனெனில் அது நாம் வேண்டுமென்று நினைத்து நம் மனதில் வருவதல்ல. இச்சையும், வஞ்சமும், பொறாமையும் கசப்பும் ஆசையும் நம்மை கேட்டா நம் மனதினுள் வருகிறது.
"ஒரு வயது குழந்தை மண்ணை அள்ளி சாப்பிடும் போது கையில் ஒரு அறை போடுங்கள் மறுநாள் அது அங்கும் இங்கும் பார்த்து திருட்டுத்தனமாக, யாரும் இல்லாத நேரத்தில் மண்ணை அள்ளி சாப்பிடும்" அந்த திருட்டு குணம் யார் சொல்லி வந்தது.
மனிதன் பிறக்கும் போதே பாவமும் அவனோடு சேர்ந்து பிறக்கிறது வயது ஏற ஏற அது வளர்கிறது. அது நமது உடம்பிலேயே குடிகொண்டிருப்பதால் அதை களைவது சுலபமல்ல வேண்டுமென்றால் நான் களைந்து விட்டேன் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றிகொள்ளலாம். அவ்வளவுதான்.
சரியாக பாவம் களைதல் என்பது இறைவனிடம் வந்தால் மட்டுமே முடியும்! நமது பாவங்களுக்காக மரித்த இயேசுவை ஏற்ப்பதன் மூலம் நம் ஜன்ம பாவம் தொலைக்கப்பட்டு , நமக்கு இலவசமாக கிடைக்கும் தேவஆவியானவரின் வல்லமையுடன் பாவத்தை அடையாளம் கண்டு தவிர்த்தால் மட்டுமே நமக்கு சொர்க்கம் (பரலோகம்) கிடைக்கும்.
sundar wrote: //நாம் என்னதான் முயன்றாலும் நமது பாவங்களுக்காக மரிந்த இயேசுவிடம் வரவில்லை என்றால் சொர்க்கம் செல்வதென்பது முடிகிறகாரியம் அல்ல!//
அவ்வாறெனில், இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக இயேசுவை அறியாமல் மரித்த சிறியோர் பெரியோர் ஆகியவர்களின் கதி என்ன சகோதரரே?
அவர்களுக்கான தேவதிட்டம் என்ன?
பழைய ஏற்பாடு காலத்திலிருந்தே ஒரு மனிதன் மரித்த உடன் பாதாளத்தில் இறங்குகிறான் என்பதை அனேக வேதவசனங்கள் தெரிவிக்கின்றன . புதிய ஏற்பாட்டு காலத்தில் கிறிஸ்த்துவை ஏற்றுக்கொள்ளாது மரித்த எல்லோருமே உடனடியாக பாதாளத்தில் இருந்குகின்றார்கள்
யோபு 21:13 அவர்கள் செல்வவான்களாய்த் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு க்ஷணபொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள்.
ஆதியாகமம் 37:35ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில்இறங்குவேன் எசேக்கியேல் 31:17 இவர்களும் ஜாதிகளின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் புயபலமாயிருந்தவர்களும், பட்டயத்தால் வெட்டுண்டவர்களண்டையிலே பாதாளத்தில் இறங்கினார்கள். எல்லோரும் மரித்தபின் பாதாளத்தில்இறங்கி கொண்டிருப்பதை ஆவியில் அறிந்த தாவீது இவ்வாறு புலம்புகிறான்:
சங்கீதம் 89:48மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கி விடுகிறவன் யார்?
எனினும் தேவன் பேரில் கொண்ட நம்பிக்கையில் கர்த்தர் என்னை பாதாத்தின் வல்லமைக்கு தப்புவிப்பார் என்று விசுவாசத்தில் பேசுகிறான்
சங்கீதம் 49:15ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார்.
இப்படி இயேசு பிறப்பதற்கு முன்னோ அல்லது இயேசு பிறப்புக்கு பின்னோ இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் மரிப்பவர்களோ உடனே இறங்குவது பாதாளம் என்னும் ஆழமான படுகுழி
இறுதி நியாயதீர்ப்பின்போது பரணமும் பாதாளமும் தன்னில் உள்ளவர்களை ஒப்புவிக்கும்போது இவர்கள் அனைவரும் தேவன் முன் கிரியைக்கேற்ற நியயதீர்ப்புக்கு வந்து நிற்ப்பார்கள்
வெளி:20
13. சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்
-- Edited by SUNDAR on Wednesday 17th of February 2010 11:19:56 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)