ஆதியாகமம் இரண்டாம் அதிகாரத்திலிருந்து சர்ப்பம் என்னும் பெயரில் சாத்தான் வேத புத்தகத்தில் காண்பிக்கப்படுகிறான்
ஆதி 3:1
1 தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது
மேல்கண்ட வசனத்தின் மூலம் அது முதல் அறிமுகத்தின்போதே நன்மை தீமை அறியாத ஆதாம் ஏவாளை விட தந்திரம் நிறைந்ததாக இருந்திருக்கிறது. அதாவது ஆதாம் எவாளைவிட அது மேம்பட்ட அறிவு நிலையில் இருந்திருக்கிறது.
2 அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.
முதல்அறிமுகத்தின்போதே ஏவாளை பார்த்து இக்கேள்வியை கேட்பதால் தேவன் பழத்தை புசிக்கவேண்டாம் என்று சொல்லியிருப்பதை அது அறிந்திருக்கிறது என்பதை அறியமுடிகிறது.
மேலும் தேவனிடமிருந்து நேரடியாக கட்டளையை பெற்ற ஆதாமிடம் போகாமல், அந்த கட்டளையை ஆதாமிடம் இருந்து அறிந்துகொண்ட ஏவாளை வஞ்சித்து இறுதியில் அவள் மூலம் ஆதமையும் வஞ்சித்தது.
நடப்பது எல்லாம் தேவனுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் தேவன் சர்ப்பம் ஏவாளிடம் பேச வரும்போதே அதை தடுத்திருக்கலாம் அல்லது அவள் பழத்தை பறித்து புசிக்கும்போதாவது தடுக்கவந்திருக்கலாம் அல்லது அந்த பழத்தை அவள் ஆதாமிடம் கொண்டுகொடுத்து அவன் புசிக்க போகும் போதாவது அவனிடம் வந்து அதை புசிக்க கூடாது என்று நான் சொல்லியிருக்கிறேனே என்று நினைவூட்டியிருக்கலாம்.
ஆனால் தேவன் நடப்பது எதுவுமே தெரியாதததுபோல் இருந்துவிட்டு பழத்தை புசித்து பாவம் செய்தபிறகு, நடந்த சம்பவங்கள் பற்றி எதுவுமே அறியாததுபோல் தேவன் வந்து
9. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.
11. புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்.
இருவக்கும் தண்டனை கொடுக்க மட்டும் வந்து நிற்கிறார். அதை நிறைவேற்றுகிறார். இதன் அடிப்படை என்ன?
உண்மையில் பார்த்தால் இதுஒரு நியாயமான சோதனையே இல்லை!
இரு சமபலம் பொருந்தியவர்கள் மோதுவதுதான் ஒரு நியாயமான போட்டி, ஒன்றாவது படிக்கும் பைனுக்கும் பத்தாவது படிக்கும் பையனுக்கு வைக்கப்படும் போட்டி நியாயமானது அல்ல. ஒன்றாவது படிக்கும் மாணவனை பத்தாவது படித்த மாணவனை வைத்து சோதித்து விழப்பண்ணி அவனின் உண்மை நிலையை அறிவதும் நிச்சயம் முடியாத காரியம்!
தன்னைவிட தந்திரம் மற்றும் அறிவில் சிறந்த சர்ப்பமானது ஏதும்அறியா குழந்தை நிலையில் இருந்த அதாம் ஏவாளை பாவம் செய்யதள்ளியது! இந்த நியாயமற்ற சோதனையின்போது தேவன் இங்கு அவர்களை பாவம் செய்யாமல தடுக்க வரவில்லை. அட்லீஸ்ட் அந்நேரத்தில் ஒரு எச்சரிக்கைகூட கொடுக்கவரவில்லை, காணாதவர்போல இருந்துகொண்டார்
எனவே தேவனின் இந்த செயலுக்கான் அடிப்படை காரணம் என்ன?
-- Edited by SUNDAR on Tuesday 23rd of February 2010 08:10:15 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இவ்வாறு நன்மைதீமை அறியா ஆதாம் ஏவாளை,தந்திரம் உள்ள சர்ப்பம் வஞ்சிததற்கு, என்னென்ன காரணம் இருக்கலாம் என்று ஆராயும்போது, கீழ்க்கண்ட கருத்தை பலர் முன்வைக்கின்றனர்:
கடவுள் சாத்தனை தானே படைத்து ஆதாம் ஏவாளை சோதிக்க முற்ப்பட்டிருக்கலாம்.
இந்த கருத்து சரியானதா என்பதை ஆராயும் முன் தேவன் மகா நீதிபரர் என்றும்
யோபு 37:23சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக் கூடாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகாநீதிபரர்
என்றும்
உபாகமம் 32:4அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாதசத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர். என்றும் சங்கீதம் 7:11தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; என்றும் அவர் சர்வலோக நியாயாதிபதிஎன்றும் வேதம் சொல்வதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
1.இவ்வளவு நியாயம் உள்ள தேவன் அதாவது நீதி நியாயம் என்னும் சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் தேவன் இப்படி நன்மை தீமை அறியா அப்பாவிகளை ஒரு தந்திரக்காரனை வைத்து சோதிக்கும் நியாயமற்ற சோதனையை செய்து பிறகு இருவருக்கும் சாபம் கொடுப்பார் என்று எண்ணுவது முற்றிலும் அவர் நீதிக்கு முரணான கருத்து எனவே தேவன் இங்கு விரும்பி இந்த சோதனையை செய்யவில்லை.
2. இப்படி ஒரு நியாயமற்ற சோதனையினால், மனிதனின் உண்மை தன்மை என்னவென்பது ஒருபோதும் தெரிய வாய்ப்பேஇல்லை.சமபலம் உள்ளவர்களை சோதித்தால்தான் உண்மையை அறியமுடியும்! இங்கோ தந்திரக்காரன் மற்றும் நன்மைதீமை அறியா குழந்தை போன்றவர்கள். இவ்வகை சோதனையில் எந்த உண்மையையும் அறியமுடியாது.
3. தேவன் "சத்துரு" அதாவது தனக்கு எதிரி என்று குறிப்பிடும் ஒருவனை தானே படைத்து, தனக்கு தானே எதிரியை உண்டக்கிகொள்வதும் இறுதியில் சோதனை முடிந்தபிறகு அவனை அக்கினி கடலில் போட்டு வாதிப்பது என்பதும் எவ்விதத்திலும் தேவநீதிக்கு ஏற்றதாக இருக்க வாய்ப்பில்லை. தாவீது செய்த பாவத்துக்கு சத்துரு தூஷிப்பான் என்று சொல்லியே கர்த்தர் அவனுக்கு சில தண்டனைகளை கொடுக்கிறார். இவ்வாறு தனக்கு தானே சத்துருவை சாதாரண மனிதன் கூட படைக்கமாட்டன். அவ்வாறிருக்க தான் படைத்த மனிதனை தனக்கு சத்துருவானவனை வைத்து தேவன் சோதிக்க நினைத்தார் என்பதெல்லாம் கற்பனையே!
4. அப்படியே ஒருவேளை சாத்தனை அவர் வேண்டுமென்றே உருவாக்கியிருந்தாலும், மாட்டை பற்றி கூட கவலைப்படும் தேவன், தவறு செய்தவர்களுக்காக ஆடு/ மாடு/ புறா என்று அனேக உயிர்களை துடிக்க துடிக்க பலியிட சொல்லி, இறுதியில் தனது குமாரனை மாமிச உடம்பாக பூமிக்கு அனுப்பி மனிதர் கையில் சித்ரவதைக்கு ஒப்புகொடுப்பது அதன் மூலம் இரட்சிப்பை கொடுப்பது என்பது தானே பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் ஒரு நாடகதரராக தேவனை காட்டுமேயன்றி எவ்வதத்திலும் அவர் நீதிக்கு இந்த கொள்கைக்கு ஒத்துவராது.
5. தான் படைத்த மனிதனின் தன்மை இப்படித்தான் இருக்கும் என்பதை அவர் படைக்கும்போதே அறியாமல் இன்னொருவனை வைத்து சோதித்துதான் தனது படைப்பைபற்றி தேவன் அறியவேண்டும் என்றும், அவனை சோதித்துதான் நிதயராஜ்யத்துக்கு தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற அவசியம் அவருக்கு நிச்சயம் இல்லை இது இறைவனின் சர்வவல்ல தன்மையை மட்டுபடுத்துகிறது .
6. தேவன் சர்வவல்லவர்! அவர் நினைதிருந்தால் மனிதனை படைக்கும்போதே வாடடர் பரூப் வாட்ச்போல பாவம் ஊடுருவ முடியாத பாதுகாப்புடன் மனிதனாக படைத்து அவனுக்கு பாவம் என்றால் என்னவென்றே அறியாத நிதியமும் பேரின்ப வாழ்வை கொடுத்திருக்க நிச்சயம் அவரால் முடியும்! இங்கு மனிதனை சோதிக்க வேண்டிய அவசியம் அவருக்கு தேவையேயில்லை.
7. "துன்பம் என்ற ஓன்று இருந்தால்தான் இன்பத்தின் மேன்மை தெரியும்" என்று சிலர் கருதுகின்றனர் அது உண்மை. ஆனால் அதற்காக யாரும் இன்பம் எப்படியிருக்கிறது என்பதை பார்க்க துன்பத்தை ஓடிவந்து வாங்கி கட்டிகொள்வது இல்லை. துன்பமே இல்லாத இன்பமான வாழ்வுதான் எல்லா உயிரிகளும் நாடுவது. அதை சர்வவல்ல தேவன் படைப்பிலே கொடுத்து துன்பத்தையே காணாமல் அவர்களை நித்தியத்துக்கும் சந்தோஷமாக வைத்திருக்கலாமே! துன்பத்தின் கொடுமையை அறிந்த அநேகர் கூட, அந்த துன்பத்தை கொண்டுவரும் பாவத்தை விட்டோழிக்க விருப்பமில்லாமல் அதிலேயே மூழகி கிடக்கின்றனர். ஆகையால் தேவனின் நோக்கம் அதுவல்ல.
ஆரே நாட்களில் வானத்தையும் பூமியையும் எல்லாவற்றையும் படைத்த சர்வவல்ல தேவன், கடந்த ஆறாயிரம் வருடங்களுக்கு மேல் அனேக ஆடுமாடுகளையும் ஆயிரமாயிரம் உயிர்களையும் தனது ஒரு குமாரனையும் கூட பலிகொடுத்து எண்ணில்லா யுத்தங்கள் இயற்க்கை பேரழிவுகள் எல்லாவற்றையும் நடத்தி தனது நித்யரஜ்யத்துக்கு ஆட்களை தேடிக்கொண்டு இருக்கிறார் என்ற கருத்து எவ்விதத்திலும் சரியானது அல்ல!
இப்படி சோதித்து மனிதனை நித்யராஜ்யத்து தேர்ந்தெடுத்தாலும் மனிதன் ஏற்கெனெவே நன்மை தீமையை அறிந்துகொண்டுவிட்டதால் பாவத்தின் ருசியறிந்த மனிதன் இனி நித்யராஜ்யத்தில் பாவமில்லாமல் இருப்பான் என்பதற்கு எத்த உத்தரவாதமும் இல்லை.
எல்லாவற்றிக்கும் மேலாக சாத்தானைபற்றி வேதம் சொல்லும்போது:
ஏசாயா 14:12அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே
13. நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், 14. நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. 15. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.
தேவனுடைய நட்ச்சத்திரங்களுக்கு மேலாக தனது சிங்காசனத்தை உயர்த்த நினைத்த அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி என்பவன் தேவனால் தள்ளப்பட்டு ஆகாதவனாக மாறிப்போனான் என்றுதான் வேதம் சொல்கிறது! இதன் மூலம் சாத்தான் என்பவன் தேவன் வேண்டுமென்றே உருவாக்கியவன் அல்ல என்பதை தெளிவாக புரியமுடியும். அதை தேவன் வேண்டுமென்றே உருவாக்கினார் என்ற கருத்து முற்றிலும் அவர் நீதிக்கும் வசனத்துக்கும் அப்பாற்பப்ட்டது!.
தேவன் வேண்டுமென்றே சாத்தானை சோதிப்பதற்காக
படைக்கவில்லை என்றாலும் அவர் "நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்" என்று சொல்கிறார்.
ஆதாம் எவாளுக்குண்டான சோதனை நீதியில்லாத சொதனைபோல் இருக்கிறது என்பதை முந்தய பதிவுகளில் பார்த்தோம்.
தேவனை பற்றிய உண்மையை நாம் மீண்டும் இங்கு சொல்லிகொள்கிறேன்:
அவர் மகா பரிசுத்தரும், மகாநீதிபரரும் சர்வலோக நியயயதிபதியுமாக இருக்கிறார். அவரிடம் பட்சபாதம் இல்லை. அவர் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு பொருள் இருக்கும் அது நமது கண்களுக்கு மறைவாக இருக்கலாம் ஆனால் தேவன் தனது நியாயத்தில் எள்ளளவும் விலக மாட்டார். அவரது பரிசுத்தமும் நீதி நியாயமுமே தேவனின் சிங்காசனத்தின் ஆதாரமாக இருக்கிறது என்று வசனம் சொல்கிறது.
சங்கீதம் 47:8 ; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார்.தேவன் ஜாதிகள்மேல் அரசாளுகிறார் சங்கீதம் 89:14நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்
சங்கீதம் 97:2 ; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.
தேவன் நீதி நியாயம் என்னும் ஆதரங்களுடன் கூடிய , தனது பரிசுத்தம் என்னும் சிங்காசனத்தின்மேல் அமர்ந்துகொண்டு ஜாதிகள்மேல் அரசாளுகிறார்.
உபாகமம் 32:4அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.
அவர் எவ்விதத்திலும் குற்றமற்றவர் ஒவ்வெருவருடைய வாழ்வில் நடக்கும் நிகழ்வுக்கும் அவரிடம் சரியான நீதியான பதில் உண்டு. யாருக்காகவும் யாரையும் சோதிப்பது இல்லை. அவரை யாரும் குற்றப்படுத்த முடியாது. அது எதிர்கால நன்மையானாலும் சரி நிகழ்கால நன்மையானாலும் சரி எந்த மனிதனும் அவர் எனது வாழ்வில் காரணமின்றி இந்த தண்டனையை தந்தார் என்று கூற முடியாது. அவர் நீதி தவறினாலோ அல்லது நியாயமற்ற செயலை செய்தாலோ அல்லது பரிசுத்தம் குறைந்தாலோ பின் அவர் தேவன் அல்ல! ஏனெனில் இவ்வாறு நீதி நியாயம் பரிசுத்தம் இல்லாதவர்கள் எல்லோரும் சாத்தானே! .
இவ்வாறு இருக்கையில்:
ஆதாம் ஏவாளும் தேவன் விலக்கிய கனியை புசித்து பாவம் செய்தனர் சர்ப்பமும் அவர்களை விலக்கபட்ட கனியை புசிக்கசொல்லி தூண்டி பாவம் செய்தது. ஆனால் தேவன் கொடுத்த் சாபமோ சற்று பாரபட்ச்சமாமனதுபோல் தெரிகிறது பாருங்கள்:
ஆதியாகமம் 3 15. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
ஆதாம் செய்த பாவத்துக்கு தண்டனையோ குதிங்கால் மட்டும் நசுக்கப்படல் ஆனால் சர்ப்பம் செய்த தவறுக்கு தண்டனையோ அவனது தலையே நசுக்கப்படல்.
இது பாரபட்சமான தீர்ப்புபோல் தெரிகிறதல்லவா?
ஆனால் இங்குதான் தேவனின் நீதியில்லாத செயல்போல் தெரிந்த சோதனைக்கான பதில் இருக்கிறது அவரது நீதியின் மேன்மையையும் இங்குதான் புரியமுடியும்.
நான் முன்பு சொன்னதுபோல் ஆதாமும் ஏவாளும் நன்மை தீமை அறியாத குழந்தை நிலையில் இருந்தார்கள் ஆனால் சர்ப்பமோ அறிமுகத்தின் போதே தந்திரம் உள்ளதாக இருந்தது.
எனவே நன்மை தீமை அறியாத நிலையில் இருந்து தவறு செய்தவர்களுக்கு வெறும் குதிங்கால் நசுக்கப்படலோடும் மற்றும் சில தாங்கிகோள்ளகூடிய தண்டனயோடு சாபம் முடிந்தது ஆனால் தந்திரம் உள்ளதாக இருந்து அவர்களை ஏமாற்றிய சர்ப்பத்துக்கோ தலையே நசுக்கப்படும் நிலை ஏற்ப்பட்டது.
உலகின் முடிவிலும் அதே நிலைதான் நடக்கும். தெரியாதவர்களாக இருந்து பாவம் செய்தவர்கள் சில அடிகளோடு தப்பித்துவிடலாம் ஆனால் தெரிந்தும் நிராகரித்தவர்களும் ஆண்டவரை அறிந்தும் பின்னர் மருதலித்துபோனவர்களும் தலை நசுக்கப்படும் சாதானுடன்தான் பங்கடைவார்கள்.
சாத்தானுக்கும் தீமைக்கும் முடிவு கொண்டுவரவேண்டும் என்ற திட்டத்தில் இதெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டுதான் தேவனால் செய்யப்பட்டது. நீதி தவறாமல் அதே நேரத்தில் தீமையையும் அழிக்கவேண்டும் என்ற தேவனின் திட்டம் அங்கே நிறைவேறியது.
தேவனால் படைக்கப்பட்ட அமைப்பை சீர்குலைக்க முயன்ற ஒவ்வொரு நிலையிலும் சாத்தானுக்கு தோல்வியும் அதுவே அவனுக்கு முடிவை தேடித்தரும் காரணியாக அமைந்தது. முந்திய ஆதாமை கெடுத்தால் உலகமே கெட்டு அழிந்து விடும் என்று நினைத்தான் ஆனால் சாவுக்கான சாபம்பெற்றான். இறுதியில் பிந்திய ஆதாமாகிய இயேசுவை கொன்றால் எல்லாம் முடிந்தது என்று கருதி செயல்பட்டான் ஆனால் அவரை சிலுவையில் அறைந்ததே அவனுக்கு சாவு மணியாக அமைந்தது.
நம் தேவன் சொல்லி அடிப்பவர்! அவர் செய்வதை யாராலும் தடுக்க முடியாது அவரை யாரும் குறைகூறவோ குற்றம் சுமத்தவோ முடியாது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)