இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேதாகமம் காட்டும் தேவன் எப்படிப்பட்டவர்?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
வேதாகமம் காட்டும் தேவன் எப்படிப்பட்டவர்?
Permalink  
 


"தேவனை  அறியும்  அறிவை பற்றிகொண்டிருங்கள்!"  என்பது வேதாகமம் நமக்கு வலியுறுத்தும்  ஒரு செய்தி.  
 
ஒரு மனிதன் வேதாகம கல்லூரியில் பயின்ற்றவர்கலாலோ அல்லது  தங்கள்   அதீத அறிவால் வேதத்தை ஆண்டு  கணக்கில்  ஆராய்ந்தாலோ, அதில் உள்ள அனைத்து  வசனத்தை மட்டுமே அறிய முடியுமே தவிர  அதை எழுதி கொடுத்துள்ள தேவனை சரியாக  அறியமுடியாது! ஏனெனில் எழுத்து கொல்லகூடியது ஆவிதான் உயிர்பிக்க கூடியது !
 
ஒரு மனிதனுக்கு வேதஅறிவைவிட தேவனை அறியும் அறிவே மிக மிக முக்கியம்! தேவனை யாரென்றும்  அவர் எப்படிப்பட்டவர் என்றும் அறியாமல்  அவரின் இருதயத்துக்கு ஏற்றவைகளை நம்மால் செய்யவே முடியாது  .  
 
உண்மையில் தேவன் எப்படிப்பட்டவர்?  
   
தேவன் எவ்விதத்திலும் குற்றமற்றவர் நீதிபரர்! 
 
யோபு 37:23 சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக் கூடாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகாநீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார்

லூக்கா 7:29
யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள்.

ரோமர் 3:4
  தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.

அவர் ஜனங்களுக்காக மட்டுமல்ல மிருகங்களுக்காக கூட  பரிதபிக்கிற தேவன்!
 
யோனா 4:11 வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.

உபாகமம் 22:6 ஒரு மரத்திலாவது தரையிலாவது குஞ்சுகளாயினும் முட்டைகளாயினுமுள்ள ஒரு குருவிக்கூடு உனக்குத்தென்படும்போது, தாயானது குஞ்சுகளின்மேலாவது முட்டைகளின்மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால், நீ குஞ்சுகளோடே தாயையும் பிடிக்கலாகாது.

உபாகமம் 22:7
தாயைப் போகவிட்டு, குஞ்சுகளைமாத்திரம் எடுத்துக்கொள்ளலாம்; .

உபாகமம் 25:4 போரடிக்கிற மாட்டை வாய்கட்டாயாக.

ஏசாயா 66:3
மாட்டை
வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், 
 
அவர் யாருடைய  சாவையும்  அவர் விரும்புகிறவர் அல்ல 

எசேக்கியேல் 18:32
மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 33:11
கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன்
 
ஒருவரும் கெட்டுப்போவது தேவனின் சித்தமல்ல!

II பேதுரு 3:9
ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்
 
மத்தேயு 18:14 இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.

I தீமோத்தேயு 2:4
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
 
அவர் மிகுந்த இரக்கமும் நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவர்!
 
யாத்திராகமம் 34:6 கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்

சங்கீதம் 103:8 கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.
நாகூம் 1:3 கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்
 
யார் சாவுக்கும் தேவன் காரணமோ பொறுப்போ அல்ல!    
 
எரேமியா 31:30 அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்;

எசேக்கியேல் 3:19 நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற் போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான்
 
உலகில் நடக்கும் எந்த தீங்கும் அவர் விரும்பி நடப்பிப்பதில்லை  
அவர்  தீங்குக்கு  மனஸ்தாப  படும் தேவன் !

புல:3:
33. அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.

எரேமியா 26:13
 கர்த்தர் உங்களுக்கு விரோதமாய்ச் சொன்ன தீங்குக்கு மனஸ்தாபப்படுவார்.

யோவேல் 2:13
  இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமா யிருக்கிறார்
 
அவர் தன் ஜனங்களுக்காக அவர்கள் படும் துன்பங்களுக்காக கண்ணீர் வடிக்கிறார்

எரேமியா 14:17
என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; .

எரேமியா 13:17
நீங்கள் இதை கேளாமற்போனீர்களானால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும்.

புலம்பல் 2:11
என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம் கண்ணீர் சொரிகிறதினால்

லூக்கா 19:41
அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது

அவர் யாரையும் பொல்லாங்கினால் சோதிப்பவர் அல்ல

யாக்கோபு 1:13
  சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.
 
இதுதான் நாம் ஆராதிக்கும் தேவனை பற்றிய உண்மை நிலை!

ஆனால்  இதை மட்டுமா வேதாகமம் சொல்கிறது  இதற்க்கு நேர் எதிர் வசனங்களையும் வேதாகமம் சொல்கிறது! 
 
அதாவது தேவனின் மறுபக்கமும் இருக்கிறது!
 
அவர் எரிச்சலுள்ளவர்!  
 
யாத்திராகமம் 34:14 கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே

உபாகமம் 6:15
உன் நடுவிலிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர் எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறாரே.

நாகூம் 1:2
கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்
 
அவர் பட்சிக்கிற அக்கினி!

உபாகமம் 4:24
உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி,

எபிரெயர் 12:29
நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.

தவறு செய்தவனை அடித்தே கொல்பவர்
 
II சாமுவேல் 6:7 அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்.

II சாமுவேல் 12:15
அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது.

I சாமுவேல் 6:19
  கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், கர்த்தர் ஜனங்களில் ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்
 
கர்த்தர் தன் ஜனங்களை சோதித்து அறிகிறவர்!
 
சங்கீதம் 11:5 கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்  

ஆதியாகமம் 22:1
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்;

எரேமியா 11:20
சேனைகளின் கர்த்தாவே, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே,
 
தேவனின் கரத்திலிருந்து தீமையும் நன்மையும் வருகிறது!  இரண்டையும் உருவாக்கியவர் அவரே!
 
புலம்பல் 3:38 உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?

ஏசாயா 45:7
ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர்

நெகேமியா 13:18
  நமது தேவன் நம்மேலும் இந்தநகரத்தின்மேலும் இந்தத்தீங்கையெல்லாம் வரப்பண்ணினார்
 
எரேமியா 11:11 ஆகையினால் இதோ, அவர்கள் தப்பித்துக் கொள்ளமாட்டாத தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் 
 
வேதாகமத்தின் வசனங்கள் தேவனை இருவேறுபட்ட ஆனால் இரண்டுக்கும் சமநிலை உடையவராக காட்டுகிறது! இதில் எந்த வசனத்தையும் எடுத்துகொண்டு தேவன் இப்படிப்பட்டவர்தான் என்று யாராலும் ஒரு முடிவுக்கு வரமுடியாது அப்படி இருக்க,  தேவன் இப்படிப்பட்டவர்தான் என்பதை யாரும் முடிவாக சொல்ல முடியாது.
 
அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவருடன் நெருங்கி  உறவாடி  அவரின்  இருதய நிலையை  அறிவதன்  மூலம்  மட்டுமே அவரின் உண்மை தன்மையை   அறியமுடியும்!
 
எவ்வகையில் பார்த்தாலும் மனிதர்களாகிய நம்மை பொறுத்தவரை தேவன் நமக்கு ஒரு தகப்பன் போன்றவர்! அவரை அப்பா பிதாவே என்று அழைக்கும்  பாக்கியத்தை பெற்றிருக்கிறோம்!
 
மல்கியா 2:10 நம்மெல்லாருக்கும் ஒரே பிதா இல்லையோ? ஒரே தேவன் நம்மைச் சிருஷ்டித்ததில்லையோ 
 
கலாத்தியர் 4:6 மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.

எனவே தகப்பன் பிள்ளை என்ற உறவின் அடிப்படையிலேயே நாம் தேவனை அறிவது நல்லது.
 
இவ்வகையில், ஒரு நல்ல நேர்மையான தகப்பன் தன்  பிள்ளைகளை  எப்படி நடத்துவான் என்பதன் அடிப்படையில்  தேவனைபற்றி தொடர்ந்து பார்க்கலாம் 

 


-- Edited by SUNDAR on Friday 9th of April 2010 04:26:47 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard