இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மற(றை)(று)க்கப்பட்ட தேவ வல்லமை : (PART 1 TO PART 5)


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
மற(றை)(று)க்கப்பட்ட தேவ வல்லமை : (PART 1 TO PART 5)
Permalink  
 


மற(றை)(று)க்கப்பட்ட தேவ வல்லமை :

பல னூறு கால்களை கொண்ட மரவட்டை ஒன்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது.
ஒரு நாள் ஒரு பூனை ஒன்று அதை பார்த்து இவ்வளவு கால்களை வைத்துக் கொண்டு எப்படி நடக்கிறாய்? எந்த காலை முதலில் எடுத்து வைப்பாய்? உன்னால் சரியாக நடக்க முடியாதே என்றது. பூனை சொன்னது சரிதானா என்று யோசிக்க ஆரம்பித்தது மரவட்டை. நடக்கும் போது எப்படி நடக்கிறோம் என்று பார்க்க ஆரம்பித்தது. நடக்க முடியாமல் சுருண்டு விழுந்தது. திரித்துவம் பற்றிய கேள்வியும் இதே போல்தான். புரிந்தது போல் இருக்கும். ஆனால் பதில் சொல்ல முடியாது. இந்த கேள்விக்கு என் பங்குக்கு பதில் சொல்லும் விதமாக (மேலும் குழப்பும் விதமாக) சீரியஸாக எழுதப்பட்ட கட்டுரை.

மற(றை)(று)க்கப்பட்ட பொதுவான தேவ வல்லமை (பகுதி - 1)

தேவ வல்லமையை இரு வகையாகச் சொல்லலாம். ஒன்று நம்மால் உணர முடிந்த எல்லாவற்றிலும், ஊடுருவி இருக்கும் பொதுவான வல்லமை மற்றொன்று வணங்கத்தகுந்த வல்லமை

கடவுளை நம்பும் அனைத்து மதங்களும் கடவுளுடைய பொதுவான வல்லமையை சொல்லியுள்ளன. அவை அனைத்தும் ஒரே விதமாகவே சொல்லியுள்ளன.
நமது வேதாகமத்திலும், தேவன்

1. தேவன் அனாதியானவர் (தானே உண்டானவர், எப்போதும் இருக்கிறவர்)
(சங்கீதம் 90.2, 93.2 மேலும் பல)
2. எல்லாவற்றையும் தாங்குகிறவர், எல்லாவற்றிலும் ஊடுருவி இருக்கிறவர்
(அப்போ 17.28, சங்கீதம் 139.7-12, 139.3)
3. பேரொளீயானவர், வார்த்தையானவர், ஞானமானவர், தன்னைதான் உணர்ந்தவர், பேரானந்த உருவானவர் (சத்து, சித்து, ஆனந்தமானவர்)

இந்த ஒரே தேவன் உலகை படைக்க வேண்டி தன்னுள் எழுந்த ஆசையினால்
முதலாவது பிதாவாக வெளிப்பட்டார். பின்பு தன் வார்தையாகவும், ஞானமாகவும் குமாரனாக வெளிப்பட்டார். தன் சக்தியான பரிசுத்த ஆவியானவராகவும்
வெளிப்பட்டார். இதுவே இச்சா, ஞானா மற்றும் கிரியா சக்தி என்ற்ழைக்கப்படும்

ஒரே தேவனே மூன்றாக வெளிப்பட்டதனால் இது படைப்பு ஆகாது. ஒருவர் இல்லாமல் ஒருவர் செயல்படவும் முடியாது. இதில் உயர்வு, தாழ்வு இல்லை.
ஒருவரில் ஒருவர் கலந்து தனித்தன்மையுடன் செயல்படுகின்றனர்.

பிதாவாகிய தேவன் (மனிதர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப) ஒவ்வொரு கால கட்டத்திலும் தன்னை எப்படி வணங்க வேண்டும் என்பதை தன்னுடைய
தீர்க்கதரிசிகளின் மூலமாக வெளிப்படுத்துகிறார். மனிதர்களும் அவர் சொல்வது
போலவே அவரை வழிபட்டால் அவரை அடைய முடியும். இந்த கால கட்ட மனிதர்களுக்கு அவர் கொடுத்த கட்டளை யாதெனில் "இயேசுவே அறியப்படாத,
திரியேக தேவனின் தற்சொருபமாக உள்ளார். (கொலொ 1.15) அவரை வணங்குவதின் மூலமாக மட்டுமே அவரை அடைய முடியும்." இதுவே தேவனின் வணங்கத்தகுந்த வல்லமை

தேவனின் வணங்கத்தகுந்த வல்லமையை நம்பாமல் வேறு முறைகளில்

சிலர் தேவ ஒளியில் கலந்ததாக சொல்லுகின்றனர். ஆனால் தேவனோ யாரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவர். திரியேக தேவனை வணங்குவதால்
மட்டுமே தேவ ஒளி மனிதனுள் பிரகாசிக்கின்றது.
சிலர் தேவ வார்த்தையை, ஞானத்தை உணர்ந்ததாக சொல்லுகின்றனர். ஆனால்
இயேசுவே வார்த்தையும், ஞானமும் ஆனவர்.
சிலர் பேரானந்தத்தை, பிரம்மத்தை, ஒருமையை அனுபவித்ததாக சொல்லுகின்றனர் அவர்களின் கதி நித்தியத்திலே (பிறகு) நமக்கு தெரிய வரும்.

தேவனின் வணங்கத்தகுந்த வல்லமையை வணங்குவது மட்டுமல்லாமல்,

1. தேவனுடைய எல்லாவற்றையும் தாங்குகிற, எல்லாவற்றிலும் ஊடுருவி இருக்கிற வல்லமையை உணர்வதனால் அவரை ஆராதனை செய்யவும், அவரை மகிமைபடுத்தவும், அவரது ஆற்றலை அறிந்துக் கொள்ளவும், அவர் ஆவியை உடனே பெறவும் முடிகிறது.
தேவனுடைய இந்த வல்லமையை உணர்ந்தவர்கள் கிருத்துவ ஞானிகள் என்ப்படுகின்றனர். அவர்களில் சாது சுண்டர் சிங், ஜேக்கப் பொம்மி, Jan van Ruysbroeck, MEISTER ECKHART, செயின்ட் அகஸ்டின், ஃபென்னிலன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்க்ள். வெளிப்புறத்திற்க்கு ரோமன் கத்தோலிக முகமூடி அணிந்து கொண்டு கிருத்துவ ஞானிகளாய் இருந்தவர்கள், இருக்கிறவர்கள் உள்ளனர். இயேசு ஒரு மெய்ஞானியாய், முன் மாதிரியாய் இருந்தார். பறவைகளையும், மலர்களையும் கண்டு பிதாவை மகிமைபடுத்தினார்.
(மத்தேயு : 6.26, 6.28, 10.29) தாவீதும் ஆகாய விரிவை கண்டு கடவுளை மகிமைபடுத்த சொல்கிறார். (சங்கீதம் : 150.1, 19.1)

இத்தகைய வல்லமையை உணர்வது கிருத்துவ வழிபாட்டின் வளர்ச்சியாகும்.
இதனால் மற்ற உயிரினங்களிடம் பேரன்பு உண்டாவதோடு எப்போதும் தேவனில் நிலைத்திருக்கவும், எல்லோரையும் ஒரே விதமாக நேசிக்கவும் இன்ப,துன்பத்தை
ஒரே விதமாக ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது.

2. எல்லா மனிதர்களிலும் இயேசுவை கண்டு மனிதர்களுக்கு சேவை செய்த ஞானிகளும் உண்டு. (மத்தேயு : 25:36,37)

3. மனிதன் மட்டுமே இந்த உலகில் மாசுபட்டவனாக இருக்கிறான். இயற்கை எப்போதும் தேவனோடு உறவாடிக் கொண்டிருக்கிறது. இந்த இயற்கையோடு
சேர்ந்து தேவனை ஆராதிப்பது ஆராதித்தலின் ஒரு வகையாகும். தாவீது
இயற்கையோடு சேர்ந்து தேவனை ஆராதிக்க சொல்கிறார். (சங்கீதம் : 148)

ஆனால்

மேற்கண்ட (1 - 3) தேவ தன்மைகள், (1-3) வழிபாட்டு முறைகள் எல்லா மதத்திலும் இருக்கும் கோட்பாடு ஆகையால், மற்ற மதத்துக்கும் கிருத்துவத்துக்கும் வேறுபாடு இருக்கும் பொருட்டு இந்த வழிபாட்டு முறைகள் போதிக்கபடுவதில்லை. அனேகர் இவைகளை நம்புவதுமில்லை. இதனால்
குறிப்பிட்ட தேவ அம்சம் புறக்கணிக்கபடுவதோடு தேவ மக்கள் கடவுளில் வளர்வதும் தடுக்கப்படுகிறது.

கடவுளை மனித முயற்சியால் மறைக்கவும் முடியாது (கூடாது) . திணிக்கவும் முடியாது (கூடாது). அவரருளின்றி அவரை அறிய, அறிவிக்க முடியாது.

எந்த சபையில் எல்லா தேவ அம்சமும் சரியாக மகிமைபடுத்தப்படுகிறதோ
அங்கே ஆசிர்வாதங்களுக்கும், அற்புதங்களுக்கும் பஞ்சமிராது.

கர்த்தருடைய பிரசன்னத்தை உடனே பெறுவதற்கான ஒரு வழிமுறை :

கர்த்தரை மகிமைபடுத்துங்கள். கர்த்தருக்குள் நாமும், நமக்குள் கர்த்தரும் இருப்பதாக உணருங்கள். பூமி முழுவதும் அதன் எல்லா பொருள்களும் தேவ மகிமையால் நிறைந்திருப்பதாக (தேவனுக்குள் இருப்பதாக) எண்ணுங்கள். கடலில் மீன் இருப்பதை போல நம்மை சுற்றிலும் தேவ மகிமை இருப்பதையும், தேவ மகிமைக்குள் நாம் இருப்பதையும் உணருங்கள். கர்த்தரை மகிமைபடுத்துங்கள் (ஏசாயா 6.3, எண்ணா : 14.21, ஆபகூக் 3.3, சங்கீதம் 104.24, 119.64, 72.19, 33.5)

மற(றை)(று)க்கப்பட்ட பிதாவின் (அம்சம்) வல்லமை (பகுதி - 2) ....

(தொடரும்)


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

sandosh wrote:
//இந்த கால கட்ட மனிதர்களுக்கு அவர் கொடுத்த கட்டளை யாதெனில் "இயேசுவே அறியப்படாத,
திரியேக தேவனின் தற்சொருபமாக உள்ளார். (கொலொ 1.15) அவரை வணங்குவதின் மூலமாக மட்டுமே அவரை அடைய முடியும்." இதுவே தேவனின் வணங்கத்தகுந்த வல்லமை.//


Jesus says:
மத்தேயு 7:21  பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

sandosh wrote:
//கர்த்தருடைய பிரசன்னத்தை உடனே பெறுவதற்கான ஒரு வழிமுறை :

கர்த்தரை மகிமைபடுத்துங்கள். கர்த்தருக்குள் நாமும், நமக்குள் கர்த்தரும் இருப்பதாக உணருங்கள். பூமி முழுவதும் அதன் எல்லா பொருள்களும் தேவ மகிமையால் நிறைந்திருப்பதாக (தேவனுக்குள் இருப்பதாக) எண்ணுங்கள். கடலில் மீன் இருப்பதை போல நம்மை சுற்றிலும் தேவ மகிமை இருப்பதையும், தேவ மகிமைக்குள் நாம் இருப்பதையும் உணருங்கள். கர்த்தரை மகிமைபடுத்துங்கள்//


இயேசு சொன்னது:
யோவான் 14:23 ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.

தேவனின் மெய்யான தீர்க்கதரிசியாகிய சாமுவேல் சொன்னது:
1 சாமுவேல் 15:22 கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.

தேவன் சொன்னது:
ஏசாயா 1:3,12-16 மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது. நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்? இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வுநாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச் சகிக்கமாட்டேன்.

உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன். நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.

உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்; நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்ற பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.

இயேசு சொன்னது:
மத்தேயு 12:7 பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

anbu57 wrote:

sandosh wrote:
 //

இயேசு சொன்னது:
யோவான் 14:23 ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.

 


தேவனின்  வார்த்தைகள் கைகொள்ளப்பட வேண்டுமா என்பதுபற்றி தனி திரியில் ஆராயலாம்
 
 
இங்கு சந்தோஷ் அவர்கள் தங்களின் கட்டுரையை தொடரலாம்.   
 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



புதியவர்

Status: Offline
Posts: 4
Date:
Permalink  
 

Hi! Where is Part 2 to 5?

 

Thank you!



__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

wheatandchaff wrote:

Hi! Where is Part 2 to 5?

 

Thank you!


 சகோதரர் wheatandchaff அவர்களுக்கு கர்த்தரின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். 

நம்முடைய தளத்தில் இந்த கட்டுரையை பதிவிட்டுள்ள சகோ. சந்தோஷ் அவர்கள் தற்போது
தனியொரு தளத்தில் அவரது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
 
தாங்கள் எதிர்பார்க்கும் இந்த கட்டுரையின் தொடர்ச்சி ஒருவேளை அங்கே
தங்களுக்கு கிடைக்கலாம். எனவே  கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி அவரது
தளத்தில் உள்ள கருத்துக்களை பார்வையிடவும்.
 
   
நன்றி
அன்புடன்
இறைநேசன்


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard