தானியேல் 4:2உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாய்க் கண்டது.
என்ற வார்த்தைகளின்படி. தேவனாகிய கர்த்தர் என் வாழ்வில் இடைப்பட்டு என்னை அபிஷேகித்து எனக்கு தெரியப்படுத்தி என்னை நடைத்திய வழிகள் எல்லாவற்றையும் பற்றியும் எழுதிவைக்கும்படி என்னை ஏவியதால், என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்கள் மற்றும் ஏறக்குறைய ஆறுநாட்கள் என்னை முழுவதுமாக அபிஷேகித்து ஆவிக்குள்ளாக்கி அவர் எனக்கு தெரிவித்த உண்மைகள், அவற்றால் நான் பெற்ற படிப்பினைகள், அனைத்தையும் இங்கு எழுத விளைகிறேன்.
ஒரு எரேமியா ஒரு எசேக்கியேல் ஒரு யோவான் போன்ற அனைத்து தீர்க்கதரிசிகளும் தங்களுக்குள்ள வெளிப்பாடுகளையும் தாங்கள் அறிந்த உண்மைகளையும் எழுதிவைத்து சென்றதால்தான் இன்று அவற்றால் அநேகர் பயன்பெற முடிகிறது.
அதுபோல் நானும் எனக்கு தேவனால் கிடைத்த கிருபையின் அடிப்படையில் எனக்கு தெரிவிக்கப்பட்டவைகளை முடிந்த அளவுக்கு உண்மை மாறாமல் வசன ஆதாரத்துடன் பல தலைப்புகளின் கீழ் எழுதி வருகிறேன். கேட்கிறவர் கேட்கட்டும் கேட்க விரும்பாதவர்கள் விட்டுவிட்டு போகட்டும்.
ஆண்டவரை அறிதல் என்பது வெறும் ஆராய்ச்சி மட்டுமல்ல அது ஒரு இனிய அனுபவம். அந்த அனுபவத்துக்குள் கடந்து சென்றவருக்கே அவரைபற்றிய உண்மைகளும் அவர் இருதயத்தின் நினைவுகளும் தெரியும்.
இவ்விதத்தில் தேவனிடமிர்ந்து ஞானத்தை பெற்ற சாலமொனைவிட ஆடுகளை மேயத்துகொண்டிருந்த தாவீது மிகுந்த பாக்கியம் பெற்றவன் என்றே நான் கருதுகிறேன். தேவனின் இருதயத்தில் இருப்பவைகளின் அனேக காரியங்களை தாவீது தனது சங்கீதம் மூலம் வெளிப்படுத்தி இருப்பது மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கிறது!
தேவனின் வழிகள் மற்றும் செயல்கள் ஆராய்ந்து அறியமுடியாதவைகள்! அவர் எதுசொன்னாலும் எற்று கீழ்படியும் மனப்பக்குவத்துடன் ஒன்றுமறியா குழந்தைபோல ஆண்டவர்முன் நிர்ப்பவர்களுக்கு ஆண்டவர் உண்மையை வெளிப்படுத்த விளைகிறார்!
நாளை என்போன்ற அனுபவத்துக்குள் ஒருவர் கடந்து செல்லும்போது என்னுடைய எழுத்துக்கள் அவருக்கு நிச்சயம் பயனளிக்கும் என்றே நான் கருதுகிறேன்!
ஆண்டார் தாமே தனது சித்தத்தை அதிசீக்கிரத்தில் நிறைவேற்றுவாராக!