பரமாத்மா என்ற இறைவனும் ஜீவாத்துமா என்ற அவர் ப டைப்புக்களும் ஓன்று என்று அனேக இந்து சகோதரர்கள் கருதுகின்றனர். இது குறித்த விவாதம் காலம் காலமாக இருந்துவந்தாலும், இன்னும் அநேகருக்கு குழப்பம் நீடிப்பதால் இந்த தலைப்பு பற்றி சற்று விவாதிக்கலாம் என்று கருதுகிறேன்!
கிறிஸ்த்தவம் மற்றும் இஸ்லாத்தை பொறுத்தவரை படைப்பு வேறு படைத்தவன் வேறு என்ற உறுதியான கொள்கையை அதன் வேதங்கள் விளக்குகிறது. ஆனால் இந்து மதம் என்பது துவைதம் மற்றும் அத்வைதம் என்று இரண்டு பெரும் பிரிவுகளாக இருந்தது என்று நாம் அறிவோம்!
அத்வைதத்தை பரப்பிய முக்கியமானவர் ஆதி சங்கரர் அதன் முக்கிய கொள்கைகள்:-
என்றும் நிலைத்திருக்கும் பொருள் ஒன்றே ஒன்றுதான். அதுதான் பிரும்மம் அல்லது பரமாத்மா என்றும் அழைக்கப்படுகிறது. அதைத்தவிர வேறு எதுவும் மெய்ப்பொருளல்ல அனைத்துயிர்களுக்கும்! உயிருக்குயிராகவும் அறிவுக்கறிவாகவும் இருக்கும் ஜீவாத்துமா, வெறும் தோற்றமான அகில உலகிற்கும் அடிப்படை மெய்ப்பொருளாக இருக்கும் பரமாத்மா ஆகிய இரண்டும் இரண்டல்ல, ஒன்றே!
துவைதத்தை போதித்தவர் மத்வர் இவரின் முக்கிய கொள்கை:
பிரம்மத்தையும் ஆன்மாவையும் இரண்டு வேறு வேறு தத்துவங்களாகப் பிரித்துச் சொல்வதால் மத்வருடைய தத்துவக் கூற்றுகளுக்கு துவைதம் என்ற பெயர் உண்டானது. ஆன்மா கடவுளின் ஒரு அணுவளவு பாகமாதலால், இவர்களின் வேற்றுமையை மரத்திற்கும் மரத்திலுள்ள ஒரு இலைக்கும் உள்ள வேற்றுமையாகச் சொல்லலாம் ஆகினும் கடவுள் நாராயணன் ஒருவர் தான் சுதந்திரர். மற்ற எல்லா உலகப்பொருள்களும் அவரிடமிருந்து வேறுபட்டு இருந்தாலும் சுதந்திரமில்லாமல் அவரால் ஆட்டிப் படைக்கப்படுகின்றன. அதனால் சுதந்திரர் ஒரு பகுப்பாகவும் சுதந்திரமற்றதெல்லாம் ஒரு பகுப்பாகவும் இரண்டு பகுப்புகள் எக்காலமும் இருந்தே தீரும். இதனாலும் இக்கொள்கை ‘துவைதம்’ என்று கூறப்படுகிறது.
இங்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் பரமாத்மா என்னும் இறைவன் எல்லா உயிர்களுக்குள்ளும் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்தவனாய் இருக்கிறான் அவருக்குள் நாம் அசைகிறோம் வாழ்கிறோம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை! எனினும் அவரால் படைக்கப்பட்ட ஜீவாத்துமாக்களாகிய மனிதர்களும் மற்ற உயிரினங்களும் லையில்லாதவைகள் ஆனால் பரமாத்மாவாகிய இறைவன் நிலையானவர்!
எனவே பரமாத்தாவால் உருவான நிலையில்லாத உயிரினங்களாகிய ஜீவாத்மாவாக்கள் எல்லாம் பரமாத்மாவிலிருந்து புறப்பட்டு வந்திருந்தாலும் அவைகள் வேறுபட்டே இருக்கின்றன என்றும் அவை பரமாத்மா அல்ல என்பதும் எனது கருத்து.
ஒரு அணையாத மிகப்பெரிய அக்கினி குண்டத்திலிருந்து நெருப்பெடுத்து ஆயிரம் அகல்களை ஏற்றமுடியும் அனால் எந்தனை அகல்கள் சேர்ந்தாலும் ஒருநாளும் அக்கிநிகுண்டம் ஆகமுடியாது. ஏற்றப்பட்ட அனைத்து அகல்களும் ஒர்நாளில் அணைந்து போகலாம் ஆனால் பரமாத்த்மா என்னும் அக்கினி என்றெற்றும் அணையாத ஜோதியானவர்!
மேலும் சமுத்திரத்திலிருந்து அங்கே பாத்திரங்களில் நீரெடுத்து தனித்தனியே வைக்க முடியும் ஆனால் எத்தனை பாத்திர நீரை சேர்த்தாலும் அது சமுத்திரம் ஆகாது. பாத்திரத்தில் சேர்த்து வைத்த தண்ணீர் எல்லாம் ஒருநாள் காலியாகி போய்விடலாம் ஆனால் சமுத்திரமாகிய பரமாத்மா என்றும் நிலைத்திருக்க கூடியவர்!
அதாவது அநேக இந்து சகோதரர்கள் கருதுவதுபோல் என்னதான் பரிசுத்தனாக இருந்தாலும் மனிதன் ஒருநாளும் கடவுள் ஆகிவிட முடியாது!