இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்த்தவம் - இஸ்லாம் முக்கிய வேற்றுமைகள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
கிறிஸ்த்தவம் - இஸ்லாம் முக்கிய வேற்றுமைகள்!
Permalink  
 


கிறிஸ்த்தவம் மற்றும் இஸ்லாம் இரண்டும் ஆபிரகாமின் வழிதோன்றல் மதமாக இருக்கின்ற போதிலும் இவை இரண்டிற்கும்  இடையே அனேக வேறுபாடுகள் உண்டு! 

அவற்றுள் சில முக்கியமான  வேறுபாடுகள் பற்றி இங்கு நாம் ஆராயலாம்!
 

இரண்டு வேதங்களுக்கும் அனேக வேற்றுமைகள் இருந்தாலும் முக்கியமானவற்றை மட்டும் நாம் பார்க்கலாம்.
  1. திருக்குர்ரான் இறை தூதர் ஜிப்ரியீல் அவர்களால் முகமது நபி அவர்கள் ஒருவருக்கு மாத்திரம் இறக்கப்பட்ட ஒரே புத்தகம்.

    பைபிள் என்பது சில புத்தகங்களை தவிர அனேக புத்தகங்கள் பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த அந்தந்த நிகழ்ச்சிகளை பார்த்து உணர்ந்து அனுபவித்த மக்களால் அவர்களாலே எழுதப்பட்ட புத்தகங்களின் தொகுப்பு ஆகும்.


  2. பைபிள் மற்றப்பட்டுவிட்டது என்றும் அது கெடுக்கப்பட்ட வேதம் என்பது இஸ்லாமியரின் கருத்து.

    ஆனால் திருகுர்ரான் இறக்கப்பட்ட நாள் முதல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று இஸ்லாமியர் கருத்துகின்றனர்.


  3. பைபிள், இறைவன் ஒருவரே அவர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என மூன்றாக பிரிந்து செயல்படுகிறார் என்று அறிவுறுத்துகிறது  

    திருகுர்ரான், இறைவன் ஒருவரே அவர் பிரிந்திருக்கவில்லை அவருக்கு குமாரன் என்று யாரும் கிடையாது என்று கூறுகிறது.

     
  4. பைபிள், இயேசு மறித்து மூன்றாம் நாள் உயிர்த்து பரலோகம் போனார் என சொல்கிறது.

    திருக்குர்ரான், ஈசா நபி மரிக்கவில்லை அவர் இறைவனால் தனதளவில் உயர்த்திக்கொள்ளப்பட்டார் என்றும் அவருக்கு பதில் வேறொருவர் சிலுவையில் மாற்றப்பட்டார் என்றும் கூறுகிறது
    .

  5. தேவதூதன் ஒருவன் தேவனைபோல ஆகவேண்டும் என்று நினைத்ததால் இறைவனால் தள்ளப்பட்டு பூமிக்கு வந்து தீய சக்த்தியாக மாறினான் என்று பைபிள் சொல்கிறது.

    திருக்குர்ரான் இப்லிஸ் என்னும் இறைத்தூதன் இறைவனுக்கு கீழ்படியாமையால் சாத்தானாக மாறியதாகவும் பின்பு இறைவனிடம் அனுமதி கேட்டு மனிதர்களை கெடுப்பதாகவும் திருக்குர்ரான் சொல்கிறது.

  6. திருக்குர்ரான் இறைவன் படைக்கும் போதே ஒரு கூட்ட மக்களையும் ஜின்களையும் நரகத்துக்கேன்று படைத்துவிட்டார் என்று 7:179ல் சொல்கிறது.

    ஆனால் பைபிள், மனிதன் கெட்டு ஆக்கினை தீர்ப்பு அடையக்கூடாது என்பதற்காகவே இயேசுவை இறைவன் அனுப்பினார் என்று கூறுகிறது

  7. இயேசுவின் இரத்தம் மட்டுமே பாவத்தை மன்னிக்க முடியும் என்று பைபிள் கூறுகிறது.

    திருக்குர்ரான், இறைவனிடம் முழு மனதோடு வேண்டினால் போதும் பாவம் மன்னிக்கப்படும் அவர் ஒருவரே பாவத்தை மாணிக்க வல்லவர் என்று கூறுகிறது.

  8. பைபிள், இந்த உலகத்திலே கூட மேன்மையானதை அடையமுடியும் என்றும் மரணம் இல்லாமல் கூட வாழ வழி உள்ளது என்றும் கூறுகிறது

    திருக்குர்ரானில், இந்த உலகத்துக்கான ஆசிர்வத்ங்கள் மிகவும் குறைவாகவே உள்ளது முக்கியமாக இம்மையின் பலன் மறுமையிலே உண்டு என்று கூறுகிறது! மேலும் மரணம் இல்லாமல் வாழ வழி எதுவும் அதில் இல்லை

  9. பைபிள் உலக தோற்றம் முதல் அதன் முடிவுவரை தெளிவாக எழுதப்பட்ட ஒரே புத்தகம் மேலும் ஒவொரு வசனமும் எந்த காலக்கட்டத்தில் எழுதப்பட்டது போன்ற எல்லா விளக்கங்களும் தன்னுள் கொண்டது.

    திருக்குர்ரனில் எதுவும் முழுமையாக குறிப்பிடப்படவில்லை ஒரு வசனத்துக்கு விளக்கம் வேண்டுமென்றால் ஹதீஸ்கள் எனப்படும் வேறு புத்தகங்கள், வாழ்க்கை வரலாறுகள் மற்றும் பைபிளில் உள்ள குறிப்புக்களை  பார்த்துத்தான் விளக்கம் பெற முடியும்.

  10. திருக்குர்ரான் முகமது நபியே கடைசி தூதர் என்றும் அவருக்கு பின் எந்த தூதரும் வரமாட்டார் என்றும் கூறுகிறது.

    பைபிள் இயேசுவின் மரணத்துக்குப்பின் பரிசுத்த ஆவி என்னும் தேவ ஆவியானவர் மனிதனுக்குள் வந்து தங்கி இருந்து பாவத்தை கண்டித்து உணர்த்தி அதை ஜெயித்து வாழ பெலன் தருவார் என்று கூறுகிறது.


    இந்த பத்து வேறுபாடுகள் பற்றி நம்மால் முடிந்தவரை ஆராயலாம். 

     


-- Edited by SUNDAR on Thursday 25th of February 2010 05:25:01 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard