இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தளத்தை பற்றிய தங்கள் கருத்தை தெரிவியுங்கள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
தளத்தை பற்றிய தங்கள் கருத்தை தெரிவியுங்கள்!
Permalink  
 


தளத்தை பார்வையிடும் அன்பு சகோதரர்கள் தளத்தை பற்றிய  தங்கள்  கருத்துக்களை பதியும்படி அன்புடன் வேண்டுகிறோம். 
 
வேதபுத்தகம் முழுவதுமே வெளிப்பாட்டின் அடிப்படையிலேயே எழுதப்பட்டிருக்கிறது. ஏனோக்கு காலத்தில் இருந்து இன்றுவரை தேவன் தனது இருதயத்துக்கு பிரியமானவர்களுக்கு  இயற்க்கைக்கு அப்பாற்பட்ட அனேக உண்மைகளை தெரியபடுத்தி  வருகிறார்.  
  
தேவனோடு சஞ்சரித்துகொண்டிருந்த ஏனோக்கு தேவனால் எடுத்துகொள்ளப்பட்டான்

தேவனுக்கேற்ற நீதிமானாய் இருந்த நோவா ஜலப்பிரளயம்  பற்றிய யாருக்கும் இல்லாத எச்சரிப்பை பெற்று தனது குடும்பத்தை காப்பாற்றினான்!.

ஆண்டவரின் தனிப்பட்ட அழைப்பின்மேல்  அளவற்ற  விசுவாசத்துடன் சொந்த தேசத்தை விட்டு  புறப்பட்ட 
ஆபிரஹாம் விசுவாசத்தின் தந்தை என்று பெயரெடுத்து மனித குலத்துக்கே ஆசீர்வாதத்தை பெற்று தந்தான்!

அடிமைபட்ட ஜனங்களை மீட்க தேவனால் தேர்ந்தெடுக்கபட்டு  தேவனிடமிருந்து  தனிப்பட்ட அழைப்பை பெற்ற மோசே, அனேக அதிசயங்களை செய்து கர்த்தரை முகமுகமாய் அறிந்திருந்தான்.

கர்த்தரின் மீதும் அவர் வார்த்தைகளின் மீதும் தணியாத தாகம் கொண்ட தாவீது தேவனின் இருதய நிலைகளை அறிந்து அதை சங்கீதமாக பாடிதந்தான்
.
 
இப்படி கர்த்தரிடமிருந்து தனிப்பட்ட அனுபவங்களை பெற்றவர் வரிசையில் சாமுவேல்,  எலியா, எலிசா,  எசாயா,   எரேமியா, எசேக்கியேல், தானியேல். சகரியா, ஆமோஸ், பவுல் மற்றும் யோவான்   மற்றும்  சிறு சிறு வெளிப்பாடுகளை பெற்ற  அனேக தீர்க்கதரிசிகள் பற்றி  வேதத்தில் செய்தியுண்டு.
 
எரேமியா 33:3 என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்
 
என்றுரைக்கும்   கர்த்தரின் கரம் இன்றும்   குருகிபோகவில்லை! என்றும்  அதே விதமான  அதிசயம் மற்றும்  வெளிப்பாடுகளை தர  அவர் வல்லவராய் இருக்கிறார் என்பதை அறியவேண்டும்!  அவற்றை ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொள்ள வாஞ்சிக்க வேண்டும்!  ஆண்டவரை அறியும் அனுபவமற்ற ஆன்மீக வாழ்க்கையில்  பயனேதும்  இல்லை   
 
உலக காரியங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடிப்பதைவிட ஆண்டவரை பற்றிய சிந்தனையில் எப்போதும் நிலைத்திருக்க இதுபோன்ற ஆராய்வுகள் உதவும் என்றே நான் கருதுகிறேன்!
     
இத்தளத்தில் உள்ள அனைத்து  செய்திகளும்   ஆண்டவருக்குள் வளர அநேகருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் கருதுகிறோம்.
 
தங்கள் மேலான  கருத்துக்களை தெரிவியுங்கள்.   
 


-- Edited by SUNDAR on Thursday 25th of February 2010 09:22:59 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
தளத்தை பற்றிய தங்கள் கருத்தை ....
Permalink  
 


சகோதரர்களே! நான் மட்டுமே இங்கு பதிவிட்டு கொண்டிருப்பதுபோல் தெரிகிறது.
 
தளத்தில் உறுப்பினர்களாக இணைத்துள்ள சகோதரர்கள் தங்கள் சாட்சிகளையாவது பதிவிடும்படி அன்புடன் வேண்டுகிறேன். ஒவ்வொருவரையும் ஆண்டவர் ஒவ்வொரு விதமாக தொட்டிருக்கலாம் எனவே உங்கள் சாட்சி பலருக்கு விசுவாசத்தில் வளர பயனுள்ளதாக அமையும்!
 
ஆண்டவரை பற்றி எழுத்து ஒவ்வொரு வரியும், அவரை பற்றி நாம் பேசும் ஒவ்ஒரு  பேச்சும்  பரலோகத்தில் நமது கணக்கில் எழுதப்படும் என்பதை அறியுங்கள்!
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
தளத்தை பார்வையிடும் அன்பர்களுக்கு
Permalink  
 


தளத்தை பார்வையிடும் அன்பு சகோதரர்கள் தங்கள் கருத்துக்களை பதிவதற்கு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்
 
தமிழில் எழுதுவது என்பது ஒரு கடினமான காரியம் அல்ல.
ஆங்கில டைப்ரைட்டிங் தெரிந்திருந்தாலே போதுமானது ஓரிரு நாளில் அற்ப்புதமாக தமிழில் எழுத பழகிவிடலாம். 
 
எந்த மதத்தை மார்க்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் பிறர் மனதை புண்படுத்தாமல்  தங்கள் கருத்தை பதிய உரிமை உண்டு.
 
வாருங்கள் பங்குபெறுங்கள் பயன்பெறுங்கள் 
 
நாம் எல்லோரும் ஒருமித்து இறைவனின் நாமத்தை உயர்த்துவோம்.
 
அன்புடன்
இறைநேசன்  


__________________


இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
RE: தளத்தை பற்றி....
Permalink  
 


அன்பு நண்பருக்கு,

நாம் படித்து மகிழ்ந்த கருத்துக்கள் மற்றவர்களுக்கு பிரயோஜனப்படும் வகையில் பதிவிட "படித்து ரசித்தவை" எனும் பகுதியை தொடங்கலாமே..



__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
தளத்தை பார்வையிடும்.......
Permalink  
 


timothy_tni wrote:

அன்பு நண்பருக்கு,

நாம் படித்து மகிழ்ந்த கருத்துக்கள் மற்றவர்களுக்கு பிரயோஜனப்படும் வகையில் பதிவிட "படித்து ரசித்தவை" எனும் பகுதியை தொடங்கலாமே..



சகோதரர் விருப்பத்திற்க்கிணங்க "படித்து ரசித்த பயனுள்ள செய்திகள்"  என்கிற புதிய பாகம் தொடங்கப்பட்டுள்ளது.

பிற தளங்களிலிருந்து பெறப்பட்ட பயனுள்ள இறைசெய்திகளை செய்திகளை  இங்கு  பதியலாம்.
 
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard