மிகவும் அருமையான செய்தி ஒன்றை தந்திருக்கிறீர்கள் சகோதரர் எட்வின் அவர்களே. இதைப்பற்றி நானே ஒரு கட்டுரை எழுத வாஞ்சிக்கிறேன்! நமதாண்டவராகிய இயேசு வார்த்தையாகிய தேவனாக இருக்கிறார்.
இந்த செய்தியில் நாம் அறிந்துகொள்ளக்கூடிய முக்கிய காரியம் என்னவென்றால் தேவனால் படைக்கப்பட்வைகளுக்கெல்லாம் ஒரு ஜீவன் உண்டு அல்லது தேவ பெலத்துடன் நாம் வார்த்தைகளை பிரயோகிக்கும்போது அந்த வார்த்தைகள் அவைகளுக்கு ஜீவன் கொடுத்து அவைகளை கீழ்படிய வைக்கின்றன என்பதே.
பிரச்சனைகள் துன்பங்களை பார்த்து பேசும்போது அந்த பிரச்சனைகளை கொண்டுவரும் தீய ஆவிகளை கட்டுப்படுத்த முடியும்! தடைகளை பார்த்து பேசும்போது அந்த தடைகளை ஏற்ப்படுத்தும் பொல்லாத ஆவிகள் செயலிழக்கின்றன. நோயை பார்த்து பேசி கடிந்துகொள்ளும்போது அந்த நோயை கொண்டுவரும் ஆவிகள் ஓடிவிடுகின்றனர்.
எல்லாவற்றிக்கும் மேலாக தேவனாகிய கர்த்தர் எசேக்கியேல் தீர்க்கதரிசியிடம் சொல்லி உலர்ந்த எலும்புகளை பார்த்து பேசசொல்கிறார்
அவ்வாறு எசேக்கியேல் பேசியபோது அந்த உலர்ந்துபோன எலும்புகளே உயிரடைந்தன என்று அடுத்து வரும் வசனங்கள் சொல்கின்றன
எசேக்கியேல் 37:10; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.
ஆம்! வார்த்தைகள் (பேச்சு) என்பது மிகுந்த வல்லமை உடையது! அதை தேவஆவியின் பெலத்துடனும் விசுவாசத்துடனும் பிரயோகிக்கும்போது மலைகளை பெயர்க்கமுடியும், ஓடும் இரயிலை நிறுத்த முடியும்
மரித்த லாசருவை எழுப்ப முடியும், உலர்ந்த எலும்புகளை ஓன்று சேர்க்கமுடியும்.
ஆவிக்குரியாய் வாழ்வுக்கு பயன்படும் நல்ல கருத்தை பதிந்தமைக்கு நன்றி!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சச்சின் ஜேம்ஸ் அவர்களே தாங்கள் இந்த தலத்தில் வந்து சேர்த்ததில் மிகவும் மகிழ்ச்சி
ஏன் இந்த உலகம் பாவத்தில் உள்ளது
(1 ) தேவன் தந்த கட்டளைகளையும் கற்பனைகளின் படி நடவாமல் இருப்பதினால்
(2 ) நன்மை பொதுவாய் செய்வதை விட்டு தன் குடும்பம் தன் வீடு பிறர் எப்படி இருந்தால் நமக்கென்ன போன்ற காரணத்தினால்
(3 ) தேவனுடைய வார்த்தையை கை கொள்ளாமல் இருப்பதினால்
(4 ) தன்னை தானே நிதானித்து அறியாமல் இருப்பதினால்
ஏன் இந்த உலகம் பாவத்தில் உள்ளது
இதற்கு காரணம் மனிதான் தான் தவிர தேவனின் திருவிளையாடலோ அல்லது அவருடைய திட்டமோ அல்ல ஒருவனும் கேட்டு போவது பாவத்தில் இருப்பது தேவனின் சித்தம் அல்ல
பாவத்தை விட்டு ஓடு என்பது கூட அவர் கட்டளை தான் தேவன் பாவத்தை பாராத சுத்த கன்னர் என்று வேடம் கூறுகிறது
சச்சின் ஜேம்ஸ்
உலகம் பாவத்தில் இல்லை தேவன் உண்டாக்கிய எல்லாம் பரிசுத்தமானது மனிதன் பாவத்தில் இருக்கிறான் (தெரியாமல் அல்ல தெரிந்து ) மனிதனால் தான் இந்த உலகம் பாவத்தில் உள்ளது ,,,,,,,,,,.........................
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)