பிரதான தூதனாகிய மிகாவேல், மோசேயின் சரீரத்தைக் குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப்பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான். யூதா 1-9
விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; மாற்கு 16-17 இயேசு பிசாசை துரத்தவே அதிகாரம் கொடுத்தார்.
மத்தேயு 12:29அன்றியும் பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில்,
அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்
என்ற ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தைகள்படி உலகில் ஏறக்குறைய எல்லா மனிதற்கும் சாத்தானின் கட்டுக்குள் அவனது பிடிக்குள் இருக்கின்றனர் என்பதை அறியமுடிகிறது
I யோவான் 5:19உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.
இந்நிலையில் ஒரு மனிதனையோ அல்லது ஒரு குடும்பத்தையோ அல்லாத ஒரு ஊரயோகூட ஒவ்வொரு அசுத்த ஆவிகள் ஒட்டுமொத்தமாக கட்டி வைத்திருப்பதை ஆவிக்குரியாய் கண்களால் அறியமுடியும். இந்த வான மண்டலத்தின் பொல்லாத ஆவிகளை நாம் வார்த்தை என்னும் படடையத்தின் வல்லமையால் இயேசுவின் நாமத்தில் கட்டி ஜெபிக்கும்போது அவைகளின் கட்டு தளர்கிறது, அதன் மூலம் ஒருவர் இருதயத்தில் ஊடுருவும்படி நம்மால் பேசமுடியும்! நாம் ஆண்டவரைப்பற்றி பேசும் வார்த்தைகள் அங்கு நிச்சயம் கிரியை செய்யும். .ஆனால் கட்டப்பட்டிருக்கும் ஒரு மனிதனிடம் ஆண்ட்வரை பற்றி பேசினால் அவனுக்கு தூக்கம் வரும் நாம் பேசுவதை அவன் புரிய முடியாத அளவுக்கு அவனின் இருதயம் கட்டபட்டிருக்கும்
எனவே இப் பிரபஞ்சத்தின் பலவானாகிய சாத்தானை முந்தி காட்டிவிட்டு பிறகு ஜெபிபபதில் எந்த தவறும் இல்லை என்றே நான் கருதுகிறேன்.
ரோமர் 16:20சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனே கூட இருப்பதாக. ஆமென்.
என்றும் பவுல் தனது நிருபத்தில் எழுதியிருப்பதால் சாத்தானை காலில் கீழ்போட்டு மிதிக்கிறேன் என்று சொல்வதிலும் தவறில்லை என்றே கருதுகிறேன். ஆனால இங்கு வேடிக்கை என்வென்றால், எனக்கு பல நேரங்களில் சாத்தான் யார் மனிதன் யார் என்று சரியாக தெரிவதில்லை! சாத்தானின் பிடியிலிருக்கும் பல மனிதர்கள், சாத்தானை காலில் போட்டு மிதிக்கிறோம் என்று பாடுவதை பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது. அதாவது சாத்தான் எங்கிருக்கிறான் (தங்களுக்குள்தான் இருக்கிறான்) என்று தெரியாமலே அவனை மிதிக்கிறார்கள்
ஆனால் இங்கு அனேக இடங்களில் அதுதான் நடக்கிறது! அத்தோடு நமது யுத்தம் என்பது கண்ணில் தெரியும் இந்த மாமிசாத்தொடும் இரத்தத்தோடும் அல்ல என்பதை முதலில் அறியவேண்டும்.
எபேசியர் 6:12ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
ஆம் நமது யுத்தம் ஆவிக்குரிய யுத்தம்! ஆவிகளை பகுத்தறிந்து அவைகளோடு எதிர்த்து நிற்று போராடும் பக்குமவம் வேண்டும்.போராட்டம் என்றால் அடி உதை மிதி எல்லாமே வாங்க வேண்டியதும் கொடுக்க வேண்டியதும் இருக்கும். இவ்வேளைகளில் இயேசுவின் நாமத்தில் பொல்லாத ஆவிகளை கட்டி ஜெபிபதில் எந்த தவறும் இல்லை. ஆவிகளை ஆண்டவரின் வல்லமையால் கட்டிதான் அப்புறப்படுத்த முடியும்! வேறு என்ன செய்யமுடியும்?
ஆகினும் சாத்தானை (எவரையுமே) சபித்தல் / தூஷித்தல் / நரகத்துக்கு அனுப்புதல் / அக்கினியில் சுட்டெரித்தல் என்பதெல்லாம் சரியான செயல்கள்போல் எனக்கு தோன்றவில்லை
பிசாசின் கட்டிலிருந்து விடுதலை செய்வது புரிகிறது. ஆனால், பிசாசை கட்டுவதில் தான் குழப்பம்....
ஒரு குறிப்பிட்ட பிசாசை இயேசுவின் நாமத்தில் கட்டி விடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் அவனை கட்ட வேண்டிய நிலை ஏன் வருகிறது? (யார் அவனை விடுதலையாக்கியது?...)
வெளி 20ம் அதிகாரத்தில் 1. ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன். 2.பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் தமது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான். 3.அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்.
................
7.அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,
என்று உள்ளது.
இப்போதே நாம் அவனைக்கட்டிவிட்டால் தூதன் எப்படி கட்டுவது?.....
ஆவிகளை ஆண்டவரின் வல்லமையால் கட்டி அப்புறப்படுத்திய வேத உதாரணங்கள் உண்டா?
//வேறு என்ன செய்யமுடியும்?//
வேத வசனத்தின்படி வாழ்வதன் மூலம் அவன் தாக்குதல்களை மேற்கொண்டு வாழலாம்; யோபை போல(யோபு 1-10) நம்மையும் அவர் இரத்தக்கோட்டைக்குள் வேலியடைத்து பாதுகாக்க வேண்டலாம்; பிசாசின் பிடியிலுள்ள மக்களை ஆண்டராகிய இயேசு கிறிஸ்து கொடுத்த அதிகாரத்தின் படி(மாற்கு 16-17) இயேசுவின் நாமத்தில் விடுவிக்கலாம் ... என கருதுகிறேன்.
-- Edited by timothy_tni on Wednesday 3rd of March 2010 01:40:38 PM
-- Edited by timothy_tni on Tuesday 23rd of March 2010 09:51:22 PM
இயேசுவின் இவ்வார்த்தை யாரை முந்தி கட்டவேண்டும் என்று அறிவுறுத்துகிறது என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்பதை .சற்று விளக்கவும். எனது கருத்துப்படி இயேசு சாத்தானை முந்தி ஜெபத்தால் கட்டும்படி வலியுறுத்துகிறார் என்றே நான் கருதுகிறேன்.
Bro. timothy_tni wrote ////ஒரு குறிப்பிட்ட பிசாசை இயேசுவின் நாமத்தில் கட்டி விடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் அவனை கட்ட வேண்டிய நிலை ஏன் வருகிறது?(யார் அவனை விடுதலையாக்கியது?...)////
வார்த்தை என்னும் வல்லமையால் அதாவது ஜெபத்தால் கட்டப்படும் பிசாசானது ஜெபம் குறைய குறைய அதன் கட்டுகள் தானாக தளர்ந்துவிடும் என்பது எனது கருத்து. தேவனை துதித்து ஜெபிக்கும்போது பிசாசின் கட்டுகள் தளரும் (சிறைச்சாலையில் நடந்தது) அதாவது பிசாசு அங்கு கிரியை செய்யமுடியாதபடி அதன் செயல்கள் கட்டி நிறுத்தப்படுகின்றன.
Bro. timothy_tni wrote ////வெளி 20ம் அதிகாரத்தில் 1. ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன். 2.பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் தமது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான். 3.அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்.
இப்போதே நாம் அவனைக்கட்டிவிட்டால் தூதன் எப்படி கட்டுவது?...../////
இந்த வசனங்களில் குறிப்பிடப்பட்டிருப்பது "பழைய பாம்பாகிய வலுசர்ப்பம்" என்னும் ஆதியில் ஏதேன தோட்டத்தில் இருந்த சாத்தானை மட்டுமே. அவனை மனிதனால் கட்டவே முடியாது. உண்மையில் இந்த சாத்தான் வேறு யாரும் அல்ல நமது மாமிசத்தோடு கலந்து இருப்பவன். நான் விரும்பாததை செய்ய தூண்டும் சரீரத்திலுள்ள பாவ பிரமாணமே இந்த சாத்தான். அதை இறுதியாகவே ஆண்டவர் பட்சிக்கிறார்.
வான மண்டலத்தின் பொல்லாத சாத்தானின் ஆவிகளையே நாம் ஜெபத்தால் கட்டமுடியும்
எபேசியர் 6:12 வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
////ஆவிகளை ஆண்டவரின் வல்லமையால் கட்டி அப்புறப்படுத்திய வேத உதாரணங்கள் உண்டா?///
பொல்லாத ஆவிகளுடன் நமக்கு போராட்டம் உண்டு என்று பவுல் குறிப்பிடுகிறார். அதன் அடிப்படையில் ஒரு தீயவன் நம்மோடு போராட வரும்போது அவனை அடிப்பதோ/சபிப்பதோ/கொல்வதோ சுட்டெரிப்பதோ வேண்டுமானால் சட்டப்படி குற்றமாக இருக்கலாம். ஆனால் அவனை கட்டி காவலரிடம் ஒப்படைப்பது எவ்விதத்திலும் குற்றமல்ல. அதுபோல் சாத்தான் என்னும் தீயவன் ஆதிமுதல் மனுஷ கொலைபாதகன்! கொலைகாரனை கொலை செய்யவிடாமல கட்டுவதில் தவறேதும் இல்லையே! அதுபோல் வார்த்தை என்னும் வல்லமையான ஆவியின்பட்டயத்தை வைத்திருக்கும் நாம் நமது வீட்டில் அதன் கிரியைகளை நடத்த முடியாதபடி அவனை கட்ட பயன்படுத்துவதில் தவறில்லை என்றே நான் கருதுகிறேன்.
சில காரியங்களை ஆவியானவரின் ஆலோசனைப்படி அனுமானத்தின் அடிப்படையிலேயே செயல்படுத்த முடியும். ஏனெனில் நமக்குள்ள அபிஷேகம் சலகத்தையும் நமக்கு போதிக்கும்.
ஆகினும் சாத்தானை கட்டி ஜெபிபது சிலருக்கு தவறாகபடுமாயின் அந்த மன உருத்துதலிமித்தம் அதை செய்யாமல் தவிர்ப்பது நல்லது!
விசுவாசத்தால் வராத எதுவும் பாவமே!
-- Edited by SUNDAR on Wednesday 3rd of March 2010 04:57:23 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//ஒருவரை கட்டுதல் என்பதன் பொருள் அவரை அங்கே செயல்பட முடியாமல் நிறுத்துவதையே குறிக்கும் என்றே நான் கருதுகிறேன். //
இந்த புரிந்து கொள்ளுதலின் அடிப்படையில்தான் எல்லோரும் ஜெபிக்கிறார்கள் என நினைக்கிறீர்களா?
நான் இந்த கேள்வியை(பதிவை) இங்கு கேட்டதற்கு காரணம், ஒரு சில பெரியவர்கள் ஜெபத்தைக் குறித்து உண்டான வருத்தமே....
ஜெபத்தில் தேவனை மாத்திரம் நோக்குவதற்கு பதிலாக பிசாசுகளுடன் தெருச் சண்டை போடுவது போல ஜெபிக்கிறார்கள்.
பிசாசை செயல்பட விடாமல் தடுக்க நாம் வேலிக்குள் இருந்தாலே போதுமானது; அவனை கைது செய்ய வேண்டியதில்லை (அதற்கு அனுமதியும் இல்லை). நம்முடைய ஒத்தாசை இன்றி பிசாசால் நம்மை தோற்கடிக்க இயலாது.
இயேசுவின் இவ்வார்த்தை யாரை முந்தி கட்டவேண்டும் என்று அறிவுறுத்துகிறது என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்பதை .சற்று விளக்கவும். எனது கருத்துப்படி இயேசு சாத்தானை முந்தி ஜெபத்தால் கட்டும்படி வலியுறுத்துகிறார் என்றே நான் கருதுகிறேன்.//
மத் 12-29 அன்றியும் பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்.
இங்கு பலவான் என்பது பிசாசானவன்தான். (உங்கள் புரிந்து கொள்ளுதலின் படி இது லூசிபரா? இல்லை வான மண்டலத்தின் பொல்லாத சாத்தானின் ஆவிகளா?...)
இங்கு என்னுடைய கேள்வி யார் அவனை கட்ட வேண்டும்?
லூக்கா 11 21. ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக் காக்கிறபோது, அவனுடையபொருள் பத்திரப்பட்டிருக்கும். 22. அவனிலும் அதிக பலவான் வந்து, அவனை மேற்கொள்வானேயாகில், அவன் நம்பியிருந்த சகல ஆயுதவர்க்கத்தையும் பறித்துக்கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருளைப் பங்கிடுவான்.
என்னுடைய புரிந்து கொள்ளுதலின்படி,
அதிக பலவான் என்பது இயேசு கிறிஸ்து. அவரே அவனைக் கட்டி அவனுடைய உடமைகளாய் இருக்கிற இந்த உலக ஆட்சியமப்புகளை பறித்து தேவனுடைய ராஜ்ஜியமாக பங்கிடுகிறார்.
அதுவும் இப்போது அல்ல: வெளி 20ம் அதிகாரத்தினுடைய காலத்தில்.
மத் 8-29: அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள்.
இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் பிசாசுகள் அனேக இடங்களில் இடையூறு செய்தன. அவர் அதிகபட்சமாக சொன்ன வார்த்தை : மத் 4-10: அப்பாலே போ சாத்தானே.... (அ) மத் 16-23, மாற் 8-33, லூக் 4-8 எனக்கு பின்னாக போ சாத்தானே...
குறிப்பிட்ட காலம் வரை இவ்வுலகில் அவன் சுற்றித் திரிவது தேவனுடைய சித்தம். அதற்கு விரோதமாக செய்ய கூடாது( முடியாது).
எபேசியர் 6
10. கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். 11 நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். 12 ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. 13 ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். 14 சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; 15 சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும், 16 பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். 17 இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். 18 எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.
அவன் சேனைகளோடு போராட்டம் உண்டு தான். ஆனால், நாம் செய்ய வேண்டியது என்ன?....
இந்த வசனங்கள் நம்மை என்ன செய்ய சொல்கின்றன.. பிசாசோடு போராடி அவனை ஒடுக்க சொல்கிறதா, இல்லை யோவான் 14-30 இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
என்று எதிர்த்து நின்று ஜெயமெடுக்க சொல்கிறதா?....
//
சில காரியங்களை ஆவியானவரின் ஆலோசனைப்படி அனுமானத்தின் அடிப்படையிலேயே செயல்படுத்த முடியும். ஏனெனில் நமக்குள்ள அபிஷேகம் சலகத்தையும் நமக்கு போதிக்கும்.
ஆகினும் சாத்தானை கட்டி ஜெபிபது சிலருக்கு தவறாகபடுமாயின் அந்த மன உருத்துதலிமித்தம் அதை செய்யாமல் தவிர்ப்பது நல்லது!
விசுவாசத்தால் வராத எதுவும் பாவமே!// பைபிளில் நமக்கு உள்ள எல்லைக் கோட்டை தாண்ட வேண்டாம் என்பது என் பணிவான வேண்டுகோள்.
(தவறு இருப்பின் மன்னிக்கவும்...)
-- Edited by timothy_tni on Tuesday 23rd of March 2010 09:53:56 PM
///நான் இந்த கேள்வியை(பதிவை) இங்கு கேட்டதற்கு காரணம், ஒரு சில பெரியவர்கள் ஜெபத்தைக் குறித்து உண்டான வருத்தமே.... ஜெபத்தில் தேவனை மாத்திரம் நோக்குவதற்கு பதிலாக பிசாசுகளுடன் தெருச் சண்டை போடுவது போல ஜெபிக்கிறார்கள்.////
நானும் அதுபோல் ஜெபங்களை கேட்டு பலமுறை வருந்தியிருக்கிறேன். நல்லது சகோதரரே! மிகவும் மைநூட்டாக வசனங்களை ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள் நல்ல கருத்துதான் நான் மறுப்பதற்கில்லை! ஆகினும் நானும் பிறருக்காக பிற வீடுகளுக்காக ஊருக்காக ஜெபிக்கும்போது அங்கு கிரியை செய்யும் அசுத்த ஆவிகளை கிரியை செய்யவிடாமல் கட்டி ஜெபிப்பதால் எனது தரப்பைபற்றிய நியாயத்தையும் நான் சற்று விளக்க கடமைபட்டிருக்கிறேன்.
timothy_tni wrote:
///பிசாசை செயல்பட விடாமல் தடுக்க நாம் வேலிக்குள் இருந்தாலே போதுமானது; அவனை கைது செய்ய வேண்டியதில்லை (அதற்கு அனுமதியும் இல்லை). நம்முடைய
ஒத்தாசை இன்றி பிசாசால் நம்மை தோற்கடிக்க இயலாது.///
பலவானை முந்தி கட்டவேண்டும் என்று இயேசு சொல்வது அவரவர்களை காப்பாற்றிக்கொள்ள அல்ல. அந்த பலவானது வீட்டை கொள்ளையிடவே என்றே இயேசு குறிப்பிடுகிறார். நம்மை நாம் எப்படிவேண்டுமானாலும் பாதுகாத்து கொள்ளலாம். ஆனால் அசுத்த ஆவியின் கட்டுக்குள் இருக்கும் ஒரு குடும்பத்தை ஆண்டவருக்குள் கொண்டுவரும் முயற்ச்சியை பற்றியே நான் குறிப்பிடுகிறேன். முதலில் அவர்களை கட்டிவைத்திருக்கும் சாத்தானை அவனைவிட பெலவானாகிய இயேசுவின் நாமத்தில் ஜெபத்தால் கட்டுவது அவசியம் அதைதான் இவ்வசனம் குறிப்பிடுகிறது என்றே நான் கருதுகிறேன்.
ஆயிரம் வருஷ அரசாட்சியில் முன் சாத்தான் கட்டப்படும்போது அதன்பின்னர் செயல்படப்போவதும் அவனை பட்சிக்கபோவதும் தேவனே! அதைபற்றிய காரியத்தை இங்கு ஜனங்களிடம் பேசும்போது இயேசு குறிப்பிட்டார் என்ற கருத்து சரியானதா?
சாத்தானுக்கு பதினெட்டு வருடமாக மனிதர்களை கட்டிவைக்கும் அதிகாரம் இருக்கும்போது ஆண்டவரின் வல்லமையால் அவனை செயல்படவிடாமல் கட்டி ஜெபிப்பது தேவநீதிபடி தவறானது என்று எனக்கு தோன்றவில்லை.
timothy_tni wrote:
/////குறிப்பிட்ட காலம் வரை இவ்வுலகில் அவன் சுற்றித் திரிவது தேவனுடைய சித்தம். அதற்கு விரோதமாக செய்ய கூடாது( முடியாது)///
தங்களின் இந்த கருத்துக்கள், சத்துருவாகிய சாத்தானை தேவன் வேண்டுமென்றே குறிப்பிட்ட காலம்வரை பூமியை கெடுக்க அனுமதித்துள்ளார் என்று சொல்லும் இஸ்லாமியச சகோதரரின் கருத்துடன் ஒத்திருக்கிறது. அவ்வாறு வேண்டுமன்றே தேவன் சாத்தானை பூமியில் சுற்றிவர அனுமதித்திருக்கிறார் என்னும் கருத்துக்கு ஆதாரமான வசனம் நமது வேதத்தில் இருக்கிறதா?
என்று இயேசு சாத்தனைபற்றி குறிப்பிடுகிறார் அப்படி திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருபவனை சத்துருவின் சகல வல்லமையையும் முறியடிக்க அதிகாரம் உள்ள நாம், அவனை துரத்த மட்டும்தான் செய்யவேண்டும், அது போய் அடுத்தவர் வீட்டில் அழிம்பாட்டம் பண்ணவிடாமலும் தடுக்க ஜெபத்தால் அவன் கிரியைகளை கட்டுவதுகூடாது என்ற கருத்து ஏற்புடையதா?
அப்போஸ்தலர் 13:௧௦ எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ?
என்று சொன்ன அப்போஸ்தலர் அவன் கிரியை செய்யாதபடி அவனின் கண்களை கட்டி குருடாக்கினார். அதுபோல் கர்த்தரின் செம்மையான வழியை புரட்டுவதற்காக ஓயாமல் போராடிவரும் சாத்த்தானை ஆண்டவரின் வழிகளை புரட்டாதபடி அவன் கிரியைகளை நமது வாயின் வார்த்தை என்னும் பட்டயத்தை பயன்படுத்தி கட்டிஜெபிபது தவறாகுமா?
timothy_tni wrote:
///பைபிளில் நமக்கு உள்ள எல்லைக் கோட்டை தாண்ட வேண்டாம் என்பது என் பணிவான வேண்டுகோள்.///
அன்பு சகோதரரே! பைபிள் என்பது நமக்கு ஒரு எல்லை கோடுதான் அனால் வேதவார்த்தைகள் எதை செய்யவேண்டாம் என்று திட்டவட்டமாய் தடுத்திருகிறதோ அதைதான் நாம் செய்யகூடாது. அதை மீறி செயல்படுபோதுதான் அது பாவமாகும். அதை மட்டும் நாம் சரியாக பார்த்துக் கொண்டால் போதுமானது என்றே நான் கருதுகிறேன்.
இயேசு பலவானை கட்டுவது குறித்து சொன்ன கூற்றைதவிர சாத்தானை கட்டி ஜெபிக்கலாம் என்பதற்கு சரியான வசன ஆதாரம் இல்லைதான் அதே நேரத்தில் சாத்தனை கட்டி ஜெபிக்ககூடாது என்றும் வசனம் எங்கும் சொல்லவில்லையே!
அவ்விதத்தில் சாத்தானை தூஷணமாக குற்றப்படுத்துவதுதான் தவறு என்று வேதம் சொல்கிறதே தவிர, அவனை ஆண்டவரின் வல்லமையால் கட்டுவது தவறு என்று எங்கும் குறிப்பிடவில்லை.
நான் கம்ப்யுட்டரில் தேவனை பற்றி எழுதுவது சரியா என்பதை பற்றியும் நாம் அரிசியில் செய்த தோசையை சாப்பிடலாமா என்பது பற்றியும்கூடதான் வேத வார்த்தைகள் நேரடியாக எதுவும் சொல்லவில்லை எனவே இது தவறாகிவிடுமா? அல்லது எல்லை கோட்டை தாண்டுவதாகி விடுமா?
இந்த உலகில் நாம் உயிர்வாழ அனேக காரியங்களை ஆட்டமேட்டிக்காக செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் அதில் எதையெல்லாம் செய்யகூடாது நிச்சயம் தவிர்க்கவேண்டும் என்பதையும் நாம் கட்டாயமாக செய்யவேண்டிய
சில நல்ல காரியங்கள் எவை என்பதையும் வேதத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும். மற்றபடி வேதம் தடை செய்யாத காரியங்கள் எதையும் நாம் செய்வதில் தவறேதும் இல்லையே.
ஆதாம் ஏவாளை படைத்த ஆண்டவர் எல்லா பழத்தையும் புசிக்கலாம் ஆனால் குறிப்பிட்ட பழத்தை மட்டும் புசிக்க கூடாது என்று சொன்னார். அவன் ஓடுவது/ நடப்பது /படுப்பது பற்றி ஏன் சர்ப்பத்துடன் பேசுவது பற்றி கூட எதுவும் சொல்லவில்லை. அவ்வாறிருக்க அவர்கள் செய்த வேறு எந்த காரியத்தையும் தேவன் பாவம் என்று சொல்லி தண்டிக்கவில்லை. தேவன் எதை தடை செய்தாரோ அதை செய்தபோதுதான் அது பாவமானது
அதேபோல் இன்றும் வேதம் திட்டவட்டமாக தவறு என்று சொல்லும் காரியங்கள் மட்டுமே எவ்விதத்திலும் பாவம்! அதை செய்யாமல தவிர்த்தாலே போதும்! அவ்வாறில்லாத பட்சத்தில் இதுபோன்ற மற்ற எந்த காரியமும் பாவமல்ல என்றே நான் கருதுகிறேன்!
நம்முடைய வார்த்தைக்கு சாத்தனை கட்டும் வல்லமை இருந்தால் அது கட்டுப்படும், இல்லையேல் அதாவது அவ்வாறு கட்டுவது தேவசித்தம் இல்லையேல் அதனை நம்மால் ஒன்றும் செய்ய கூடாதே!
-- Edited by SUNDAR on Saturday 6th of March 2010 10:39:24 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நான் ஒரு தெரிய வேத அறிஞனோ அல்லது வேதாகமத்தை முறையாக பயின்ற்றவனோ அல்ல. ஆண்டவர் எனக்கு தெரிவித்த சிலகாரியங்களை வேதாகமத்தின் அடிப்படையில் ஆராய்ந்து இங்கு பதிவிடுகிறேன்.
நான் தவறாக எழுதிய பல காரியங்களை ஆண்டவர் எனக்கு சுட்டிகாட்டி என்னை திருத்தியிருக்கிறார்.
இவ்வகையில் நேற்று இரவு ஆண்டவர் என்னோடு இடைப்பட்டு சில காரியங்களை தெரிவித்தார் அவற்றுள் முக்கியமானது
1. தெளிவான உண்மை தெரியாத காரியங்களை குறித்து துணிகரமாக விடாப்பிடியாக விவாதிக்க வேண்டாம்.
2. எதோ ஒரு வசனத்தின் அடிப்படையில் சரி என்று கருதி செய்யப்படும் காரியம், பிறரால் தவறு என்று வேதவசனத்தின் அடிப்படையில் சுட்டிகாட்டப்பட்டபின் அதை தொடர்வது கூடாது.
3. மோசே செய்தது ஆண்டவரின் வார்த்தையில் சிறு மாறுதல்தான் (ஆண்டவர் பேசசொன்னார் மோசே அடித்தான்) ஆகினும் அதுவே ஆண்டவர் பார்வையில் பெரிய தவறாக
மாறிப்போனது. எனவே வேதவசனங்கள் பற்றிய விஷயங்களில் சொல்லப்பட்டது எதுவோ அதை மட்டும் செய்தால் போதுமானது அதற்க்கு மேல் எதையும் யோசித்து கூட்டவோ குறைக்கவோசெய்யவேண்டாம்! (இவ்வகையில் வேதவசனங்களில் சாத்தனை துரத்தினார்கள் என்றுதான் இருக்கிறதேயன்றி அதை கட்டினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை)
இறுதியாக கொடுத்த எச்சரிப்பு!
வேதத்தின் ஆழம்வரை ஆராய்ந்து அடுத்தவர் செய்வதில் குற்றம் கண்டுபிடிக்கும் நாம், அதேபோல் ஆழமாக ஆராய்ந்து அதில் சொல்லப்பட்டுள்ள சிறு காரியங்களைகூட கை கொண்டு நடப்பதற்கு பிரயாசப்படுகிரோமா என்பதை குறித்தும் நம்மை நாமே சோதித்து ஆராயவேண்டும், இல்லையேல் அடுத்தவரை குற்றவாளியாக தீர்க்கும் நாமேஅதே வேதத்திலுள்ள வேறொரு வசனத்தின் அடிப்படையிலே குற்றவாளியாக தீர்க்கப்படுவோம்!
-- Edited by SUNDAR on Saturday 6th of March 2010 12:23:29 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இவைகள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினாலும், அவருடைய சீஷர்களினாலும் அசுத்த ஆவியின் கட்டுக்குள் இருக்கும் மக்களை விடுவித்த நிகழ்ச்சிகள் . இவைகளே நமக்கும் மாதிரிகள்.. இங்கு எங்குமே பிசாசு கட்டப்படவில்லை...
....... ....... .......
இந்த பதிலை நான் அன்று மாலை டைப் செய்துகொண்டிருக்கும் போதே எனக்குள்ளாய் சோர்வு ஏற்பட்டதால் இதை போஸ்ட் செய்யாமல் நிறுத்தி விட்டேன்.
என்னவெனில், இதற்கு முன் நான் எங்கும் பெரிய அளவில் எழுத்து விவாதம் செய்தது கிடையாது. ஆயினும், தமிழ்கிறிஸ்தியன் எனும் விவாத தளத்தில் பார்வையாளனாக சில காலம் இருந்ததுண்டு.
(இப்போது, அந்த மார்ஸ்மேடை முடக்கப்பட்டு விட்டது.)அங்கு சகோ.சில்சாம் அவர்களிடம் ஒரு சந்தேகம் கேட்டு ஒரு பதிவிட்டதுதான் என் முன் அனுபவம். அங்கு நான் கவனித்த ஒரு காரியம்: அனேகர் சத்தியத்தை நன்கு அறிந்து அதற்கு கீழ்படிவதற்கு பதில், தங்கள் தங்கள் கருத்தை நிலைநாட்டவும், வேத அறிவை பறைசாற்றவுமே அதிக முக்கியத்துவம் தந்தனர்.
ஆண்டவர் நமக்கு அதிக வெளிச்சம் தருவதற்கு முன் நாம் ஏற்கனவே பெற்றுக் கொண்ட வெளிச்சத்தில் நடக்க வாஞ்சையுள்ளவர்களாய் இருக்கிறோமா என்பதை பார்க்கிறார்.
அதாவது ஒவ்வொரு அடியாக வழி நடத்துவார்; ஒவ்வொரு அடியிலும் கீழ்படியும் போது. (பார்க்க: In all your ways give ear to him, and he will make straight your footsteps. Prov 3:6)
சகோதரருடைய முந்தைய பதிலிலும் வேதத்தை விட விவாதத்தில் முனைப்பு இருந்ததால் இதனை விட்டு விடலாம் என நினைத்தேன். ஆயினும் அவரது அடுத்த நாள் பதிவு,இந்த விவாத தளம் ஒரு தியான தளம் என நிரூபித்தது. எனக்கும் ஒரு சிறிய உற்சாகம் கிடைத்தது.
ஆகையால் தொடர வாஞ்சித்தேன். இடையில் ஊருக்கு சென்று விட்டேன்.
//
(இவ்வகையில் வேதவசனங்களில் சாத்தனை துரத்தினார்கள் என்றுதான் இருக்கிறதேயன்றி அதை கட்டினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை) மோசே செய்தது ஆண்டவரின் வார்த்தையில் சிறு மாறுதல்தான் (ஆண்டவர் பேசசொன்னார் மோசே அடித்தான்) ஆகினும் அதுவே ஆண்டவர் பார்வையில் பெரிய தவறாக
மாறிப்போனது. எனவே வேதவசனங்கள் பற்றிய விஷயங்களில் சொல்லப்பட்டது எதுவோ அதை மட்டும் செய்தால் போதுமானது அதற்க்கு மேல் எதையும் யோசித்து கூட்டவோ குறைக்கவோசெய்யவேண்டாம்!
இறுதியாக கொடுத்த எச்சரிப்பு!
வேதத்தின் ஆழம்வரை ஆராய்ந்து அடுத்தவர் செய்வதில் குற்றம் கண்டுபிடிக்கும் நாம், அதேபோல் ஆழமாக ஆராய்ந்து அதில் சொல்லப்பட்டுள்ள சிறு காரியங்களைகூட கை கொண்டு நடப்பதற்கு பிரயாசப்படுகிரோமா என்பதை குறித்தும் நம்மை நாமே சோதித்து ஆராயவேண்டும், இல்லையேல் அடுத்தவரை குற்றவாளியாக தீர்க்கும் நாமேஅதே வேதத்திலுள்ள வேறொரு வசனத்தின் அடிப்படையிலே குற்றவாளியாக தீர்க்கப்படுவோம்!
//
மிக்க நன்றி...
-- Edited by timothy_tni on Tuesday 9th of March 2010 07:44:36 PM
-- Edited by timothy_tni on Wednesday 24th of March 2010 02:26:39 PM
timothy_tni wrote:சகோதரருடைய முந்தைய பதிலிலும் வேதத்தை விட விவாதத்தில் முனைப்பு இருந்ததால் இதனை விட்டு விடலாம் என நினைத்தேன். ஆயினும் அவரது அடுத்த நாள் பதிவு,இந்த விவாத தளம் ஒரு தியான தளம் என நிரூபித்தது. எனக்கும் ஒரு சிறிய உற்சாகம் கிடைத்தது.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நான் எனது முந்தய பதிவின் போதே மன உருத்துதல்களோடுதான் பதிவிட்டேன். அன்று அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் வேளையிலேயே ஆண்டவர் என்னோடு இடைப்பட்டு என்னுடைய பதிவில் திருத்தம் செய்யவேண்டும் என்று சுட்டினார். அதன்பிறகு என்னால் வீட்டில் சமாதானமாக இருக்கவே முடியவில்லை ஆவியானவர் என்னை நெருக்கி ஏவியதாலும் எனது வீட்டில் நெட் கனக்சன் இல்லாத காரணத்தால் உடனே சுமார் 11 மணிக்கு பிரௌசிங் சென்டர் தேடி பார்த்தேன். மூன்று இடத்துக்கு சென்றும் நேரமாகிவிட்டதால் யாரும் என்னை அனுமதிக்கவில்லை.
இறுதியில் ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டு, நாளைகாலை முதல் வேலையாக எனது பதிவில் உள்ளவைகளை திருத்திவிடுகிறேன் என்று வேண்டிக்கொண்டேன். அதுபோல் மறுநாள் முதல்பதிவாக ஆண்டவர் தெரிவித்த எனது திருத்துதல் பதிவை பதிந்தேன்.
இது எனக்கு முதல் முறையல்ல! திரித்துவம் பற்றிய கருத்து மற்றும் மேலும் பல கருத்துக்களில் நானே எதிர் பதிவிட்டு பிறகு ஆண்டவரின் தூண்டுதலின்பேரில் பதிவை மாற்றி பதிவிட்டிருக்கிறேன்.
நான் ஒரு அறிவாளியோ வேதபண்டிதனோ அல்ல! ஆண்டவர் சொன்னதை எழுத கடமைப்பட்ட ஒரு சாதாரண அப்பிரயோஜனமான ஊழியக்காரனே. நான் தவறாக எழுதினால் நிச்சயம் ஆண்டவர் என்னை திருத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதன் அடிப்படையிலேயே துணிந்து எழுதுகிறேன்.
அவருக்கே மகிமை உண்டாவதாக!
-- Edited by SUNDAR on Tuesday 9th of March 2010 09:38:11 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
Bolt : ஓரளவுக்கு மேல் (தேவ பிரசன்னத்தில் ஊறின) பரிசுத்தம் அடைந்த பொருட்கள் (மனிதர்களும் கூட) தேவனால் காக்கப்படும் அல்லது எடுத்துக் கொள்ளப்படும். (உ.ம். ஏனோக்கு, எலிசா, உடன்படிக்கை பெட்டி)
Nut :ஏன் சாத்தான் மோசேயின் சரீரம் குறித்து தர்க்கித்தான்?
Bolt : எல்லா சரீரமும் இயற்கை விதிக்கு உட்பட்டு அழுகிப் போக வேண்டும். ஆனால் இந்த விதிக்கு உட்படாமல் மோசேயின் சரீரம் பாதுகாக்கப்பட்டபடியால் இயற்கை விதியை காட்டி தர்க்கித்தான். சாத்தானும் இத்தகைய ஒரு முயற்ச்சியை எகிப்தில் பார்வோன் மூலமாக மேற்கொண்டான். ஆனால் அவனுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
Nut :மோசேயின் சரீரம் என்ன செய்யப்பட்டது ?
Bolt : சாத்தான் கண்டுபிடிக்க முடியாதவாறு மறைத்து வைக்கப்பட்டது.
Nut :மிகாவேல் ஏன் சாத்தானை தூஷணமாக குற்றப்படுத்தவில்லை?
மிகாவேல் மற்றும் சாத்தான் இருவரும் சமமானவர்கள் சமகாலத்தவர்கள். இருவரும் ஒரே விதமான பொறுப்புக்கென படைக்கப்பட்டவர்கள். விழுகைக்கு முன் ஒருவரொடொருவர் அன்பாக இருந்தவர்கள். சாத்தானின் முந்தின மகிமையை மிகாவேல் அறிந்திருந்ததால் சாத்தானை தூஷணமாக குற்றப்படுத்தவில்லை. இது யூதா-9 வசனத்தின் விளக்கம் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது போன்றது
Nut :இதைப் பற்றி இங்கே ஏன் சொல்லப்பட்டுள்ளது?
Bolt : கிருத்தவர்கள் பிற மத நம்பிககைகளை தூஷணமாக குற்றப்படுத்தாமல் இருக்க
Nut :அவ்வாறு குற்றபடுத்தினால் என்ன ஆகும்?
Bolt : அவர்களும் கிருத்துவத்தை, இயேசுவை பதிலுக்கு தூஷணமாக பேசுவதால் தேவ கோபம் அவர்கள் மேல் வந்து துன்பப்படாமல் இருக்க.
Nut :இதை பற்றி சொல்லாமல் விட்டால் என்ன ஆகும்?
Bolt : தேவனை மகிமைப்படுத்துவதற்க்கு பதிலாக, பிற மத தூஷணம் கடவுளூக்கு உகந்தது என்று சொல்லி, தூஷணங்களே பெருகிப் போகும்.
Nut : சாத்தானும், தீய ஆவிகளூம் ஒன்றா?
Bolt : இல்லை. தீய ஆவிகள் சாத்தானுக்கு (அவனுடைய சக்தியால்) கட்டுப்பட வேண்டியவர்கள்
Nut : தீய ஆவிகளை யார் விரட்ட முடியும்?
Bolt : அதற்கென வரம் பெற்றவர்கள் அருகில் நின்றாலே அவைகள் ஓடி விடும். விசுவாசம் மட்டும் உள்ளவர்கள் அவைகளை துரத்துவது சாத்தியமென்றாலும் அது கடினமான காரியம்.
Nut : வரம் பெற்றவர்கள் அருகில் நின்றாலே அவைகள் ஓடி விடுமா?
Bolt : அப்படியில்லை. முதலில் அந்த அசுத்த ஆவி மனிதனின் ஆத்துமாவை விட்டு பிரிய வேண்டும். பிறகே விரட்ட முடியும். இது அசுத்த ஆவி எவ்வளவு தூரம், எவ்வளவு காலம் மனிதனை பாதித்துள்ளது என்பதை பொறுத்தது.
Nut : எப்போது, எப்படி அசுத்த ஆவி மனிதனின் உடலை விட்டு பிரியும்?
Bolt : தேவன் அந்த மனிதனுக்கென்று நிர்ணயித்திருக்கிற நாளீலே. அவைகள் வருடக்கணக்கில் கூட இருக்கலாம். வசனத்தை கேட்பதின் மூலமும், ஜெபத்தின் மூலமும் கொஞ்சம் கொஞ்ச்சமாக அது பிரிய ஆரம்பிக்கிறது.
Nut : அசுத்த ஆவியை கட்டி ஜெபிப்பது சரியா?
Bolt : போராடின பிறகும் அசுத்த ஆவி மனிதனை விட்டு போகாததால், தோற்றுப் போக விரும்பாத ஊழியர்கள் அதை கட்டி விடுகிறார்கள். இது அவருக்கும், பிசாசு பிடித்த மனிதருக்கும் மனனிறைவைத் தரும்.
Nut : அப்படியானால் அந்த ஜெபங்கள், போராட்டங்கள் தோல்வியா?
Bolt : இல்லை. அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பது போல ஒரு நாளில் அசுத்த ஆவி ஓடி விடுவதற்க்கு இத்தகைய பல ஜெபங்களே காரணம். ஒவ்வொரு ஜெபத்துக்கும்முயற்ச்சிக்கும் பலனுண்டு. ஆனால் பாவம் செய்தவர்கள் அசுத்த ஆவியை துரத்த முடியாது. அவர்களை அசுத்த ஆவி தாக்குவதும் உண்டு.
-- Edited by SANDOSH on Tuesday 23rd of March 2010 09:08:40 PM
Bolt : கிருத்தவர்கள் பிற மத நம்பிககைகளை தூஷணமாக குற்றப்படுத்தாமல் இருக்க
Nut : அவ்வாறு குற்றபடுத்தினால் என்ன ஆகும்?
Bolt : அவர்களும் கிருத்துவத்தை, இயேசுவை பதிலுக்கு தூஷணமாக பேசுவதால் தேவ கோபம் அவர்கள் மேல் வந்து துன்பப்படாமல் இருக்க.
Nut : இதை பற்றி சொல்லாமல் விட்டால் என்ன ஆகும்?
Bolt : தேவனை மகிமைப்படுத்துவதற்க்கு பதிலாக, பிற மத தூஷணம் கடவுளூக்கு உகந்தது என்று சொல்லி, தூஷணங்களே பெருகிப் போகும்.
சகோதரர் சந்தோஷ் அவர்களின் இந்த கேள்வி பதில் தொகுப்பு மிகவும் பயனுள்ள ஓன்று என்றே நான் கருதுகிறேன்.
பிறமத தெய்வங்களை குறித்து தூஷணம் பேசுவதும் அவற்றை தகாத முறையில் விமர்சிப்பதும் தவறான காரியம் என்றும் அதை தேவன் விரும்பவில்லை என்பதையும் அனைவரும் அறியவேண்டும்.
I கொரிந்தியர் 8:5 வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு
ஆனால் கர்த்தரோ
சங்கீதம் 95:3கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்
எனவே பிறமத தெய்வங்களை தூற்றாமல் நமது தேவன் ஜீவனுள்ளவர் என்றும் அவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்று சொல்லுங்கள் அதுவே தகுந்த வார்த்தை.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//இந்த வரிசையிலிருந்து இயேசுவானவரின் பெயரை தயவுசெய்து எடுத்துவிடுங்கள்,சந்தோஷ்; நன்றி..!// சகோதரரின் இந்த கருத்தை ஆமோதித்து நானும் வேண்டுகிறேன்.
இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் அவரது மரண நேரத்தை தவிர (மத் 24-46) மற்ற நேரமெல்லாம் அவருடைய வாழ் நாள் முழுவதும்(யோவான் 8:29) அவர் தேவனுடைய பிரசன்னத்திலேயே இருந்தார். ஓரளவுக்கு மேல் பரிசுத்தமடைந்த பொருட்கள் (அ) மனிதர்கள் லிஸ்டில் ஒப்பில்லாத அவர் பெயர் வேண்டாம்.
யூதர்கள் வேதாகமத்தை எழுதும் போது கர்த்தர் (அ) யாவே எனும் வார்த்தைகளை எழுதும் போது அவர்கள் பயன்படுத்தும் மை (அ) இறகை அகற்றி விட்டு புதிய மையை (அ) இறகை பயன்படுத்தினார்கள், என என் நண்பர் ஒரு முறை என்னிடம் கூறினார். (இன்னும் அனேக பழக்கங்களும் உண்டு).
அவர்கள் நம் தேவனுடைய நாமத்திற்கு அவர்கள் செலுத்தும் கனத்தையும் பயபக்தியையும் இது தெரிவிக்கிறது. தேவனுடைய நாமத்தை வார்த்தையிலும், வாழ்க்கையிலும் மாத்திரம் அல்ல; எழுத்திலும் மகிமை படுத்த வேண்டும். (சகோ சில்சாம், சுந்தர், ... அவர்களைப் போல நானும் இனி தேவனுடைய பெயர்களை தடித்த எழுத்துக்களில் டைப் செய்ய வேண்டும்).
சகோ. சந்தோஷ் அவர்களே, தங்களுடைய அனேக விளக்கங்கள் இதுவரை யாரும் பதிலளிக்காதவைகள். அனேக பதிவுகள் மிகவும் பயனுள்ளவை; ஆயினும், தங்களுடைய பதில்களுக்கு ஆதாரமாக உள்ள வசனங்களை மேற்கோள் இடுவது தேவையான ஒன்று. அவைகள் ஒருவேளை உங்கள் கருத்தை முழுவதும் பிரதிபலிப்பனவனாக இல்லாவிடினும் உங்கள் புரிந்து கொள்ளுதலுக்கு அடிப்படையான வசனங்களையாவது சொல்வது நலம்.
-- Edited by timothy_tni on Wednesday 24th of March 2010 02:25:52 PM
Bolt : போராடின பிறகும் அசுத்த ஆவி மனிதனை விட்டு போகாததால், தோற்றுப் போக விரும்பாத ஊழியர்கள் அதை கட்டி விடுகிறார்கள். இது அவருக்கும், பிசாசு பிடித்த மனிதருக்கும் மனனிறைவைத் தரும்.//
இங்கே சரியா தவறா என்பதற்கான பதில் இல்லையே....
மேலும், அசுத்த ஆவிகள் கட்டப்பட முடியும் என நீங்கள் கருதுகிறீர்களா?