இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சாத்தானை கட்டி ஜெபிப்பது?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
RE: சாத்தானை கட்டி ஜெபிப்பது?
Permalink  
 


சுந்தர் எழுதியது
-------------------------------------------------------------------------------------
இவ்வகையில் நேற்று இரவு ஆண்டவர் என்னோடு இடைப்பட்டு சில காரியங்களை தெரிவித்தார் அவற்றுள் முக்கியமானது
 
1. தெளிவான உண்மை தெரியாத காரியங்களை குறித்து துணிகரமாக விடாப்பிடியாக விவாதிக்க  வேண்டாம்.

2. எதோ ஒரு வசனத்தின் அடிப்படையில் சரி என்று கருதி செய்யப்படும் காரியம், பிறரால்  தவறு என்று வேதவசனத்தின் அடிப்படையில் சுட்டிகாட்டப்பட்டபின் அதை தொடர்வது கூடாது
 
இவ்வகையில் வேதவசனங்களில் சாத்தனை துரத்தினார்கள் என்றுதான் இருக்கிறதேயன்றி அதை கட்டினார்கள் என்பதற்கு எந்த  ஆதாரமும்  இல்லை)
 ---------------------------------------------------------------------------
 
 
மேலே குறிப்பட்டு உள்ளது போல் இந்த காரியத்தை தங்கள் சிந்தையோடு வேதத்தில் ஆராயிவதை விட்டு விட்டு
கர்த்தரிடத்தில் கேட்டு பதில் பதிக்கும் மாறு கேட்டு கொள்கின்றேன்.


__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

"கட்டுதல்' என்பதை வார்த்தையின் பொருளாகக் கொள்ளாமல் நிறுத்துவது அதாவது நமக்கு எதிரான சக்திகளின் செயல்பாட்டை முடக்குவது என்ற பொருளில் கொள்ளவேண்டும்;

//கர்த்தரிடத்தில் கேட்டு பதில் பதிக்குமாறு...//

நண்பரே,எழுதப்பட்டவைகளே போதும்;
அதற்கு மிஞ்சி எண்ணவும் வேண்டாம்;
தேடவும் வேண்டாம்.

எனது விரிவான கருத்தை விரைவில் சமர்ப்பிக்கிறேன்..!


__________________

"Praying for your Success"


இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

//"கட்டுதல்' என்பதை வார்த்தையின் பொருளாகக் கொள்ளாமல்//

நான் ஏற்கனவே கூறியது போல, இன்று அனேகர் (75+%) இந்த பொருளில்தான் கட்டி ஜெபிக்கிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கேள்வி....

//நிறுத்துவது அதாவது நமக்கு எதிரான சக்திகளின் செயல்பாட்டை முடக்குவது என்ற பொருளில் கொள்ளவேண்டும்//

நிறுத்துவது (அ) செயல்பாட்டை முடக்குவது என்பது இரண்டு வகையில் சாத்தியம்:

1. Defense: எதிரியை தாக்கி செயல்படாது இருக்க வைத்தல் 

2. Offense: நம்மையும் சுற்றியுள்ளவைகளையும் தற்காத்து எதிரியால் பாதிக்கப்படாவண்ணம் காத்தல்

இந்த இரண்டு வகையில் எதைச் செய்ய வேண்டும் என வேதம் போதிக்கிறது?

//நண்பரே,எழுதப்பட்டவைகளே போதும்;//

நானும் அதையே வலியுறுத்துகிறேன்.

//எனது விரிவான கருத்தை விரைவில் சமர்ப்பிக்கிறேன்..!//

காத்திருக்கிறேன். நன்றி....




__________________


இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

// ரோமர் 16:20 சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனே கூட இருப்பதாக. ஆமென்.

என்றும் பவுல் தனது நிருபத்தில் எழுதியிருப்பதால் சாத்தானை காலில் கீழ்போட்டு மிதிக்கிறேன் என்று சொல்வதிலும்  தவறில்லை என்றே கருதுகிறேன்.//

இந்த விவாதத்தில் நான் அதிகமாக பங்கேற்க ஆவியானவர் என்னை அனுமதிக்கவில்லை;ஆனாலும் "சீக்கிரமாய்" எனும் வார்த்தையானது இனி நடக்கப்போகும் ஒரு காரியத்தையே குறிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்; இதற்கு இணையாக தாங்கள் ரோமர்.9:28- ஐக் கொள்ளலாம்;

இதுபோலவே பிலிப்பியர்.4:19- ஐயும் தவறாகப் பயன்படுத்தி சில ஊழியர்கள் காணிக்கை கேட்பதுண்டு;"மகிமையிலே நிறைவாக்குவார்" என்பது இம்மைக்குரியதல்ல என்று நாம் அறிந்துக்கொள்ளவேண்டும்;

யூதர்கள் பொதுவாகவே எதையும் கவித்துவமாகச் சொல்லி வைத்திருக்கிறார்கள்;அதனை அப்படியே மொழிபெயர்க்கும் போது வேறு புதிய அர்த்தங்களும் வட்டார வழக்கில் வந்து சேரும்;இதையெல்லாம் கவனத்தில் கொண்டே நாம் சத்தியத்தை அறியவேண்டும்


__________________

"Praying for your Success"


இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

EDWIN:
// அது போல் இருந்தால் ஒரு மாசம் பாஸ்டிங் (pasting) போட்டு ஆண்டவரிடம் மன்றாடி  மொத்த பிசாசையும் நரகத்துக்கு அனுப்பி விடலாமே......................//

இதுவும் பரியாசம்தானே..?
எனக்கோ பக்திவிருத்தியாகிறது..!

Pasting என்பது ஒட்டுவதைக் குறிக்கும்;
ஆனால் Fasting என்பது ஓட்டுவதைக் குறிக்கும்;

"Fasting" காரணமாக பிசாசு ஓடுவதில்லை;
ஆனால் அதினால் பிசாசை ஓட்டும் மனோ திடத்தை நாம் பெறமுடியும்;

நான் முன்பே குறிப்பிட்ட வண்ணமாக உபவாசத்தினால் உடல் தளர்ந்தும் மனம் வலிமை பெறுகிறது; புலன்களெல்லாம் கட்டுப்பாட்டிலிருக்கிறது; தேவ வல்லமை நம்மூலம் வெளிப்பட ஏதுவாகிறது;
விசுவாச வைராக்கியம் பெருகுகிறது;



__________________

"Praying for your Success"


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

தீய ஆவிகள் மனிதனின் சரீரம், உணர்வு, சிந்தனை முதலியவற்றை உபயோகித்துக் கொண்டு அந்த மனிதனின் ஆத்துமாவை இல்லாமல் செய்கிறது.

ஆனால் மற்ற மனிதர்களுக்கு தீய ஆவி அவனுக்குள் இருந்து செயல்படுவது போன்று தோன்றுகிறது.

கட்டுதல் என்றால் மனிதனின் பகுதிகளை தீய ஆவி உபயோகிக்க முடியாமல் தடுத்தல் அல்லது அந்த பகுதிகளீலிருந்து பிரித்தல் என்று அர்த்தமாகும். குற்றம் கண்டுபிடிக்கும் அளவிற்க்கு கட்டுதல் என்ற வார்த்தையில் ஒன்றும் இல்லை. ஜெபத்தினால் தீய ஆவியின் அடிமைத்தனத்திலிருந்து மனிதன் மீள முடியும்.

ஆகவே கட்டி ஜெபித்தல் தவறல்ல‌


-- Edited by SANDOSH on Sunday 28th of March 2010 06:01:15 PM

__________________


இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

// Bro Sundar:
ஒருவரை கட்டுதல் என்பதன் பொருள்  அவரை அங்கே  செயல்பட முடியாமல்  நிறுத்துவதையே குறிக்கும் என்றே நான் கருதுகிறேன். //

// Bro Chillsam:
"கட்டுதல்' என்பதை வார்த்தையின் பொருளாகக் கொள்ளாமல் நிறுத்துவது அதாவது நமக்கு எதிரான சக்திகளின் செயல்பாட்டை முடக்குவது என்ற பொருளில் கொள்ளவேண்டும்;//

//Bro Santhosh:
கட்டுதல் என்றால் மனிதனின் பகுதிகளை தீய ஆவி உபயோகிக்க முடியாமல் தடுத்தல் அல்லது அந்த பகுதிகளீலிருந்து பிரித்தல் என்று அர்த்தமாகும். //

இப்படிப்பட்ட புரிந்துகொள்தலோடு சாத்தானைக் கட்டி ஜெபிப்பதில் தவறில்லை என தள சகோதரர்கள் கூறி இருக்கின்றனர்.
ஆயினும் நான் முன்பே கூறிய வண்ணம் முக்கால் வாசிக்கு மேல் நம் சகோதர, சகோதரிகள் இப்படிப்பட்ட புரிந்துகொள்தல்கள் எதுவும் இன்றி, சாத்தானைக் கட்டி ஜெபிப்பதைக் கவனித்திருக்கிறீர்களா?
இன்னும் ஒரு சில(பல?) சபைகளில் சபித்துக் கட்டுதல், பாதாளத்துக்குப் போக கட்டளையிடுதல், அக்கினியில் சுட்டெரித்தல் போன்ற ஜெபங்கள் நடைபெறுகின்றன.
இந்த நிலைக்கு என்ன காரணம்?

//குற்றம் கண்டுபிடிக்கும் அளவிற்க்கு கட்டுதல் என்ற வார்த்தையில் ஒன்றும் இல்லை.//

அந்த வார்த்தையில் ஒன்றுமில்லை தான்; நோக்கம் சரியானதா என்பதே முக்கியம்.

(தொடரும்..)

__________________
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard