இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகோதரர் timothy_tni அவர்களை வரவேற்கிறோம்!


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
சகோதரர் timothy_tni அவர்களை வரவேற்கிறோம்!
Permalink  
 


தளத்தில் உறுப்பினராகி  பதிவொன்றை தந்துள்ள  சகோதரர்  timothy_tni  அவர்களை ஆண்டவராகிய இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறோம்!  
 
தங்களைப்பற்றிய சிறிய அறிமுகம் ஒன்றை  பதிவிடும்படி அன்புடன் வேண்டுகிறேன்!
 
ஆவிக்குரிய நிலைகளில்  வளர்வதற்கு தேவையான நல்ல கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
 
தொடர்ந்து வாருங்கள் ஆண்டவரைபற்றிய அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்!

அன்புடன்
இறைநேசன்


 


__________________


இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

மிக்க நன்றி சகோதரரே...

நான் தேனி மாவட்டத்தை சேர்ந்தவன். வயது 23.
தீவிர இந்து பக்தியுள்ள குடும்பத்திலிருந்தவன்.

B.Sc Comp Sci முடித்து விட்டு, Computer Center-ல் Instructor ஆக 1 வருடம் வேலை செய்தேன். கணினி அறிவை தேவனுக்காக பயன்படுத்த ஆசை. குடும்ப சூழ்நிலையால் வேலை செய்து கொண்டே ஆண்டவருக்காக இயன்றதை செய்து வருகிறேன்.

தற்சமயம் திருப்பூரில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டராக உள்ளேன்.

இப்போதைக்கு இவ்வளவுதான்..

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

timothy_tni wrote:

மிக்க நன்றி சகோதரரே...

நான் தேனி மாவட்டத்தை சேர்ந்தவன். வயது 23.
தீவிர இந்து பக்தியுள்ள குடும்பத்திலிருந்தவன்.

B.Sc Comp Sci முடித்து விட்டு, Computer Center-ல் Instructor ஆக 1 வருடம் வேலை செய்தேன். கணினி அறிவை தேவனுக்காக பயன்படுத்த ஆசை. குடும்ப சூழ்நிலையால் வேலை செய்து கொண்டே ஆண்டவருக்காக இயன்றதை செய்து வருகிறேன்.

தற்சமயம் திருப்பூரில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டராக உள்ளேன்.

இப்போதைக்கு இவ்வளவுதான்..



தாங்களின் அறிமுகத்திற்கு மிக்க நன்றி சகோதரரே!
 
இந்த இளம் வயதில் ஆண்டவர் தங்களை தெரிந்துகொண்டிருக்கிறார்!  
அநேகருக்கு பயனுள்ள பாத்திரமாக அமைய வாழ்த்துகிறோம்!
 
ஆண்டவரின் நிச்சயமான அழைப்பு இல்லாமல் முழுநேர ஊழியத்தில் இறங்கவேண்டாம் என்பது எனது அனுபவ  ஆலோசனை.
 
தங்களுடைய சாட்சி பலருக்கு பயனுள்ளதாக அமையலாம்.  விரும்பினால் ஆண்டவரை   அறிந்த  விதத்தை இங்கு பதியலாமே!   

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

தங்கள் அன்புக்கு மிகவும் நன்றி சகோ. சுந்தர் அவர்களே...

//ஆண்டவரின் நிச்சயமான அழைப்பு இல்லாமல் முழுநேர ஊழியத்தில் இறங்கவேண்டாம் என்பது எனது அனுபவ ஆலோசனை.//

நன்றி.. என்னுடைய உறுதிப்பாடும் அதுவே.

//தங்களுடைய சாட்சி பலருக்கு பயனுள்ளதாக அமையலாம். விரும்பினால் ஆண்டவரை அறிந்த விதத்தை இங்கு பதியலாமே! //

என்னுடைய சிறிய சாட்சியை தங்கள் விருப்பப்படியே சீக்கிரம் பதிவு செய்ய முயற்சிக்கிறேன். நன்றி...

__________________


இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

என் சொந்த கதை:

அதிக இந்து வைராக்கியமுள்ள ஒரு குடும்பத்திலிருந்தவன். சிறுவயதிலேயே இறைபக்தி கொஞ்சம் அதிகம். (மொட்டை, தண்ணீர் குடம் சுமந்து குளிப்பாட்டி ...., வெள்ளி-செவ்வாய், ......, etc.,)

நான் (5ம் வகுப்பு)படித்த பள்ளியில் ஒரு சபையிலிருந்து வெள்ளிக் கிழமைகளில் மாலை நேரத்தில் பைபிள் கதைகள், பாடல்கள் சொல்லித் தந்தனர். எனக்கு அவை பிடித்திருக்கவே, தொடர்ந்து ஒரு ஆண்டு ஞாயிறு ஆராதனைகளிலும் சண்டேகிளாஸ்களிலும் பங்கேற்றேன்.

அப்பாவுக்கு இது பிடிக்காததால் ஃபிரண்டு வீட்டுக்குப் போறேன் என்று சொல்லிவிட்டு சபைக்குச் செல்வேன். இயேசப்பாவை எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. ஆனால் அப்போது அவர்மட்டும் தான் தெய்வம் எனத் தெரியாது. ஆனால், இருக்கும் தெய்வங்களில் அவர்தான் அன்பானவர் என்று நினைப்பேன். இறந்த பின்பு மேலே செல்லும் போது நாம் எந்த மதத்தவரோ அதற்கேற்றவாறு மூன்று குறிகளுள்ள மூன்று வாசலுக்குச் செல்வார்கள் என நம்பினேன். இந்துக் கோயில்களில் சாமி கும்பிடும்போது, 'நான் ஒரு கிறிஸ்தவன்' எனும் நினைப்போடு அந்த சாமிகளிடம் எங்க சாமிதான் அன்பான சாமி எனவே கிறிஸ்தவத்தை வளரவிடுங்கள் என பிரார்த்தனையோடு பேசுவேன்.

பின் அந்த சபையில் நான் உணர்ந்த தாழ்வு மனப்பான்மையால்(!!) அதற்குப் பின் அங்கு செல்லவில்லை.

பின்பு ஒருநாள் எங்கள் தெரு வழியாக அந்த போதகர் வந்த போது வீட்டிற்கு வந்தார்; வழக்கம் போல ஒரு ஸ்தோத்திரம் போட்டு விட்டு பாஸ்டர் எங்க வீட்டுக்கு வாங்க என்று கூறினேன்; அவரும் வந்தார்.வீட்டில் என்ன சொல்வார்களோ என்ற பயம் ஒரு புறம் இருந்தாலும் மனதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.நல்ல வேளை எங்க அம்மாவும் அக்காவும் மட்டும் இருந்தார்கள். வீட்டிலும் அப்போது மிகவும் கஷ்டமான சூழ்நிலை.பொதுவான நலம் விசாரிப்புக்குப் பின் ஜெபித்து விட்டு சென்றார்.

எங்கள் வீட்டில் வறுமை காரணமாக அண்ணன் 8ம் வகுப்போடு பள்ளியை நிறுத்தி வேலைக்குச் சென்றார். அந்த சூழ்நிலையில் என் தந்தை தோட்டத்தில் வேலை செய்யும் போது ஒரு விஷ வண்டு கடித்து உடல் முழுவதும் புண் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் வருமானத்தை மிஞ்சியது. என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கையில் எங்கள் ஒரு கன்வென்சன் கூட்டம் நடக்கிற செய்தி கேட்டு அங்கு சென்றோம். அங்கு ஜெபம் செய்து வாங்கிய தேங்காய் எண்ணையை தினமும் "இயேசுவின் இரத்தம் ஜெயம்" எனக் கூறி பூசினோம். தேவன் அற்புத சுகம் தந்தார்.

இயேசுகிறிஸ்துவை முழுமனதோடு ஏற்றுக்கொண்டோம். பின்பு நானும் அம்மாவும் (கன்வென்சன் கூட்டம் நடத்திய சபையில்) விசுவாசிகளானோம். அப்பாவோ இதுவும் நல்ல சாமிதான், ஆனால் நம்ம சாமிகளை விட்டுக் கொடுக்க முடியுமா என்றார். என் அண்ணனுக்கு RSS நண்பர்களின் நட்பால் கிறிஸ்தவமே ஆகாது.
முதலில் என்னை சர்ச்சுக்கே போகவிடமாட்டார் பின்பு நாளாக நாளாக விட்டுவிட்டார்.
கேம்பஸ் குருசேட் ஊழியர்கள் எங்களோடு இருந்த நாட்களில் அவர்களோடு சேர்ந்து இயேசு திரைப்படம் காட்ட கிராமங்களுக்கு சென்று ட்ராக்ஸ் கொடுப்பேன். ஒரு நாள் இதை என் அண்ணன் தெரிந்துகொண்டு அடித்தே விட்டார். இன்னொரு நாள் பைபிளைக் கிழித்து போட்டு விட்டார். அடிக்கடி கிண்டல் செய்வார்.

எனக்கோ பள்ளி, வீடு, சபை வெறெங்கும் ஆர்வம் இல்லை. எங்கள் போதகர் மற்றும் அவர் குடும்பத்தினர் மிகவும் அன்பானவர்கள். எனக்கு அவர்களை மிகவும் பிடிக்கும்; சபையில்தான் அதிக நேரம் இருப்பேன்.

கிட்டத்தட்ட எல்லா ஆராதனைகளிலும் பங்கெடுத்தேன். தேவனைப் பற்றி நிறைய கற்றுக் கொண்டேன்.
பின் குடும்பத்தில் தேவனின் அற்புதங்களும் அதிசயமான நடத்துதல்களும் பெருகின.

எனக்கு நண்பர்களே குறைவுதான், அதிலும் சில கெட்ட நண்பர்களும் இருந்தனர். சராசரி வாலிபர்களைப்போலவே விழுந்து விழுந்துதான் எழுந்தேன். அன்புள்ள தேவன் என்னைக் கைவிடாமல் மட்டாய் தண்டித்து மென்மேலும் அவரைக் கிட்டிச் சேர சொல்லிக் கொடுத்தார்.

2006,டிசம்பர்,31ல் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டேன்.
சபையில் சிறு சிறு வேலைகள் செய்தல், சண்டே கிளாஸ்,  VBS, பண்டிகைக் கால Program organizer, வீட்டுக் கூட்டங்களில் ஜெபித்தல் என சின்ன சின்ன காரியங்களில் ஈடுபடுத்திக் கொண்டேன்.
கொஞ்சம் கொஞ்சமாய் தேறி இப்போது, வாலிபர் குழுவை நடத்தி வருகிறேன்.

இந்த வருடம் என் அக்காவும் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்...

என் தந்தை இப்போது சபைக்கு வந்து செல்கிறார்.
என் அண்ணனின் (தனி) குடும்பத்திற்கு இன்றும் கிறிஸ்தவம் பிடிக்கவில்லை..
அப்: 16-31 -  நீதி 23-18 -  1 கொரி 15-57




-- Edited by timothy_tni on Saturday 17th of April 2010 06:17:27 PM

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

தங்கள் சுருக்கமான சாட்சி பலருக்கு பயனுள்ளதாக அமையும் என்று விசுவாசிக்கிறேன். 
 
"சின்னஞ  சிறுவயதில் என்னை குறித்துவிட்டார் தூர போயினும் கண்டுகொண்டார் 
தமது ஜீவனை எனக்கும் அளித்து ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்". 
 
என்ற அருமையான பாடலுக்கு ஏற்ப, ஆண்டவர் முன்குறித்த எவரையும் எவ்வளவு தூரபோயினும் விட்டுவிடுவதில்லை.
 
கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்துவை விசுவாசி அப்பொழுது  நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கபடுவீர்கள்
 
என்ற வசனம் சொல்வதுபோல் உங்கள் வீட்டார்\ எல்லோரையும் ஆண்டவர் விரைவில் தொடுவார்  என்று கர்த்தருக்குள் நம்புகிறேன்.
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard