இன்பம்-துன்பம், நன்மை-தீமை, கடவுள்-சாத்தான், பிறப்பு-இறப்பு, வாழ்வு-சாவு இவைகள் இருமைகள் எனப்படும். இந்த இருமைகளின் நடுவில் அகப்பட்டு சிக்கித் தவிப்பனே மனிதன்.
ஏன் இருமைகள் :
வெகு காலம் தேவனோடு ஒருமையை அனுபவித்த மனிதன் அதனால் திருப்தி அடையாமல் இருமையின் அனுபவத்தை பெற எண்ணி கடவுளை நம்பி துணிவாக ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியில் வந்தான். கடவுள், சாத்தான், இருமை (உலகம்) என இம்மூன்றில் கடவுளுக்கு பிறகு இருமையை பெற நினைத்தான். இதனால் துன்பத்தை (சாத்தானை) எதிர் கொள்ள வேண்டியிருப்பினும் அனுபவத்தை சம்பாதிக்க எண்ணினான். தேவனும் தன்னை அடையும் தகுதியை மனிதனுக்கு தானே தராமல் (இத்தனை காலம் இருந்தது போல் அல்லாமல்) அவனே சம்பாதிக்க வேண்டி அவன் முன்னால் ஒரு சவாலை வைத்தார். எத்தனையோ மரங்கள் இருந்த ஏதேன் தோட்டத்தில் ஒரே ஒரு மரத்தின் கனியை மாத்திரம் உண்ண வேண்டாம் என கட்டளையிட்டார். தேவன் இதை சொல்லாமல் இருந்திருன்தால் அப்படி ஒரு மரம் இருந்ததே தெரிந்திருக்காது. எத்தனையோ மரங்கள் இருந்த ஏதேனில் குறிப்பாக அந்த மரத்தின் கனியை உண்ணுவது என்பதற்கான சாத்தியகூறு மிக மிக குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம். குறித்த காலத்தில் சாத்தானையும் அனுப்பி ஆதாம் அந்த கனியை உட்கொள்ள வைத்து ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியில் அனுப்பினார்.
(தன்னுடைய விழுகையினால் கொடூர ரூபம் அடைந்த சாத்தான், அப்படியே ஆதாம், ஏவாளிடம் சென்றால் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் சர்ப்பத்தோடு உடன்படிக்கை செய்து சர்ப்பத்திற்குள்ளிருந்து ஏவாளோடு பேசினான். அவர்களை தன் வழிக்கு வரவைத்தவன் தேவனுடைய தண்டனையில் சிக்கினான். அவனே எதிர்பார்க்காத திருப்பமாக சர்ப்பத்திற்க்குள் சிக்கிக் கொண்டான். வயிற்றினால் நகர்ந்து மண்ணைத் திண்கிறவன் ஆனான். அவன் அந்தம் வரை வேறு ரூபம் எடுக்க முடியாமல், வேறு உணவை தின்ன முடியாமல் (வலு) சர்ப்பமாகவே இருக்கிறான்.)
மனிதன் சுய விருப்பத்தின்படியும், கடவுள் மற்றும் சாத்தானின் விருப்பத்தின்படியும் கடவுளை நம்பி துணிவாக ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியில் வந்தான்
இந்த உலகத்தில் இருமைகளை கடந்து தேவனுடைய திட்டப்படி தேவனைச் சேர்பவர்கள் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த ஆனந்தம் உண்டு. இந்த மகிமையானது ஆதாமின் முந்தைய மகிமைக்கு சமமானது அல்ல. அதைவிட பல மடங்கு அதிகமானது. ஏனெனில் இது மனிதன் தன் சுய அனுபவத்தால் சம்பாதித்தது.
இயேசுவின் கதையில் வரும் (லூக்கா 15: 10-32) ஆஸ்தியை அழித்த இளைய குமாரனே மனிதன். மூத்த குமாரன் என்பது தேவ தூதர்கள் மற்றும் நன்மை-தீமை அனுபவிக்க பகுத்தறிவு இல்லாத, கெட்டுப் போக வாய்ப்பில்லாத, விலங்குகள், மரங்கள் மற்றும் இயற்கையை குறிக்கும். ஆஸ்தியை அழித்து திரும்பி வந்த இளைய குமாரனின் நிமித்தமே கன்று (இயேசு) பலியாக்கப்பட்டது உயர்ந்த வஸ்திரமும், மோதிரமும், பாதரட்சையும் அளிக்கப்பட்டது மற்றும் கீதமும், நடனமும், மிகுந்த ஆனந்தமும் காணப்பட்டது.
மனித வாழ்வில் ஏதேன் தோட்டம் என்பது தாயின் கருவறையே. அந்த இன்பத்தை உலகில் உள்ள தான் இதுவரை பார்க்காத, கேட்காத புதியவைகளை அனுபவிப்பதன் மூலம் குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கிறது. ஆனால் அந்த இன்பமானது மனிதனின் ஆத்துமாவில் பதிந்து தீராத தாகமாக மாறுகிறது. இதுவே கடவுளை தேடும், அவர் மூலம் இன்பம் அடைய எண்ணும் விருப்பத்தின் அடிப்படை. (சிகரெட் பிடித்தல் என்பது தாய்ப் பாலை உறிஞ்சின இன்பத்தின் நினைவை மீண்டும் (அந்த உணர்வில்லாமல்) பெறுதலே)
மனிதன் எதையும் பொருட்படுத்தாமல் அனுபவத்தை பெற முயல்பவன். உதாரணமாக, இமய மலையில் ஏறி கொடி நாட்டும் முயற்ச்சியில் உயிர் இழ்ந்தோர் அனேகர். சாதனை, அறிவியல் பரிசோதனை என்ற பெயரில் உயிர் இழ்ந்தோர் அனேகர். நாட்டிற்காக, மானத்திற்க்காக, கடவுளுக்காக உயிர் இழ்ந்தோர் அனேகர் எனவே ஆதாம் ஏதேனை விட்டு வெளியில் வந்ததில் வியப்பொன்றுமில்லை.
சரி சகோதரரே உங்கள் கருத்துபடியே மனிதன் தன சுய விருப்பத்தால்
ஏதேனைவிட்டு வெளியில் வந்து இன்ப துன்பம் இரண்டையும் ஏற்க்க தயாரானான் என்றே எடுத்துகொண்டாலும், இந்த உலகில் மனிதன் தவிர பகுத்தறிவில்லாத அனேகமாயிரம் உயிரினங்கள் இருக்கின்றன அவைகள்எல்லாம் என்ன மீறுதல் செய்து தண்டனைக்குட்பட்டன என்பதை சற்று விளக்குங்கள்.
மாட்டுக்கு ஊசி போட்டு இரத்தம் வரும்வரைக்கும் பாலை கரக்கிறான் மனிதன்
கோழிகளை ஒரு உயிரினமகவே கருதாமல் கொன்று குவிக்கிறான்
நாயை கண்டால் கல்லெடுத்து அடித்து காலை ஓடிக்கிறான்
ஆடுகளை அப்படியே பிடித்து உயிரோடு கழுத்தை அறுக்கிறான்.
அவைகளும் வேதனையை உணர்கின்றனவே! ஒருவேளை அவைகள் "அம்மா" என்று அவைகள் கதறும் பாஷை நமக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் அவைகள் வலியால் துடிக்கின்றனவே!
தேவன் மனிதர்களுக்கு மட்டுமல்ல மாடுகளுக்கும் குருவிகளுக்கும் கூட கவலைப்படுகிறார் என்று வேதம் சொல்கிறது. இவ்வாறிருக்க ஒரு மானை ஒரு சிறுத்தை உயிரோடு வைத்து துடிக்க துடிக்க உரித்து தின்கிறது அதற்க்கு யார் காரணம்? அல்லது யாருடைய மீறுதல் காரணம்?
-- Edited by SUNDAR on Tuesday 2nd of March 2010 10:56:09 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)