7. அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.
8. இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.
9. துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.
10. கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
11. அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.
12. அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.
மேல குறிப்பிட்ட வசனத்தின்படி பார்க்கும் போது இயேசு கிறிஸ்து ஏன்
என்னை கைவிட்டீர் என்று பிதாவை நோக்கி கேட்பது போல் காணபடுகிறது.
சகோதரர் எட்வின் சுதாகர் அவர்களின் விளக்கத்துக்கு நன்றி.
இயேசுவின் இந்த கதறலில் இருந்து நான் அறிந்துகொண்ட காரியங்கள் என்னவெனில்:
1. "அசுத்தமும் பரிசுத்தமும் இரண்டு நேர் எதிர் துருவங்கள்" இரண்டும் ஒரே இடத்தில் இருக்கவே முடியாது! அதுபோல் தேவனும் பாவமும் ஒரே இடத்தில் இருக்கவே முடியாது. எனவே உலகத்தின் மொத்த பாவமும் தேவ ஆட்டுகுட்டியாகிய இயேசுவின் மீது சுமத்தபட்டபோது அதுவரை அவரோடு ஒன்றாக இருந்து நடத்திய தேவன் அவரைவிட்டு விலகியிருக்கவேண்டிய நிலை ஏற்ப்பட்டது.
2. பாவத்துக்காக பலியான மனுஷ குமாரனாகிய இயேசு மனுவர்க்கத்தின் மொத்த பாவங்களையும் அவர் ஒருவரே சுமக்கவேண்டிய நிலை இருந்ததால் அதை இயேசு ஒருவரே நிறைவேற்றும்படி பிதாவாகிய தேவன் அவரைவிட்டு விலகும் நிலை ஏற்ப்பட்டது.
3. பிதாவானவரை பற்றி வேதம் சொல்கையில் "ஒருவராய், சாவாமையுள்ளவ(ர்) (I தீமோ 6:16) என்று விவரிக்கிறது. எனவே மரணத்தை இயேசு ருசி பார்க்கையில் பிதாவாகிய தேவன் அவரைவிட்டு விலகும் நிலை ஏற்ப்பட்டது.
யோர்தானில் ஞானஸ்தானம் எடுத்த நாளில் இருந்து தொடர்ந்து இயேசுவோடு கூடவே ஒன்றாக இருந்து அவருக்கு செவிகொடுத்து போதித்து வழி நடத்திய பிதாவின் ஆவியானவர், மேலேயுள்ள காரியங்களினிமித்தம் அந்த கடைசி நேரத்தில் இயேசுவை விட்டு பிரிய நேர்ந்தது. சிலுவையில் தான் தொங்கும் அந்த கொடூர வேதனையைவிட, பிதா ஒருகணம் அவரைவிட்டு பிரிந்ததை தாங்கமுடியாதவராய் இயேசு அங்கு "என் தேவனே என்தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று கதறுகிறார்" என்றே நான் கருதுகிறேன்.
மேலதிக விளக்கம் தெரிந்தவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சகோ. சுந்தரின் விளக்கம் ஏற்கத்தக்கதுதான். இதோ எளிதாக புரிந்து கொள்ள சிறு கட்டுரை
இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரிக்கும்போது “என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்“ என்று கூறியதும், இயேசுக்கிறிஸ்து பிதாவைவிடத் தாழ்வானர் என்பதற்கான ஆதாரமாய் உள்ளது என்று யெகேவாவின் சாட்சிகள் கருதுகின்றனர். இயேசு கிறிஸ்து உண்மையிலேயே தேவனாய் இருந்திருந்தால் அவர் இவ்வாறு பிதாவை நோக்கி “தேவனே“ என்று அழைத்திருக்க மாட்டார் என்பதே இவர்களின் தர்க்கமாகும்.(40). எனினும், உண்மையில் இயேசுக்கிறிஸ்துவுக்கு சிலுவையில் என்ன நடந்து என்பதை நாம் அறிந்திருந்தால் மட்டுமே அவரது இக்கூற்றை சரியாக புரிந்து கொள்ள முடியும். அதேசமயம், “தேவனோடு எப்போதும் ஐக்கியமாயிருந்த இயேசு தேவனால் கைவிடப்பட்டதை புரிந்து கொள்ளாத வரையில், அவரது சிலுவை மரணத்தையும் நம்மால் சரியாக விளங்கிக் கொள்ள முடியாது. (41). இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரிக்கும்போதே எத்தகைய நிலையில் இருந்தார் என்பதை அடிப்படையாகக் கொண்டே அவரது இக்கூற்றை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
சிலுவையில் இயேசு நமக்காக பாவமானார் என்று வேதம் கூறுகிறது. (2 கொரி. 5:21). பரிசுத்தமான தேவன் பாவத்தை வெறுப்பவராகவும் (சங். 5:5, 11:5, சக. 8:17) அதைப் பார்க்க விரும்பாதவராகவும் இருக்கிறார். (ஆப. 1:13). பாவம் தேவனை மற்றவர்களிடமிருந்து பிரித்து விடுகிறது. (ஏசா. 59:2). இதனால் இயேசுக்கிறிஸ்து சிலுவையில் உலக மாந்தர் அனைவருடைய பாவங்களையும் சுமந்து தீர்த்து நமக்காகப் பாவமாகியபோது (2 கொரி. 5:21, யோவா. 1:29) அவர் தேவனால் கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்தார். அதுவரைகாலமும் அவருக்கும் தேவனுக்குமிடையில் இருந்த அந்நியோன்ய சம்பந்தமான உறவு அச்சந்தர்ப்பத்தில் இல்லாமல் போய்விட்டது. “பாவத்திற்கான தேவ தண்டனையின் கடுமையான பகுதி, தேவனிடமிருந்து முற்றிலுமாய் அப்புறப்படுத்தலாகும். இயேசுக்கிறிஸ்து மானிட பாவங்களுக்கான முழுமையான தண்டனையையும் சிலுவையில் அனுபவித்தமையால் அச்சந்தர்ப்பத்தில் தேவனோடிருந்த உறவு துண்டிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இருந்தார். (42)
பாவமற்ற இயேசுக்கிறிஸ்து சிலுவையில் பாவியைப் போல மரித்து அதன் கொடூரமான தனிமையை அனுபவித்தார். (43) உண்மையில், ” இயேசுக்கிறிஸ்துவுக்கும் தேவனுக்குமிடையில் அதுவரை காலமும் முறிவடையாமல் இருந்த உறவு சிலுவையில் முறிவடைந்தது. (44) இதனால் “சிலுவையில் இயேசுக்கிறிஸ்து தனிமையிலேயே இருந்தார் (45) இதனால் “சிலுவையில் மரிக்கும்போது “என் தேவனே என் தேவனெ ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று அதிக சத்தத்தோடு கத்தினார். தேவனால் கைவிடப்பட்ட நிலையில் இருந்த மாந்தரை தேவனோடு ஒப்வுரவாக்குவதற்காக. இயேசுக்கிறிஸ்து அம்மக்கள் இருந்த இடத்திற்கே அதாவது தேவனால் கைவிடப்பட்ட நிலைக்கே சென்று அவர்களை மீட்டுள்ளார். இதனாலேயே சிலுவையில் மரிக்கும்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Footnote & Reference
(39) இயேசுக்கிறிஸ்துவின் இவ்வார்த்தைகள் அவர் பேசிய அரமிக் மொழியிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. மத்தேயு 27.46 இல் ”ஏலி, ஏலி லாமா சபக்தானி” என்னும் வாக்கியம் எபிரேய மற்றும் அரமிக் மொழிச் சொற்கள் கலந்த ஒரு கூற்றாக உள்ளது. “ஏலி“ எனும் வார்த்தை எபிரேய மொழியில் தேவனை “என் தேவனே“ என அழைப்பதாகும். “லாமா சபக்தானி“ என்பது அரமிக்மொழி வார்த்தைகளாகும். ஆனால் இயேசுக்கிறிஸ்துவின் இக்கூற்று மாற்குவில் அரமிக் மொழியில் மட்டுமே உள்ளது. இதனால்தான் மாற்குவில் ஏலி என்பதற்குப் பதிலாக “எலோயி“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு அரமிக் மொழியிலேயே பேசியிருக்க வேண்டும் என்றும் மத்தேயுவே தேவன் எனும் வார்த்தையை எபிரேய மொழியில் குறிப்பிட்டிருக்க வேண்டும்“ என்றும் வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். (D.A. Hagner, Matthew : The World Biblical Commentary, p 844)
(40) Anonymous, Reasoning with the Scriptures, p 212
(41) J. Moltmann, The Crucified God: Cross of Christ as the Foundation of and Criticism of Christians Theology P 149
(42) P. Green, Studies in the Cross, p 101
(43) J. Marsh, The Fullness of Time p 100
(44) L. Morris, The Gospel According to Matthew, p. 722
(45) J.V.L. Casserley, Christian Community p 14
இவ்வாக்கமானது Dr. M.S. வசந்தகுமார் அவர்கள் எழுதிய யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும் வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி
-- Edited by colvin on Monday 23rd of April 2012 01:52:45 PM
இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரிக்கும்போது “என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்“ என்று கூறியதும், இயேசுக்கிறிஸ்து பிதாவைவிடத் தாழ்வானர் என்பதற்கான ஆதாரமாய் உள்ளது என்று யெகேவாவின் சாட்சிகள் கருதுகின்றனர்.
யகோவா சாட்சிகள் என்ன கருதுகிறார்களோ இல்லையோ, இயேசு கிறிஸ்த்து "என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்" என்பதை அவரது வாயாலேயே சொன்ன பிறகு அது குறித்து எந்த ஆராய்ச்சியும் அவசியம் இல்லை என்று நான் கருதுகிறேன்.
யோவான் 14:28ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
(41). இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரிக்கும்போதே எத்தகைய நிலையில் இருந்தார் என்பதை அடிப்படையாகக் கொண்டே அவரது இக்கூற்றை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
சிலுவையில் இயேசு நமக்காக பாவமானார் என்று வேதம் கூறுகிறது. (2 கொரி. 5:21). பரிசுத்தமான தேவன் பாவத்தை வெறுப்பவராகவும் (சங். 5:5, 11:5, சக. 8:17) அதைப் பார்க்க விரும்பாதவராகவும் இருக்கிறார். (ஆப. 1:13). பாவம் தேவனை மற்றவர்களிடமிருந்து பிரித்து விடுகிறது. (ஏசா. 59:2).இதனால் இயேசுக்கிறிஸ்து சிலுவையில் உலக மாந்தர் அனைவருடைய பாவங்களையும் சுமந்து தீர்த்து நமக்காகப் பாவமாகியபோது (2 கொரி. 5:21, யோவா. 1:29) அவர் தேவனால் கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்தார். அதுவரைகாலமும் அவருக்கும் தேவனுக்குமிடையில் இருந்த அந்நியோன்ய சம்பந்தமான உறவு அச்சந்தர்ப்பத்தில் இல்லாமல் போய்விட்டது. “பாவத்திற்கான தேவ தண்டனையின் கடுமையான பகுதி, தேவனிடமிருந்து முற்றிலுமாய் அப்புறப்படுத்தலாகும். இயேசுக்கிறிஸ்து மானிட பாவங்களுக்கான முழுமையான தண்டனையையும் சிலுவையில் அனுபவித்தமையால் அச்சந்தர்ப்பத்தில் தேவனோடிருந்த உறவு துண்டிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இருந்தார். (42)
பாவமற்ற இயேசுக்கிறிஸ்து சிலுவையில் பாவியைப் போல மரித்து அதன் கொடூரமான தனிமையை அனுபவித்தார். (43) உண்மையில், ” இயேசுக்கிறிஸ்துவுக்கும் தேவனுக்குமிடையில் அதுவரை காலமும் முறிவடையாமல் இருந்த உறவு சிலுவையில் முறிவடைந்தது. (44) இதனால் “சிலுவையில் இயேசுக்கிறிஸ்து தனிமையிலேயே இருந்தார் (45) இதனால் “சிலுவையில் மரிக்கும்போது “என் தேவனே என் தேவனெ ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று அதிக சத்தத்தோடு கத்தினார். தேவனால் கைவிடப்பட்ட நிலையில் இருந்த மாந்தரை தேவனோடு ஒப்வுரவாக்குவதற்காக. இயேசுக்கிறிஸ்து அம்மக்கள் இருந்த இடத்திற்கே அதாவது தேவனால் கைவிடப்பட்ட நிலைக்கே சென்று அவர்களை மீட்டுள்ளார். இதனாலேயே சிலுவையில் மரிக்கும்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சகோதரர் சுந்தர் சொல்வது போல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அந்த வார்த்தை சொல்லவில்லை என்றால் அவர் மாம்சத்தில் வந்தார் என்று யாரும் அறிக்கை இட்டுயிருக்க மாட்டார்கள், ஏனென்றால் சாத்தான் மக்களை இப்படி தூண்டிவிட்டிருப்பான் " அவர் கடவுள் அவருக்கு எப்படி வலிக்கும் என்று " அவர் மாம்சத்தில் வெளிப்பட்டதினாலும் பிதா ஒருகணம் அவரைவிட்டு பிரிந்ததாலும் மரணவேதனை தாங்கமுடியாமலும் இப்படி சொல்லியுருக்கலாம் என்ட்று நான் நினைக்கிறென் ( இதில் தவரு ஏதாவது இருந்தால் கண்டிக்கவும் திருத்திக்கொள்கிறேன்)
மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.(II யோவா 1:7 )
தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.(I யோவா 4:2)