இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவன் விரும்பும் தேவதாசர்கள் எங்கே?


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
தேவன் விரும்பும் தேவதாசர்கள் எங்கே?
Permalink  
 


நம்முடைய முர்பிதாக்களில்  ஒருசிலர்  கர்த்தரால்

பல்வேறு காலகட்டங்களில் பலவிதமான  சாட்சிகள் பெற்று
இருக்கிறார்கள்
என்று

நம்முடைய வேதத்தில் காணமுடிகிறது.
 
அவற்றில் ஒருசிலரை நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
 
ஆபிரகாம் : விசுவாசத்தின் தகப்பன் 

நோவா : நீதிமான் 

மோசே : உண்மையுள்ளவன் 

தாவிது : இருதயத்துக்கு ஏற்றவன் 

யோபு : கர்த்தரால் சாட்சி பெற்றவன்

தானியேல் : பிரியமானவன்

பவுல் : நான் தெரிந்து கொண்ட பாத்திரம்

யோவான் : இயேசு கிறிஸ்துவுக்கு அன்பாய் இருந்தவன் 
 
 ஏசாயா எரேமியா சாமுவேல் இன்னும் பல அனேக  தீர்க்கதரிசிகள்  
 

என்னுடைய வாஞ்சை என்னவெனில் ஏன்  இன்றைய காலகட்டங்களில் 

இப்படிப்பட்ட சாட்சிகளையும் தேவனுடைய தாசர்களையோ   பார்க்கவோ

அல்லது

கேள்விபடவோ முடிவதில்லை.
 
இதற்கு காரணம் இன்றைய சுழ்நிலைய அல்லது  நாகரிகம் என்னும்

பெயரில்

கலந்து இருக்கும் பரிசுத்த் குலைச்சல்களா ..!
 
அல்லது மனிதனுடைய இயலாமைய..? சத்ருவின்

வல்லமையா ..?  அல்லது

தந்திரமா...?


-- Edited by இறைநேசன் on Thursday 4th of March 2010 03:46:56 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
RE: காரணம் என்ன ...?
Permalink  
 


1. இது கிருபையின் காலம், ஆகையால் பாவத்திற்கு( மீறுதல் / கீழ்படியாமை) பகிரங்கமான உடனடி தண்டனைகள் கிடைப்பதில்லை.
2. இது கடைசி காலம், பிசாசானவன் அதிக முனைப்போடு வேலை செய்கிறான். (நாம்....?)
3. இது ஜனத்தொகை மிகுந்த காலம், மக்களோடு ஒத்து போக அதிக சூழ்நிலைகள் உள்ளன.
4. கள்ள உபதேசங்கள் மலிந்த காலம், மிக சிலரே விசுவாசத்தை காத்துக் கொள்ள முடிகிறது. (வேதமும் அப்படித்தான் சொல்கிறது)...
5. நம்முடைய கலாசாரம் கிரேக்க கலாச்சாரம், எபிரெய கலாச்சாரம் அல்ல.

எபிரெய கலாச்சாரம்: எங்கும் ஒரே மாதிரி வாழ்வது... சபையிலும் சரி, வேலை ஸ்தலத்திலும் சரி... Dedicated Life
கிரேக்க கலாச்சாரம்: சூழ்நிலை சார்ந்து வாழ்வது, வீட்டில் ஒரு மாதிரி, சபையில் ஒரு மாதிரி, வேலை ஸ்தலத்தில் ஒரு மாதிரி...



ஆயினும் உண்மை என்னவெனில், இப்படிப்பட்ட தாசர்களை நீங்களும் நானும் வேண்டுமானால் அறியாமல் இருக்கலாம்; ஆனால் அப்படிப்பட்டவர்கள் இன்றும் உண்டு....

18.ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார். 1 ராஜா 18-18


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

ஸ்டீபன் எழுதியது
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
//////......இப்படிப்பட்ட சாட்சிகளையும் தேவனுடைய தாசர்களையோ   பார்க்கவோ

அல்லது

கேள்விபடவோ முடிவதில்லை.
 
இதற்கு காரணம் இன்றைய சுழ்நிலைய அல்லது  நாகரிகம் என்னும்

பெயரில்

கலந்து இருக்கும் பரிசுத்த் குலைச்சல்களா ..!
 
அல்லது மனிதனுடைய இயலாமைய..? சத்ருவின்

வல்லமையா ..?  அல்லது

தந்திரமா...? /////////////.............................
 
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
 


சகோதர்களே
 


(1 )  தேவன் நோவாவிடம் பேசினார் -  அதனால் அவன் பேழையை கட்டினான்
நோவா சொன்ன வார்த்தையை கேட்டு அவனுடன் பேழையை கட்டிய அவன் மனைவி அவன் மகன் அவர்களுடைய மருமகள் இவர்கள் விசுவாசம் என்ன குறைந்ததா  - ?
 


என்னை கேட்டால் நோவாவைவிட விசுவாசத்தில் பெரியவர்கள் அவர்கள்தான் என்று சொல்வேன் 
ஒரு மனிதர்களும் நம்பாத   போது வயதாகிய நோவாவின் சொல்லை கேட்டு விசுவாசித்த அவர்கள் விசுவாசம் சாதாரணமானதா..............
 



என்னுடைய கருத்து என்னவெனில்
தானியேலை    போல இன்னும் அனேக  தானியேல் இருக்கிறார்கள்
தாவீதை போல இன்னும் அனேக  தாவிது இருக்கிறார்கள் .......
 
 


இன்னும் தொடரும் ..............................


__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:


 (1 )  தேவன் நோவாவிடம் பேசினார் -  அதனால் அவன் பேழையை கட்டினான்

நோவா சொன்ன வார்த்தையை கேட்டு அவனுடன் பேழையை கட்டிய அவன் மனைவி அவன் மகன் அவர்களுடைய மருமகள் இவர்கள் விசுவாசம் என்ன குறைந்ததா  - ?
 
என்னை கேட்டால் நோவாவைவிட விசுவாசத்தில் பெரியவர்கள் அவர்கள்தான் என்று சொல்வேன் 
ஒரு மனிதர்களும் நம்பாத   போது வயதாகிய நோவாவின் சொல்லை கேட்டு விசுவாசித்த அவர்கள் விசுவாசம் சாதாரணமானதா..............
   
 

 
சகோதரர் எட்வின் அவர்களே  நோவாவின் குடும்பம் முழுவதும் ஜலப்ரளயத்திலிருந்து பாதுகாக்கபட்டாலும், 
வேதம் நோவா ஒருவனை மட்டுமே நீதிமான் என்றும் விசுவாசவீரன்
என்றும் சொல்கிறது   
 
ஆதியாகமம் 7:1 கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார்  அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை  எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.
 
எபிரெயர் 11:7
விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி,  தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்  
அவனுடைய விசுவாசம் மற்றும் நீதியிநிமித்தமே அவனது மொத்த குடும்பமும் இரட்சிக்கபட்டது என்றே நான் கருதுகிறேன்.
 
யோபுவின் மனைவியைபோல நோவாவின் மனைவி மற்றும் மக்கள்  நோவாவுக்கு மனமடிவை ஏற்ப்படுத்தவில்லை என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம்.  மற்றபடி அவர்களும் விசுவாசத்தில் சிறந்தவர்கள் என்று சொல்ல எந்த ஆதாரமும் இமல்லை என்றே சொல்ல வேண்டும்.
 
இதை நான் எழுத காரணம் எனது அனுபவம்தான். 
 
ஒருவருக்குள்ள  வாக்குத்தத்தத்தை அல்லது ஒருவர்மேலுள்ள தேவனின் திட்டத்தை நிறைவேறவிடாமல் தடுப்பதற்கு சாத்தான் தெரிந்துகொள்ளும் நபர் அவர்களுக்கு மிக அருகில் உள்ளவர்களையே. (தகப்பன் தாய் சகோதர சகோதரிகள் மனைவி பிள்ளைகள் போன்றவர்களே ) 
 
இதை  அறிந்த இயேசு,     
 
மத்தேயு 10:36 ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.  
என்று மிக சரியாக சொல்லி எச்சரித்து  சென்றுள்ளார்.
 
ஆதியில் சர்ப்பம்  எப்படி ஏவாளை வஞ்சித்து,  அவள் மூலம்   ஆதாமை   வஞ்சிதானோ அதே வழிமுறைகளைத்தான் அவன்  இன்றும் பின்பற்றிவருகிறான். அவனின் தந்திரங்கள் நமக்கு தெரியாதா என்ன?
 
லோத்துவின் வாழ்வை சற்று திரும்பி பாருங்கள்:
 
லோத்து அழிவிலிருந்து தப்பிக்க  சொதோமைவிட்டு ஓடிபோகாமல் தரித்து நின்றபோது 
 
16 கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.  
17. அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நிற்காதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.
  
இவ்வளவு தெளிவான வார்த்தைகளை தேவனிடமிருந்து பெற்ற பிறகு கூட,  அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அந்த வார்த்தையின் மேல் பயபக்தி இல்லாமல்  லோத்துவின் மனைவி திரும்பிபார்க்கிறாள்!
 
26. அவன் (லோத்துவின்)  மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண்
ஆனாள்.
 
இங்குதான் சாத்தானின் தந்திரம்செயல்பட்டதை  புரிய முடியும். இந்த சூழ்நிலையை சற்று மனக்கண்முன் கொண்டுவருவோம்.
 
ஒருவேளை லோத்து உப்புதூணான  தன் மனைவியை பார்க்க பின்னிட்டு பார்த்திருந்தால்!   அவனும் அங்கேயே உப்புதூண் ஆகவேண்டியதுதான்.  ஆனால் அவன் தேவனின் வார்த்தைகளை முன்வைத்து மற்ற எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளி ஓடியதால் தப்பித்தான்.
 
இன்றும் அதே நிலைதான் அனேக விசுவாசி மற்றும் ஊழியர்களுக்கு   ஏற்ப்படுகிறது. ஆண்டவரின் தெளிவான வார்த்தைகள் தங்களுக்கு கிடைத்தும், மனைவி குழந்தைகள்,  தாய் தகப்பன் என்று யாராவது ஒருசிலர் மூலம் சாத்தான் செய்யும்   கிரியையை மேற்கொள்ள முடியாமல்  கவிழ்த்து விடுகின்றனர். எனவே அழைப்பை எற்று முன்னோக்கி  வேகமாக ஓடும் நாம் முடிந்த அளவு
நம்மோடு உள்ளவர்களையும் கொண்டுசெல்ல முயற்ச்சிக்க வேண்டும்.  அவர்களும் சேர்ந்து வந்தால்  நோவாவைபோல தன்  குடும்பத்தையே  ஆதாயப்படுத்த  முடியும்!  இல்லை சிலர் லோத்துவின் மனைவியைபோல இடும்பு  பிடித்தால்  லோத்துவைபோல  தன்னோடு வருபவர்களோடு மட்டுமாவது   ஆதாயப்படுத்த  முயலவேண்டும் என்றே நான் கருதுகிறேன்.
 
மோசே மிகபெரிய தேவமனிதன் அவன்  செங்கடலை பிளந்தபோது அனைத்து ஸ்ரவேலருமே அக்கரைபட்டனர் அவர்கள் எல்லோரும் என்ன பெரிய விசுவாசவீரரா? இல்லையே!
 
இதன்படி பார்த்தால் விசுவாசத்தில் சிறந்த/கீழ்படிதலுள்ள  ஒரே ஒருவனுக்காக 
தேவன் பலரை  கூடகொடுக்க ஆயத்தமாயிருக்கிறார் என்பதைதான் அறியமுடியும்.  
 
அதன் அடிப்படையிலேயே நோவாவின் விசுவாசத்திற்கு  ஈடாக  நோவாவின் குடும்பத்தையே  தேவன் மீட்டார் என்றே நான் கருதுகிறேன்.  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

////// 
        மோசே மிகபெரிய தேவமனிதன் அவன்  செங்கடலை பிளந்தபோது அனைத்து ஸ்ரவேலருமே                அக்கரைபட்டனர் அவர்கள் எல்லோரும் என்ன பெரிய விசுவாசவீரரா? இல்லையே! /////////
 


சுந்தர் அவர்களே
இஸ்ரவேல் மக்கள் முதன் முதலில் அற்புதத்தை பார்ப்பது போல் சொல்கிறீர்கள்
 
இவகளை நம்பவைக்க தேவன் மோசேயிடம்  கோலை  போட்டு பாம்பாக்கி எததனையோ அற்புதத்தை  செய்தார் அப்படி இருந்தும் அவர்கள் இவ்வளவு செய்த கர்த்தரை
அதிகமாய் விசுவாசிக்கவே இல்லை.......................
 
 
யாத்திராகமம்


11. அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன?



12. நாங்கள் எகிப்திலே இருக்கும் போது, நாங்கள் எகிப்தியருக்கு வேலைசெய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்றார்கள்.
 
 
ஒன்றே ஒன்று சொல்கிறேன்


 
தோமாவே கண்டு விசுவசிக்கிரவனை பார்க்கிலும் காணாமல் விசுவாசிக்கிறவன் பாக்கியவான்
 

ஆம் சகோதரனே தேவனுடிய குரலை கேட்டு அவரை பார்த்து நமக்குள் இருக்கிற விசுவாசத்தை விட
 

குரலை  கேளாமல் பார்க்காமல் அவருக்கு உண்மையோடு இருக்கிற அவர்களுடைய விசிவாசம் மிக பெரியது
 

மாம்சத்தில் வந்த இயேசுவை தேவனுடைய குமாரன் என்று அநேகர்

நம்பவில்லை

ஆனால் நுற்றுக்கு அதிபதியானவன் தன் வேலை காரனுக்காக யேசுவிடம் வரும்

போது நான் வருகிறேன் 

என்று  சொல்லியும் ஆண்டவரே நீர் என் விட்டுக்குள் வர நான் பதிரவான் அல்ல

நீர் ஒரு வார்த்தை மார்த்திரம் சொன்னால் போதும் என்றான்  இயேசு அவனை

பார்த்து இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படி பட்ட விசுவாசத்தை

பார்க்கவில்லை என்றார்.........ஆராய்ந்து பார்த்தல் நுற்றுக்கு  அதிபதயின்
விசுவாசம் என்ன குறைந்ததா  
 




மரியாள் என்ன விசுவாசத்தில் குறைந்தவளா 

ஆப்ரகாமின் மனைவி உனக்கு குழந்தை பிறக்கும் என்று சொல்லியும் தன் உள்ளத்தி நகைத்தாள் 


ஆனால்  மரியாள் இதுவரை நடை பெறாத ஒரு காட்சியை சொல்லும் போது இது
எப்படி ஆகும் என்று சொல்லி அந்த வார்த்தையை நம்மினால் சொல்லுங்கள்

இவள் என்ன விசுவாசத்தில் குறைந்தவளா 

மரியாள் விசுவாசத்தில் என்ன குறைந்தவளா.........
 
 

எல்லாவற்றிற்கும் தேவனே காரணம் விசுவாசத்தை கொடுப்பவரும் அவர்தான்
 
 

மாம்சத்தில் மனிதனாக வந்த இயேசு கிறிஸ்துவை தவிர வேறொருவரும் நல்லவர்கள் அல்ல
 

மனிதனை நல்லவனாக மாற்றுகிறது கர்த்தரே
 


உதாரணம்:
 
சபையை துன்ப படுத்திய பவுலை சபையை எழுப்ப வைத்தார்
 
 
மோசே போல் சாந்த குணம் உள்ளவன் எவரும் இல்லை
மோசே எதற்காக ஓடி வந்தான் கொலை  செய்ததினால் தானே
பின் எப்படி அவன் சாந்த குணம் உள்ளவன்
 சாந்த குணம் உள்ளவன் எப்படி கொலை  செய்வான்............அவனை அப்படி சாந்த குணம் உள்ளவனாய்  மாற்றியது கர்த்தரே
 


வேதத்தில் பார்த்தல் தேவன் மோசையிடம் என் ஜனங்கள் இதை செய்ய சொல்
இப்படி அவர்களை நடக்க சொல் என் ஜனங்கள் என் ஜனங்கள்   என்று கூறுவார்
 


அனால் அவர்கள் தவறு செய்யும் போது மோசே உன் ஜனங்கள்  ஏன் இப்படி செய்கிறார்கள் என்று  உன் ஜனம் உன் ஜனம் என்று சொல்வார்  
 

ஏன் அப்படி என்றால் ஒரு குழந்தை தவறு செய்யும் போது ஒரே நேரத்தில்  தாயும் தகப்பனும் தன் பிள்ளையை
அடிக்க மாட்டார்கள் தாய் அடிக்கும் போது தகப்பன் தடுப்பார் தகப்பன் அடிக்கும் போது தாய் தடுப்பால்
 


அப்படி மட்ட இருதயத்தை கர்த்தர் மோசேக்கு வைத்தார்
தேவன் கோவ படும் பொழுது மோசே ஆண்டவரே நீர் வாக்கு தத்தும் பண்நேரே  வேண்டாம் ஆண்டவரே
என்று சொல்வான் தேவனை பார்க்கிலும் மோசே இறக்கம் முள்ளவன் அல்ல அப்படி பட்ட இருதயத்தை கொடுப்பவர் கர்த்தரே
 

ஆப்ரகாம் ஆனாலும் சரி
நோவா வானாலும்    சரி
மோசே அனாலும் சரி
தாவிது அனாலும் சரி  



எபேசியர்


2 அதிகாரம்

 
8. கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

9. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;

இன்னும் தித்து தீமொதயு  பர்னபா
இவர்கள் எப்படி இருந்தார்களே
யாருக்கு தெரியும்
இப்பொழுது கூட இந்த உலகத்தில் விசுவாசத்தில் எப்படி இருக்கிறார்களே - >?
 
 
நமக்கு தெரிந்தது கொஞ்சம்
தெரிய வேண்டியது அதிகமாய் இருக்கிறது 
 
ஏன் இதை சொல்கிறேன் என்றால்
 
sathya wrote
 
-------/////////என்னுடைய வாஞ்சை என்னவெனில் ஏன்  இன்றைய காலகட்டங்களில் 

இப்படிப்பட்ட சாட்சிகளையும் தேவனுடைய தாசர்களையோ   பார்க்கவோ

அல்லது

கேள்விபடவோ முடிவதில்லை.//////////////////////////////////
 
 
timothi wrote
 
///ஆயினும் உண்மை என்னவெனில், இப்படிப்பட்ட தாசர்களை நீங்களும் நானும் வேண்டுமானால் அறியாமல் இருக்கலாம்; ஆனால் அப்படிப்பட்டவர்கள் இன்றும் உண்டு....

18.ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார். 1 ராஜா 18-௧௮//////////
மிக மிக அருமையான வசனத்தை திமோதி அவர்கள் வைத்து உள்ளார்கள்
 


உண்மையாகவே நாம் பார்ப்பது தான் நடக்கிறது என்றால் அதற்கு ஒன்றும் இல்லை
 


நான் மேலே குறிப்பிட்டு உள்ளது போல்
 


என்னுடைய கருத்து என்னவெனில்
தானியேலை    போல இன்னும் அனேக  தானியேல் இருக்கிறார்கள்
தாவீதை போல இன்னும் அனேக  தாவிது இருக்கிறார்கள் .......
 என்பதே


__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
RE: தேவன் விரும்பும் தேவதாசர்கள் எங்கே?
Permalink  
 


விவாத கருப்பொருளுக்கு  தகுந்தாற்போல் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது 


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

நாம் இத்திரியில் எந்த கருப்பொருள் பற்றி விவாதிக்கிறோம் என்று
சரியாக தெரியவில்லை ஆகினும் தொடர்கிறேன்.  
 
BRO EDVIN WROTE:
/////(1 )  தேவன் நோவாவிடம் பேசினார் -  அதனால் அவன் பேழையை
கட்டினான்
நோவா சொன்ன வார்த்தையை கேட்டு அவனுடன் பேழையை
கட்டிய அவன் மனைவி அவன் மகன் அவர்களுடைய மருமகள் இவர்கள் விசுவாசம் என்ன குறைந்ததா  - ?
என்னை கேட்டால் நோவாவைவிட விசுவாசத்தில் பெரியவர்கள் அவர்கள்தான் என்று சொல்வேன்  ஒரு மனிதர்களும் நம்பாத   போது வயதாகிய நோவாவின் சொல்லை கேட்டு விசுவாசித்த அவர்கள் விசுவாசம் சாதாரணமானதா.////
 
சகோதரர்  எட்வின் அவர்களே தாங்களின் இந்த கருத்துக்குதான் நான் 
நோவாவின் நீதியிநிமித்தமே அவன் குடும்பம்  பாதுகாக்க பட்டதேயன்றி
அவன் குடும்பத்தாரின் விசுவாவசம் பற்றி  வேதம் எதுவும்
சொல்லவில்லை என்று  பதிலிட்டிருந்தேன். ஒருவரின் விசுவாசத்தின்
நிலைமை குறிப்பிடாத நிலையில் அவர்கள் விசுவாசம் பெரியது என்று கருதுவதில் பொருளில்லை .  
 
மற்றபடி யாருடைய விசுவாசத்தையும் மட்டுப்படுத்துவது எனது
நோக்கமல்ல. இன்றைய உலகில் நமக்கு தெரியாமல் எத்தனையோ
மிகப்பெரிய விசுவாசவீரர்கள் தேவமனிதர்கள் இருக்கலாம் இருப்பார்கள்! 
நமக்கு தெரியவில்லை என்பதற்காக அப்படி யாரும் இல்லை என்ற
முடிவுக்கு நாம்  வரமுடியாது.
 
BRO. EDVIN WROTE 
/////எல்லாவற்றிற்கும் தேவனே காரணம் விசுவாசத்தை கொடுப்பவரும்
அவர்தான் 
மாம்சத்தில் மனிதனாக வந்த இயேசு கிறிஸ்துவை தவிர வேறொருவரும் நல்லவர்கள் அல்ல மனிதனை நல்லவனாக மாற்றுகிறது கர்த்தரே///
 
ஒரு மனிதனுக்குள் விசுவாசத்தை தொடங்குகிறவரும் முடிக்கிறவரும்
மட்டுமல்ல எல்லாவற்றயும் செய்பவர்  கர்த்தர்தான். ஆகினும்   அவர்  ஏன்  ஒருசிலரை  மட்டும் தெரிந்துகொள்கிறார் என்பதையும் நாம் சற்று  ஆராயவேண்டும்.
 
சகரியா 4:6 பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
 
என்ற வார்த்தைகள்படி அவரது ஆவியே எல்லாவற்றையும் நடப்பிக்கும்
என்பது உண்மை ஆகினும் அவரது நடத்துதலுக்கு கீழ்படியும் மனப்பக்குவமுள்ளவர்கள்  மூலமே  தேவன்  திட்டத்தை  நிறைவேற்ற 
முடியும்.  
 
உதாரணமாக ஒரு நாயை தேர்ந்தெடுத்து வேட்டையாட போகிறோம் அது நமது சத்தத்க்கு கீழ்படிந்து  நமது பின்னால் வந்தால் மட்டுமே நாம்
நினைத்த காரியத்தை சாதிக்க முடியும்.  அது ஒருபக்கம் இழுக்க நாம்
ஒரு பக்கம் இழுத்தல் அங்கு வேலை நடக்காது.
 
தேவன்  ஒருவனிடம்  இந்த பைபிளை தூக்கிக்கொண்டு இந்த ரோடுவழியே வேகமாக  ஓடு என்று சொல்லி, பேசுவது அவர்தான் என்று அத்தாட்சி
கொடுத்தால், உடனே நாம் ஏன் எதற்கு என்று கேட்காமல் ஓட வேண்டும்.  
நமது மூளை அறிவுக்கு அதன் காரணம் எட்டாததால் அதை பலமுறை 
யோசித்து, ஏன் ஓட வேண்டும்?  ஓடினால்  எல்லோரும் என்ன நினைப்பர்கள்? ஓடுவதற்கு பதில் நடந்து செல்லலாமே?  இப்படி ஓட சொல்வதற்கு  
வேத ஆதாரம் இருக்கிறதா?   என்று நமது அறிவுள்ள மூளையை வைத்து ஆராயந்துகோண்டிருந்தால் அங்கு தேவன் நினைத்தது நடக்காது.     
 
அதுபோல் ஆடுகளாகிய நாம் ஆண்டவருக்கு கீழ்படிந்து அவர் பின்னே
செல்லும் மனபக்குவம் இருந்தால் மட்டுமே அவர்களைவைத்து
ஆண்டவரால் காரியங்களை  சாதிக்க முடியும். கீழ்படிய விரும்பாதவனை தள்ளிவிட்டு வேறொருவனை தேர்ந்தெடுத்து தேவன் காரியத்தை
முடித்துவிடுவார். எப்படியேனும் தேவன் தனது திட்டத்தை முடித்துவிடுவார் ஆனால் சவுலைபோல தள்ளப்பட்டு மடிந்து  போவதும் தாவீதைப்போல அங்கீகரிக்கபட்டு நிலை நிற்பதும் நமது கீழ்படிதலின்  அடிப்படையிலேயே இருக்கிறது.      
 
மோசேயை தேவன் தெரிந்து கொண்டு பார்வோனிடத்தில் அனுப்ப
சித்தமானபோது மோசே அதற்க்கு ஒத்துகொள்ள மறுக்கிறான்
 
யாத்திராகமம் 4:13 அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் அனுப்பச்
சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும் என்றான்
.
 
ஆகினும் தேவன் அவனை அனுப்புவதிலேயே குறியாக இருந்தாறே அன்றி  
உடனே இன்னொருவனை தேடி போகவில்லை. தான் திக்குவாய்காரன் என்று சொல்லி மோசே மறுத்தபோதும் அவனுக்கு பதில் பேசுவதற்கு மட்டும்தான் ஆரோனை தேவன்  தெரிந்து கோண்டாரேயன்றி ஆரோனிடம் கோலைகொடுத்து  அற்ப்புதம் செய்ய தேவன் அனுமதிக்கவில்லை. 
 
இதற்க்கு முக்கிய காரணங்கள் உண்டு!  ஒரு மனிதனை தேவன் 
தேர்ந்தெடுக்கும் முன் இந்த உலகில் நடக்கும் அனேக அன்றாட காரியங்களால் சோதிக்கப்படுகிறான். சோதனைகளை மேற்கொள்ளுவதில் சூழ்நிலைகளை சமாளிப்பதில்  அவனின் மனநிலை மற்றும்  நினைவுகள்   என்னவென்பது ஒவ்வொரு சிறு செயலிலும்  தேவனால் ஆராய்ந்து 
அறியப்படுகிறது.
 
I நாளாகமம் 28:9  ; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார் 
 
இவ்வாறு அனேக சோதனைகளுக்கு பின்னரே தேவன் ஒரு மனிதனை தெரிந்துகொண்டு அவனுக்கு வரங்கள் வல்லமைகளை தருகிறார் அப்படி ஆண்டவரின் இருதயத்திர்க்கேற்ற  நல்ல நிலையில் இருந்து வரத்தை பெற்றவர்கள்கூட பின்னாளில்  விழுந்து  விடுகின்றனர்.
 
எனவே தேவன் தனது சித்தத்தை எப்படியும் நிறைவேற்றுவார் தனக்கு பிரியமானவர்களை எப்படியும் தெரிந்துகொள்வார் என்று கருதி நாம் வாளாதிருக்க  முடியாது!  ஒரு தேவமனிதனை தெரிந்துகொள்வதில்
தேவனின் பங்கு எவ்வளவோ அவ்வளவு சுயசித்தம் செய்யும்படியுள்ள 
மனிதனின் பங்கும் இருக்கிறது என்றே நான் கருதுகிறேன். 
 
யூதாஸ் தேவனால் அழைப்பை பெற்றவன்தான் ஆகினும் அவன்
சுய சித்தமாகிய   பணஆசை   அவனது அழைப்பை கெடுத்துபோட்டது 
இங்கு தேவன் பட்சபாதம் உள்ளவர் அல்ல. அவர் எல்லா செயலுமே  நீதியானது!     
 
விருந்துக்கு அழைக்கப்பட்ட  அழைப்பை அசட்டை செய்தவர்களை  
ஆகாதவனாக தள்ளி அதற்குபதில்  வேறு மனிதர்களை தேர்ந்தெடுப்பது
என்பது ஒருபுறம் இருந்தாலும்,  அழைப்பை நிராகரித்த மோசே/ யோனா போன்றவர்களை விடாமல் பிடித்து செயல்பட வைத்த செயலும் வேதத்தில் உண்டு!  அவரவர் இருதய நினைவுகளின் ஓட்டங்களை
வைத்தே இக்காரியங்கள் தீர்மானிக்கப்படுகின்றன என்றே நான் கருதுகிறேன்!
 
எனவே தேவன்  எப்பொழுது எப்படி செயல்படுவார் என்று நமக்கு 
தெரியாததால் தாழ்மை கலந்த  பயத்தோடு அவருக்கு கீழ்படிதலே 
சிறந்தது!
 
 
(தேவன் எரேமியா போன்றவர்களை  தாயின் கர்ப்பத்திலிருந்தே தேர்ந்தெடுத்திருக்கிறார் அது  வேறு  தலைப்பு  அதற்கும்  நீதியான 
காரணங்கள் தேவனிடம் உண்டு)   
    


-- Edited by SUNDAR on Friday 5th of March 2010 04:54:09 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard