சமீபத்தில் ஒரு ஜெபஊழிய பெண்மணி ஒரு கிறிஸ்த்தவ சகோதரியின் அழைப்பின் பெயரில் அவர்கள் வீட்டில் ஒரு சிறிய ஜெபம் செய்வதற்காக சென்றிருந்தார்.
அங்கு அமர்ந்து பாடல்கள் பாடிக்கொண்டு இருக்கும்போது ஆண்டவர் அந்த ஜெப ஊழியரிடம் அந்த வீட்டு தலைவருக்காக மன்றாடி ஜெபிக்கும்படி திரும்ப திரும்ப வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் அந்த வீட்டு தலைவரோ மிகவும் நல்ல மனிதராக நன்றாக ராகம் போட்டு ஆண்டவரின் பாடல்களை இனிமையாக மெய்மறந்து பாடிக்கொண்டு இருந்திருக்கிறார். இவ்வளவு நல்ல மனிதனுக்கு நாம் என்ன ஜெபிக்க என்று நினைத்து ஒரு சாதாரண ஜெபம் மட்டும் செய்துவிட்டு முடிக்கப்பட்டது.
மறுநாள் காய்கறி வாங்க கடைக்கு செல்லும்போது தற்செயலாக அந்த கிறிஸ்த்தவ சகோதரியை சந்திக்க நேர அவர்களிடம் "நேற்று உங்கள் வீட்டுக்கு ஜெபத்திர்க்காக வந்திருந்தபோது உங்கள் கணவருக்காக அதிகமாக ஜெபிக்கும்படி ஆவியானவர் என்னை பலமுறை தூண்டினார் அனால் உங்கள் கணவரோ அருமையாக பாடல்களை பாடிக்கொண்டு இருப்பதை பார்த்து இவருக்கு எதற்க்காக ஜெபிக்க என்று தெரியாமல் வந்துவிட்டேன்" என்று கூற, அந்த சகோதரி நான் யாரிடமும் சொல்லாத சில காரியங்களை உங்களிடம் சொல்கிறேன்.
"என் கணவர் பார்ப்பதற்குதான் நல்லவர்போல் இருக்கிறார் ஆனால் அவர் ஒரு ஆணாதிக்க மனிதர். தான் அமர்ந்த இடத்திலேயே இருந்துகொண்டு எல்லாம் அவர் முன்னால் வரவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பவர். சரியான முன்கோபி மற்றும் கோபம் வந்துவிட்டால் அதிகமான கெட்டவார்த்தைகளை உபயோகித்து
மிகுந்த தரக்குறைவாக பேசுவார். எனது இரண்டு பிள்ளைகளையும் கண்டால் அவருக்கு பிடிக்கவே பிடிக்காது எப்பொழுதும் அவர்களை ஏதாவது திட்டிக்கொண்டே இருப்பார். நானும் எவ்வளவோ முயன்று தாழ்மையாக இருந்து பார்த்துவிட்டேன் என்னை அவர் ஒரு குப்பைக்கு சமமாக கூட மதிப்பதில்லை. நான் இதைப்பற்றி யாரிடமும் சொல்ல விரும்புவதில்லை ஆகினும் உங்களிடம் ஆண்டவர் ஜெபிக்கும்படி ஏவியதால் இந்த காரியத்தை சொல்கிறேன் அவருக்காக ஜெபியுங்கள்" என்று கேட்டுகொண்டாராம்.
ஆம்! மனிதர்கள் பிறருக்கு முன்னாள் நல்லவன் போல வேஷம் போட்டுவிடலாம். அடுத்தவருக்கு என்ன தெரியப்போகிறது என்று நினைத்து அழகாக நடத்து மாயம்லாலம் பண்ணிவிடலாம்! அதுவும் ஒரு சிலர் தங்கள் மனதுக்கு பிடித்த பெண்ணை கண்டுவிட்டால் அப்படியே உத்தம புத்திரர்போல நடந்துகொள்வார்கள். இதெல்லாம் ஆண்டவர் முன் செல்லாது. ஆவியானவர் அனைத்தையும் அறிந்தவர் ஒருவரின் மனதை இன்னொருவருக்கு வெளிச்சம் போட்டு காட்டவல்லவர்!
அனனியா சப்பீறாள் நிலத்தை எவ்வளவுக்கு விற்றார்கள் என்பதும் ஒரு பகுதியை வஞ்சித்து எடுத்து வைத்துகொண்டதும் அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்!
அப்போஸ்தலர் 5:2தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்து வைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.
ஆனால் அந்த காரியங்களை அனைத்தையும் எங்கோ இருந்த பேதுருவிடம் ஆவியானவர் தெரிவித்துவிட்டார்.
அப்போஸ்தலர் 5:3பேதுரு அவனை நோக்கி: அனனியாவே நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?
இறுதியில் இருவரும் சாபம் வாங்கி மரித்தனர்!
நாம் நினைத்துகொள்கிறோம் நாம் மனதுக்குள்தானே நினைக்கிறோம் இது யாருக்கு தெரியபோகிறது என்று! ஆனால் நீங்கள் மனதுக்குள் நினைப்பது எல்லாம், அது எதுவாக இருந்தாலும் சரி இரண்டுபேருக்கு நிச்சயம் தெரியும்! ஓன்று தேவன் இன்னொன்று சாத்தான். நியாயதீர்ப்பு நாளில் எல்லாமே வெளிச்சத்துக்கு வரும் என்பதை மனதில்கொண்டு மாய்மாலம் பண்ணாமல் மனதின் சிந்தனைகளை சீர்படுத்துங்கள்.
பிரசங்கி12
14. ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.
-- Edited by SUNDAR on Monday 1st of March 2010 05:22:54 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)