இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கர்த்தர் தேடும் நபர் யார் ..?


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
கர்த்தர் தேடும் நபர் யார் ..?
Permalink  
 


ஏசாயா 6 : 8


பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று

உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன்.

நாம் வாழ்கின்ற இந்த உலகத்தில் பல கோடி மக்கள் வாழ்ந்து

கொண்டிருக்கிறார்கள்.


கோடான கோடி மக்கள் இருந்தாலும் கூட தேவன் ஒரு சில மக்களை தான்

தம்முடைய காரியங்களுக்க்காகவும்

தம்முடைய சித்ததிற்காகவும் தெரிந்து கொள்கிறார்.


தேவன் தெரிந்து கொள்ளும் நபர் எப்படிப்பட்டவர்கள் அல்லது தேவனால்

தெரிந்துகொள்ளபடும் நபர்கள் எத்தன்மையுள்ளவர்கள் என்பதை தொடர்ந்து

ஆவியானவர் துணை கொண்டு இங்கு பதிக்கலாம் என்று விரும்புகிறேன்.


இந்த உலகத்தில் ஒரு கம்பனிகோ அல்லது ஒரு அலுவலகத்திற்கோ வேலைக்கு
ஆட்கள் எடுப்பதை பற்றி நாம் எல்லாரும் அறிந்து இருக்கிறோம். தேவையான

வேலைக்கு தகுதியான ஆட்களை தெரிந்து எடுப்பார்கள்

ஆனால் நம்முடைய தேவன் ஒருநாளும் நம்முடைய தகுதியை பார்த்து நம்மை

தேர்ந்துதேடுப்பவர் அல்ல என்பதை நாம் முதலாவது தெரிந்து கொள்ள

வேண்டும்.


ஏசாயா 64 : 6

நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய

நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும்

இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல்
எங்களை அடித்துக்கொண்டுபோகிறது.

சங்கிதம் 14 : 2

தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர்

பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.

சங்கிதம் 14 : 3

எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன்

இல்லை, ஒருவனாகிலும் இல்லை.

ஆதியாகமம் 8 :21

மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப்

பொல்லாததாயிருக்கிறது

எந்த வசனங்களின்படி பார்க்கும்போது தேவன் எந்த ஒரு மனுஷனையும்

அவனுடைய நீதியை பாதோ அவனுடைய உத்தமத்தை பார்த்தோ தேவன்
தேய்ந்து கொள்வதில்லை என்பது விளங்குகிறது.


தொடரும்...........................................


-- Edited by Stephen on Thursday 11th of March 2010 02:59:25 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

மனிதனுடைய எண்ணங்களும் நினைவுகளும் அநேகம் ஆனாலும்  கர்த்தருடைய யோசனையோ  நிலைநிற்கும். என்று வேதம் சொல்லுகிறது.
 
ஏசாயா 55 அதிகாரம்
8. என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.

9. பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.
இங்கு கர்த்தர் ஏசாயா தீர்க்கததரிசியை  தம்முடைய வார்த்தையை தம்முடைய ஜனங்களுக்கு சொல்லும்படி   அனுப்புகிறார்.
 
9. அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி: நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்.

 ஏசாயா நம்முடைய பார்வையில் பெரிய தீர்க்கதரிசி ஆனாலும் கர்த்தரை பார்க்கும் போது தன்னுடைய உண்மையான நிலையை அவர் குறிப்பிட்டுள்ளார்.

5. அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.

பரிசுத்தவான்களையும்  நீதிமான்களையும்தான் தேவன் தம்முடைய காரியங்களுக்காக தெரிந்து கொள்வார் என்றால் ஒருவர் கூட நிற்கமுடியாது.

ஒரு மனிதன் இந்த உலகத்தில் எப்படிபட்டவனாய் இருந்தாலும் அவனை நீதிமானை மாற்றுவது தேவனுக்கு மிகவும் சாதரணமான காரியம்.

ஒரு மனிதனை இந்த உலகம் எப்படி வேண்டுமானாலும்    பார்க்கலாம் எப்படி வேண்டுமானாலும் நினைக்கலாம்   அது அவர்களுடைய மனதை பொருத்தது.

ஆனால் மற்றவர்களுடைய பார்வைக்கு ஏற்றபடி அவன் தான் இப்படிப்பட்டவன் என்று தான் உண்மையான நிலையை மறந்து இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிக்கிரவனை  
 தேவன் தெரிந்து கொள்வதில்லை என்பது தெளிவாக தெரிகிறது
 
 
தொடரும் ......................................................


-- Edited by Stephen on Thursday 11th of March 2010 03:01:03 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

தேவனாகிய கர்த்தர் எசயாவை பார்த்து அவன் யார் என்று சொல்லவில்லை மாறாக ஏசாயா 
தான் யார் என்பதையும் தன் உண்மை நிலையையும் தெரியபடுத்துகிறான்.
 
எனவே தேவனால் தெரிந்து கொள்பவர்கள் நிச்சயமாய் எந்த சூழ்நிலையிலும் தன் உண்மை நிலையை மறக்கமாட்டார்கள் .

இன்றைக்கு அநேகருடைய எண்ணங்கள் தங்களை மக்கள் யார் என்று நினைகிறார்கள் அல்லது மக்களுக்கு முன்பாக எப்படிப்பட்ட தோற்றத்தை உடையவர்களாய் இருக்கவேண்டும் என்பதாக காண முடிகிறது.
 
ஆனால் தேவனால் தெரிந்து கொள்ளபடுபவர்களோ  அல்லது தெரிந்து கொள்ளபட்டவர்களோ யாருக்காகவும் தங்களை மாற்றி கொள்ள மாட்டார்கள் ஏன் என்றல் அவர் நாம் யார் என்று எப்போதும் அறிந்து இருக்கிறார்.

நம் உருவம் இன்னதென்று அவர் அறிந்து இருக்கிறார் மண்ணென்று நினைவு கூறுகிறார்.

மற்றவர்களுக்காக போலியான தோற்றத்தை உருவாக்கி கொள்பவர்கள் பக்தியின் வேஷத்தை தரித்து கொண்டு அதின் பலனை மருதளிகிறவர்களாய் இருப்பார்கள் என்று  வேதம்   கூறுகிறது.
 
அனேக பரிசுத்தவான்களை குறிப்பிட முடியும் ஆனாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல நான் குறிபிட்டுளேன்.
 
பவுலை குறிப்பிடும் போது கூட இவன் நான் தெரிந்து கொண்ட பாத்திரம் என்று கர்த்தர்  குறிபிடுகிறார்.

ஆனால் பவுல் பாவிகளில் பிரதான பாவி என்று குறிபிடுகிறார். அவர் நியப்ரமானத்தின்படி குற்றம் சாட்டபடாதவராய் இருந்த போதிலும் இப்படி குறிபிட்டுள்ளார்.
 
அனேக நிருபங்களை எழுதி இருந்த போதிலும் நான் என்னும் ஆவலை பின் தொடருகிறேன் என்று குறிபிட்டுள்ளார்.

அவர் தன்னுடைய நிருபத்தில் என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தை காணவில்லை ஆனாலும் அதினாலே நான் நீதிமனாகிரதில்லை என்னை நீதிமானை மாற்றுகிறவர் கர்த்தர் என்றே கூறுகிறார். 

முடிவு:
 
தேவனுக்கு  முன்பாக நாம் கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களை இருப்போம் என்றால் நாம் தான் ஏசாயா , பவுல் தாவிது, இன்னும் யாரை போலவும் நாம் மாறவும் முடியும்.  தேவனுக்கு நாம் எங்கு இருக்கிறோம் என்பது முக்கியம் அல்ல எப்படி இருப்போம் என்பதே முக்கியம் 

கொஞ்சத்தில்  உண்மையை இருக்கிறவனை  அநேகத்திர்க்கு  அதிபதியாக மாற்ற தேவன் ஆயத்தம். நாம் ஆயத்தபடுவோமானால் நான் தெரிந்து கொண்ட எனக்கு மிகவும் பிரியமானவனே என்று கர்த்தர் குறிப்பிடுவார்.


-- Edited by Stephen on Thursday 11th of March 2010 03:02:35 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard