11. நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய
நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.
21. அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
அனேக சபைகளிலும் கூட கருத்து வேறுபாடுகள் காணமுடிகிறது. இதற்கு காரணம் என்ன ஏன் கருது வேறுபாடுகள்...!
ஒரு சபையில் இருந்து இன்னொரு சபைக்கு போவதில்லை அப்படியே போனாலும் எங்க உழியகாரர் அப்படி இந்த உழியகாரர் இப்படி என்று தங்களுக்குளே சொல்லி கொள்கிறதை கேள்விபட வேண்டியதாய் இருக்கிறது.
ஒரு சில உழியகாரர்கள் கூட விசுவாசிகளிடத்தில் அங்கே போகாதிங்க இங்கே போகாதிங்க சொல்லுகிறார்கள் அது ஒருவேளை தவறான உபதேசத்தினால் ஜனங்கள் வழி தவறி போய்விடுவார்கள் என்பதினாலையோ அல்ல ஜனங்கள் தன சபையை விட்டு வேற சபைக்கு போய்விடுவார்கள் என்பதினாலையோ தெரியவில்லை.
விசுவாசிகளுக்குள்ளே எத்தனை வேறுபாடுகள் எத்தனை...! எத்தனை...!
எல்லாருமே ஒரே பரலோகத்திற்கு தானே போக போகிறோம் ஒரே தேவனை தானே ஆரதிக்கபோகிறோம் இங்கே இத்தனை வேறுபாடுகளும் ஏற்ற தாழ்வுகளும் உண்டாயிருந்தால் எப்படி ஒன்று சேர்ந்து ஆராதிக்க போகிறோம்.
I யோவான்1:3நீங்களும்எங்களோடேஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள்கண்டும்கேட்டும்இருக்கிறதைஉங்களுக்கும்அறிவிக்கிறோம்; எங்களுடையஐக்கியம்பிதாவோடும்அவருடையகுமாரனாகியஇயேசுகிறிஸ்துவோடும்இருக்கிறது.
குணங்களும்அப்படியேநம்மிடத்தில் செயல் படுவதை பார்க்க முடியும் ஏனென்றால் அவர்களுடைய ஐக்கியம்பிதாவோடும்அவருடையகுமாரனாகியஇயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறதினால்
கர்த்தருடைய விருப்பமும் அதுதான்
சங்கீதம் 34:3 என்னோடேகூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்துஅவர் நாமத்தை உயர்த்துவோமாக.
சங்கீதம் 55:14 நாம் ஒருமித்து, இன்பமான ஆலோசனைபண்ணி, கூட்டத்தோடே தேவாலயத்துக்குப் போனோம். சங்கீதம் 133:1 இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
பரிசுத்தவான்களுடன் ஐக்கியத்தை விரும்புங்கள்
ஐக்கியம் என்பது மிக முக்கியம் அதுவே தேவனுக்கு பிரியமானது. ,,,,,,,,,,,,,,
///allignment சரி செய்யப்பட்டது by இறைநேசன் ///
-- Edited by இறைநேசன் on Thursday 4th of March 2010 05:39:24 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
பொதுவாக இருண்டுபேர் ஆவிக்குரிய காரியங்கள் குறித்து ஒருமனத்தோடு இருப்பது/ பேசுவது என்பது நடப்பதற்கு கொஞ்சம் கடினமான காரியம். ஒருவருக்குள்ள வெளிப்பாடும் இன்னொருவருக்குள்ள வெளிப்பாட்டிலும் சிறு வேறுபாடுகள் இருப்பதுதான் இதற்க்கு காரணம். அவரவர் தகுதிக்கு தகுந்தால் போல் தேவன் ஆவியின் வரங்களை பகிர்ந்து கொடுத்து உண்மைகளை
தெரிவித்திருப்பார்.
எபிரெயர் 2:4அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும்
இந்நிலையில் ஒருவர் சொல்லும் ஆவிக்குரிய காரியங்களை இன்னொருவர் பொறுமையாக கேட்பதும் அதை புரிந்துகொள்ள விரும்புவதைவிட, தங்கள் தாங்களின் போதனைகளை சொல்வதிலும் தங்கள் கொள்கையை நிலை நாட்டவே விரும்புகின்றனர். ஆனால் வசனமோ நாம் கேட்பதற்கு தீவிரமாயும் பேசுகிறதற்கு பொறுமையாகவும் இருக்க போதிக்கிறது.
ஒரு பாஸ்டர் வீட்டிற்கு வந்திருக்கும்போது அவரிடம் அந்த வீட்டில் உள்ள விசுவாசி அவரைவிட அதிகமான ஆவிக்குரிய காரியங்கள் சிலவற்றை பெசிவிடால், உடனே அவர் அதில் உள்ள உண்மை என்னவென்பதை ஆராய்வதைவிட "பெரிய இவன் மாதிரி பேசுகிறான்" என்ற எண்ணத்தோடு அடுத்தவர் பேசுவதில் குறைகண்டுபிடிக்கவே ஆரபிக்கிறார்கள். இது ஒருமனபாட்டை கெடுக்க சாத்தான் செய்யும் ஒரு சதி என்றே நினைக்கிறேன்.
டிவியில் பேசும் பல தேவ மனிதர்களின் அனுபவங்கள் ஒந்த அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே விளங்கும். சிலருக்கு அது விளங்காத காரணத்தால் உடனே அவரை பொய்யர் என்று பலர் நியாயம் தீர்த்துவிடுகின்றனர்
மேலும் ஒரு ஊழியர் ஒரு வீட்டில் அமர்ந்திருக்கும்போது எதிர்பாராத விதமாக இன்னொரு ஊழியர் வந்துவிட்டால் இருவரும் ஒருவரை ஒருவர் அன்பாய் விசாரித்து பேசுவது என்பது அபூர்வமான காரியம். பல பொது இடங்களில் அனேக ஊழியர்கள் ஒன்றாக அமர்ந்திருந்தாலும் அவர்களின் உண்மை மனநிலை என்ன என்பது ஆண்டவருக்கே தெரியும். இந்நிலையிலும் நல்ல தாழ்மையுள்ள தேவமனிதர்களும் அநேகர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
உலக நிலைகளிலும் பணம் என்ற பிசாசிடமிருந்தும் விடுபட்ட ஒரு மனபக்குவம் உள்ளவர்கள் மட்டுமே எல்லோரிடவும் எந்த விருப்பு வெறுப்பு இல்லாமல் அன்புடனும் ஐக்கியமுடனும் இருக்க முடியும். மற்றபடி உலக காரியங்களுக்கு அடிமைபட்டு கிடைப்பவர்களிடம் இயேசுவின் சீஷர்களைபோல "நீ பெரியவனா நான் பெரியவனா" என்ற என்ற வாக்குவாதங்களைத்தான் காணமுடியும் .
இரண்டு சகோதரர்கள் ஒரே மனதோடு ஆவியின் வல்லமையில் நிறைத்து ஆவிக்குரிய காரியங்களை அக்கறையாக தியானித்தால் அல்லது பேசிக்கொண்டு இருந்தால் சாத்தனுக்கு உடனே பயம் ஏற்பட்டுவிடும். நமது சாம்ராஜ்யத்தை அழித்து விடுவார்களோ என்று கருதி யாரையாவது அனுப்பி அவர்கள் பேசுவதற்கு இடைஞ்சல் உண்டாக்கி அவர்களை தனது தந்திரத்தால் திசைதிருப்ப பார்ப்பான்.
அவனுடைய தந்திரத்தலேயே ஒருமனப்பாடு அல்லது ஐக்கியம் இல்லாத ஒரு நிலை இக்காலங்களில் உருவாகிறது. அதை அறிந்து ஒவ்வொருவரும் முடிந்த அளவு பிறரை கனம்பண்ணவும் மற்றவர்களை தங்களைவிட மேன்பட்ட்வர்களாக எண்ணி அவர் வார்த்தைகளுக்கு மதிப்புகொடுக்கவும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். அதன் அடிப்படையிலேயே ஐக்கியத்தை வளர்க்கமுடியும்
என்றே நான் கருதுகிறேன்.
-- Edited by SUNDAR on Tuesday 9th of March 2010 04:23:57 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சுந்தர் எழுதியது //...........உலக நிலைகளிலும் பணம் என்ற பிசாசிடமிருந்தும் விடுபட்ட ஒரு மனபக்குவம் உள்ளவர்கள் மட்டுமே எல்லோரிடவும் எந்த விருப்பு வெறுப்பு இல்லாமல் அன்புடனும் ஐக்கியமுடனும் இருக்க முடியும். மற்றபடி உலக காரியங்களுக்கு அடிமைபட்டு கிடைப்பவர்களிடம் இயேசுவின் சீஷர்களைபோல "நீ பெரியவனா நான் பெரியவனா" என்ற என்ற வாக்குவாதங்களைத்தான் காணமுடியும் ......//
...........//அவனுடைய தந்திரத்தலேயே ஒருமனப்பாடு அல்லது ஐக்கியம் இல்லாத ஒரு நிலை இக்காலங்களில் உருவாகிறது. அதை அறிந்து ஒவ்வொருவரும் முடிந்த அளவு பிறரை கனம்பண்ணவும் மற்றவர்களை தங்களைவிட மேன்பட்ட்வர்களாக எண்ணி அவர் வார்த்தைகளுக்கு மதிப்புகொடுக்கவும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். அதன் அடிப்படையிலேயே ஐக்கியத்தை வளர்க்கமுடியும் என்றே நான் கருதுகிறேன். .............\\
ஆம் இது ஒரு உண்மையான கருத்துதான்.
பிதாவோடும் அவருடைய குமாரானோடும் பரிசுத்த ஆவியானவரோடும் சரியான முறையில் ஐக்கியம் வைத்திருப்பவர்களால் மட்டுமே எல்லோரோடும் அன்புடனும் ஐக்கியமுடனும் இருக்க முடியும்.
I யோவான்1:3நீங்களும்எங்களோடேஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள்கண்டும்கேட்டும்இருக்கிறதைஉங்களுக்கும்அறிவிக்கிறோம்; எங்களுடையஐக்கியம்பிதாவோடும்அவருடையகுமாரனாகியஇயேசுகிறிஸ்துவோடும்இருக்கிறது.
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
"உட்கட்சி பூசல்" என்று கட்சிகாரர்களை பற்றி சொல்வதுபோல் இன்று கிருத்துவத்தில் அதிகமான கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரிவினைகள் இருப்பதை நாம் அறிய முடிகிறது.
கடந்த வாரம் நான் சபைக்கு சென்றிருந்தபோதுகூட எங்கள் பாஸ்டர் அறிவித்த ஒரு செய்தி "நமது சபையில் இருந்து மூன்று முக்கிய பாஸ்டர்கள் பிரிந்து சென்று விட்டார்கள்" அவர்களை குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்பதுபோல் இருந்தது. இப்படி இருக்கும் இடத்தில் ஐக்கியம் இல்லாமல் பாஸ்டர்கள் பிரிந்து செல்வது என்பது வாடிக்கையானதுதான் என்றாலும் இந்த பிரிவினை அல்லது ஐக்கியம் இல்லாதநிலை ஏன் ஏற்ப்படுகிறது என்று பார்த்தால் " விட்டுகொடுக்கும் நிலை இல்லாமையே" என்றே கூறவேண்டும்.
சபையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு பாஸ்டர், தலைமை பாஸ்டரிடம் "சபையில் இந்த இந்த மாறுதல்கள் செய்தால் நன்றாக இருக்கும்" என்று ஒரு ஆலோசனையை சொன்னால், அதை தலைமை பாஸ்டர் சற்றும் ஏற்க்க விரும்பாமல் "இவர் என்ன சொல்வது நான் என்ன கேட்பது, இவர் தலைமை பாஸ்டரா அல்லது நான் தலைமை பாஸ்டரா?" என்பதுபோல் சிந்தித்தால் ஐக்கியம் நிச்சயம் கெட்டு போகும். சபை எனது யாருடைய தனி சொத்தும் அல்ல! அது விசுவாசிகளால் உருவான பொது சொத்து அதில் எல்லோருடைய ஆலோசனைக்கும் முக்கியத்துவம் கொடுப்பது அவசியமே.
இரு மனது ஒருமனப்பட்டால் சாத்தானுக்கு பிரச்சனை என்பது அவனுக்கு சரியாகவே தெரியும் எனவேதான். உள்ளுக்குள்ளேயே பிரிவினைகளை உண்டாக்குவதில் அவன் உஷாராக இருந்து சகோதர ஐக்கியத்தை கெடுக்கிறான்.
இது இன்று நேற்று இருக்கும் விஷயம் அல்ல ஆதியில் இருந்தே இருந்திருக்கிறது மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானைக்கூட அழைத்துக்கொண்டு போதல் குறித்த ஒரு சிறு விஷயத்தில் பவுலும் பர்னபாவும் பிரித்த நிகழ்ச்சியும் கூட வேதத்தில் உண்டே.