ஒரு முறை dgs தினகரன் அவர்கள் எங்கள் வீட்டு பக்கத்தில் உள்ள ஒரு பெரிய சபைக்கு வந்து இருந்தார்கள் அவர் வந்து காரை விட்டு இறங்கும் பொது மக்கள் அவர் காரை தொட்டு கும்பிடுவது அவர் கைகளை தொட்டு குப்பிடுவது அவரை தொட்டு பார்த்து அழுவது அவர் தடுத்தும் அவரை நெருக்கி விட்டு அவரை தொட ஆசை படுகிறார்கள் தொடுவது தவறு என்று சொல்ல வில்லை
நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால் ஒரு மனிதனிடம் தொடுவது அவரை தொட்டால் சரி ஆகிவிடும் என்று இருக்கிற நம்பிக்கை ஏன் தேவனிடம் இல்லை
அதே வாஞ்சை அதே தாகம் அதே ஆசை
தேவனிடம், இருந்தால் நம் தேவன் எவ்வளவு சந்தோசம் படுவார்
சகலத்தையும் உண்டாக்கிய அவருக்கு அதுதானே பிரியம
மனிதனை நம்புவதை பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாய் இருப்பதே நலம்
ஊழியர்களுக்கு
ஒரு முறை சாது சுந்தர் சிங் அவர்கள் நோய்களுக்க ஜெபம் செய்த பொது அனேக நோய்கள் குணமாகியது மக்கள் கூட்ட கூட்ட மாக வந்து நிரம்பிவிட்டனர் இதை பார்த்த சாது ஐயோ ஆண்டவரே என்னிடத்தில் இருந்து இந்த வரத்தை எடுத்து விடும் என்று ஜெபம் செய்தார் ஏனென்றால் யேசுவிடம் சென்றால் நோய் குணமாகும் என்று வர வில்லை சாதுவிடம் சென்றால் குணமாகும் என்று தான் வந்தார்கள்
12. பேதுரு அதைக் கண்டு ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலரே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்கள் சுயசக்தியினாலாவது, எங்கள் சுயபக்தியினாலாவது, இவனை நடக்கப்பண்ணினோமென்று நீங்கள் எங்களை நோக்கிப் பார்க்கிறதென்ன?
அப்போஸ்தலர்
14 அதிகாரம்
9. பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு:
10. நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.
11. பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி,
12. பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள்.