///தமிழை வளர்ப்பது என்பது நமது நோக்கமல்ல எனவே எழுத்துப்பிழை என்பது ஒரு பெரிய விஷயம் அல்ல. தவறான பொருள் வரும் பட்சத்தில் கேட்டு அறிந்து கொள்ளலாம் மற்றபடி அதை பெரிய குறையாக சுட்டிக்காட்ட தேவையில்லை/////
மிக அருமையாய் சொன்னீர்கள்
நாம் இங்கு பதிவிடும் போது தமிழில் பிழை மாற்றங்கள் வரலாம்
அதற்காக நாம் சரியாக பதிவிடுங்கள் என்று சொன்னால்
நிச்சயம் எழுதும் நினைக்கிற நபர்கள் கூட இங்கு எழுத மாட்டார்கள்
நான் சொல்வது என்ன வெனில் ஆரம்பத்தில் தமிழில் நான் பாதிக்கும் போது
அதிகமாய் பிழைகள் ஏற்ப்பட்டது வெட்கமாய் இருந்தது ஆனால்
போக போக மாறி விட்டதை நான் பார்க்கிறேன்
என்னுடைய கருத்து என்னவெனில்
இந்த தலத்தில் தமிழில் பதிவு செய்ய நினைக்கிறவர்கள் தயங்காமல்
பதிவிடுங்கள்
தமிழில் பதித்தால் பிழை ஏற்படுமே என்று நினைக்காதிர்கள்
தமிழில் டைப் செய்ய செய்ய மிக சுலபமாக மாறிவிடும்............
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
என்ற வார்த்தைகளின் படி, உலக சிந்தனைகளிலிருந்து சற்றேனும் விடுபட்டு முடிந்த அளவு வேத வசனங்களின்மேல் பிரியமாய் தியானத்தில் இருப்பது ஆவிக்குரிய வாழ்வுக்கு அதிக பயனளிக்கும் என்ற கருத்திலேயே பலருக்கு இந்ததளத்தை பயனுள்ளதாக ஆக்க விரும்புகிறோம்.
நமது தளத்தை சுமார் முப்பதுக்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் ரெகுலராக பார்வையிடுகின்றனர்.
ஆனால் பதிவுகளை தருவதோ சுமார் பத்து சகோதரர்கள்தான்.
குறையானாலும் நிறையானாலும் தங்கள் கருத்துக்களை முன்வைக்க எல்லோருக்குமே இங்கு அனுமதியுண்டு.
எனவே தளத்தை பார்வையிடும் சகோதரர்கள் தங்கள் மேலான கருத்துக்களை/ கட்டுரைகளை செய்திகளை/ சாட்சிகளை தேவநாம மகிமைக்காய் பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுகோள்ளப்படுகிரார்கள்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அன்பு சகோதர சகோதரிகளே! இது ஒரு இலவச தளம்! நமது தளம்!
தளத்தை பார்வையிடுவதோடு சென்றுவிடாமல் தங்கள் மேலால கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்படி
அன்புடன் வேண்டுகிறோம்.
இங்கு கடினமான வார்த்தைகள் கிடையாது! நாங்கள் அறிந்ததுதான் உண்மை, மற்றது தவறு என்ற நோக்கில் விவாதிப்பது கிடையாது! எல்லோரோடும் சமாதானமாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம்.
ஆன்மிகம் சம்பந்தமான எவ்வித கருத்துக்களையும் உங்கள் அனுபவங்களையும் இங்கு பதிவிடலாம்!
இந்த தளத்தில் பதியப்பட்டுள்ள பல கட்டுரைகள் அநேகருக்கு பயனுள்ளதாக அமைவதாக பல சகோதரர்கள் தெரிவிப்பதால் நமது தேவனை ஸ்தோத்தரிக்கிறோம்.
தளத்துக்கு வருகை தரும் சகோதரர்கள் வெறும் பார்வையாளராக மட்டும் இராமல் தங்கள் கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை பதிவிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
இது கடைசி காலத்தில் எழுதப்படும் இறுதி கருத்துக்கள் என்றே நாம் கருதுகிறோம்! "இனி காலம் செல்லாது" என்ற வார்த்தை நிறைவேறும் காலம் வந்தாகிவிட்டது. எனவே இனியும் தாமதிக்காமல் அவரவர் தங்கள் ஆவிக்குரிய வாழ்வில் இறைவன் எதிர்பார்க்கும் உன்னத நிலையை அடைய முயர்ச்சிக்கும்படி ஊக்கமளிக்கிறோம்.
இறைவனின் இனிய ஆசீர்வாதங்கள் என்றென்றும் எல்லோருடனும் தங்குவதாக ஆமென்!
கடந்த நாட்களில் நமது தளத்தில் பார்வையிட்ட ஒரு சகோதரர் அதிலுள்ள சில கருத்துக்களுக்கு சரியான விளக்கம் தெரியாமல் என்னை நேரிடயாக சந்தித்து சில கேள்விகளை கேட்டார். அதற்க்கு ஏற்ற பதிலை நான் சொன்னபோது அவ ஓரளவு உண்மையை புரிந்து கொண்டார்.
எனவே அன்பானவர்கள் இந்த தளத்தில் எழுதப்படும் அனேக கருத்துக்கள் சிலருக்கு புரியாமல் இருக்கலாம் அல்லது சற்று மாறுபாடாக தோன்றலாம். அதை அப்படியே மனதில் வைத்து இங்குள்ள கருத்து தவறு என்று தீர்மானம் செய்யாமல்! தங்களுடைய மனதில் எழும்பும் கேள்விகளை ஓரிரு வரியில் பதிவிட்டால் முடிந்தவரை அதற்க்கு சரியான விளக்கம் அளிக்க பிரயாசம் எடுக்கப்படும் அது தங்களுக்கு மட்டுமல்லை பலருக்கு பயனுள்ளதாக அமையும் என்பதை தெரிவித்துகொள்கிறோம்!
சில கருத்துக்களை பொதுவாக எழுதமுடியாத பட்சத்தில் தனி மெயிலிலாவது அனுப்பிவைக்கப்படும்!