இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புதிய மார்க்கம் ஓன்று உருவாக காரணம்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
புதிய மார்க்கம் ஓன்று உருவாக காரணம்!
Permalink  
 


கிறிஸ்த்துவுக்குபின்  சுமார் 500௦௦  ஆண்டுகளுக்குப்பிறகு  உருவாகி இன்றைய உலகில் அநேகரை தன்வசம் இழுத்து தற்போது உலகில் இரண்டாவது மிகப்பெரிய மார்க்கமாக இருக்கும் இந்த புதிய மார்க்கம் உருவாக காரணம் என்னவென்பதை ஆராய்வது அநேகருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்.  
 
இந்த மார்கத்தில் உள்ள அனேக சகோதரர்கள் மற்ற மார்க்கத்தில் உள்ளவர்களைவிட நீதி நேர்மை மிக்கவர்களாக இருப்பதை நான் பல
சூழ்நிலைகளில் அறிந்திருக்கிறேன்.  தினமும்  அதிகாலை  ஐந்து  மணிக்கே  எழுந்து "தூக்கத்தை விட தொழுகை மேலானது தொழுகைக்கு வாருங்கள்" என்று அவர்கள் விடும் அழைப்பு  என்னை ஆச்சர்யப்பட வைக்கும். இவர்களின் விசுவாசம்  மற்றும் நேரம் தவறாத தொழுகை அனைத்துமே எனக்கு மிகவும் பிடித்தமான
காரியங்கள்.  இவர்களை எவ்விதத்திலும் நியாயம்தீர்க்க நான் முற்ப்படவில்லை.
 
ஆகினும் எனக்கு தேவன் அளித்த கிருபயின்படி இம்மார்க்கம் உருவாக காரணம் என்னவென்பதை இங்கு எழுத விளைகிறேன். தங்கள் இருதயத்தில் உணர்ந்து  குணப்பட்டு திருந்துபவர்களுக்கு அது பயனுள்ளதாக அமையும்!      
 
ஆண்டவராகிய இயேசு பாவங்களுக்காக மரிக்கும் முன்பு  கீழ்கண்ட வாக்குத்தத்தத்தை தந்திருந்தார்:  :
 
யோவான் 16:7 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.

யோவான் 14:17 அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
 
அவர்  மரித்து உயிர்த்து பரமேரியபின் :இயேசு சொன்ன  அவரின்  வாக்குத்தத்தம்  நிறைவேருவதர்க்காக  அநேகர் கூடி ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தனர் 
 
அப்போஸ்தலர் 1:14 அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.

அவ்வேளையில் பெந்தெகொஸ்தே  என்னும் நாளில் இயேசுவால்   வாக்குபண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவர் தந்தருளப்பட்டார்.
 
1. பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
2. அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
3. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.
4. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
 
ஆவியானவர் அருளப்பட்ட பிறகு, அனைத்து காரியங்களும்\ தலைகீழாக  மாற ஆரம்பித்தது.  ஆண்டவராகியே இயேசுவை மறுதலித்த பேதுரு ஆவியின் வல்லமையால் நிறைக்கப்பட்டு அனேக அற்ப்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான் 
 
43. எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது.அத்தோடு  ஒரே
பிரசங்கத்தில்  மூவாயிரம் பேரை ஆண்டவருக்குள்  நடத்தினான்    
 
அப்போஸ்தலர் 2:41 அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.

ஒரே பிரசங்கத்தில் ஆயிரங்கள் இரட்சிக்கப்படுவத்தையும் பேதுருவும் யோவானும் ஆவியில் நிறைந்து மிகுந்த தைரியத்துடன் 
பேசுவதையும் கேட்டது அதை  தடுத்து நிறுத்த முடியாமல்  இயேசுவை கொன்றுவிட்டோம் எல்லாம் முடிந்தது என்று இறுமாப்பில் இருந்த  சாத்தான் என்ன செய்வதென்று தெரியாமல்   தவியாய் தவித்தான்  
 
13. பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.
 
இப்படியே போனால் கிருபையால் இரட்சிப்பை பெற்று   தன  வசமிருக்கும் மொத்த ஜனங்களும் வெகுவிரைவில் தேவனின் கரத்துக்குள் கொண்டு  செல்லப்பட்டுவிடுவார்கள் என்று  கருதிய சாத்தான், எப்படியாவது இந்த செய்கைகளை தடுத்து நிறுத்த அல்லது மக்களை இரட்சிப்பிலிருந்து திசை திருப்ப  பலவிதங்களில் போராட ஆரம்பித்தான்.
 
கர்த்தருக்கு சித்தமானால்  தொடரும்.....


-- Edited by SUNDAR on Saturday 10th of April 2010 03:06:24 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 627
Date:
Permalink  
 

Please continue ..

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 627
Date:
Permalink  
 

Please continue .

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

Debora wrote:

Please continue .


 Sorry சிஸ்ட்டர்  2010ம் ஆண்டு நிறைய free time இருந்தது எனவே தியானித்து  ஒரு தொடராக எழுதலாம் என்று ஆரம்பித்தேன்.

 
தற்போது போதிய நேரம் இல்லை எனவே எழுத முடியாத நிலையில் இருக்கிறேன்.
 
கர்த்தருக்கு சித்தமானால் தொடர்கிறேன்.     


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 627
Date:
Permalink  
 

ok

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard